திருச்செங்கோடு நகராட்சி வளாகத்திற்குள் வினாயகர் கோவில் கட்ட நிர்வாகம் முயற்சி !

ஒரு மதம் சார்ந்த வழிபாட்டுத்தளத்தை அரசு அலுவலகத்தில் அமைப்பது என்பது இந்திய அரசியல் சட்ட சாசனத்தில் இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிரான செயலாகும்.

அரசு அதிகாரியாக பணியில் இருப்பவர், தன்னுடைய மதம், சாதி போன்றவற்றை பொதுஇடத்தில் பரப்புவது, ஆதரித்துப் பேசுவது அரசு அலுவலர்களின் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது.அரசு அதிகாரிகள் இதுபோன்ற காரியங்கள் செய்வதால் பொது நிர்வாகம் மதசார்பற்ற தன்மையோடு நடுநிலையாக நடைபெறுவது என்பது சந்தேகத்திற்கிடமாகிறது. அரசு அலுவலகங்களில் மதவழிபாடு சார்ந்த சின்னங்கள், அடையாளங்கள் வைக்கக்கூடாது என்று 1968 -ல் தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது.அரசாணையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு கடமைப்பட்டுள்ள அதிகாரிகளே தமிழக அரசாணைக்கு எதிராக செயல்படுவது என்பது தமிழக அரசுக்கே எதிரான செயல்தான்.

இவ்வாறு சட்டவிரோதமாக கட்டப்பட்டு வரும் வினாயகன் கோயிலை அப்புறப்படுத்தக்கோரி நகராட்சி ஆணையாளரையும், வருவாய் கோட்டாட்சியரையும் நேரில் சந்தித்து நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் தோழர் வைரவேல் அவர்களும்,நகரசெயலாளர் தோழர் நித்தியானந்தமும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மனு கொடுத்திருக்கிறார்கள்.

மனுவை பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையாளர் அவர்கள் கட்டப்பட்டுவரும் அக்கோயிலை அப்புறப்படுத்துவதாக உறுதி அளித்திருக்கிறார்.

இதற்கிடையில் நகரமன்ற தலைவி அவர்கள் சட்டப்படி நடக்ககோரும் கழக தோழர்களை மிரட்டும் தொணியில் பேசியிருக்கிறார்.

இந்த சட்ட விரோதமாக கட்டப்பட்டுவரும் கோயிலை உறுதியளித்தபடி நகராட்சி ஆணையர் இடித்து அப்புறப்படுத்தி தமிழக அரசின் ஆணையை நிறைவேற்றுவார் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பு.

10299528_1657715774512316_2131345322618809879_n

You may also like...