Category: மாவட்ட செய்திகள்

பெரியார் பிறந்தநாள் விழா – மதுரை

மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாளன்று மாலை 3 மணி அளவில் மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கம் எழுப்பப்பட்டது . மதுரை மாவட்டத் தலைவர் திலீபன் செந்தில்,மாவட்ட செயலாளர் மணிகண்டன் மா.பா,மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி,மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்

கொட்டும் மழையில் ஜாதிக்கெதிரான பொதுக்கூட்டம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகில் “எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம்” “இளையதலைமுறைக்கு வேலைவேண்டும்” என்கிற தலைப்பில் 27-09-2015,ஞாயிறன்று மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது. தோழர் துரை.தாமோதரன் அவர்களின்”மந்திரமா-தந்திரமா”நிகழ்ச்சியுடன் கூட்டம் தொடங்கியது. தொடர்ந்து திராவிடர் கலைக்குழுவின் நாடகங்கள் அரங்கேறியது. நமது கலைக்குழுவின் பகுத்தறிவு நாடகங்கள் பகுதியில் நல்ல வரவேற்பைப்பெற்றன. கூட்டத்தற்கு நகரசெயலாளர் தோழர் வெங்கட் தலைமையேற்றார். மாவட்டத்தலைவர் சாமிநாநன்,மாவட்ட செயலாளர் சரவணன்,மாவட்ட அமைப்பாளர் வைரவேல்,மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர்மணி அவர்கள் நீண்டதொரு சிறப்புரையை நிகழ்த்தினார்கள். இறுதியாக தோழர் ப.செல்வம் நன்றியுரை கூற கூட்டம் நிறைவுற்றது. கொட்டும் மழையிலும் மக்கள் இறுதிவரை கூட்டத்தை கேட்டது குறிப்பிடத்தக்கது

பெரியார் பிறந்தநாள் விழா – காஞ்சிபுரம் மாவட்டம்

தந்தை பெரியார் 137வது பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது மாவட்ட தலைவர் செங்குட்டுவன் தலைமையில், செயலாளர் தினேஷ்குமார், அமைப்பாளர் தெள்ளமிழ்து மற்றும் திராவிட விடுதலைக் கழக தோழர்கள், தந்தை பெரியாரின் சமுதாயப் பணிகளை விளக்கி பேருந்து நிலையம், அங்காடிகளில் துண்டறிக்கை விநியோகித்தனர். பொதுமக்கள் ஆர்வமுடன் துண்டறிக்கை படித்து தோழர்களிடம் விளக்கம் கேட்டனர். பின்பு மாலை தந்தை பெரியார் பிறந்தநாள் கூட்டமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் பேரணியில் கலந்துகொண்டனர்.

ஈ வெ ரா பெரியார் – வாழ்வும் பணியும் நூல் வெளியீட்டு விழா

          தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு எஸ். இராமகிருஷ்ணனின் ஈவெரா பெரியார் வாழ்வும் பணியும் நூல் வெளியீட்டு விழா பாரதி புத்தக அரங்கில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் முதல் படியை பெற்று கொண்டார்

பெரியார் விழா : காஞ்சி மாநகர் குலுங்கியது

செப்.17 அன்று காஞ்சியில் பெரியார் பிறந்த நாள் ஒருங்கிணைப்புக் குழு, பெரியார் பிறந்த நாள் விழா பேரணியையும், பொதுக் கூட்டத்தையும் எழுச்சியுடன் நடத்தியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். காஞ்சி மாநகரையே கலக்கிய பேரணி-பொதுக் கூட்டக் காட்சிகள்.

பெரியார் பிறந்தநாள் விழா கோபி

கோபிசெட்டிபாளையம் தந்தை பெரியார் பிறந்தநாள்விழா…. தமிழர் கூட்டமைப்பின் சார்பில் பேரணி………. கோபிசெட்டிபாளையம் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கட்சியினர் கலந்துகொண்ட ஊர்வலம் தந்தை பெரியாரின் பிறந்தநாளையெட்டி நடைபெற்றது… ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம், தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக தமிழர் கூட்டமைப்பின் சார்பில் கொண்டாடிவருகின்றனர். இந்தாண்டு தந்தை பெரியாரின் 137வது பிறந்தநாள் விழாவை திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக்கழகம், திராவிட முன்னேற்ற கழகம், மதிமுக, வி.சி.க, நாம்தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர்கள் ஒன்றிணைந்து தமிழர் கூட்டமைப்பின் சார்பில் பேரணியாக வந்து பெரியார்திடலில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டது. பேரணி ல.கள்ளிப்பட்டியில் தொடங்கி கச்சேரிமேடு, எம்.ஜி.ஆர்.சிலை, தினசரி மார்க்கெட் வீதி, கடைவீதி, பேருந்து நிலையம் வழியாக பெரியார் சிலை வந்ததடைந்தது. பேரணியின் போது பெரியாரின் கொள்கைகள் அடங்கிய...

தர்மபுரி மாவட்ட பெரியார் பிறந்தநாள் விழா

  தந்தை பெரியார் 137வது பிறந்தநாள் விழா 17.09.2015 தர்மபுரி மாவட்டத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் வேணுகோபால், செயலாளர் பரமசிவம், அமைப்பாளர் சந்தோஷ்குமார் மற்றும் நகர தலைவர் நாகராசன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து எழுச்சியுடன் பிறந்தநாளை கொண்டாடினார்கள்

0

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் கழக கொடியேற்றம், பெயர் பலகை திறப்பு, கிளை திறப்பு.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவில் ,20.09.2015 அன்று தந்தை பெரியாரின் 137- வது பிறந்த நாள் விழா கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கோவை புறநகர் மாவட்ட வீரபாண்டி பிரிவில் வெள்ளமடை மோகன் முன்னிலையில் காளிபாளையம் கணேஷ் மற்றும் வீரபாண்டி பாபு முன்னிலையிலும் நடைபெற்றது. கழக பெயர் பலகையை கழக மாநில பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் திறந்து வைத்தர் மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி அவர்கள் கழக கொடியேற்றி வைத்தார். இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு அறிவியல் கோவை மாநகர மாவட்டத் தலைவர் தோழர் திருமணி மாவட்ட செயளாளர் தோழர் நிர்மல்குமார் புறநகர் சார்பாக புறநகர் மாவட்டத் தலைவர்த் தோழர் ராமசந்திரன் சூலூர் ஒன்றியப் பொருப்பாளர் தோழர் பன்னீர்செல்வம் மாநகரப் பெருளாளர் தோழர் கிருட்டிணன்,சமூக நீதி இயக்கம். சார்பாக தோழர் வெள்ளமடை நாகராசு திவிக தோழர்கள்...

தலித் – சிறுபான்மையினரின் நிலங்கள் மோசடி கும்பல் ஆக்கிரமிப்பைக் கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம் 0

தலித் – சிறுபான்மையினரின் நிலங்கள் மோசடி கும்பல் ஆக்கிரமிப்பைக் கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் ராயபுரம், அணைமேடு பகுதியில் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக தலித் மக்கள், சிறுபான்மை மக்கள் மற்றும் சில பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியை நிலமோசடி கும்பல் போலி ஆவணங்கள் தயார் செய்து குண்டர்களை வைத்து மிரட்டி அபகரிக்க நினைப்பதை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு 14.09.2015 அன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கழகத் தலைவர் தன் கண்டன உரையின் போது, இந்த இடத்தை 80 ஆண்டுகளுக்கு மேல் வாழ்விடமாக கொண்டு வாழ்ந்து வரும் அம் மக்களை போலி ஆவணங்களை தயார் செய்து நிலமோசடி கும்பல் அபகரிக்க நினைப்பதையும், காவல்துறையும் கூட அதற்கு உடந்தையாக இருப்பதையும் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் அந்த இடத்திற்கு உண்மையான உரிமையாளர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை கண்டுபிடித்து அவர்களிடமிருந்து இந்த நிலத்தை வாங்கி 80 ஆண்டுகளுக்கு மேல் அங்கு வாழும்...

பெரியார் 137 பிறந்தநாள் விழா செப்டம்பர் 17

  சங்குகள் நிறமும் மாறி சந்தனம் மணமும் மாறி செங்கதிர் திசையும் மாறி தெங்குநீர் குளிரும் மாறி திங்கள்தன் நிலையும் மாறி தெவிட்டமுது இனிப்பும் மாறி சங்கமும் மாறினாலும் தந்தைசொல் வாழும் நாளும். – பாவலர் பாலசுந்தரம்

0

சேஷசமுத்திரம் ஜாதிவெறியர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேஷசமுத்திரம் கிராமத்தில் தலித் மக்கள் மீது நடந்த ஜாதிவெறித் தாக்குதலை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட சார்பில் 24.08.2014 மாலை 3.00 மணிக்கு சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் ஜாதி வெறியர்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியும் காவல்துறையை நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. 50க்கும் அதிகமான தோழர்களை காவல்துறை கைது செய்து மாலை விடுவித்தது.

0

சமகால வாழ்வியலும் ஜாதிய வண்கொடுமைகளும் – கருத்தரங்கம்

23.08.2015 மாலை 5.30 மணியளவில் திராவிட விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக “சமகால வாழ்வியலும் ஜாதிய வண்கொடுமைகளும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்களில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். சிறப்புரை தோழர் மதிமாறன் மற்றும் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் பல்வேறு கருத்துரைகளை பதிவு செய்தனர். இரவு 9 மணிக்கு நிகழ்ச்சி முடிந்தது கருத்தரங்கின் காணொளி விரைவில் பதிவேற்றப்படும்

0

தூத்துக்குடி மாவட்டக் கலந்துரையாடல்

20-8-2015 அன்று மாலை 4-00 மணிக்கு, தூத்துக்குடி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. முன்னதாக தோழர் க.மதன் படத்திறப்பு விழா நடைபெற்றது. கழக கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் மற்றும் இயக்க தோழர்கள் கழக பணிகளை மேற்கொண்டு செல்ல ஆலோசனை வழங்கினர்.

0

விருதுநகர் மாவட்டக் கலந்துரையாடல்

20-8-2015 அன்று காலை 11-00 மணிக்கு, விருதுநகர் , பாண்டியன் நகரில் உள்ள தோழர் கணேசமூர்த்தியின் இல்லத்தில், மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

0

புதுச்சேரி பெரியாரியல் பயிற்சி வகுப்பு

16-8-2015 அன்று காலை முதல் மாலை வரை புதுச்சேரி மாநில திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ‘ பெரியாரியல் பயிற்சி வகுப்பு, அரியாங்குப்பத்தை அடுத்த அலுத்துவேலியில் உள்ள தோழர் பழனிராசா தோட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும்  தென்னந்தோப்பில்  நடந்தது. அறிமுக உரையை ஆற்றிய மாநிலக் கழகத் தலைவர் லோகு அய்யப்பன் மாநிலக் கழகம் எடுத்த முடிவை ஒட்டி மாதந்தோறும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பெரியாரியல் பயிற்சி வகுப்பின் தொடக்க நிகழ்வே இது என்று குறிப்பிட்டார். கழகத் தோழர்கள் யார் எந்தவகையான கேள்விகளை  கேட்டாலும் உடனே பதிலளிக்கும் அளவுக்கு கொள்கைத் தெளிவு உள்ளவர்களாக வளர்த்தெடுக்கும் முயற்சியே இது என்றார். தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “பெரியார் என்றொரு மனிதர்” என்ற தலைப்பில் பெரியாரின் இளமைக் காலம்யற்சி முதற்கொண்டு அவர் பெரும் மானுடநேயராக, ஜாதி ஒழிப்பு, பெண்ணூரிமைப் போராளியாகப் பரிணமித்ததற்கான பின்புலம் போன்றவற்றை விளக்கி 11-00 மணி முதல் நண்பகல் 2-00 மணிவரை விளக்கினார். மதிய...

0

ஜாதி வெறியன் யுவராஜை உடனே கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் திருச்செங்கோடு 17082015

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் பொறியாளர் கோகுல்ராஜ். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஒத்தகடை பகுதியைச் சேர்ந்தவர் சுவாதி. இருவரும் ஒரே கல்லூரியில் படித்து பழகியுள்ளனர். கடந்த 50 நாட்களுக்கு முன்னர் பொறியாளர் கோகுல்ராஜூம், சுவாதியும் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு இருவரும் வந்த போது அவர்களை ஜாதியின் பெயரால் பிரிக்கும் நோக்கத்தில் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை என்கிற ஜாதி அமைப்பின் நிறுவனர் யுவராஜ் என்பவர் தலைமையில் 20 க்கு மேற்பட்ட ரவுடிகள் கோகுல்ராஜ் சுவாதி ஆகியோரைப் பிடித்து அவர்களின் ஜாதிகளைப் பற்றி விசாரித்த பின்னர் சுவாதியை மட்டும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்கிற காரணத்தினால் ஜாதிய வெறியோடு பொறியாளர் கோகுல் ராஜை கடத்தி சென்று அவரை கொலை செய்து தலையை துண்டித்து பள்ளி பாளையம் ரயில் மார்க்கத்தில் தொட்டிபாளையம் என்ற பகுதியில் இரயில்வே தண்டவாளத்தில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றனர். தமிழக முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இந்த...

0

விழுப்புரம் மாவட்டக் கலந்துரையாடல்

விழுப்புரம் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், 14-8-2015 அன்று நண்பகல் 12-00 மணிக்கு, சங்கராபுரம், வாசவி அரங்கில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது.  

0

கடலூர் மாவட்டக் கலந்துரையாடல்

13-8-2015 அன்று மாலை 6-00 மணிக்கு, கடலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், கம்மாபுரம், திருச்சிக்காரர் மண்டபத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப்  பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னினையிலும் நடைபெற்றது.

0

மூத்த பெரியாரியர் ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் சந்திப்பு

13-8-2015 அன்று நண்பகல் 2-00 மணிக்கு, மூத்த பெரியாரியரும், கீழ்வெண்மணி கோபாலகிருஷ்ண நாயுடு கொலை வழக்கில் கைதான 11 திராவிடர்க் கழகத் தோழர்களுக்கான வழக்கை முன்னின்று நடத்தியவரும், குடிதாங்கி நிகழ்வில் மையப் புள்ளியாய் நின்று இயங்கியவரும் ஆன ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் உடல் நலிவுற்றிருக்கிற செய்தி அறிந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழக முன்னணித் தோழரும்,  எழுத்தாளருமான தஞ்சை பசு. கவுதமன் ஆகியோர் கும்பகோனத்தில், அம்பேத்கர் வளாகம், தந்தை பெரியார் இல்லத்தில்  சந்தித்தனர். அவரிடம் கீழ்வெண்மணி கொலை, குடிதாங்கி நிகழ்வு போன்றவற்றில் உள்ள அய்யங்களைக் கேட்டறிந்ததோடு, நிகழ்கால அரசியல் குறித்தும் இரண்டு மணி நேரம் உரையாடிவிட்டு விடைபெற்றனர்.

0

நாகை மாவட்டக் கலந்துரையாடல்

கழகத்தின் நாகை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், 13-8-2015 அன்று காலை 11-00 மணிக்கு,  மயிலாடுதுறை, ROA அரங்கத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது.

0

திருவாரூர் மாவட்டக் கலந்துரையாடல்

12-8-2015 அன்று மாலை 6-00 மணிக்கு கழகத்தின் திருவாரூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், மன்னார்குடி  மதர்சா அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

0

தஞ்சை மாவட்டக் கலந்துரையாடல்

கழகத்தின் தஞ்சை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 12-8-2015 அன்று காலை 11-00 மணிக்கு பட்டுக்கோட்டை, அரசு பிளாசா அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

0

தமிழக காவிரி விவசாயிகள் சங்க கொடியை கழக தலைவர் அறிமுகம் செய்தார்

தஞ்சையில் 11.08.2015 திகதி நடைபெற்ற விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்ற திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர், தோழர் கொளத்தூர் மணி,தி.மு.கவின் செய்தி தொடர்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கேஎ.எஸ். இலங்கோவன், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எஸ்.திநாவுகரசர்,தமிழ் மாநில காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர். ரெங்கராஜன், தே.மு.தி.கவின் மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பினர் பால அருட்செல்வன் ஆகியோரும், பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்களும் உரையாற்றினர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்களை ஆதரித்தும், விளக்கியும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  சிறப்புரையாற்றியதைத் தொடர்ந்து, அந்த மாநாட்டின் நெறியாளரும், அந்த இயக்கத்தின் தலைவருமான தோழர் பி.ஆர்.பாண்டியன், அந்த இயக்கத்தின் கொடியினை அறிமுகப்படுத்துகின்ற பொறுப்பினை தலைவர் கொளத்தூர் மணி அவர்களிடம் வழங்கினார். அப்போது தோழர் பி.ஆர்.பாண்டியன் , ” விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டிற்கு எல்லா கட்சிகளுடைய தலைவர்களையும் அழைத்திருந்தேன். அவர்களில் பெரும்பாலோர் வந்திருந்தனர். வர இயலாதவர்கள் தங்களின் பிரதிநிதிகளை அனுப்பி பங்கேற்றனர். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு...

0

தொடரும் இனப்படுகொலைக்கு… தமிழீழம் ஒன்றே தீர்வு – இன எழுச்சிக் கருத்தரங்கம்

9-8-2015 ஞாயிறு, மாலை 5-30 மணிக்கு, தமிழீழ விடுதலைக்கான மாணவர்-இளைஞர் கூட்டியக்கத்தின் சார்பாக ” தொடரும் இனப்படுகொலைக்கு …… தமிழீழம் ஒன்றே தீர்வு” எனும் முழக்கத்தை முன்வைத்து, இன எழுச்சிக் கருத்தரங்கம்,சேலம் விஜயராகவாச்சாரி நினைவு அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் இளைஞர் இயக்கத்தின் தலைவர் ஜெகதீஷ் தலைமை ஏற்றார். தமிழ் இளைஞர் மற்றும் மாணவர் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வீர.பிரபாகரன் முன்னிலை வகித்தார். நிகழ்வில் பல்வேறு மாணவர் இயக்கங்களின் பிரதிநிதிகள் உரையாற்றினர். சேலம் வழக்கறிஞர் சந்தியூர் பார்த்திபன், கோவை வழக்கறிஞர் ப.சு. சிவசாமித் தமிழன், நோர்வே முனைவர் விஜய் அசோகன், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை. கு. இராமகிருட்டிணன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் ஏராளமான மாணவர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

0

சேலம் (கிழக்கு) மாவட்டக் கலந்துரையாடல்

சேலத்தை அடுத்த கருப்பூரில் உள்ள மாவட்டத் தலைவர் தோழர் க. சக்திவேல் அவர்களின் பண்ணை இல்லத்தில் 5-8-2015 பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெற்றது

0

பெரம்பலூர் மாவட்டக் கலந்துரையாடல்

7-8-2015 அன்று, பெரம்பலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் அக்ரி ஆறுமுகம் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது

0

நாமக்கல் மாவட்டக் கலந்துரையாடல்

திருச்செங்கோடு, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனக் கட்டிடத்தில் நாமக்கல் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 6-8-15 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது

0

திருச்சி மாவட்டக் கலந்துரையாடல்

திருச்சி, உறையூரில் உள்ள “ Innovators Group of Community College “-இன் கூட்ட அரங்கில் 7-8-2015 அன்று பிற்பகல் 4-00 மணிக்கு நடைபெற்றது.

0

சேலம் (மேற்கு) மாவட்ட கலந்துரையாடல்

சேலம் ( மேற்கு ) மாவட்டக் கலந்துரையாடல், மேட்டூர் தாய்த்தமிழ்ப் பள்ளியில் 05-08-2015 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடை பெற்றது.