ஒன்றிய ஆட்சியின் ஆணவம்
விளிம்பு நிலை மக்களின் கல்வியை வேத காலம் தொடங்கி பார்ப்பனியம் மறுத்தே வருகிறது. “சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று கட்டளை இட்டது”.பாடசாலைகள் என்றாலே வேதம் கற்பிப்பதற்கு மட்டும் தான்.தமிழ் மன்னர்கள் கோவில்களைக் கட்டினார்களே தவிர பள்ளிக்கூடங்களை நிறுவவில்லை. வேத பாடசாலைகளைத் தான் அமைத்தார்கள்.பிரிட்டிஷ் அதிகாரி மெக்காலே தான்,முதன் முதலாக ஆங்கில வழியில் பொதுப் பள்ளிகளைக் கொண்டு வந்தார்(1835).அந்த கல்வித் திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்களும் பார்ப்பனர்கள்தான். வேதம் படித்தவர்கள் ஆங்கிலம் படித்து பிரிட்டிஷ் ஆட்சியில் உயர் பதவிகளை கைப்பற்றினார்கள். 1916-ம் ஆண்டு பார்ப்பன அல்லாதார் இயக்கம் வரலாற்றுத் தேவையாக வந்த பிறகு பார்ப்பனர் ஆதிக்கம் கேள்விக்கு உள்ளானது. நீதிக்கட்சியின் முதல் ஆட்சியில் 1921-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வகுப்புவாரி உத்தரவு பார்ப்பனர் அதிகார வர்க்கத்தால் முடக்கப்பட்டது.அதற்கு பிறகு 1928 ஆம் ஆண்டில் தான்,ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு,சுப்பராயன் முதல்வராக இருந்த போது அமைச்சர் முத்தையா முதலியார் அவர்களால் வகுப்புவாரி உரிமைச்...
