Category: சிறப்பு கட்டுரை
மாணவர்களின் கற்றல் திறன் படைப்பாற்றலை வளர்த்து எடுக்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஒவ்வொரு மாதமும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு குழந்தைகள் திரைப்படங்களை திரையிடும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர் ஒருவரும் அழைக்கப்பட வேண்டும். கடந்த அக்டோபர் 13ஆம் தேதி “தி ரெட் பலூன்” என்ற பிரெஞ்சு திரைப்படம் அனைத்து பள்ளிகளிலும் திரையிடப்பட்டது. 34 நிமிடம் ஓடக்கூடிய இந்த மௌனப் படம் ஆஸ்கார் விருது பெற்ற ஒன்று. 1956ஆம் ஆண்டு வெளியானது. சென்னை பெசன்ட்நகர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் கல்வித்துறை அழைப்பை ஏற்று நான் (விடுதலை இராசேந்திரன்) சிறப்பு விருந்தினராக பங்கேற்றேன். “பள்ளி மாணவன் ஒருவனிடம் பலூன் ஒன்று கிடைக்கிறது. நூல் கயிற்றுடன் கிடைக்கும் அந்த பலூன் மீது அவனுக்கு உணர்வு பூர்வமான ஒரு ஈர்ப்பு உருவாகிறது. எங்குச் சென்றாலும் பலூனின் நூலை உயர்த்திப் பிடித்தவாறே செல்கிறான். பல்வேறு தடைகளை எதிர்ப்புகளை எதிர்கொள்கிறான். பள்ளிப்...
நகர்ப்புற நக்சலைட்டுகள் என்ற முத்திரை குத்தி மனித உரிமை செயல்பாட்டாளர்களைக் கொடூரமாக நசுக்கி வருகிறது பாசிச ஒன்றிய ஆட்சி. அதில் ஒருவர்தான் டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த ஜி.என்.சாய்பாபா. 90ரூ உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர். சக்கர நாற்காலிகளால் தான் அவரால் நகர முடியும். கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து அவருக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருக்கிறது என்று குற்றம் சாட்டி மகராஷ்டிரா சிறையிலே 7 ஆண்டுகளாக அடைத்து வைத்திருக்கிறது ஒன்றிய ஆட்சி. அவருக்கான பிணை கோரி வழக்கு வந்தது. வழக்கை விசாரித்த பம்பாய் உயர்நீதிமன்றம் அவரை சிறையிலிருந்து விடுவிக்க உத்தரவிட்டது. உத்தரவு பிறப்பித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே மகராஷ்டிரா மாநில அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது. உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பம்பாய் நீதிமன்றத்தின் உத்தரவை இரத்து செய்து அறிவித்திருக்கிறது. இதில் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிற கருத்து தான் மிகவும் வியப்புக்குரிய ஒன்றாகும். “மாவோயிஸ்டுகளைப் பொறுத்தவரை அவர்கள் எவ்வளவுதான் உடல் ஊனமுற்று இருந்தாலும்,...
இந்தியாவை இந்திநாடாக்க அமீத்ஷா தலைமையிலான நாடாளுமன்றக் குழுப் பரிந்துரைத்துள்ளது. தேர்தலில் வடமாநிலங்களின் வாக்குகளைக் குறி வைத்து இந்த அதிரடி நடவடிக்கையில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி இறங்கியுள்ளது. இந்த அறிவிப்பால் தமிழகம் கொந்தளித்துள்ளது. அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு, முதல் முறையாக 1976ம் ஆண்டில் அலுவல்பூர்வ மொழி சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. இக்குழுவில் மக்களவை எம்பி.க்கள் 20, மாநிலங்களவை எம்பி.க்கள் 10 பேர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். தற்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இக்குழு செயல்படுகிறது. இக்குழு அதன் 11வது அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் கடந்த மாதம் சமர்ப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் வருமாறு: இந்தி மொழி பேசும் மாநிலங்களில் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ், ஒன்றிய பல்கலைக் கழகங்கள், கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் இந்தி மொழியிலும், பிற மாநிலங்களில் உள்ளூர் மொழியான தாய்மொழியிலும் பயிற்றுவிக்க வேண்டும். இந்தி மொழியை ஐநா.வின் அலுவல் மொழிகளில் ஒன்றாக்க...
வள்ளலார் தொடக்கக் காலத்தில் சைவத்திலும் முருகக் கடவுளிடமும் நம்பிக்கைக் கொண்டிருந்தாலும் அவரது சிந்தனையில் மாற்றங்கள் வந்து கொண்டிருந்தன. அவர் எழுதிய ஆறாம் திருமுறையில் சைவம், ஆகமம், வேதங்களைக் கேள்விக்கு உட்படுத் தினார். பெரியார் ஆறாம் திருமுறைப் பாடல்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டாh. வள்ளலாரின் வரலாற்றில் தலைசிறந்த நூலாகக் கருதப்படும் நூல் – முனைவர் ஊரன் அடிகள் எழுதியதாகும். அண்மையில் ஜூன் 13, 2022 அன்று தமது 89ஆம் அகவையில் முடிவெய்தினார். தமிழக அரசின் விருது பெற்ற அந்த நூலிலிருந்து வள்ளலாரின் வேத ஆகம எதிர்ப்புக் கருத்துகளின் தொகுப்பு. வேத, ஆகம, சாத்திர, புராண, இதிகாசங்கள் முடிவான உண்மையைத் தெரிவிக்க மாட்டா. வேதங்கள் ஆகமங்கள் சாத்திரங்கள் புராணங்கள் இதிகாசங்கள் கூறும் கதைகளையும் கற்பனைகளையும் பெருமான் ஒவ்வார் . ‘கலை உரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போக’ என்பார். வேதாகமங்கள் சூதாகச் சொல்லுகின்றன, உண்மையை வெளிப்படையாக உரைக்கவில்லை, இவற்றால் என்ன...
மனித சமூகம் கலப்பில்லாமல் தனித்தனி குழுக்களாக வாழ்ந்திருந்தால் மற்ற டைனோசர்கள் உள்ளிட்ட பல உயிரினங்களைப் போல காலப் போக்கில் கரைந்து போயிருக்கக்கூடும். ஜாதியப் பெருமை பேசி ஜாதியக் கலப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ‘மனுவாதிகள்’ கருத்துகளை அறிவியல் ரீதியாக தகர்த்து எறிந்துள்ள மரபணு ஆய்வாளருக்கு இப்போது நோபல் பரிசு கிடைத்துள்ளது; அவரது பெயர் சுவாந்தே பாபோ. மருத்துவப் பிரிவில் 2022ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டைச் சேர்ந்த மரபியல் ஆய்வாளர் சுவாந்தே பாபோ-விற்கு அறிவிக்கப் பட்டுள்ளது. உலகில் இனத்தூய்மை வாதத்திற்கு இடமில்லை, இனக்கலப்பு இல்லாத ஒரு மனித இனம் உலகில் இல்லவே இல்லை என்பதை டி.என்.ஏ. ஆய்வுகள் மூலம் நிரூபித்ததற்காக சுவாந்தே பாபோவிற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கடவுள்தான் உலகைப் படைத்தார், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான உயிரினங்களையும் படைத்தார், மரம், செடி, கொடிகளை படைத்தார் என்பது உலகில் இதுவரை தோன்றிய அனைத்து மதங்களும் கூறியிருக்கும் கட்டுக்கதைகள். ஆனால் பால்வெளியில் ஒரு...
மொரார்ஜி – கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதை உறுதிப்படுத்தியதோடு, கோட்சே தம்பி கோபால் கோட்சே – தாங்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பதை உறுதி செய்துள்ளார். காந்தி ஆர்.எஸ்.எஸ். முகாமைப் பார்வையிட்டு பாராட்டினார் என்பது அப்பட்டமான பொய். காந்தி நினைவிடத்தில் வழிகாட்டியை ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் வேலையை விட்டு நீக்கியது ஏன்? கோட்சே வாக்குமூலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைக் காப்பாற்ற, தான் அந்த அமைப்பில் இல்லை என்று கூறியுள்ளான். உண்மையில் ஆர்.எஸ்.எஸ். தயாரிப்பு தான் கோட்சே என்பதற்கான ஆதாரங்களை கீழே தருகிறோம். காந்தியார் கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் தொடர்பு உண்டு என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் உண்டு! மொரார்ஜி தேசாய் தனது சுயசரிதையை, ‘ளுவடிசல டிக அல டகைந’ என்ற பெயரில் எழுதியிருக்கிறார். அதில் 248 ஆவது பக்கத்தில், காந்தியாரை சுட்டுக்கொன்றது நாதுராம் கோட்சே என்பவன் புனேயில், ‘ஆர்.எஸ்.எஸ். ஊழியனாக அவன் பணியாற்றியவன்’ என்று எழுதியிருக்கிறார். ஏ.ஜே.குர்ரான் எழுதிய ‘ஆடைவையவே ழiனேரளைஅ in ஐனேயைn யீடிடவைiஉள’ என்ற நூலில்...
பெரியார் வானொலியில் பேசினாரா என்று கேட்டால், காந்தி கொல்லப்பட்ட போது நிலவிய கொந்தளிப்பான சூழலில் பேசிய அமைதிப் பேச்சைத்தான் பெரும் பாலானோர் குறிப்பிடுவர்; அநேகமாக அதுதான் பெரியாரின் முதல் ஒலிபரப்பு. காந்தி மறைந்த மறுநாள் (31.1.1948) திருச்சி வானொலி நிலையத்திலிருந்து அப்பேச்சு ஒலி பரப்பப்பட்டது. அது 1939இல் தொடங்கப்பட்ட திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலியால் ஒலிப்பதிவு செய்யப் பட்டதாகும். சென்னையில் 1924 ஜூலை 31 அன்று முறையான வானொலி ஒலிபரப்பு முதன்முதலாகத் தொடங்கியது. இந்த ஒலிபரப்பைப் பெரியார் கேட்டிருக்க வாய்ப்பில்லை. குறிப்பிட்ட அந்த நாளில், அவர் திருவனந்தபுரம் மத்திய சிறையில் இருந்தார். வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டு இரண்டாம் முறை சிறைவாசத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார். அது சிறை வாசத்தின் 15ஆம் நாள். அறிவியல் முன்னேற்ற நடவடிக்கையில் தமிழ்நாடு முதல் அடியை எடுத்துவைத்த நேரத்தில், அவர் கேரளத்தில் சமூகச் சமத்துவ முயற்சியில் ஓர் அடியை முன்வைத்தார். பெரியாரின் ஒலிபரப்புகள் அகில இந்திய வானொலி...
‘திராவிட மாடல்’ ஆட்சி என்பது ஓர் அரசியல் தத்துவம். அது எல்லாத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சமூகத் தலையீடுகள் (Targeted Social Interventions) என்றழைக்கப் படுபவை அக்குறிக்கோளுக்கு வழிகாட்டு வதாக அமைந்துள்ளன. சமமின்மை (Inequality) என்பது இந்தியா வின் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று என்கிறார் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கட். அப்பிரச்சினையை எதிர் கொள்வதில் சமூகத் தலையீடுகளின் பங்கு முக்கியமானது. சமவாய்ப்புக்கான செயல்பாடுகள் தமிழ் நாட்டில் நீதிக்கட்சியின் ஆட்சியிலேயே தொடங்கிவிட்டன. சென்னை மாநகராட்சியால் பள்ளி மாணவர் களுக்கான மதிய உணவு வழங்கும் திட்டம் நவம்பர் 17, 1920இல் தொடங் கப்பட்டது. 1956ஆம் ஆண்டு இத்திட்டம் காமராஜரால் விரிவுபடுத்தப்பட்டது. அதனை அடுத்து, ஆட்சியில் இருந்த திராவிடக் கட்சிகள் நலிந்தோருக்கான நலத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றன. சம வாய்ப்புக்கான சமூக நீதித் திட்டங்கள் திராவிட மாடலின் முக்கிய அம்சமாகும். இத் திட்டங்கள் ஏழை, எளியவர்களின்...
* இஸ்லாமியர்களின் தேச பக்தியை பாராட்டிய சாவர்க்கார், பிற்காலத்தில் தான் வெறுப்பு அரசியலை கையிலெடுத்தார். * காங்கிரஸ் சமூக சீர்திருத்த மாநாடு நடத்தினால் அந்த பந்தலை எரிப்பேன் என்றார் திலகர். * முஸ்லீம் லீக் தொடங்கியதற்குப் பிறகும் ஜின்னா காங்கிரசிலேயே இருந்தார். திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பாக, “யார் எதிரிகள்” என்ற தலைப்பில் 31.07.2022 அன்று சென்னை அம்பத்தூர் தாய்த் தமிழ் பள்ளியில் நடைபெற்ற பயிலரங்கில், ஆர்.எஸ்.எஸ் முன்னோடி பார்ப்பனர்களான திலகர், சாவர்க்கர், விஜயராகவாச்சாரியார் ஆகியோரின் பார்ப்பனிய சனாதன வரலாறுகளை விளக்கி கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை: “யார் எதிரி?” என்பது தான் நிகழ்வின் தலைப்பு என்றார்கள். யார் எதிரி என்று சரியாக தீர்மானிக்காத இயக்கங்கள் தான் திசை மாறிச் சென்று கொண்டிருக்கின்றன. சில இயக்கங்கள் உண்மையான எதிரிகளை அதாவது பகை முரண்களை விட்டு விட்டு நட்பு முரண்களை எதிர்ப்பதை தமிழ் தேசியத்தின் பெயரால்...
ஒன்றிய ஆட்சி – ஆட்சி சட்டங்களை விதிகளை மனு தர்மத்துக்கு ஏற்ப முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறது. இஸ்ரேல் நாட்டின் உளவுக் கருவியான ‘பெகாசஸ்’ – இந்தியாவில் முக்கிய புள்ளிகளை உளவுப் பார்க்கப் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு, நாடாளு மன்றத்தையே முடக்கியது நினைவிருக்கலாம். இலண்டனிலிருந்து வெளிவரும் கார்டியன், அமெரிக்கா விலிருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் இந்தியாவிலிருந்து வெளி வரும் ‘ஒயர்’ இணைய இதழ் 2021 ஜூலையில் இதை அம்பலப்படுத்தின. 50000 உளவு பார்க்கும் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டன. பாரீசிலிருந்து இயங்கும் தகவல் காப்பகம் – ‘ஃபர்பிடன் ஸ்டோர்ஸ்’ (Forbidden Stores) மற்றும் ஆம்னஸ்ட்டி இன்டர்நேஷனல் அமைப்பிடம் இந்தத் தகவல் சேமித்து வைக்கப்பட்டிருப்பதை ஏடுகள் சுட்டிக்காட்டின. இஸ்ரேல் நாட்டின் சக்தி வாய்ந்த இந்த உளவுக் கருவியை அரசுகள் மட்டுமே வாங்க முடியும் என்று இஸ்ரேல் சட்டம் கூறுகிறது. இஸ்ரேல் நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றபோது இஸ்ரேலுடன் இந்தக் கருவிகளைப் பெற 2 பில்லியன்...
திருமணங்களை தமிழில் நடத்த வேண்டும் என்கிறார். கலியாணம், விவாஹம், கன்னிகாதானம் இவை எதுவுமே தமிழ் கிடையாது. தமிழரின் சொல் என்பது ‘வாழ்க்கைத் துணை நலம்’ என்று தான் குறளில் குறப்பிட் டிருக்கிறது. மற்ற மொழி சொற்களெல் லாம், பெண்ணை தாரை வார்ப்பது, வேசி போன்ற பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்துகின்றன. முதலில் மதத்தில் இருந்து தமிழை பிரிக்க வேண்டும் என்றார். அடுத்ததாக வட மொழியில் இருந்து தமிழைப் பிரிக்க வேண்டும் என்கிறார் பெரியார். ஒரு மொழி என்பது எளிமையாக கற்றுக் கொள்ள முடிகிற அளவிற்கு இருக்க வேண்டும். மிக கடினப்பட்டு படிக்கின்றவாறு இருக்கக் கூடாது. அப்படி எளிமையாக கற்றுக் கொள்ளு மாறு இருந்தால் தான் ஒரு மொழி மக்கள் மத்தியில் வேகமாக வளர்ச்சியடையும். ஆங்கிலத் தில் வெறும் 26 எழுத்துதான் ஆனால் உலக அளவில் வளர்ச்சி அடைந்து சென்று விட்டது. ஆனால் தமிழில் 247 எழுத்துகள் உள்ளன. 247 எழுத்து உள்ள தமிழில்...
500 ஆண்டுகளுக்கும் மேலான முகலாயர் ஆட்சியில் இந்துக்களை அழித்தொழிப்பு செய்தார்கள் அல்லது கட்டாயப்படுத்தி மதம் மாற்றினார்கள் என்பதுதான் இந்துத்துவ ஆராய்ச்சி யாளர்களின் முதன்மை குற்றச்சாட்டாக உள்ளது. ஆனால் இந்துக்களே பெரும் பான்மையாக இருந்தார்கள் என்பதை மக்கள் தொகை கணக்கெடுப்பு உறுதிப் படுத்துகிறது. இராமராஜ்ஜிய கனவோடு மதவெறியைத் திணித்துவரும் இந்துத்துவா அமைப்புகள், இந்தியாவின் சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக, இஸ்லாமியர்களுக்கு எதிராக பரப்பும் அவதூறுகள், நிகழ்த்தும் வன்முறைகள் அளவற்றது. அதில் ஒன்றுதான் முகலாய மன்னர்கள் காலத்தில் இந்துக்கோயில்கள் இடிக்கப்பட்டு, இந்துக்கள் கொல்லப்பட்டு ரத்த ஆறு ஓடியதைப் போல பரப்பப்படும் அவதூறு. அதற்கு மாறாக, வேதகால ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடியதாகவும், அந்த பண்பாடு, கலாசாரத்தை மீட்டெடுக்க வேண்டுமென்றும் பேசி வருகிறார்கள். இரண்டிலும் உள்ள உண்மை என்பது குறித்து “ஃபிரன்ட்லைன்” இதழில் சாம்சுல் இஸ்லாம் என்பவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையின் தமிழாக்க முதல்பகுதி கடந்த வார இதழில் வெளியிடப்பட்டது. அதன் இரண்டாவது மற்றும் நிறைவுப்பகுதி இதோ…...
நரேந்திர மோடி தலைமையிலான 8 ஆண்டுகால பாஜக ஆட்சியில், இந்திய இளைஞர்களில் 1 சத விகிதம் பேருக்குக் கூட வேலை வழ ங்கப்படவில்லை என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் பணி வாய்ப்புக்காக 22 கோடியே 05 லட்சம் விண்ணப்பங்கள் வந்த நிலையில், அதில், 7 லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு மட்டுமே நியமனத்திற்கான பரிந்துரைகள் வழங்கப் பட்டுள்ளன என்று ஒன்றிய பாஜக அமைச்சரே நாடாளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் ஒப்புக் கொண்டுள்ளார். ஒன்றிய அரசுத்துறைகளில் கடந்த 8 ஆண்டுகளில் வழங்கப்பட்ட பணி நியமனங்கள் குறித்து, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. அனுமுலா ரேவந்த் ரெட்டி கேள்வி எழுப்பியிருந்தார். வெறும் 0.33 சதவீதம் இதற்கு நாடாளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்த ஒன்றியப் பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் இணை அமைச்சரும், பிரதமர் அலுவலக இணை அமைச்சருமான ஜிதேந்திர சிங், ‘‘கடந்த...
புதுதில்லியில் உள்ள எய்ம்ஸில் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) சாதி வெறி தலைவிரித்தாடுகிறது என்று நாடாளு மன்றக்குழுவின் விசாரணையில் அம்பல மாகியுள்ளது. இதனால் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தொடர்ந்து தங்கள் தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருந்திருக்கிறார்கள். எஸ்.சி மற்றும் எஸ்.டி, நலனுக்கான நாடாளு மன்றக்குழுவின் தலைவரான பாஜகவைச் சேர்ந்த கிரித் பிரேம்ஜிபாய் சோலங்கி இருக்கிறார். எய்ம்ஸ்சில் இடஒதுக்கீடு பின்பற்றப்படு வது பற்றிய ஆய்வின் முடிவில் இந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்கள் நியமனத்திலும் எஸ்.சி மற்றும் எஸ்.டி. விண்ணப்பதாரர்கள் மீது சாதி ரீதியான பாகுபாடு காட்டப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். “எஸ்.சி மற்றும் எஸ்.டி. மாணவர்களை முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்களில் தோல்வியடையச் செய்துள் ளார்கள் என்று எங்களுக்குத் தெரிய வந்திருக்கிறது. இத்தனைக்கும் தீவிரமான முயற்சிகளை அந்த மாணவர்கள் மேற் கொண்டும் பாகுபாடு காரணமாக தோல்வி யடைந்துள்ளனர். எழுத்துத் தேர் வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்ற பிறகும் செய்முறைத் தேர்வுகளில்...
பா.ஜ.க.வும் சங்கிகளும் இந்து பண்பாடு ஒழுக்கம் சார்ந்து செயல்படுகின்றனரா? ஜாதிக் குழுக்களை கட்சிக்குள் இழுக்கும் சதி. முறியடிக்க நாம் எத்தகைய எதிர் பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும்? மார்ச் 20, 2022 அன்று தமிழ்த் தேச நடுவம் சார்பில் ‘பாவலரேறு தமிழ்க் களத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸை தடை செய்ய வேண்டும் – ஏன்?’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையின் சுருக்கம்: (சென்ற இதழ் தொடர்ச்சி) தமிழ் நாட்டில் தமிழ் தெரியாமலேயே தேர்வாணைய தேர்வுகளை எழுத அனுமதித் தார், முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம். தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் தேர்ச்சி பெற்றால் போதும் என்ற அரசாணை பிறப்பிக்கச் செய்தார். தமிழ் தெரியாத பலர், தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகளைப் பிடித்து விட்டனர். ஜெயலலிதா மறைந்தவுடன் முதல்வராக அவர் பதவியேற்றக் காலத்தில் இப்படி ஒரு விபரீத முடிவு எடுக்கும் நிர்ப்பந்தம் அவருக்கு எதனால் ஏற்பட்டது...
தடைகளைச் சந்தித்த ஆர்.எஸ்.எஸ். மீண்டும் வளர்ந்தது எப்படி? முதன்மையான எதிரியை அடையாளம் காண்பதில் தெளிவான புரிதல் வேண்டும். ஒன்றிய ஆட்சியை எதிர்ப்பதற்கு தி.மு.க.வைத் தவிர வேறு வலிமையான அரசியல் கட்சி இல்லை. மார்ச் 20, 2022 அன்று தமிழ்த் தேச நடுவம் சார்பில் ‘பாவலரேறு தமிழ்க் களத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸை தடை செய்ய வேண்டும் – ஏன்?’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையின் சுருக்கம்: தமிழ்த் தேச நடுவத்தின் சார்பில் ஆர்.எஸ்.எஸ்.சை தடை செய்க என்ற முழக்கத் துடன் தோழர் பொழிலன், இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு அமைப்பு மட்டுமல்ல; அது பார்ப்பனியத் துக்கான கருத்தாக்கம். அமைப்பை தடை செய்தாலும் அதன் பாசிச பார்ப்பனிய கருத்தாக்கத்தை எதிர்ப்பு இயக்கங்கள் வழியாகவே தடுத்து நிறுத்த முடியும். ஏற்கனவே அவசர நிலை காலத்திலும், காந்தி கொலையின் போதும், பாபர் மசூதி இடிப்பின் போதும் தடை...
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன், அனைத்து ஜாதி இந்துக்களும் அர்ச்சகராகும் பிரச்சனையை கையில் எடுத்து உரிய முறைப்படி அவர்களுக்கு அர்ச்சனை செய்யும் நியமனங்களை வழங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் இதை வெளிப்படையாக எதிர்க்க முடியாத நிலையில், இப்போது வெளி மாநிலத்தி லிருந்து ஆட்களைப் பிடித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கின்றனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜெகத்குரு இராமநாத ஆச்சாரியார் சுவாமி என்பவரும் டெல்லி, உத்திர பிரதேசம், பெங்களூர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 8 பேரும் தமிழ்நாட்டைச் சாராதவர்கள் இந்த வழக்கை தொடர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் தமிழ்நாடு அரசு நியமித்த ஒரு உத்தரவுக்கு எதிராக வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழக்குத் தொடர உரிமையில்லை, எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியதை, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஏற்க தயாராக இல்லை. ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும். அந்த நீதிபதி ஆகம விதிகளை...
அரசியல் சட்டத்தை சுயாட்சி அடிப்படையில் உருவாக்க விரும்பி யவர்கள் பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு தங்களது நிலையை தலைகீழாக மாற்றிக் கொண்டார்கள். அரசியல் சட்டத்தில் மாநிலங்கள் உரிமைகளைத் தடுத்தது வரலாற்றுப் பின்னணியை விளக்கி ஆ. ராசா நிகழ்த்திய உரை. கடந்த இதழ் தொடர்ச்சி. 1974இல் கலைஞர் முதலமைச்சர். மாநில சுயாட்சி தீர்மானத்தை நிறைவேற்றி பிறகு, இராஜபாளையத்தில் திமுக மாவட்ட மாநாடு நடைபெறுகிறது. திமுகவின் தலைவராக, ஆட்சியின் தலைவராக கலைஞர் அங்கே போகிறார். போகிற வழியில் அவருடைய படம், முஜிபூர் ரகுமானுடைய படம் இரண்டு படத்தையும் வைத்து வருக வருக என்று சுவரொட்டி, பதாகைகள் வைத்தார்கள். உடனே கம்யூனிஸ்ட் கட்சி உட்பட காங்கிரசும் கூறினார்கள், கலைஞர் பிரிவினைவாதியாக மாறி விட்டார். ஏன் அண்ணா படம் அங்கே இல்லை? ஏன் பெரியார் படம் அங்கே இல்லை ? ஏன் அங்கே முஜிபூர் இரகுமான் படம் ? ஏனென்றால் முஜிபுர் ரகுமான் தான் கிழக்கு பாகிஸ்தானை பிரித்தவர்....
ஒரு நீண்ட தலைப்பை ஒரு குறுகிய நேரத்தில் உரையாற்ற வேண்டும் என்ற நெருக்கடியோடு உங்கள் முன்னால் நான் நிற்கின்றேன். ஒரு அரை நூற்றாண்டாக “மாநில சுயாட்சி”யைப் பேசுகின்ற ஒரு இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் இருந்து கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இப்போது ஏன் நடத்த வேண்டும் ? ஒரு மாதத்திற்கு முன்பாக இந்திய நாட்டின் பிரதமர் வந்தார். அவரை வைத்துக் கொண்டு ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இப்படி பேச முடியுமா? என்று கூறுகிற அளவிற்கு நம்முடைய தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அன்றைக்கு பேசினார். அதன் சுருக்கம் இதுதான். “பிரதமர் அவர்களே தமிழ்நாட்டின் சார்பில் நாங்கள் உங்களுக்கு மொத்த வருமானத்தில் 10ரூ தருகிறோம். வரி என்று எடுத்துக் கொண்டால் 6.5ரூ. ஆனால் நீங்கள் எங்களுக்கு தருவதோ வெறும் 1.5ரூ தான். இது கூட்டாட்சி தத்துவத்திற்கே எதிரானது. என்று அன்றைக்கு பிரதமர் முன் பேச திராணி உள்ள ஒரே முதலமைச்சர் என்பதை நிரூபித்துவிட்டு, ...
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு திரௌபதி முர்மு என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண். இது சமூக நீதியின் வெளிப்பாடு என்று சிலர் பேசத் துவங்கியிருக்கிறார்கள். இந்த வாதத்தில் நேர்மை இருக்கிறதா? நிச்சயமாக இல்லை. இதற்கு முன் குடியரசுத் தலைவராக நிறுத்தப்பட்டவரும் தலித் தான். ஆனால் அவர் குடியரசுத் தலைவராக இருந்து சமூக நீதியைக் காப்பாற்றினாரா? சொல்லப் போனால் கோவிலுக்குள் செல்லக்கூட அவரை சனாதானம் அனுமதிக்கவில்லை என்பது தான் சோகமான வரலாறு. இந்தத் தேர்தலை எப்படிப் பார்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ள கருத்து மிகச் சரியானது, ஆழமானது. இந்தியாவில் அரசியல் சட்டம் சீர்குலைக்கப்பட்டு, ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் படுகொலைக்குள்ளாக் கப்பட்டு, மதத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிற நேரத்தில், இதை எதிர்த்து நான் தொடர்ச்சியான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன், அந்த போராட்டத்தின் ஒரு...
கோவை காரமடையில் தேசியக் கல்வியையும் குலக் கல்வியையும் ஒப்பிட்டும் குலக் கல்வி எதிர்ப்பு வரலாற்றை விளக்கியும் பொறியாளர் மு. செந்தி லதிபன் ஆற்றிய உரை. இராஜகோபாலாச்சாரி – தன்னிச்சையாகக் கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் எழுந்த போராட்ட வரலாறு மற்றும் அரசியல் சூழலை விளக்கு கிறார். (சென்ற இதழ்த் தொடர்ச்சி) கம்யூனிஸ்ட் கட்சியின் துரோகம் : சட்ட மன்றத்தில் குலக்கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்து ஒரு நிபுணர் குழு அமைத்து பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று ஒரு தீர்மானம் கொண்டு வரப் பட்டது. தீர்மானத் திற்கு ஆதரவாக 139 வாக்குகள் பதிவாகின. எதிராக 137 வாக்குகள் எதிராக விழுந்தன. 2 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜாஜி அரசு தோல்வி அடைந்தது. எனவே ராஜாஜி அரசு பதவி விலக வேண்டும் என்று சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகள் குரல் கொடுத்தன. அந்த நேரத்தில் சட்டமன்றத்தில் எதிர்க் கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி...
ஜாதியின் மூன்று தடைகள் பொருளாதார வளர்ச்சியை அனைவருக்கும் கொண்டு செல்லக்கூடிய மாற்றத்துக்கு மூன்று அம்சங்கள் தடையாக இருக்கின்றன. ஒன்று நில உரிமைகளில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள்; இது உற்பத்தியையும் பாதிக்கிறது. இரண்டாவது உயர்கல்வியை வரலாற்று ரீதியாக ஒரு பிரிவினர் மட்டும் தங்கள் ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டு அனைவருக்கும் கிடைத்து விடாமல் மறுத்து வருதல்; மூன்றாவது நவீன தொழில் மற்றும் அறிவியல் துறைகளில் நிகழும் ஜாதியப் பாகுபாடு; இப்போது ‘உயர் ஜாதி’ அறிவுஜீவி வர்க்கம் தங்களுக்கான ‘உறவுத் தொடர்புகளை’ வலிமையாக்கிக் கொண்டு மேற்குறிப்பிட்டத் துறைகளை தங்கள் பிடிக்குள் வைத்திருக்கிறது. – ‘கலையரசன்-ஏ’ கட்டுரையிலிருந்து இந்தியாவில் பொருளாதாரம், வேலை வாய்ப்பு களில் வளர்ச்சியை நோக்கி முன்னேறிச் செல்வதில், ஜாதி தடையாக நிற்கிறது என்பதை விளக்கி ‘கூhந னுசயஎனையைn ஆடினநட’ புத்தகத்தை எழுதிய முனைவர் கலையரசன் ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (ஜூன் 23, 2022) ஓர் ஆய்வு கட்டுரையை எழுதியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக பொருளாதார...
ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை காங்கிரசுக்குள் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், செங்கல்வராயன், பத்திரிகையாளர் டி.எஸ். சொக்கலிங்கம் மற்றும் ஜி.டி. நாயுடு, ஜெ.சி. குமரப்பா எதிர்த்தனர். ‘கல்கி’ ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியும் ம.பொ.சி.யும் ஆதரித்தனர். கோவை காரமடையில் தேசியக் கல்வியை யும் குலக் கல்வியையும் ஒப்பிட்டும் குலக் கல்வி எதிர்ப்பு வரலாற்றை விளக்கியும் பொறியாளர் மு. செந்திலதிபன் ஆற்றிய உரை. இராஜகோபாலாச்சாரி – தன்னிச்சையாகக் கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் எழுந்த போராட்ட வரலாறு மற்றும் அரசியல் சூழலை விளக்கு கிறார். 5ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் தொழில் படிப்புக்குச் செல்ல வேண்டுமாம். 10 வயதில் தந்தை தொழிலை தானே கற்றுக் கொள்ள தள்ளப்படுவார்கள். அதற்கு அரசே குழந்தைகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் தொழிற்பயிற்சி அளிக்கப்படும். எப்போது? 10 வயதில் அப்பன் தொழிலை பிள்ளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆச்சாரியார் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தையே புதிய கல்விக் கொள்கையில்...
இந்தியாவிலே மாநில அரசு குடிநீர் வாரியம் தொடங்கியது கலைஞர் ஆட்சியில் தன். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், வருமான இலக்கு இல்லாமல் அனைவருக்கும் ரேஷன் கார்டு திட்டங்களை அமுலாக்கியதும் தமிழ்நாடு தான் – என்றார் முனைவர் ஜெயரஞ்சன். திராவிட மாடல் பயிற்சிப் பாசறை தொடக்க விழா 5.6.2022 அன்று கலைஞர் அரங்கில் நடந்ததது. திட்டக் குழு துணைத் தலைவர் முனைவர் ஜெயரஞ்சன் பங்கேற்று ஆற்றிய உரையின் தொடர்ச்சி: அடுத்ததாக நீர்ப் பாசனத்தை எடுத்துக் கொண்டால், குடிநீராக இருக்கட்டும்; பாசனத் திற்கான நீராக இருக்கட்டும்; இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் குடிநீர் வடிகால் வாரியத்தைத் தொடங்குகிறார். ஏனென்றால், அன்று குடிநீர் கிடைப்பதே மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. எங்கெல்லாம் குடிநீர் தட்டுப்பாடு இருந்ததோ, ஆழ்குழாய் கிணறுகளின் மூலமாக டாங்குகளில் தண்ணீர் ஏற்றி, எல்லோருக்கும் குடிக்க தண்ணீர் கிடைக்க வழி செய்தார். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், எல்லா ஊர்களிலும் தண்ணீர் ஒரே மாதிரியாக இருக்காது. சில ஊர்களில்...
மோடி அமைக்கத் துடிக்கும் இந்து ராஜ்யத்தின் தூதுவராக தமிழக ஆளுநர் ஆர்.எஸ். ரவி, சனாதனப் பெருமையைப் பேசுவதோடு, இந்தியா இந்துக்களின் நாடு என்று அரசியல் சட்டத்தின் மாண்புகளைக் குலைத்து வருகிறார். ஆளுநர் பேச்சு அறிவியலுக்கும் அரசியல் சட்டத்துக்கும் எதிரானது. அவரது பேச்சுக்கு மறுப்பு: ரிஷிகளும் முனிவர்களும் உருவாக்கியதே நமது தேசம் என்கிறார் ஆளுநர். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி வருகைக்கு முன்பு இந்தியா என்ற தேசமே உருவாகவில்லை. மன்னர்கள்தான் பேரரசுகளாக சிற்றரசுகளாக ஆட்சி செய்து வந்தனர். கிழக்கிந்திய கம்பெனியும் அதற்குப் பிறகு வந்த பிரிட்டிஷ் காலனி ஆட்சியும் உருவாக்கியது ‘இந்தியா’. சுதந்திரத்துக்குப் பிறகு சமஸ்தானங்களை விரட்டி இந்தியாவுடன் சேர்த்தார்கள். சுதந்திரத்துக்கு முன்பு பாகிஸ்தான் பிரிந்து சென்றது. சுதந்திர இந்தியா தனக்கான அரசியல் சட்டத்தை உருவாக்கிக் கொண்டது. அந்த சட்டப்படி பதவிக்கு வந்தவரே ஆளுநர். ரிஷிகளும், முனிவர்களும் எந்த தேசத்தை உருவாக்கினார்கள்? அவர்கள் உருவாக்கியதாகப் புராணங்களில் எழுதப்பட்டுள்ள கற்பனைகளை வரலாறுகளாக திரிக்கலாமா? இப்போது ஆளுநர்,...
காமராசரின் 120 ஆவது பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாடு அரசு அவரது பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட உத்தரவிட்டுள்ளது. கல்விக் கண் திறந்த கல்வி வள்ளல் காமராசர். கடவுள் வாழ்த்துகளை கைவிட்டுவிட்டு, ‘காமராசர் வாழ்த்துப் பாடலை பாட வேண்டும்’ என்று சொன்னத் தலைவர் பெரியார். அவருக்கு மிகப் பொருத்தமாக இந்த நாளில் தமிழ்நாடு அரசு ஒரு திட்டத்தை துவக்கியிருக்கிறது. முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் 292 கிராமப்புற வளர்ச்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு துவக்கி இருக்கிறது. இந்தியை எதிர்த்தார் காமராசர். மத்திய அரசு, மாநில அரசு வேலைத் தேர்வுகளில் இந்தி கட்டாயமான ஒரு பாடமாக இருக்கக் கூடாது என்று 1955இல் நேருவை சந்தித்து ஆலோசித்து விட்டு அவர் அறிவித்தார். அதற்கு காரணம், பெரியார் இந்தியை எதிர்த்து தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தை அறிவித்தது தான். 1966இல் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 10...
திராவிட மாடல் பயிற்சிப் பாசறை தொடக்க விழா 5.6.2022 அன்று கலைஞர் அரங்கில் நடந்ததது. திட்டக் குழு துணைத் தலைவர் முனைவர் ஜெயரஞ்சன் பங்கேற்று ஆற்றிய உரை: 1967இல் ஆட்சிக்கு வந்த பிறகு நமக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தது. சமூகநீதி இயக்கம் எதற்காகப் போராடியதோ, அதை எல்லாம் செயல் வடிவம் கொடுக்கக் கூடிய ஓர் அரிய வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. ஆனால், அண்ணா முதலமைச்சராக இருந்தது ஒன்றரை ஆண்டுகள்தான். அவர் மறைந்த பிறகு, அந்த அரும்பணியும், அந்த அரிய வாய்ப்பும் டாக்டர் கலைஞரிடம் வந்து சேர்ந்தது. 1976 ஆம் ஆண்டுவரை அவர் செய்த காரியம் இருக்கிறதே, தமிழ்ச் சமுதாயத்தையும், தமிழ்ப் பொருளாதாரத்தையும், தமிழக அரசியல் செயல் படுகின்ற விதத்தை எந்த அளவிற்கு மாற்றியமைத் திருக்கின்றார் என்பதைப் பார்த்தால், வியப்பாக இருக்கும். தமிழகத்தில் மட்டும்தான் வளர்ச்சி என்பது ஜனநாயகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்குப் பொருள் என்னவென்று சொன்னால், நிலம் என்பது ஒரு சிலரிடம் மட்டும்தான்...
பெண் கல்வி, பெண்கள் வளர்ச்சி மற்றும் அதிகாரப்படுத்துதலுக்கான திட்டங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருந்தாலும் குடும்ப வன்முறையில் பெண்கள் மோசமாகப் பாதிக்கப்படுவதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. இதற்கான காரணங்களை ஆராய்ந்து சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் முனைவர் ஆனந்தி, ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (ஜூன் 4) கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். கட்டுரை யின் சுருக்கமான கருத்தை தமிழில் தருகிறோம். குடும்ப வன்முறைக்கு பட்டியலிட்டுள்ள காரணங்கள்: கட்டாயத் திருமணம் : கட்டாயத் திருமணத்துக்கு பெண்கள் உள்ளாக்கப் படுவது ஒரு காரணம். நவீன குடும்ப வாழ்க்கைக்கான செலவுகளை சரி கட்ட பெண்கள் உழைப்பு ஊதியமில்லாமல் கட்டாயத் திருமண முறையில் சுரண்டப்படு கிறது. 20 முதல் 22 சதவீத பெண்களே திருமணத்துக்குப் பிறகு ஊதியம் பெறும் வேலைக்குப் போகிறார்கள். 60 சதவீத படித்த பெண்கள் குடும்பத்தைக் கவனிக்க வேலைக்குப் போகாமல் ஆணாதிக்கமும் ஜாதிக் கட்டமைப்பும் கொண்ட குடும்ப அமைப்புக்குள் ஆண்களின்...
ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் நாட்டில் மனுவாதம் ஆட்சி செய்வது கொடுமையானது என்றும் மநுவாதத்தை ஏற்றக்கொண்டவர்கள்தான் ஒன்றி யத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் ஹரியானாவிலும் ஆட்சி செய் கிறார்கள் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சுபாஷினி அலி குற்றம்சாட்டினார். சாதி ஆணவப்படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றக்கோரி சென்னை சைதாப்பேட்டையில் சனிக்கிழமை (மே 28) தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது: “அனைத்தையும் சாதிய கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்கள் கலப்பு திருமணத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். நமது நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர், பருவ வயதை எட்டிய ஆணோ பெண்ணோ அவர்கள் தாங்கள் விரும்பியவர்களைத் திருமணம் செய்துகொள்ளச் சட்டத்தில் இடம் உண்டு’’ என்று கூறினார். ஆனால் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் கலப்பு திரு மணத்தை ஒருசிலர் ஏற்க மறுக்கிறார்கள். தற்போதைய ஆட்சியாளர்கள் அம்பேத்கர் சிறந்த தலைவர், அரசியல் சாசன...
பிள்ளையை கிள்ளி விட்டு, தொட்டிலை ஆட்டி விடுவது’ என்ற பழமொழி ஒன்றிய பாஜ அரசுக்கு கனகச்சிதமாக பொருந்தக் கூடியது. ஒருபுறம், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் சிறப்புகளை பெருமையாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் பிரதமர் மோடி. ஆனால் மறுபுறம், இந்தியை தேசிய மொழியாக்க அமித்ஷா போன்ற பாஜ தலைவர்கள், வரிந்து கட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித்ஷா, ‘இந்தியாவில் அனைத்து பகுதியிலும் உள்ள மக்களின் தகவல் தொடர்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும். ஆங்கிலமாக இருக்கக் கூடாது. நாங்கள் மாநில மொழிகளுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை கொண்டு வர வேண்டும் என நினைக்கிறோம்,’ என இந்தி திணிப்புக்கு புது விளக்கத்தை தந்தார். இதற்கான காய் நகர்த்தல் டெல்லியில் இருந்து தொடங்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புதுடெல்லி நகராட்சி கவுன்சிலில் தனது அனைத்து துறைகளுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், ‘அலுவல் மொழி...
தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா, ‘நெஞ்சுக்கு நீதி’ படம் குறித்து உதயநிதி ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம்: தாங்கள் நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் பார்த்தேன். திகைத்து மகிழ்ந்தேன். பொதுவாக திகைப்பில் மகிழ்ச்சிக்கு வாய்ப்பு குறைவு. ஆனால், ஒரு புதிய வேதியியல் மாற்றம் என்னை படம் பார்த்தபின் தொற்றிக் கொண்டதால் இருவேறுபட்ட பண்புகளைக் கொண்ட வார்த்தைகளை கோர்க்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானேன். ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தை தயாரிப்பதற்கும் அதில் நடிப்பதற்கும், வெளியிடுவதற்கும், வர்த்தகம் மட்டுமே நிச்சயமாக நோக்கமாக இருந்திட இயலாது என்பதை சாதியத்தால் கட்டமைக்கப்பட்ட இச்சமூக அமைப்பை உணர்ந்த ‘பெரியார்வாதி’ என்ற அடிப்படையில் உணர்கிறேன். இந்த திரைப்படம் வணிக நோக்கில் இலாபமா நட்டமா என்பதைவிட தமிழ் திரையில் இவ்வளவு அப்பட்டமாகவும், பட்டவர்த்தனமாகவும் சாதி பற்றிய புரிதலை – கண்ணோட்டத்தை – எவரும் இதுவரை தந்ததில்லை என்பதுதான் கொண்டாடப்பட வேண்டிய உண்மை. மகாத்மா பூலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர்...
இது பண்டைக்கால மன்னராட்சியின் பழைமைவாதக் கோட்பாடு அல்ல. சமகால மானுட விழுமியங்களை உள்ளடக்கிய நவீனத்துவ சிந்தனை. தமிழ்நாடு அரசு செய்தி விளம்பரத் துறை வெளியிட்ட ஓராண்டு ஆட்சி சாதனை மலரில் எழுதிய கட்டுரை. நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், ஒரு கதையை கூறினார். அது சமூக நீதித் தொடர்பானது. “ஒரு புல்லாங்குழல் தரையில் கிடக்கிறது, அதற்கு மூன்று சிறுவர்கள் உரிமை கோருகிறார்கள். ஒரு குழந்தை, இந்தப் புல்லாங்குழலை எனக்கு மட்டுமே வாசிக்கத் தெரியும், எனக்குத் தருவது தான் சரி என்று கேட்கிறது. மற்றொரு குழந்தை, என்னிடம் விளையாடுவதற்கு எந்தப் பொருளும் கிடையாது. வாங்கித் தரும் நிலையில் எனது பெற்றோர்களும் இல்லை. எனக்குத் தாருங்கள் என்று கேட்கிறது. மூன்றாவது குழந்தை, இந்தப் புல்லாங்குழலை நானே எனது உழைப்பில் உருவாக்கி தவற விட்டுவிட்டேன், எனக்குத் தான் தர வேண்டும் என்று கேட்கிறது. இந்த மூன்று குழந்தைகளும் தங்களுக்கான நீதியை பேசுகின்றன. மூன்றிலும் நியாயம்...
உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு இரண்டு நீதிபதிகளை உச்சநீதிமன்ற கொலிஜியம் தற்போது பரிந்துரை செய்திருக்கிறது. கொலிஜியம், எஸ்.வி.இரமணா தலைமையில் நான்கு பேர் அடங்கியக் குழுவைக் கொண்டதாகும். பரிந்துரை செய்யப்பட்ட இரண்டு பேர்களில் ஒருவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் ஜம்ஷெத் பி. பார்த்திவாலா என்பவர் ஆவார். இவரது பின்னணி மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 2015 டிசம்பர் 1 இல் ஹர்திக் பட்டேல் பிரிவுக்கு தனி ஒதுக்கீடு கேட்ட வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் வந்த போது, அவர் தெரிவித்த கருத்து கடுமையான சர்ச்சைகளை உருவாக்கியது. அவர் தனது தீர்ப்பில் இவ்வாறு கூறினார். “இந்த நாட்டை அழித்துவரும் இரண்டு கேடுகள் எதுவென்று என்னைக் கேட்டால், ஒன்று ‘இட ஒதுக்கீடு’, மற்றொன்று ‘ஊழல்’ என்று நான் கூறுவேன். நாடு சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளுக்குப் பிறகும் எந்த ஒரு குடிமகனும் இட ஒதுக்கீடு கேட்பது வெட்கக் கேடானது” என்று அவர் கூறியதோடு, “அரசியலமைப்புச் சட்டத்தில், பத்தாண்டுகளுக்கு மட்டுமே இட...
அரசு வங்கிகளில் பல்லாயிரம் கடன் வாங்கி பட்டை நாமம் சாத்தி விட்டு வெளி நாட்டில் சொகுசு வாழ்க்கை நடத்துகிறார்கள். பார்ப்பன-பனியா ‘இந்துக்கள்’.உழைக்கும் இந்துக்கள் வங்கிகளில் பெறும் சில ஆயிரம் ரூபாய்க்கு அவமானப் படுகிறார்கள். 17 வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத வழக்கில், 2016ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பியோடியவர் விஜய் மல்லையா. பஞ்சாப் நேசனல் வங்கியில் 14,000 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த வழக்கில் 2018ஆம் ஆண்டில் இந்தியாவை விட்டு தப்பியோடிவர்கள் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரது மாமனார் மெகுல் சோக்சியும். அதனைத்தொடர்ந்து நாட்டையே உலுக்கிய 23,000 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிக் கடன் மோசடியில் குஜராத்தைச் சேர்ந்த ஏ.பி.ஜி. ஷிப்யார்டு என்னும் கப்பல் கட்டுமான நிறுவனம் சிக்கியுள்ளது. இன்றைய தேதியில் இதுதான் இந்தியாவின் மிகப்பெரிய வங்கிக்கடன் மோசடி. இந் நிறுவனத்திற்கு இடம் வழங்கியது குஜராத் மாநில பாரதிய ஜனதா...
கழக செயல் வீரர் தோழர் பத்ரி நாராயணன் 18ஆவது நினைவு நாளையொட்டி, 30.04.2022 காலை 9 மணியளவில், பத்ரி நாராயணன் நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் நினைவு கூறல் நிகழ்வு நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் பங்கேற்று பத்ரி நாராயணனின் சமரசம் இல்லாத இயக்கப் பணிகளை நினைவு கூர்ந்தனர். இறுதியில் ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. அதன்பின் பத்ரி நாராயணன் படிப்பகம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. திராவிட மாடல் முதல் மண்டல மாநாடு 30.04.2022 அன்று மாலை 5 மணியளவில் இராயப்பேட்டை வி.எம். தெரு பெரியார் படிப்பகம் அருகில், தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் தொடங்கி நடைபெற்றது. நிகழ்விற்கு, வட சென்னை மாவட்ட செயலாளர் இராஜி வரவேற்பு கூறினார். மயிலை சுகுமார், முனு சாமி, தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்....
இராம நவமி விழாக்களில் கலவரம் விளைவித்தார்கள் என்று சிறுபான்மை மக்களின் வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தலங்களை பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியினர் புல்டோசரை வைத்து தகர்த்து வருகின்றனர். புது டெல்லியிலும், மத்தியப் பிரதேசத்திலும், குஜராத்திலும் இந்த புல்டோசர் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. உச்ச நீதிமன்றம் அதிர்ச்சியடைந்து தானாக முன் வந்து இந்த வழக்கை எடுத்து ‘உடனடியாக இந்த புல்டோசர் தாக்குதல்களை நிறுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தடை வந்தப் பிறகும் கூட புல்டோசர் தாக்குதல்கள் தொடர்ந்தன, அதற்கு கடும் எதிர்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. பாரதிய ஜனதா கட்சி தற்போது “பாரதிய புல்டோசர் கட்சி”யாக உரு மாறியிருக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக புல்டோசரை வைத்து வீடுகளை இடிக்கிறார்கள், அதே சமயம் பெரும்பான்மை இந்துக்களுக்குத் தான் நாங்கள் கட்சி நடத்துகிறோம் என்று கூறிக்கொள்ளும் இவர்கள், பெரும்பான்மையான இந்துக்களின் வாழ்வாதாரத்தை புல்டோசரை வைத்து தகர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜி.எஸ்.டி வரி மேலும் 143 பொருட்களுக்கு உயர்த்தப்படுவதாக...
ஒரு புதிய நுழைவுத் தேர்வு வந்திருக்கிறது. கியூட் அதன் பெயர் (CUET – Central University Eligibility Test). மத்திய பல்கலைக்கழகங்களுக்கான தகுதித் தேர்வு என்பது பொருள். இனிமேல் மத்திய பல்கலைக் கழக வளாகங்களுக்குள் மாணவர்கள் கால் பதிக்க வேண்டுமானால், இந்தத் தேர்வில் அவர்கள் கை நிறைய மதிப் பெண்கள் வாங்கி வைத்திருக்க வேண்டும். ஏற்கனவே மருத்துவக் கல்லூரியில் நுழைய நீட் தேர்வு நடந்துவருகிறது. இது தவிர கேட் என்றொரு நுழைவுத் தேர்வும் நடந்துவருகிறது; இது பொறி யியல் முதுநிலைப் படிப்பிற்கான தேர்வு என்பதால் பரவலாக அறியப்படவில்லை. ஏன் இப்படியான நுழைவுத் தேர்வுகள் நடத்தப் படுகின்றன? ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை யானது பள்ளிக் கல்வி முடித்து கல்லூரிக்குப் போவதற்கு மாணவர்கள் நாடு தழுவிய நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்கிறது (பத்தி 4. 42, பக்கம் 19). அதாவது அடுத்தகட்டமாக இந்த நுழைவுத் தேர்வுகள் எல்லாக் கலை-அறிவியல் கல்லூரிகளுக்கும்...
நீட் மசோதா இரண்டாவது முறை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தற்குப் பிறகும், ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு சட்டபூர்வமாக அனுப்பி வைக்கிற கடமையி லிருந்து தவறி, தன்னுடைய ஆளுநர் மாளிகை யிலே முடக்கி வைப்பதற்குத் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் நடத்துகிற தமிழ்ப் புத்தாண்டு தேநீர் விருந்தை புறக்கணித்திருக்கிறது. திமுக கூட்டணிக் கட்சிகளும் இதே முடிவை எடுத்து இருக்கின்றன. ஆனால் இந்த விருந்தில் தாங்கள் கலந்து கொள்ளப் போவதாக அதிமுக அறிவித்திருக் கிறது. சொல்லப்போனால், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது தான், நீட் விலக்கு மசோதாவை அவர் நிறைவேற்றினார். தான் முதலமைச்சராக இருந்தபோது நிறைவேற்றிய மசோதாவை இன்னும் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டிருப்பதை பார்த்து துளியும் கவலை இல்லை. திமுக எதிர்ப்பு, பாஜக தயவு வேண்டும் என்ற பார்வையோடு அவர் தன்னுடைய கொள்கைகளுக்கு, சமூக நீதிக்கு துரோகம் இழைக்கின்ற வகையில் இதில் கலந்து கொண்டு இருக்கிறார் என்பதையும் நாம் தமிழ்நாட்டு மக்களுக்கு...
ஏப்.14, 2022 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய அம்பேத்கர் பிறந்தநாள், சமத்துவ நாள் கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம். மாநில சுயாட்சியின் அடிப்படை நோக்கம் சுயமரியாதைத் தத்துவம். மாநில சுயாட்சி என்ற வார்த்தைக்கு, மாநிலங்களின் அடிப்படை உரிமை, பொருளாதாரச் சுதந்திரம், அனைவருக்கும் சமமான சரி நிகர் வாழ்வாதாரம், இன உணர்வு என்ற பல்வேறு கோணங்களில் அர்த்தங்களைப் பார்த்திருப்போம், படித்திருப்போம். ஆனால் இவை எல்லாவற்றிர்க்கும் மேலாக “சுயமரியாதை” என்ற தத்துவமே மாநில சுயாட்சியின் அடி வேராக விளங்குகிறது என உறுதியாகக் கூறலாம். மாநில சுயாட்சி திராவிடத்தின் கொள்கை : 1962 அக்டோபர் வேலூர் சிறையில் இருந்து விடுதலையான பின் மாநில சுயாட்சிக்காக அண்ணா முன் வைத்த முழக்கம் “திராவிட நாடு பிரிவினையைக் கைவிட்டு விட்டோமே தவிர அதனைக் கேட்பதற்கு உரிய காரணங்கள் அப்படியே இருக்கின்றன. அந்தக் காரணங்களை நான் விட்டுவிடவில்லை” என்றார். நமது பள்ளிப்பருவத்திலேயே படித்து இருப்போம் இந்தியா ஒரு மத...
‘சன்’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘திராவிட மாடல்’ குறித்து விளக்கினார். தமிழ்நாடு முதல்வர் தன்னுடைய ஆட்சியைப் பற்றி குறிப்பிடுகிற போதெல்லாம் அடிக்கடி “திராவிட மாடல்” என்ற சொல்லை பயன்படுத்துகிறார். அது குறித்த பல்வேறு, கேள்விகளும், விமர்சனங்களும் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. அது எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இந்த நாட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, வாய்ப்பு பெறாத மக்கள் கூட்டத்திற்கு அரசின் அனைத்தை யும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்கிற முடிவு, ஆங்கிலேயர் ஆட்சியில் எடுக்கப்பட்டது. அதற்காக அமைக்கப்பட்டது தான் ‘சைமன் கமிசன்’. அப்போது, தமிழ்நாட்டு அரசியலில், அதாவது சென்னை மாகாண அரசியலில், பார்ப்பனரல்லாதார் இயக்கம் (நீதிக் கட்சி) தொடங்கப்பட்டது. அதை தொடங்கியவர்கள், பெரும் பணக்காரர்களும், மேல் தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுமாய் இருந்தாலும், இயக்கத்தின் நோக்கமாய் அவர்கள் கூறியது, “அனைத்து மக்களுக்குமான சேவைகளை கொண்டு போய் சேர்ப்பது தான்”. இன்னும் சொல்லப்...
மக்களின் நல்வாழ்வுத் திட்டங்களுக்கான செலவுகளை மக்களிடமிருந்தே வரியாக வாரிச் சுருட்டும் மோடி ஆட்சி. ‘கோடீஸ்வரர்கள்’ மேலும் கொழுக்க வரிச் சலுகை வாரி வழங்கி, அவர்களை ‘இந்துத்துவா’வுக்குப் பா.ஜ.க. வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதை ப. சிதம்பரம் விளக்குகிறார். வரிகள், நல்வாழ்வு, தேர்தல் வெற்றி ஆகிய மூன்றையும் ஒரே புள்ளியில் இணைக்க வழி கண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சூழ்ச்சித் திறனை நாம் பாராட்டியே தீர வேண்டும். தேர்தல் நிதி நன்கொடைப் பத்திரம், சலுகைசார் முதலாளித் துவம், ஊழல் ஆகிய மூன்றையும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்கான புதிய முறை என்கிற திட்டத்தின் மூலம் இணைத்து, இதில் எந்தச் சட்ட விரோதமும் இல்லை எனும் மாயை உருவாக்கியதைப் போலவேதான் முன்னதிலும் செய்திருக்கிறது. முதல் மூன்று அம்சங்களுக்கு மீண்டும் வரு வோம். வரிகள், நல்வாழ்வு, வாக்குகள் பற்றியது அது. 2019 மக்களவை பொதுத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள், பொருளாதார அடித்தளக் கட்டமைப்பில்...
உச்ச நீதிமன்ற நீதிபதியின் போலி அறிவியல் வாதங்களுக்கு ஆணித்தர மறுப்பு (2) ‘நிமிர்வோம்’ மாத இதழில் 2020ஆம் ஆண்டில் வெளிவந்துள்ள கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடு கிறோம். புதிர் 3: கனவுகள், அறிவியல் கண்டு பிடிப்புகளின் அடிப்படையாக இருந் துள்ளன. Benzene மூலக்கூற்றின் வடிவத்தை ஃப்ரடரிக் வோன் தன் கனவிலேயே முதலில் கண்டார். நரம்பு அதிர்வுகள் மின்சக்தியாக கடத்தப்பட வில்லை; ரசாயன மாற்றங்களாகத் தான் கடத்தப்படுகின்றன என்று ஓட்டோ லூயி கண்டுபிடித்ததும் கனவில் தான். தையல் இயந்திரத் தின் வடிவமைப்பு, எலியஸ் ஹோவேயின் கனவில் தான் முதலில் வந்தது. துப்பாக்கி ரவை செய்யும் தொழில் நுட்பத்தை ஜேம்ஸ் வாட் கனவாகக் கண்டார். இத்தகைய கனவு களுக்கு அறிவியலில் விளக்கம் இல்லை. விடை: உளவியல் ஆராய்ச்சியாளர் சிக்மண்ட் ஃபிராய்ட், “ஆழ்மனத்தின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் விதமாகவே கனவுகள் வருகின்றன” என்றார். தற்கால உளவியல் ஆராய்ச்சி யாளரான டெயர்ட்ரே பாரெட், மூளை...
இந்த நாட்டின் அரசியல், ஆரிய-திராவிடர் போராட்டமேயாகும் என்று பெரியார் சுட்டிக் காட்டினார். அதுவே ‘திராவிடன் மாடல்’, ஆர்.எஸ்.எஸ். மனுவாதத்துக்குமான போராட்டமாக பரிணமித்து இருக்கிறது என்பதை திராவிடர் விடுதலைக் கழகம் (தி.வி.க.) சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஏப்.2, 3 தேதிகளில் ஈரோட்டில் முறையே தி.வி.க. தலைமைக் குழுவும் செயலவையும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை யிலும் நடந்தது. இரண்டாம் நாள் (ஏப்.3, 2022) ஈரோடு கே.கே.எஸ்.கே. மண்ட பத்தில் நடை பெற்ற செயலவைக் கூட்டத்தில் தீர்மானங்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்தார். 90 உறுப்பினர்களில் 86 பேர் பங்கேற்றனர். அதில் நிறைவேற்றப்பட்ட ‘திராவிடன் மாடல்’ குறித்த தீர்மானம்: திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினரும், கழகத்தின் செயல்வீரரும் எளிய முறையில் தோழர்களுடன் பழகி கழகக் கொள்கைகளை பரப்புவதில் முன்னின்று செயல்பட்ட மடத்துக்குளம் மோகன் மற்றும் பெரியாரிய அம்பேத்கரிய சிந்தனைகளை தனது புரட்சிகரமான...
தேசியப் பங்குச் சந்தை நிறுவன நிர்வாகம் குறித்த மிக முக்கியமான தகவல்களையும், நிறுவனத்தின் வணிகப் புள்ளி விவரங்களையும் ஒரு தனிநபரிடம் பகிர்ந்து கொண்ட பல மின்னஞ்சல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. அவற்றில் பல ‘ரிக்யஜூர்சாம@அவுட்லுக். காம்’ என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப் பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுபற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்த சித்ரா, ‘அவர் இமய மலையில் வசிக்கும் ஒரு யோகி. அவருக்கு உருவ மில்லை’ கோடியில் புரளும் பங்கு சந்தை வணிகம் ‘மனுதர்ம’ கும்பலிடம் சிக்கி அவர்களின் கொள்ளைக் கூடாரமாக மாறி இருக்கிறது. இப்போது சி.பி.அய். விசாரணை வளையத் துக்குள் அது வந்திருக்கிறது. கடந்த இதழில் வெளி வந்த தகவல்களை சுருக்கமாகத் தொடர்வோம். பங்கு சந்தையில் மோசடிகள் நடப்பதைக் கண்டறிந்த பிறகு மன்மோகன் நிதியமைச்சராக இருந்த போது தேசிய பங்கு சந்தை என்ற அமைப்பை உருவாக்கினார், இது தனியார் நிறுவனம். ‘செபி’ என்ற பங்கு சந்தையைக் கண்காணிக்கும் அரசு கண்காணிப்பு அமைப்பின் கீழ் இயங்கி...
முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழுரையில் மயங்குவதாகக் காட்ட முயற்சிக்கும் கட்டுரை ஒன்றை தமிழ் இந்து (பிப்ரவரி 21) நாளேடு, அரை உண்மைகள் குழப்பங்களுடன் ‘பட்ஜெட் விவாதம் திசை மாறலாமா’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. பொய்யை விட ஆபத்தானது அரை உண்மை. பாஜகவின் ‘குஜராத் மாடல்’, ஆம் ஆத்மியின் ‘டெல்லி மாடலுக்கு’ மாற்றாக “திராவிட மாடலை” முன்னிறுத்தும் திமுக, திராவிட மாடலுக்கான கோட்பாட்டை விவரிக்காமல் சமூக நலத்திட்டங்களை பட்டியலிடுவதாக குற்றம் சாட்டுகிறது கட்டுரை. குஜராத் மாடல் – பச்சை வகுப்புவாதம், தனியார்மயம். ஆம் ஆத்மி மாடல் என்பதோ தனக்கான எந்த மாடலுமே இல்லை என்ற மாடல். இதோடு திராவிட மாடலை சமன்படுத்துகிறது கட்டுரை. திராவிடன் மாடல் என்பது சமூக நலத்திட்டங்கள் மட்டுமே என்று கூறும் கட்டுரை தன்னுடைய கருத்தை தானே மறுக்கிறது. “தமிழ்நாட்டில் கூலிச் சமமின்மை, குறைந்துவரும் உயர்கல்வியின் தரம் பற்றி பேராசிரியர் கலையரசன் தனது திராவிடன் மாடல் நூலில் சுட்டிக்காட்டி இருப்பதை எடுத்துக்காட்டும்...
உச்ச நீதிமன்ற நீதிபதியின் போலி அறிவியல் வாதங்களுக்கு ஆணித்தர மறுப்பு (1) ‘நிமிர்வோம்’ மாத இதழில் 2020ஆம் ஆண்டில் வெளிவந்துள்ள கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடுகிறோம். சென்னை உச்சநீதிமன்ற பதவியிலிருந்த வெ. இராமசுப்பிரமணியம், பதவியில் இருக்கும் போதே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது அறிவியலையே கேள்விக் குள்ளாக்கும் தொடர் கட்டுரை ஒன்றை ‘தினமணி’ நாளேட்டில் எழுதினார். பிறகு உச்சநீதிமன்றத்திலும் நீதிபதியாக இருக்கிறார். அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க வேண்டிய சட்டக் கடமையி லிருந்து விலகி, ‘அறிவியலுக்கு அப்பால்’ அற்புதங்களைத் தேடிய அவரது கட்டுரைத் தொடர் பிறகு நூலாகவும் வெளியிடப் பட்டது. நீதிபதி எடுத்து வைத்த கருத்துகள் அறிவியலா? அறிவியல் என்ற பெயரில் பரப்பப்பட்ட கற்பனைச் சரடுகளா? இந்தக் கேள்விகளுக்கு ஆணித்தரமான மறுப்பைத் தருகிறது இக்கட்டுரை. முக்கியத்துவம் பெற்ற இக்கட்டுரையை அறிவியலில் பகுத்தறிவில் உடன்பாடு உள்ள அனைவரும் மக்களிடம் பரப்ப வேண்டும். – ஆசிரியர் நூலின் பெயர் “அறிவியலுக்கு அப்பால்”. 2014ஆம்...
ஃபாரூக் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாள் சிந்தனை அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் தலைமை உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) ஃபாரூக் கொலையில் இருந்து நாம் பார்த்தோம். அதில் பல பேர் கண்டனம் தெரிவித்தார்கள். சென்னையில் ஒரு கண்டனக் கூட்டத்தை சில இஸ்லாமியர்கள் நல்லெண்ணத்தோடு முயற்சி எடுத்து நடத்தினார்கள். கோவையில் நடக்கும் என்றார்கள். கோவையில் யாரும் இப்படி கண்டனக் கூட்டம் நடத்தவில்லை. அந்த வருத்தம் எங்களுக்கு இருந்து கொண்டே தான் இருக்கிறது. அது ஒருபுறம் இருந்தாலும், எந்த ஒன்றும் விவாதத்திற்கு அப்பாற்பட்டது அல்ல; விமர்சனத் திற்கு அப்பாற்பட்டது அல்ல; பெரியாரையும் சேர்த்துத் தான் சொல்கிறோம். இஸ்லாமியர்கள் ஒரு வேளை இங்கே கேள்வி கேட்க வந்திருந்தாலும் நீங்கள் கேளுங்கள். நிகழ்ச்சி முடிந்த பின், உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும். நீங்கள் பேசுங்கள், உங்களுக்கு உரிய விளக்கம் கொடுக்கப் படும். அதில் ஒன்றும் எங்களுக்கு தயக்கமே கிடையாது. ஒருவேளை எங்கள் கருத்து தவறாக...
‘பூதேவர்கள்’ வம்சத்தில் வந்த ‘ஆச்சார சீலர்கள்’ பங்கு சந்தையில் கொள்ளை அடித்து பங்கு போட்டுக் கொண்ட ‘இதிகாசப் பெருமை’ களை ஊடகங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரவில்லை, எந்தத் தொலைக்காட்சியும் விவாதக் கச்சேரிகளையும் நடத்தவில்லை. ‘இந்திரா, ஆனந்து, நிர்மலா’ என்று பல ‘வெங்காய பூண்டு’ வெறுப்பாளர்களின் அரவணைப்பில் அரங்கேறிய ‘ஊழல் மகா காவியத்தை’ ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வெளியிடுகிறது. தேசியப் பங்குச் சந்தை உருவாக்கம் மும்பைப் பங்குச் சந்தை, பங்கு வர்த்தகம் மற்றும் வங்கிச் செயல்பாட்டு முறைகளில் ஏராளமான ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, மேம்பட்ட பங்குச்சந்தை வணிக முறைகளை உருவாக்க ஃபெர்வானியின் தலைமையில், ஒரு குழுவை அன்றைய ஒன்றிய அரசின் நிதியமைச்சர் மன்மோகன் சிங் நியமித்தார். அந்தக் குழுவின் பரிந்துரைகளின்பேரில், தேசியப் பங்குச் சந்தை என்னும் தனியார் நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த நிர்வாகம், பங்குச் சந்தை வணிகத்தை இணைய வழியே நடத்த முடிவுசெய்தது. இந்தப் பங்குச் சந்தை, இந்தியப் பங்குப் பரிவர்த்தனை...
பெரியாருடைய சிந்தனைகளை 21 மாநில, உலக மொழிகளில் வெளியிடு வதற்கு தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. தமிழ்நாடு நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள நிதி நிலை அறிக்கையில் இந்த மகிழ்ச்சியான அறிவிப்பு வெளிவந்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம் மகிழ்ச்சியுடன் இதை வரவேற்கிறது. பெரியாருடைய நூல்கள் உலகம் முழுவதும் பரவ வேண்டும், இந்தியா முழுவதும் பரவ வேண்டும். மக்களுக்கு அவை எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக பெரியார் திராவிடர் கழகம் நீண்ட போராட்டத்தை நடத்தியது. 28 தொகுப்பாக பெரியார் எழுத்து சிந்தனைகளை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டபோது அதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குகள் வந்தன. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் அந்த வழக்கைத் தொடர்ந்தது. அந்த வழக்கை பெரியார் திராவிடர் கழகம் எதிர்கொண்டது. அப்படி பெரியாருடைய நூல்களை வெளியிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்று உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் மேல் அமர்வு தெரிவித்துவட்டன. அந்த வழக்கு இப்போதும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது...
ஃபாரூக் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாள் சிந்தனை அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் தலைமை உரை. இந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இங்கே வந்திருந்தால் கேள்விகளைக் கேளுங்கள்; நாங்கள் பதிலளிக்கத் தயார். எங்களைப் போன்ற சுயமரியாதைக்காரர்களுக்கு மத நம்பிக்கை இல்லை என்றும் தீண்டாமை ஒழிவதற்கு மட்டும் இஸ்லாமில் சேரலாம் என்பதே நான் கூறும் கருத்து என்றும் கூறினார் பெரியார். பொது மேடைகளில் பேசும் இஸ்லாமியர்கள்கூட மத மறுப்பாளர்களான எங்களுக்கும்இறைவனின் ஆசி கிடைக்கும் என்று பேசும்போதுகூட நாங்கள் அனுமதித்தே வந்திருக்கிறோம். தோழர் ஃபாரூக், கோவை திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயல்பாட்டாளர். அவர் கொடூரமாக மத அடிப்படைவாதிகளால் மார்ச் 16, 2017இல் கொலை செய்யப்பட்டு 5 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. பிப்.19 அன்று சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் 5ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனை அரங்கில் நடைபெற்றது. ஃபாரூக் கடவுள், மத, இறை மறுப்பாளர்; இஸ்லாத்தின் இறையியல் கொள்கையை உறுதியாக மறுத்தவர். ‘வாட்ஸ்...