Category: சென்னை

ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றுக! சென்னையில் கூடிய தலைமைக்குழுவில் முடிவு

ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றுக! சென்னையில் கூடிய தலைமைக்குழுவில் முடிவு

கழகத் தலைமைக்குழு கூட்டம் 19.07.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இத்தலைமைக்குழு கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தலைமைக்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கழகத்தின் அடுத்த கட்ட செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கழகத் தலைவர், கழகப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் கருத்துக்களை, ஆலோசனைகளை குழுவின் முன்பு வைத்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. • ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு தமிழ்நாட்டு அரசு தனியாக “ஜாதி ஆணவப் படுகொலைத் தடுப்புச் சட்டம்” ஒன்றை நிறைவேற்றுவது அவசியம் என்று தலைமைக்குழு கருதுகிறது. இதனை தமிழ்நாட்டு அரசிற்கு கோரிக்கையாக வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. • பள்ளி கல்லூரிகளில் ஜாதி, மதப் பாகுபாடுகளைக் களையவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும் அரசுக்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க...

நேரில் மரியாதை

நேரில் மரியாதை

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் உடலுக்கு கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசி குமரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.. இதில் வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், தட்சிணாமூர்த்தி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 11.07.2024 இதழ்

ஆம்ஸ்ட்ராங் மறைவு சமூகத்திற்கான பேரிழப்பு கழகத் தலைவர் கொளத்தூர் மணி இரங்கல் செய்தி!

ஆம்ஸ்ட்ராங் மறைவு சமூகத்திற்கான பேரிழப்பு கழகத் தலைவர் கொளத்தூர் மணி இரங்கல் செய்தி!

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவருமான தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் 05.07.24 அன்று இரவு கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்கின்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையையும் அளிக்கிறது. தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் இட ஒதுக்கீட்டு உரிமை குறித்து தெளிவான பார்வைக் கொண்டவர். அவரிடம் நெருங்கி பழகும் பொழுது தான் அவருடைய ஆழ்ந்த சிந்தனைகளை அறிய முடிந்தது. சமூகம் குறித்தான பெரிய அக்கறையையும் இந்த சமூகத்தில் உள்ள சிக்கல்கள் குறித்த தெளிவும் சமூக சிக்கல்களை தீர்க்கும் பேரார்வம் கொண்டவராகவும் அவர் இருந்தார். தோழரின் இழப்பு அவரது கட்சிக்கான இழப்பாக மட்டுமல்லாமல் சமூகத்திற்கான ஒரு இழப்பாகவே நாம் பார்க்கிறோம். கடந்த பல ஆண்டுகளாக முழுமையாக தன்னை ஜாதி ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றிய தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சித் தோழர்கள், நண்பர்கள், குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த...

வி.பி.சிங் சிலைக்கு மரியாதை!

வி.பி.சிங் சிலைக்கு மரியாதை!

சமூக நீதிக் காவலரும், முன்னாள் ஒன்றியப் பிரதமருமான வி.பி.சிங் அவர்களின் 94ஆவது பிறந்தநாளையொட்டி, சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலைக்கு கழக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன் மற்றும் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 27.06.2024 இதழ்

தோழர் விஜயன் தந்தை நினைவேந்தல் நிகழ்வு

தோழர் விஜயன் தந்தை நினைவேந்தல் நிகழ்வு

வட சென்னை கழகத் தோழர் விஜயனின் தந்தை ஏகாம்பரம் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு 23.06.2024 அன்று புளியந்தோப்பு கே.பி.பார்க்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.. தோழர் அருள்தாஸ் தலைமையில், தட்சிணாமூர்த்தி முன்னிலையில் கூட்டம் தொடங்கியது. நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஏகாம்பரம் அவர்களின் படத்தை திறந்துவைத்து நினைவேந்தல் உரையாற்றினார். மேலும் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், சிபிஐ (எம்) அன்பு, விசிக தமிழ்மணி, உள்ளிட்டோர் நினைவேந்தல் உரையாற்றினார்கள். தோழர் விஜயன் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது. கூட்டத்தை மாவட்டக் கழகச் செயலாளர் இரா. உமாபதி தொகுத்து வழங்கினார். பெரியார் முழக்கம் 27.06.2024 இதழ்

தோழர் விஜயன் தந்தை முடிவெய்தினார்!

தோழர் விஜயன் தந்தை முடிவெய்தினார்!

வட சென்னை மாவட்டத் தோழர் விஜயன் அவர்களின் தந்தை கோ. ஏகாம்பரம் அவர்கள் 11.06.2024 அன்று முடிவெய்தினார். அவரது இறுதி நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், வட சென்னை மாவட்டக் கழக அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், தட்சிணாமூர்த்தி, அருள்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மறைந்த ஏகாம்பரம் அவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அவரது உடல் கொள்கை முழக்கங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு, எந்தவித இந்து மதச் சடங்கு சம்பிரதாயங்களின்றி நல்லடக்கம் செய்யப்பட்டது. இதுபோன்ற நிகழ்வு கே.பி.பார்க் பகுதியில் நடந்தது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம் 20.06.2024 இதழ்

வினா விடை

வினா விடை

• அயோத்தி ராமன் கோயிலுக்கு விடப்பட்ட அனைத்து விமான சேவைகளும் ரத்து – செய்தி ஆமாம், பூரி ஜெகநாதன் கோயிலுக்கு திருப்பி விடப் போகிறோம். இராமன் இனி சுத்த வேஸ்ட். • விருதுநகர் மறையூரில் உள்ள கிராமக் கோயிலில் கறி விருந்தில் ஆண்கள் மட்டுமே சாப்பிட்டார்கள். பெண்கள் பங்கேற்க கூடாது – செய்தி ஆமாம் நாங்கள் மாமிசம் சாப்பிடுவோம், ஆனால் பெண்களை மதிக்க மாட்டோம். இதுதான் எங்கள் நாட்டார் தெய்வப் பெருமை. • பதவியேற்பு விழாவில் அரசியலமைப்பு புத்தகத்தை கையில் எடுத்து வணங்கினார் மோடி – செய்தி என்ன இருந்தாலும் முதல்முறையாக ஒன்றை பார்க்கும் போது உணர்ச்சிப் பொங்கத்தானே செய்யும். • நீட் தேர்வு தேவையில்லாதது – அன்புமணி ஆனால் நீட் தேர்வை திணிக்கும் மோடி ஆட்சி தேசத்திற்கு தேவையானது • சித்திரையில் குழந்தை பிறந்ததால் குடும்பத்திற்கு ஆபத்து என்பதால் பேரக் குழந்தையை கொன்ற தாத்தா கைது – செய்தி ஜாதி...

கழகத்தில் இணைத்துக்கொண்ட பெரம்பூர் விஷால்

கழகத்தில் இணைத்துக்கொண்ட பெரம்பூர் விஷால்

பெரம்பூர் விஷால், கழகத்தின் செயல்பாடுகளை இணையம் வழியாக அறிந்து கழகத்தில் இணைய விருப்பப்பட்டு 19.05.2024 அன்று மயிலாப்பூர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற 21வது நிமிர்வோம் வாசகர் வட்ட சந்திப்பில் மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார். உடன் கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், வட சென்னை அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன். பெரியார் முழக்கம் 23.05.2024 இதழ்

தோழர் விக்னேஷ் படத்திறப்பு நிகழ்ச்சி

தோழர் விக்னேஷ் படத்திறப்பு நிகழ்ச்சி

மறைந்த கழக செயல்வீரர் தோழர் போரூர் விக்னேஷ் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 19.05.2024 அன்று கழகத் தலைமை அலுவலகத்தில், நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 21வது சந்திப்பில் நடைபெற்றது. வட சென்னை மாவட்டக் கழக அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன் விக்னேஷ் படத்தை திறந்துவைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், மடிப்பாக்கம் பகுதிக் கழகச் செயலாளர் எட்வின் பிரபாகரன். பெரியார் முழக்கம் 23.05.2024 இதழ்

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 21-வது சந்திப்பு

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 21-வது சந்திப்பு

“குடிஅரசு இதழ் மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு” விழாவை முன்னிட்டு நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 21வது சந்திப்பு 19.05.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு அருண் கோமதி தலைமை தாங்கினார், சேத்துப்பட்டு இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் சிறப்பு அழைப்பார்களாக பங்கேற்ற ஊடகவியலாளர் சுகுணா திவாகர் ‘தமிழ்நாட்டின் சுடரொளி சுயமரியாதை இயக்கம்’ என்ற தலைப்பிலும், காஞ்சிபுரம் மாவட்டக் கழக அமைப்பாளர் இரவிபாரதி ‘தமிழ்ச்சூழலில் குடிஅரசு ஏற்படுத்திய அதிர்வலைகள்’ என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள். காவை அஜித் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது. இந்நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஆய்வாளர் பழ.அதியமான், மாவட்டச் செயலாளர் உமாபதி, கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 23.05.2024 இதழ்

+2 தேர்ச்சி பெற்ற திருநங்கைக்கு பாராட்டு

+2 தேர்ச்சி பெற்ற திருநங்கைக்கு பாராட்டு

சென்னை நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை சகோதரி நிவேதா. இவர் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 283/600 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருக்கிறார். சகோதரி நிவேதா அவர்களை மாவட்டக் கழகச் செயலாளர் உமாபதி தலைமையில் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். உடன் தோழர்கள் அருண்குமார், இராஜேசு, குமார், எழில், அன்னூர் விஷ்ணு. பெரியார் முழக்கம் 09.05.2024 இதழ்

தேவேந்திரன் – நிஷா இணையேற்பு விழா

தேவேந்திரன் – நிஷா இணையேற்பு விழா

சென்னை : மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் குழந்தைநல மருத்துவராக பணிபுரியும் அ.வா.தேவேந்திரன் அவர்களுக்கும், நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த, மயிலாடுதுறை அறம் குழந்தைகள் சிகிச்சையக இயக்குநர் இராம.ஜெனிஃபர் (எ) நிஷா அவர்களுக்கும் ஜாதி – மத மறுப்புத் திருமணம் 14.04.2024 அன்று பெரியார் திடலில் நடைபெற்றது. இணையேற்பு விழாவுக்கு தலைமைத் தாங்கிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இணையேற்பை நடத்தி வைத்து வாழ்த்துரையாற்றினார். இந்நிகழ்வில் இயக்குநர் கோபி நயினார், கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்டத் தலைவர் வேழவேந்தன் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 02.05.2024 இதழ்

தோழர் பத்ரியின் 20-ஆம் ஆண்டு நினைவேந்தல்

தோழர் பத்ரியின் 20-ஆம் ஆண்டு நினைவேந்தல்

சென்னை : வாழ்க்கையை கொள்கையாக்குவோம்! கொள்கையை சமூகமாக்குவோம்!! என்ற இலட்சிய வேட்கையோடு களப்பணியாற்றிய செயல்வீரர் பத்ரி நாராயணனின் 20வது நினைவுநாளை ஒட்டி மயிலாப்பூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் திராவிட முன்னேற்றக் கழக சென்னை மேற்கு மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.என்.துரை, விசிக மண்டலச் செயலாளர் ரூதர் கார்த்திக், திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் வெங்கடேசன், கழக மாவட்டத் தலைவர் வேழவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து நினைவேந்தல் கூட்டம் இராயப்பேட்டை வி.எம் தெரு பத்ரி நாராயணன் நினைவுப் படிப்பகம் முன்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், பத்ரி அவர்களின் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். தொடர்ந்து அவருடன் பயணித்த கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர், விசிக மைய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சாரநாத்,...

கழக செயல்வீரர் போரூர் விக்னேஷ் மறைவு

கழக செயல்வீரர் போரூர் விக்னேஷ் மறைவு

சென்னை மாவட்டக் கழக செயல்வீரர் போரூர் ‌‌‍விக்னேஷ் கடந்த ஆண்டு கழகத்தில் இணைந்த நாள் முதலே கழகம் நடத்திய ஒவ்வொரு நிகழ்வுகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். ஐடி ஊழியர், வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் தோழர் விக்னேஷ். அவர் 16.04.2024 அன்று முடிவெய்தினார். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தோழர் விக்னேஷின் உடலுக்கு கழகத்தின் சார்பில் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் தோழர் உமாபதி, எட்வின் பிரபாகரன், இரண்யா, அருண்குமார், அன்னூர் விஷ்ணு, அட்டி அருண், புகழ் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினார்கள். சொந்த ஊரான திண்டிவனத்தில் தோழர் விக்னேஷின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பெரியார் முழக்கம் 25.04.2024 இதழ்

எதிர்வரும் நிகழ்வு

எதிர்வரும் நிகழ்வு

இயக்கத்தின் கருப்பு மெழுகுவர்த்தி, கழக செயல்வீரர் தோழர் பத்ரி நாராயணன் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி ஏப்ரல் 30ஆம் தேதி காலை 9 மணியளவில் மயிலாப்பூர் மயானத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து இராயப்பேட்டை பத்ரி நாராயணன் நினைவுப் படிப்பகம் முன்பு நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது எனவே தோழர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இரா.உமாபதி மாவட்டச் செயலாளர் – சென்னை திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் முழக்கம் 25.04.2024 இதழ்

புரட்சியாளர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழா! பல்வேறு மாவட்டங்களில் கழகம் மரியாதை

புரட்சியாளர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழா! பல்வேறு மாவட்டங்களில் கழகம் மரியாதை

புரட்சியாளர் அம்பேத்கரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மரியாதை செலுத்தப்பட்டு சமத்துவநாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அது பின்வருமாறு:- சென்னை : புரட்சியாளர் அம்பேத்கரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு 14.04.2024 அன்று காலை 9 மணிக்கு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்டச் செயலாளர் உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன் மற்றும் பகுதிக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். மடிப்பாக்கம் பகுதிக் கழக சார்பில் ஆதம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கழகத் தோழர்கள் – ஆதரவாளர்கள் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ஈரோடு : புரட்சியாளர் அம்பேத்கர் அவரது 134வது பிறந்த நாளை முன்னிட்டு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள அம்பேத்கர்...

சேத்துப்பட்டு இராசேந்திரன் இல்லத் திறப்பு விழா

சேத்துப்பட்டு இராசேந்திரன் இல்லத் திறப்பு விழா

வட சென்னை : வட சென்னை மாவட்டக் கழக அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன் – அலமேலு ஆகியோரின் இல்லத் திறப்பு விழா 14.04.2024 காலை 11:30 மணியளவில் அயனாவரம் முனுசாமி தெருவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தபெதிக தலைவர் ஆனூர் ஜெகதீசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இதில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்டச் செயலாளர் உமாபதி, இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் மற்றும் தோழர்கள் – குடும்ப உறவுகள் திரளாக கலந்து கொண்டனர்.. நிறைவாக கழகம் சார்பில் நினைவு பரிசாக புத்தர் சிலையை கழகத் தலைவர் வழங்கினார். பெரியார் முழக்கம் 18.04.2024 இதழ்

இந்தியாவா? பாரதமா?

இந்தியாவா? பாரதமா?

சென்னை : நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 20வது சந்திப்பு “இந்தியாவா? பாரதமா?” என்ற தலைப்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு கழகத் தலைமை அலுவலகத்தில் அன்னூர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் ஆர்.எஸ்.எஸ்-ம் – ‘பாரதமும்’ என்ற தலைப்பில் ஊடகவியலாளர் பிரகாசும், ‘பாரதத்தில்’ தீண்டத்தகாதவர்களின் நிலை என்ற தலைப்பில் ஆர்த்தியும் சிறப்புரையாற்றினார்கள். அடுத்ததாக ‘பாரதத்தை’ எதிர்க்கும் தெற்கு என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றினார். இதில் 40க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 18.04.2024 இதழ்

கழகத்தின் தேர்தல் பரப்புரைகள் தீவிரம் பாஜகவுக்கு எதிரான பரப்புரைகளுக்கு அமோக ஆதரவு!

கழகத்தின் தேர்தல் பரப்புரைகள் தீவிரம் பாஜகவுக்கு எதிரான பரப்புரைகளுக்கு அமோக ஆதரவு!

சேலம் : மேட்டூர் நகரக் கழக சார்பில் “மோடி ஆட்சி தொடரலாமா?” பொதுக்கூட்டம் 06.04.2024 அன்று மேட்டூர் சின்ன பார்க் திடலில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மேட்டூர் நகரத் தலைவர் செ. மார்ட்டின் தலைமை தாங்கினார், கீ.கோ.தேன்மொழி வரவேற்புரையாற்றினார். கூட்டத்தின் தொடக்க நிகழ்வாக பாடகர் கோவன் கலைக் குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் செல்வேந்திரனின் இயக்கத்தில் “கலகக்காரன்” நையாண்டி தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராஜ், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, ம.க.இ.க பாடகர் கோவன் ஆகியோர் மோடி ஆட்சி தொடரலாமா? என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார்கள். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். மேட்டூர் நகர தி.வி.க.செயலாளர் சு.குமரப்பா நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேட்டூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சிவக்குமார் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து கழகத்...

தயாநிதி மாறன் பெரியார் சிலைக்கு மரியாதை!

தயாநிதி மாறன் பெரியார் சிலைக்கு மரியாதை!

தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் தயாநிதிமாறன் 09.04.2024 அன்று திருவல்லிக்கேணி பகுதியில் வாக்கு சேகரிக்க வருகைதந்தார். அவருக்கு சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் கழக படிப்பகம் முன்பு அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெரியார் முழக்கம் 11.04.2024 இதழ்

திமுக வேட்பாளர்களுக்கு நேரில் வாழ்த்து!

திமுக வேட்பாளர்களுக்கு நேரில் வாழ்த்து!

மதுரை : இந்தியா கூட்டணியின் மதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசனை மதுரை மாவட்டச் செயலாளர் மா.பா.மணிஅமுதன் தலைமையில் 31.03.2024 அன்று கழகத் தோழர்கள் நேரில் சந்தித்து ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். மேலும் இந்திராநகர் பிடி.காலனி, தகர பிள்ளையார் கோவில் தெரு, செல்லூர், மேலத் தோப்பு, கீழத் தோப்பு, மதிச்சியம், நெல்பேட்டை, ஒபுளாபடித்துறை, முனிச்சாலை, அந்தோணி மூப்பனார் தெரு, அனுப்பானடி உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்தனர். இதில் மாவட்டத் தலைவர் காமாட்சிப் பாண்டி, மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி, முருகேசன், கண்ணன் காமாட்சி உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். சென்னை : எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியனை 30.03.2024 அன்று கழகத் தோழர்கள் சந்தித்து தங்களது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். கடந்த 8 மாதங்களாக சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்...

பாஜகவின் சட்டவிரோத முயற்சி தகர்ப்பு!

பாஜகவின் சட்டவிரோத முயற்சி தகர்ப்பு!

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகம் அருகில் 27.02.2024 அன்று பாஜகவினர் தேர்தல் பணிமனையை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். தகவலறிந்த திருவல்லிக்கேணி பகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் நேரில் சென்று உரிய அனுமதியின்றி இங்கு பாஜகவினர் தேர்தல் பணிமனையை திறக்க முயற்சிக்கின்றனர். எனவே காவல்துறை இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்த பின்பு பாஜக தேர்தல் பணிமனை அமைக்கும் முயற்சியை கைவிட்டது. பெரியார் முழக்கம் 04.04.2024 இதழ்

பெரியார் முழக்கத்திற்கு ரூ.5,000 வளர்ச்சி நிதி

பெரியார் முழக்கத்திற்கு ரூ.5,000 வளர்ச்சி நிதி

சென்னை : வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன் குடும்பத்தினரின் இல்லத் திறப்பு விழா 14.04.2024 அன்று அயன்புரம் முனுசாமி தெருவில் நடைபெறுகிறது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று பெரியார் – அம்பேத்கர் – மார்க்ஸ் கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தந்தை பெரியார் இல்ல கல்வெட்டை திறந்து வைக்கிறார். இல்லத் திறப்பு விழாவின் மகிழ்வாக கழக வார ஏடான புரட்சிப் பெரியார் முழக்கம் இதழுக்கு ரூ.5000/- வளர்ச்சி நிதி வழங்கியுள்ளார். தொடர்புக்கு : 9445109323, 7550178401 பெரியார் முழக்கம் 04.04.2024 இதழ்

கோவை, சேலம், சென்னை வேட்பாளர்களுக்கு நேரில் வாழ்த்து!

கோவை, சேலம், சென்னை வேட்பாளர்களுக்கு நேரில் வாழ்த்து!

ஈரோடு : இந்தியா கூட்டணியின் ஈரோடு நாடாளு மன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கே.இ.பிரகாஷ் 22.03.2024 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். கோவை : எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை 26.03.2024 அன்று கோவை மாநகர மாவட்டக் கழக நிர்வாகிகள் சந்தித்து தங்களது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். கோவை மாவட்டக் கழகச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், மாவட்ட அமைப்பாளர் புரட்சித் தமிழன், மாநகரத் தலைவர் நிர்மல் குமார், மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன், மாதவன், சதீஷ், பொங்கலூர் கார்த்தி, வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர். சேலம் : சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை 27.03.2024 அன்று சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் தலைமையில் கழகத் தோழர்கள் நேரில் சந்தித்து தங்களது ஆதரவையும் வாழ்த்துகளையும்...

சென்னை: புதிய தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

சென்னை: புதிய தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

சென்னையைச் சேர்ந்த தௌஃபிக் மற்றும் லியோ மார்ஷல் ஆகிய இரு இளைஞர்கள் 02.03.2024 அன்று சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். சென்னை கிண்டியை சேர்ந்த ஐ.டி ஊழியரான அபிநந்தன் கிருஷ்ணன், 17.03.2024 அன்று சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார். உடன் அருண்குமார், அருண்கோமதி, அன்னூர் விஷ்ணு. இந்நிகழ்வு இராயப்பேட்டை வி.எம் தெரு பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம், நாராயணக் குப்பத்தைச் சேர்ந்த இரா.வீரமணி – ஏ.கார்ஷீலா ஆகியோரின் இணையேற்பு விழா 22.02.2024 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. பெரியார் முழக்கம் 21032024 இதழ்

சென்னையில் எழுச்சியோடு நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சி

சென்னையில் எழுச்சியோடு நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சி

சென்னை : அன்னை மணியம்மையார் 105வது பிறந்தநாள் மற்றும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டக் கழகம் சார்பில் மகளிர் சந்திப்பு நிகழ்வு 10.03.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. பிரீத்தி வரவேற்புரை யாற்றினார். தொடர்ந்து கழகத் தோழர்கள் இரண்யா, தேன்மொழி, ரம்யா ஆகியோர் பல்வேறு தலைப்புகளின் கீழ் கருத்துரை வழங்கினர். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் தோழர் சிவகாமி, சமூக செயற்பாட்டாளர்கள் அக்னி – மரக்கா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். மதிய உணவிற்கு பிறகு தோழர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நிறைவாக யாழினி நன்றி கூறினார். திருப்பூர் : உடுமலையில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் 08.03.2024 அன்று நடந்த மகளிர் தின விழாவில் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தேன்மொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 15032024...

பரப்புரையில் பம்பரமாய்ச் சுழலும் திண்டுக்கல் – சென்னை மாவட்டங்கள்

பரப்புரையில் பம்பரமாய்ச் சுழலும் திண்டுக்கல் – சென்னை மாவட்டங்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டக் கழக சார்பில் 2024 பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! பரப்புரை இயக்கம் 11.02.2024 அன்று நெய்காரபட்டி, காவலப்பட்டி, வேலாயுதம்பாளையம் புதூர், பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, அய்யம்பாளையம், வயலூர், மிடாப்பாடி, குமாரபாளையம், குருவன்வலசு, தாழையூத்து, சின்னக்கலையம்புத்தூர், மானூர், நரிக்கல்பட்டி, மேல்கரைப்பட்டி, கீரனூர், தொப்பம்பட்டி, வாகரை, புளியம்பட்டி, அமரபூண்டி, விருப்பாச்சி, சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, மாட்டுப்பாதை, கணக்கன்பட்டி, பொருளூர், கள்ளிமந்தயம், கொ.கீரனூர், I.வாடிப்பட்டி, சக்கம்பட்டி, சிந்தலப்பட்டி, அம்பிளிக்கை, இடையகோட்டை, மார்கம்பட்டி, சின்னக்காம்பட்டி, வெரியப்பூர், கேதையறும்பு, லெக்கயன்கோட்டை, அத்திக்கோம்பை, தும்பிச்சம்பட்டி, ஒட்டன்சத்திரம் இரயில் நிலையம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம், மூலச்சத்திரம், ஸ்ரீராமபுரம், கன்னிவாடி, தருமத்துப்பட்டி, ஆத்தூர், சித்தயன்கோட்டை, செம்பட்டி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் பத்து நாட்களாக தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது. புளியம்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தை கவனித்த பெரியார் தொண்டர் ஒருவர் மாலை ஒன்றை வாங்கி பெரியார் படத்திற்கு மாலை அணிவித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது....

நாடாளுமன்றத் தேர்தலில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் எழுச்சியோடு தொடங்கியது கழகத்தின் பரப்புரை

நாடாளுமன்றத் தேர்தலில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் எழுச்சியோடு தொடங்கியது கழகத்தின் பரப்புரை

பிப்ரவரி 2-ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற கழகத் தலைமைக் குழுவில், “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!” என்ற முழக்கத்தோடு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி பல்வேறு மாவட்டங்களிலும் கழகத்தின் பரப்புரைக் கூட்டங்கள் பொதுமக்களின் வரவேற்போடு எழுச்சியோடு தொடங்கி நடைபெற்று வருகின்றன. சென்னை: சென்னை மாவட்டத்தின் முதல் பரப்புரைக் கூட்டம் 10.02.2024 அன்று வேளச்சேரி காந்தி சாலையில் பொதுக்கூட்டமாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் எட்வின் பிரபாகரன் தலைமை தாங்கினார். இரண்யா வரவேற்புரையாற்றினார். பாடகர் கோவன் பங்கேற்ற ம.க.இ.க கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகளுடன் பொதுக்கூட்டம் தொடங்கியது. கழகத் தோழர் பேரன்பு ராப் பாடல்கள் பாடினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் இரா.உமா, கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் ஆகியோர் 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் பேராபத்துக்களை மக்களிடம் விளக்கிப் பேசினர். திராவிட முன்னேற்றக்...

பெரியார் நினைவுநாள்; கழகத்தின் சார்பில் மரியாதை

பெரியார் நினைவுநாள்; கழகத்தின் சார்பில் மரியாதை

தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அது பின்வருமாறு:- சென்னை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை மாவட்டக் கழக சார்பில்  இராயப்பேட்டை, சிம்சன், எம்ஜிஆர் நகர், தியாகராயர் நகர், மயிலாப்பூர், கலைஞர் கருணாநிதி நகர், நங்கநல்லூர், பிவி நகர், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கழகம் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது.   இந்நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதிக் கழக பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். கோவை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கோவை மாவட்டக் கழக சார்பில் காந்திபுரம் பெரியார் சிலைக்கு கழகத் தோழர் கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை...

நாட்காட்டி தயார்!

நாட்காட்டி தயார்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் 2024 ஆண்டிற்கான நாட்காட்டி தயார்! விலை : ரூ.70 (ரூபாய் எழுபது மட்டும்) + அஞ்சல் செலவு தனி குறைந்த எண்ணிக்கையிலேயே நாட்காட்டி அச்சிடப்படுவதால் தேவைப்படும் தோழர்கள் விரைந்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். முன்பதிவிற்கு, தபசி குமரன், தலைமை நிலையச் செயலாளர், 9941759641 பெரியார் முழக்கம் 28.12.2023 இதழ்

கழகத் தலைவரிடம் வாழ்த்து

கழகத் தலைவரிடம் வாழ்த்து

தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்திருக்கும் தோழர் லாவண்யா 21.12.2023 வியாழனன்று கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அதன் மகிழ்வாக கழக ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழ் வளர்ச்சி நிதியாக ரூ.2000/- வழங்கினார். பெரியார் முழக்கம் 28.12.2023 இதழ்

பெரியார் நினைவுநாள் : கழகம் முன்னெடுக்கும் நிகழ்ச்சிகள்

பெரியார் நினைவுநாள் : கழகம் முன்னெடுக்கும் நிகழ்ச்சிகள்

ஈரோடு வடக்கு : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்ட நிறைவுப் பொதுக்கூட்டம் 24.12.2023, ஞாயிறு மாலை 6 மணியளவில் குருவரெட்டியூர் பிரகலாதன் நினைவரங்கத்தில் நடைபெறுகிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். சேலம் : சேலம் மாவட்டக் கழகம் சார்பில் 119 தெருமுனைக் கூட்டங்களை எழுச்சியுடன் நடத்தி முடித்துள்ளது. 120வது கூட்டம் பொதுக்கூட்டமாக 23.12.2023 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கொளத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெறுகிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். நிகழ்வில் டி.கே.ஆர் இசைக் குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெறும். தஞ்சாவூர் : பேராவூரணி கழகம் சார்பில் பெரியார் 50வது நினைவு நாள் – வைக்கம் நூற்றாண்டு – அம்பேத்கரின் 67வது நினைவுநாள் – எது திராவிடம்? எது சனாதனம்? கொள்கை...

கழக ஏட்டுக்கு அன்பு தனசேகர் நன்கொடை

கழக ஏட்டுக்கு அன்பு தனசேகர் நன்கொடை

கழகத் தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகரின் தந்தை தே. குப்புசாமி அவர்களின் 90வது பிறந்தநாள் விழா மற்றும் சந்திரா – குப்புசாமி ஆகியோரின் 60வது மணிவிழா, 17.12.2023 ஞாயிறு மாலை 6 மணிக்கு சைதாப்பேட்டை புனித தோமையர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.   இந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மக்கள் நல்வாழ்வு  மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். தொடர்ந்து அன்பு தனசேகர் “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழ் வளர்ச்சி நிதியாக ரூ.10,000 – யை கழகத் தலைவரிடம் வழங்கினார். இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், திமுக பொதுக்குழு உறுப்பினர் சைதை மா.அன்பரசு, குகன், சேத்துபட்டு இராசேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 21.12.2023 இதழ்

கழக ஏட்டுக்கு சந்தா சேர்க்க திருவல்லிக்கேணி பகுதித் தோழர்கள் முடிவு

கழக ஏட்டுக்கு சந்தா சேர்க்க திருவல்லிக்கேணி பகுதித் தோழர்கள் முடிவு

திருவல்லிக்கேணி : திருவல்லிக்கேணி பகுதிக் கழக கலந்துரையாடல் கூட்டம் 30.11.2023 வியாழன் மாலை 6 மணிக்கு வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் தோழர் இராஜேசு தலைமையில் நடைபெற்றது.. கூட்டத்தில் கழக வார ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழுக்கு 500 சந்தா திரட்டுவது எனவும், வருகிற 2024ம் ஆண்டிற்கான பொங்கல் விழா சிறப்பாக நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதில் சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, பகுதிச் செயலாளர் அருண்குமார் உள்ளிட்ட பகுதிக் கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் 14.12.2023 இதழ்

சென்னை வெள்ளம் : கழகத் தோழர்கள் உணவு வழங்கினர்

சென்னை வெள்ளம் : கழகத் தோழர்கள் உணவு வழங்கினர்

திருவல்லிக்கேணி பகுதிக் கழக சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மயிலாப்பூர் கணேசபுரம்,  ரூதர்புரம், சைவ முத்தையா தெரு, செல்லம்மாள் தோட்டம் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கப் பட்டது. திருவல்லிக்கேணி பகுதிக் கழகத் தோழர்கள் இதற்கான பணிகளை காலை முதலே தொடங்கி இரவு வரை செய்தனர். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் ரூ.5000, கவிப்பிரியா ரூ.2000, பாலாஜி ரூ.500, திண்டுக்கல் மாக்சிம் கார்கி ரூ.600 வழங்கினார்கள். மயிலைப் பகுதிக் கழக சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சத்தியவாணி முத்து நகர், சுப்புராயன் சாலை, விசாலாட்சி தோட்டம், கணேசபுரம், முண்டக்கன்னியம்மன் கோவில் அருகிலுள்ள ஆகிய பகுதியில் உணவு வழங்கப்பட்டது. மயிலைப் பகுதித் தலைவர் இராவணன், பிரவின், பார்த்திபன், சிவா, கார்த்திக், பாஸ்கர், வினோத், மனோகர், சுகுமார், சபரி, சுரேஷ், மாரிமுத்து, மணிகண்டன் இப்பணிகளை மேற்கொண்டனர். பெரியார் முழக்கம் 07122023 இதழ்

அம்பேத்கர் மணி மண்டபத்தில் – கழகம் வீரவணக்கம்

அம்பேத்கர் மணி மண்டபத்தில் – கழகம் வீரவணக்கம்

சென்னை : புரட்சியாளர் அம்பேத்கரின் 67வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை சென்னை மாவட்டக் கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்டத் துணைத் தலைவர் சுகுமார், இராஜேசு, அசோக் ஆகியோர் கலந்துகொண்டனர். மயிலாப்பூர் : புரட்சியாளர் அம்பேத்கரின் 67வது நினைவு நாளை ஒட்டி மயிலைப் பகுதிக் கழகம் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மயிலைப் பகுதித் தலைவர் இராவணன், அய்யா உணவகம் சுரேஷ், பிரவீன், உதயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சேத்துப்பட்டில் ராஜேந்திரன் தலைமையில் கழகத் தோழர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சேலம் மேற்கு : புரட்சியாளர் அம்பேத்கர் 67வது நினைவுநாளை ஒட்டி 06.12.23 காலை 10 மணியளவில் சேலம் மேற்கு...

சென்னை, கடலூரில் பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டங்கள்

சென்னை, கடலூரில் பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டங்கள்

கடலூர் : கடலூர் மாவட்டக் கழக சார்பில் கடந்த 30.12.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு புவனகிரியில் தந்தை பெரியார் – புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கடலூர் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் மாணிக்.முருகேசன் தலைமை தாங்கினார். பெரியார் பிஞ்சு திராவிட மகிழன், மற்றும் வெங்கடேசன் ஆகியோரின் பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. அ.மதன்குமார் வரவேற்றார், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் க.ராமர், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் சதானந்தம், கழக கடலூர் மேற்கு மாவட்ட அமைப்பாளர் ந.கொளஞ்சி, தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தேன்மொழி, தியாகி பாலா பேரவையின் பொதுச்செயலாளர் கார்ல் மார்க்ஸ், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். கடலூர் மாவட்ட கழகச் செயலாளர் அ.சதிசு நன்றி கூறினார். சென்னை :  தந்தை பெரியாரின் 50வது நினைவுநாள் பொதுக்கூட்டம், 20.12.2023, புதன்கிழமை...

சென்னை, திருப்பூரில் பொங்கல் விழா; ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை, திருப்பூரில் பொங்கல் விழா; ஏற்பாடுகள் தீவிரம்

_திருவல்லிக்கேணி பகுதி 24ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் இராயப்பேட்டை வி.எம்.தெருவில் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளை திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி சென்னை மேற்கு மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து குழந்தைகள் மற்றும் இளைஞர் – பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. 13.01.2024 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வணக்கத்துக்குரிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளித்து சிறப்புரையாற்றவுள்ளனர். மயிலாப்பூர் : மயிலாப்பூர் பகுதியில் 8ஆம் ஆண்டு பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 07ம் தேதி சுப்பராயன் சாலையில் நடைபெற்றது. பரிசளிப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் ஜனவரி 15ஆம் தேதி நடைபெறும். வட சென்னை : தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் மற்றும்...

“இஸ்ரேல் முதல் பாலஸ்தீனம்” வரை நூல் வெளியிட்ட கழகத் தலைவர்

“இஸ்ரேல் முதல் பாலஸ்தீனம்” வரை நூல் வெளியிட்ட கழகத் தலைவர்

எழுத்தாளர் விஜயபாஸ்கர் புதிதாக எழுதியுள்ள “பாலஸ்தீனம் முதல் இஸ்ரேல் வரை – ஒரு வரலாற்றுச் சுருக்கம்” நூலை சென்னை புத்தகக் காட்சியில் பெரியார் புக்ஸ்.காம் அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட கருப்புப் பிரதிகள் நீலகண்டன், பத்திரிகையாளர் நீரை.மகேந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். எழுத்தாளர் விஜயபாஸ்கர் “உயர்ஜாதியினருக்கு EWS இடஒதுக்கீடு சரியா? தவறா?” என்ற நூலை தொகுத்து  கவனம் ஈர்த்தவர். நிகழ்வில் அற்புதம்மாள், கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ர.பிரகாசு, அன்னூர் விஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 11012024 இதழ்

2014ஆம் ஆண்டில் “முழக்கம்” உமாபதி மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட வழக்கு! குற்றமிழைத்த போலீசார் மீது சி.பி.சி.ஐ.டி. விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

2014ஆம் ஆண்டில் “முழக்கம்” உமாபதி மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட வழக்கு! குற்றமிழைத்த போலீசார் மீது சி.பி.சி.ஐ.டி. விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு பிராபகரன் அவர்களின் 60-வது பிறந்தநாளையொட்டி, 2014-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் பகுதி கழகத் தோழர்களும், பொதுமக்களும் இணைந்து கொண்டாட்ட நிகழ்வுக்கு தயாராகினர்.  E-4 அபிராமபுர காவல் நிலைய அதிகாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மயிலாப்பூர் பகுதி மக்கள் காவல்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முற்பட்டனர். தகவல் அறிந்து செய்தி சேகரிக்க அங்கு சென்ற “பெரியார் முழக்கம்” நிருபர் உமாபதி. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் போலீசார் அத்துமீறி நடந்துகொண்டதை தன்னுடைய கைபேசியில் படம் பிடித்துக்கொண்டிருந்தார். காவல் நிலைய அதிகாரிகள் இளையராஜா, வடிவேலு, கலைச்செல்வி ஆகியோர் கைபேசியை பிடுங்க முற்பட்டனர். பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொண்ட போலீசாரின் அராஜகப் போக்கை நிருபர் உமாபதி கேள்வி கேட்டார். அப்போது நிருபர் என்றும் பாராமல் முழக்கம் உமாபதியை போலீசார் லத்தியால் கடுமையாகத் தாக்கத் தொடங்கினர். ஆபாச வார்த்தைகளால் திட்டியபடி, காவல்நிலையத்திற்கு தூக்கிச்சென்று அடித்துத் துன்புறுத்தி...

களைகட்டிய பொங்கல் நிகழ்ச்சிகள் சென்னையில் மேயர் பிரியாராஜன் பங்கேற்பு

களைகட்டிய பொங்கல் நிகழ்ச்சிகள் சென்னையில் மேயர் பிரியாராஜன் பங்கேற்பு

திருவல்லிக்கேணி பகுதி சார்பில் 24-ஆம் ஆண்டு தமிழர் திருநாள் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் 07.01.2024, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளை திமுக இளைஞரணி மேற்கு மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் 13.01.2024, சனிக்கிழமை நடைபெற்றது. “மாணவக் கலைஞர்கள் குழுவின்” பறையிசை – ஒயிலாட்டம் – மரக்கால் ஆட்டம் – தீச்சிலம்பம் – மயிலாட்டம் – மாடாட்டம் – புலி ஆட்டம், Dude’z in Madras குழுவின் ராப் இசை, U Won Dance Crewe பகுதி மாணவிகளின் நடனம், கானா சுதாகர்‌ – புரட்சிமணியின் மக்களிசை சங்கமம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பரிசளிப்பு விழாவுக்கு மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமை தாங்கினார். இராஜேசு வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் வணக்கத்துக்குரிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.என்.துரை, 119வது வார்டு மாமன்ற...

கழகம் முன்னெடுத்த பொங்கல் விழாக்கள்

கழகம் முன்னெடுத்த பொங்கல் விழாக்கள்

மயிலைப்பகுதி 8ம் ஆண்டு தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழா பரிசளிப்பு – கலை நிகழ்ச்சிகள் 15.01.2024 அன்று சுப்பராயன் சாலை பெரியார் படிப்பகம் முன்பு நடைபெற்றது. நடனம் – சிலம்பாட்டம் – குத்துச்சண்டை – மயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தென்சென்னை மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் சரவணன், விசிக 126வது வட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு, மயிலாப்பூர் கிழக்கு பகுதிச் செயலாளர் முரளி, மயிலாப்பூர் மேற்கு பகுதிச் செயலாளர் நந்தனம் கி.மதி ஆகியோர் பரிசளித்து சிறப்பு செய்தனர்.. Arun Ace Dance குழு, ஆசான் ஆதி கேசவன் சிலம்பம் குழு, VS Boxing Club குழு மற்றும் SS மயிலாட்டம் குழுவினருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர். மயிலைப் பகுதி பொங்கல் விழாக்குழு மயிலைப்பகுதி : தி.இராவணன், க.சுகுமாறன், ம.மனோகர்,...

சென்னையில் பொதுக்கூட்டத்துடன் தொடங்குகிறது

சென்னையில் பொதுக்கூட்டத்துடன் தொடங்குகிறது

சென்னை மாவட்டக் கழக சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! 2024 – நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் பிப்ரவரி 10, 2024, மாலை 6 மணிக்கு வேளச்சேரி காந்தி சாலையில் நடைபெறுகிறது. கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு, திராவிட முன்னேற்றக் கழக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை சென்னை தெற்கு மாவட்டத் துணை அமைப்பாளர் தடா ஓ.சுந்தரம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் உமா ஆகியோர் கலந்து கொண்டு விளக்க உரையாற்றவுள்ளனர். திண்டுக்கல் : பழனியில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! பரப்புரை இயக்கம் பிப்ரவரி 10, 2024, காலை 10 மணிக்கு தொடங்குகிறது. பெரியார் முழக்கம் 08022024 இதழ்

கொலைகார சாமியாரை  கைது செய்யக் கோரி கழகம் புகார் மனு

கொலைகார சாமியாரை கைது செய்யக் கோரி கழகம் புகார் மனு

சென்னை : “டெங்கு, மலேரியா, காலரா போன்று சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று” என்று பேசிய மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி நிர்ணயித்த அயோத்தி சாமியார் பரம்ஹன்ஸ ஆச்சாரியாவை கைது செய்து சிறையில் அடைக்க கோரி கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் இராயப்பேட்டை காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, சனாதன சக்திகளின் கனவு தமிழ்நாட்டில் ஒருபோதும் பலிக்காது, சனாதனத்திற்கு எதிரான கருத்தில் உறுதியாக நிற்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் துணை நிற்கும் என்று கூறினார். கோவை : கோவை மாநகரக் கழக சார்பில் காட்டூர் காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கழக அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் திண்டுக்கல் மாவட்டத் துணைக் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது....

‘தினமலம்’ பார்ப்பன ஏட்டுக்கு தீ!

‘தினமலம்’ பார்ப்பன ஏட்டுக்கு தீ!

காலை சிற்றுண்டி வழங்குவதன் காரணமாக பள்ளிக் கழிவறைகள் நிரம்பி வழிகின்றன என்ற வர்ணாசிரம திமிரோடு தலைப்பு செய்தி வெளியிட்ட தினமலம் நாளேட்டை கழகத் தோழர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். சென்னை : பள்ளி மாணவர்களுக்கு “காலை சிற்றுண்டி” திட்டத்தை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட சனாதன வெறி பிடித்த தினமலரை கண்டித்து தினமலம் நாளிதழ் எரிப்பு போராட்டம் இன்று 01.09.2023 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தினமலம் நாளேடு அலுவலகம் அருகே இராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தினமலம் நாளிதழை தீயிட்டு கொளுத்தி தினமலம் நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க வளர்மதி, தமிழ்நாடு மாணவர் கழக இரண்யா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிறைவுரையாற்றினார். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கரு.அண்ணாமலை, சேத்துப்பட்டு இராசேந்திரன், மயிலை...

மக்கள் ஆதரவோடு தெருமுனைக் கூட்டங்கள்

மக்கள் ஆதரவோடு தெருமுனைக் கூட்டங்கள்

சென்னை : சென்னை மாவட்டக் கழக சார்பில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டங்கள் 28.08.2023 திங்கள் அன்று சிந்தாதிரிப்பேட்டை, சாமி நாயக்கன் தெருவில் மாலை 5 மணிக்கும், மாலை 7:30 மணியளவில் கலவைத் தெருவிலும் நடைபெற்றது. அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் ரங்கநாதன், சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, தமிழ்நாடு மாணவர் கழகம் தேன்மொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளர் விடுதலைச் செழியன் ஆகியோர் உரையாற்றினர். 29.08.2023 செவ்வாய் மாலை 6 மணிக்கு தரமணி நூறடி சாலையிலும், அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு பெருங்குடி நூறாடி சாலையில் நடைப்பெற்றது. மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, பெரியார் நம்பி, இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், எட்வின் பிரபாகரன், இரண்யா ஆகியோர் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினார்கள்.. கூட்டத்தில் பங்கேற்ற கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கருத்துரையாற்றிய தோழர்களுக்கு நூல்களை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்....

சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் தொடர் கூட்டங்கள் திண்டுக்கல் 40 கூட்டங்களை நிறைவு செய்தது

சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் தொடர் கூட்டங்கள் திண்டுக்கல் 40 கூட்டங்களை நிறைவு செய்தது

சென்னை : சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பாக 21.08.2023 திங்கள் மாலை 5 மணிக்கு கோடம்பாக்கம் மார்கெட் அருகிலும், மாலை 7 மணிக்கு தர்மாபுரம் மாரியம்மன் கோவில் அருகிலும், 23.08.2023 செவ்வாய் மாலை 5 மணிக்கு, மடுவாங்கரை புதியத் தெருவிலும் இரவு 7:30 மணிக்கு, பழைய பூந்தமல்லி சாலை, கங்கை அம்மன் கோவில் அருகிலும், 23.08.2023 புதன்கிழமை மாலை 5 மணிக்கு ஜாபர்கான்பேட்டை, கங்கையம்மன் கோயில் அருகிலும், மாலை 7 மணி ஜோன்ஸ் சாலை சாரதி நகர் சந்திப்பிலும், 24.08.2023 வியாழன் அன்று மாலை 5.30 மணிக்கு ஜோன்ஸ் சாலை கூத்தாடும் பிள்ளையார் கோயில் தெருவிலும், மாலை 7.30 மணிக்கு சைதாப்பேட்டை, குயவர் வீதியிலும், 25/08/2023 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகிலும், மாலை 7.30 மணிக்கு அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகிலும், 26.08.2023 சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையிலும்,...

சனாதனம் தோலுரிப்பு : திராவிட மாடல் சாதனை விளக்கம் தெருமுனைக் கூட்டங்களுக்கு பேராதரவு!

சனாதனம் தோலுரிப்பு : திராவிட மாடல் சாதனை விளக்கம் தெருமுனைக் கூட்டங்களுக்கு பேராதரவு!

எது சனாதனம்? எது திராவிடம்? தெருமுனைக் கூட்டங்கள் சென்னை மாவட்டக் கழகம் சார்பாக இரண்டாவது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அது பின்வருமாறு :- ஜுலை 15-ஆம் தேதியன்று ராயப்பேட்டை இலாயிட்ஸ் காலனி மற்றும் வி.எம்.தெருவிலும், ஜுலை 17-ஆம் தேதியன்று இராயபேட்டை பகுதிகளில் உள்ள கொலைகாரப்பேட்டை மற்றும் ராயப்பேட்டை பெருமாள் கோயில் வீதியிலும், ஜுலை 18-ஆம் தேதியன்று ஐஸ் ஹவுஸ் NKT பள்ளி அருகில் மற்றும் திருவல்லிக்கேணி பி.வி.நாயக்கன் சாலையிலும், ஜுலை 19-ஆம் தேதியன்று ஐஸ் ஹவுஸ் இஸ்ஸபா தெரு மற்றும் ஷேக் தாவூத் தெருவிலும் ஜூலை 20-ஆம் தேதியன்று மீசார்பேட்டை மார்கெட் மற்றும் ஜாம் பஜார் சிட்டிபாபு சாலையிலும், ஜுலை 21-ஆம் தேதியன்று திருவல்லிக்கேணி மாணிக்கவாசகம் தெரு மற்றும் தேவராஜ் தெருவிலும் ஜுலை 22-ஆம் தேதியன்று ஆயிரம் விளக்கு மாடர்ன் பள்ளி அருகில் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை அருகிலுள்ள மக்கிஸ் கார்டனிலும் நடைபெற்றது. நாத்திகன் – உமாபதி குழுவின் அரசியல்...

மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து சென்னையில் ரயில் மறியல்

மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து சென்னையில் ரயில் மறியல்

சென்னை : மணிப்பூரில் நடைப்பெற்ற இனப்படுகொலையை தடுக்கத் தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்தும். கிருஸ்துவர்கள் – பழங்குடியினர் மீதான வன்முறையை நிறுத்தக் கோரியும்.   மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் சென்னை எழும்பூரில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது.   போராட்டத்தில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 22062023 இதழ்  

கோவை – சென்னை மாவட்டக் கழக கலந்துரையாடல் மாநாட்டுத் தீர்மானங்களை செயல்படுத்த – தோழர்கள் தீவிரம்

கோவை – சென்னை மாவட்டக் கழக கலந்துரையாடல் மாநாட்டுத் தீர்மானங்களை செயல்படுத்த – தோழர்கள் தீவிரம்

சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம், 28.05.2023 ஞாயிறு மாலை 6 மணியளவில், முருகேசன் திருமண மண்டபத்தில்  சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் நடைபெற்றது.   கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நோக்கவுரையாற்றினார்.  மாவட்டத் தலைவர் வேழவேந்தன் முன்னிலை வகித்தார்.   நிகழ்வில் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கான வரவு செலவு கணக்குகள் குறித்தும் செயலவையில் இயற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் “எது திராவிடம்! எது சனாதானம்!” சென்னையில் 200 தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அன்பு தனசேகரன், கரு.அண்ணாமலை உட்பட்ட சென்னை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், பகுதி கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் 25.5.2023 அன்று கோவை இரயில் நிலையம் அருகேயுள்ள வழக்கறிஞர் கார்கி அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு கலந்துரையாடல் கூட்டம்  நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு...