களைகட்டிய பொங்கல் நிகழ்ச்சிகள் சென்னையில் மேயர் பிரியாராஜன் பங்கேற்பு
திருவல்லிக்கேணி பகுதி சார்பில் 24-ஆம் ஆண்டு தமிழர் திருநாள் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் 07.01.2024, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளை திமுக இளைஞரணி மேற்கு மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.
விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் 13.01.2024, சனிக்கிழமை நடைபெற்றது.
“மாணவக் கலைஞர்கள் குழுவின்” பறையிசை – ஒயிலாட்டம் – மரக்கால் ஆட்டம் – தீச்சிலம்பம் – மயிலாட்டம் – மாடாட்டம் – புலி ஆட்டம், Dude’z in Madras குழுவின் ராப் இசை, U Won Dance Crewe பகுதி மாணவிகளின் நடனம், கானா சுதாகர் – புரட்சிமணியின் மக்களிசை சங்கமம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பரிசளிப்பு விழாவுக்கு மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமை தாங்கினார். இராஜேசு வரவேற்புரையாற்றினார்.
நிகழ்வில் வணக்கத்துக்குரிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.என்.துரை, 119வது வார்டு மாமன்ற உறுப்பினர் கமலா செழியன், விசிக மைய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சாரநாத், கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழகத் தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி ஆகியோர் பங்கேற்று விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
நிகழ்வில் கழக வார ஏடான புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு 100 சந்தாக்களுக்கான தொகை ரூ.30,000-யை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி வழங்கினார். உதயா நன்றி கூறினார்.
மயிலாப்பூர் : தமிழர் திருநாள் பொங்கல் விழா மக்கள் கலை விழா விளையாட்டுப் போட்டி மற்றும் பரிசுளிப்பு விழா பறை இசை – நடன நிகழ்ச்சி மயிலைப்பகுதியில் சுப்புராயன் சாலை அம்பேத்கார் சிலை அருகில் மாலை 5 மணி அளவில் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சி தொடக்கத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி மாலை அணிவித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பரிசளிப்பு நிகழ்ச்சியுடன் Free way crew நடன நிகழ்ச்சி மற்றும் பறை இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மக்கள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.
திண்டுக்கல் : தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா 16.01.2024 செவ்வாய் காலை 10 மணிக்கு நடைபெற்றது. நிகழ்விற்கு சுரேகா, மீனாலட்சுமி, உஷாராணி, பிரியா, கௌசின் பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி மற்றும் மாவட்ட இணையதள பொறுப்பாளர் ராஜா இருவரும் பொங்கல் விழா பற்றி சிறப்புரையாற்றினார்கள்.
பெரியார் முழக்கம் 18012024 இதழ்