வினா விடை

• அயோத்தி ராமன் கோயிலுக்கு விடப்பட்ட அனைத்து விமான சேவைகளும் ரத்து – செய்தி
ஆமாம், பூரி ஜெகநாதன் கோயிலுக்கு திருப்பி விடப் போகிறோம்.
இராமன் இனி சுத்த வேஸ்ட்.

• விருதுநகர் மறையூரில் உள்ள கிராமக் கோயிலில் கறி விருந்தில் ஆண்கள் மட்டுமே சாப்பிட்டார்கள். பெண்கள் பங்கேற்க கூடாது
– செய்தி
ஆமாம் நாங்கள் மாமிசம் சாப்பிடுவோம், ஆனால் பெண்களை மதிக்க மாட்டோம். இதுதான் எங்கள் நாட்டார் தெய்வப் பெருமை.
• பதவியேற்பு விழாவில் அரசியலமைப்பு புத்தகத்தை கையில் எடுத்து வணங்கினார் மோடி – செய்தி
என்ன இருந்தாலும் முதல்முறையாக ஒன்றை பார்க்கும் போது உணர்ச்சிப் பொங்கத்தானே செய்யும்.
• நீட் தேர்வு தேவையில்லாதது – அன்புமணி
ஆனால் நீட் தேர்வை திணிக்கும் மோடி ஆட்சி தேசத்திற்கு தேவையானது

• சித்திரையில் குழந்தை பிறந்ததால் குடும்பத்திற்கு ஆபத்து என்பதால் பேரக் குழந்தையை கொன்ற தாத்தா கைது – செய்தி
ஜாதி வெறிக்காக ஆணவக் கொலை; மூட நம்பிக்கைகளுக்காக சிசுக் கொலை. இவையனைத்தும் சனாதன தர்மம் இந்த சமூகத்திற்கு தந்த கொடை.
• நாட்டை பிளவுபடுத்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உருவாக்கியதே திராவிட கோட்பாடு – ஆளுநர் ரவி
பொய்.. பொய்.. பாஜகவை விரட்டியடிக்க தமிழர்கள் உருவாக்கியதே திராவிட கோட்பாடு

பெரியார் முழக்கம் 20.06.2024 இதழ்

You may also like...