தலையங்கம் ‘கோட்சே’யின் வாரிசுகள்; எச்சரிக்கிறார் தமிழக முதல்வர்
கோட்சேயின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை என சூளுரைப்போம் – என்று காந்தி நினைவு நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை – இன்றைய சூழலில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. சமூக நீதியால் பக்குவம் பெற்றுள்ள தமிழ் மண்ணில் மதவெறியை விதைக்கும் பா.ஜ.க.வின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள் என்று தி.மு.க. தோழர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளதையும் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். போபால் நாடாளுமன்ற உறுப்பினரான பா.ஜ.க.வைச் சார்ந்த பிரக்யாசிங், நாடாளுமன்றத்தில் கோட்சே தேச பக்தர் என்று பேசியதோடு காந்தி நினைவு நாளில் அவரைப் போல் உருவ பொம்மை செய்து துப்பாக்கியால் சுட்டு மகிழ்ந்தது, சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவியது. கடந்த ஜன. 30ஆம் தேதி இராஜஸ்தான் குவாலியரில் ‘இந்து மகாசபை’ எனும் அமைப்பு, காந்தியாரைக் கொலை செய்த வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற ‘கோட்சே – நாராயணன் ஆப்தே’ இருவர் படத்துக்கும் மலர் தூவி மரியாதை...
