நடராசன் முதல்வர் கனவில் வருவாரா?
¨ தில்லை நடராசன் கோயிலில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்கிறார் சுப்பிரமணியசாமி. நந்தன் கனவில் நடராஜன் வந்து சொன்னது போல் தமிழக முதல்வரிடம் கனவில் வந்து சொன்னால் பரிசீலிக்கலாம்.
¨ புதுச்சேரி கோயில் யானை மாரடைப்பால் மடிந்தது பக்தர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் சோகம் தான். காடுகளில் இயற்கையாக வாழும் விலங்குகளை கோயிலுக்குள் கொண்டு வந்து மதச்சாயம் பூசி மாரடைப்பால் மரணிக்க வைப்பது கொடுமை அல்லவா? எந்த ஆகமத்தில் யானையைக் கோவிலுக்குள் பயன்படுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறது. விலங்குகளை இயற்கையாக மதம் இன்றி வாழ விடுங்கள்.
¨ கோயில்களில் செல்போன் கொண்டு வர உயர்நீதிமன்றம் தடை விதித் திருப்பது நியாயம்தான். சமஸ்கிருத மந்திரங்களை கருவறைக் கடவுள்கள் நெட் வொர்க் இல்லாமலே புரிந்து கொள்ளும் போது வீணாக எதற்கு செல்போன்?
¨ உறுப்புகளோடும் உயிரோடும் பிறக்கும் குழந்தைகள், மத அடையாளங்களை சுமந்து வரவில்லை. அவர்களை மதத்துக்குள் இழுப்பதே கட்டாய மதமாற்றம் தான்!
¨ தேர்தல் பத்திரங்கள் வழியாக கடந்த 5 ஆண்டுகளில் கட்சிகளுக்கு வந்த நன்கொடை 174 கோடி ரூபாய். இதில் பா.ஜ.க.வுக்கு மட்டும் 163 கோடி (94 சதவீதம்) சும்மாவா? பசு மாடு, ராமன், பகவத் கீதை மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்க பணத்துக்கு எங்கே போவது?
– விடுதலை இராசேந்திரன் டுவிட்டரிலிருந்து
பெரியார் முழக்கம் 08122022 இதழ்