“அதோ! மனித இனத்தின் தூதன் போகின்றான்!”
பெரியார் இறுதி ஊர்வலம் நடந்த டிசம்.25, 1973 நாளில் ‘மக்கள் குரல்’ நாளேட்டில் மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோலை எழுதிய உணர்ச்சிகர கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம். ஆர். சமுதாயத்தைச் சீர்திருத்த வந்த சரித்திர நாயகர்கள் பலரை வரலாறு சந்தித்திருக்கிறது. சமுதா யத்தில் மறுமலர்ச்சி காண போதி மரத்திலிருந்து புறப்பட்ட புத்தன் வெற்றி பெறவில்லை. அவனது சமுதாய மறுமலர்ச்சி சமயத்தின் ஒரு கிளையானது. தென்னகத்தே ஒரு இராமலிங்கன் தோன்றினான். முடை நாற்றம் வீசுகின்ற மூடப் பழக்கங்களைச் சுட்டெரிக்கப் புறப்பட்டான். கடைசியில், “கடை விரித்தேன்; கொள்வாரில்லை” என்று கடையை மூடி நடையைக் கட்டினான். அவனது இயக்கமும் சமயத்தின் ஒரு வடிகாலானது. ஆனால் இந்த நூற்றாண்டில் ஈரோட்டிலிருந்து ஒரு வெண்தாடி வேந்தன் ஊன்றிய தடியோடு ஊர் முழுக்கச் சுற்றுலாக் கிளம்பினான். அவன் தனது சமுதாய மறுமலர்ச்சி இயக்கத்திற்கு சமுதாயத்தை, கடவுளை, சாஸ்திரத்தை அடித்தளமாகக் கொள்ளவில்லை. அத்தனைத் தீமைகளுக்கும் அவைகளே ஊற்றுக்கண் என்பதை உணர்ந்தான்! எனவே சாதியைச்...
