திராவிடத்தால் எழுந்தோம் விளக்கப் பொதுக்கூட்டம் குமரி குலசேகரம் அரசமூடு 09122017

திராவிடர் விடுதலைக் கழகம்,குமரி மாவட்டம். நடத்திய “திராவிடத்தால் எழுந்தோம்”விளக்கப் பொதுக்கூட்டம்.

குமரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக 09-12-2017,சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு குலசேகரம் அரசமூடு சந்திப்பில் நடைப் பெற்ற”திராவிடத்தால் எழுந்தோம்” விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தோழர். வழக்குரைஞர்.வே.சதா, குமரி மாவட்ட பெரியார் தொழிலாளர் கழக தலைவர் தோழர்.நீதி அரசர் ஆகியோர் தலைமைத் தாங்கினர்.

கழகத் தோழர்கள்,தமிழ் அரசன்,தமிழ் மதி,மஞ்சு குமார்,ஜாண் மதி,சூசையப்பா,இரமேஸ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர்.விஸ்ணு வரவேற்புரையாற்றினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள்;கேரளாபுரம் முருகன்,மேசியா,சத்தியதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

அறிவுக்களஞ்சியம் நிறுவனர் தோழர்.பேபி செபக்குமார் மந்திரமல்ல! தந்திரமே! எனும் அறிவியல் நிகழ்ச்சியை நடத்திக்காட்டினார்.

கழகப் பரப்புரைச்செயலாளர் தோழர்.பால்.பிரபாகரன் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்; அவர்தனது உரையில் திராவிடர் இயக்கத்தினால் உழைக்கும் மக்களான பிற்படுத்தப் பட்ட,தாழ்த்தப்பட்ட மக்கள் அடைந்திருக்கும் நன்மைகள் மற்றும் வாழ்க்கைத் தர உயர்வையும், தமிழ்நாட்டிற்கு திராவிடர் இயக்கம் ஆற்றியப் பணியினையும் விரிவாக எடுத்துக்கூறினார். சாதரண சாமான்யர்களால் மருத்துவராக,பொறிஞர்களாக, அரசு உயர்பதவி களுக்கு வரக் காரணமானது   இந்த திராவிடர் இயக்கம் எனச் சான்றுகளோடு எடுத்துரைத்தார்.

1913-ல்,கோயிலுக்கு நன்கொடையாக ரூ 10000 கொடுக்குமளவிற்கு பணக்காரராயிருந்தாலும் சர்.டி.பி.தியாகராயர் அவமானப்படுத்தப்பட்டதும், எவ்வளவுப் படித்திருந்தாலும் பொருளாதார மேதையானாலும் இந்தியா-பாகிசுதான் கணக்கைப் பரிசல் செய்தவருமான சர்.ஆர்.கே .சண்முகம் செட்டியார் போன்றவர்களை பார்ப்பனர்கள் ஏளனம் செய்த நிலையிலிருந்து இந்த சமூக மக்களை மானமும் அறிவும் பெற திராவிடர் இயக்கம் ஆற்றியப் பணியினை பட்டியலிட்டு, தற்போது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் நமக்கு இழைக்கப்படும் அநியாயம் குறித்து விரிவாக உரையாற்றினார்.

நிறைவாக தோழர்அ னீஸ் அவர்களின்  நன்றியுரையுடன்   கூட்டம் இனிதே முடிவுற்றது. நிகழ்ச்சியில் நெல்லை மாவட்டத் தலைவர் தோழர் பால் வண்ணன், மார்க்சியலாளர் தோழர் போஸ், வைகுண்ட ராமன், இராஜேஸ் குமார், பொன்.இராசேந்திரன், அருள் ராஜ், ஆர்மல், சிபு ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

படங்களுக்கு இங்கே சுட்டவும்

 img_7301

You may also like...