தமிழ் மதி இல்லவிழா குமரி மாவட்டம் பள்ளியாடி 10122017

img_7345

குமரி மாவட்ட கழகச் செயலாளர் தோழர்.தமிழ் மதி-பிறேம லதா இணையர் மகன் தமிழ் நவிலன் முதல் பிறந்த நாள் விழா 10-12-2017,ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00மணிக்கு பள்ளியாடி திரு இருதய அரங்கில் வைத்து கொண்டாடப்பட்டது.

விழாவில் தோழர் தமிழ் மதி-யின் உறவினர்கள்,கழகத் தோழர்கள்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோழர்கள்,சமூக ஆர்வலர்கள் பெருவாரியாகக் கலந்துக் கொண்டனர். தோழர்.தமிழ் மதி அவர்கள் பிறந்த நாள் ஏன் கொண்டாடுகிறோம் என்றும், தமிழ் பெயர் ஏன்சூட்டினோம் என்றும் கூறி வரவேற்புரையாற்றினார்.

அறிவுக்களஞ்சியம் நிறுவனர் தோழர்.பேபி செபக்குமார் மந்திரமல்ல!தந்திரமே!எனும் அறிவியல் நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார். பின்பு கழகத் தலைவர் தோழர்.கொளத்தூர் மணி தமிழ் நவிலன் பிறந்த நாளில் பெற்றோருக்குச் அறிவுரையாக சோதிடம், நல்ல நேரம், கெட்ட நேரம், போன்ற மூடநம்பிக்கைகள் குறித்தும்,பிள்ளைகளை சமூகத்துடன் இணைந்து வாழக்கற்றுக்கொடுக்க வேண்டுமென்றும்,கூறி தமிழ் நவிலன் சமூகச் சிந்தனையுடன் வாழ, வளர, வெல்ல வேண்டுமென வாழ்த்துரையாற்றினார்.

நிகழ்வில் தமிழ் நவிலன் கேக் வெட்டி உறவுகளுக்கு ஊட்ட விழா இனிதே முடிவுற்றது.

படங்களுக்கு இங்கே சுட்டவும்

You may also like...