தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் சேலம் 07122017
07122017 வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை வடநாட்டாருக்கு தாரைவார்க்கும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்துhர் மணி அவர்கள் தலைமை ஏற்றார். சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் (திவிக) தோழர் இரா. டேவிட் அவர்கள் முன்னிலை வகித்தார்.
கண்டனஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்(சிபிஎம்)தோழர் பி. தங்கவேல் , மாவட்ட செயலாளர் (சிபிஐ) தோழர் எ. மோகன், த.மு.மு.க மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் தோழர் பி. யூனுhஸ் அகமத் , சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்(திவிக) சி. கோவிந்தராசு ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
நிறைவாக கழகத் தலைவர் தோழர் கொளத்துhர் மணி அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை விளக்கி உரை நிகழ்த்தினார். திவிக கிழக்கு மாவட்ட பொருளாளர் தோழர் பெருமாள் நன்றி உரை கூற ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது. இந்நிகழ்வில் சேலம், ஏற்காடு, இளம்பிள்ளை, ஆத்துhர், நங்கவள்ளி, மேட்டூர் ஆர். எஸ், மேட்டூர், கொளத்துhர், காவலாண்டியூர், காவேரி கிராஸ் ஆகிய பகுதி தோழர்கள் கலந்து கொண்டனர்.