Author: admin

கும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்?

பயங்கரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று நடுவண் ஆட்சி கடும் ஒடுக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்து சமூக செயல்பாட்டாளர் களையும் சிறுபான்மை மக்களையும் குறி வைக்கிறது. வடமாநிலங்களில் ‘பசு’ மாட்டின் பெயராலும் ‘தீண்டாமை’ ஜாதி வெறியினாலும் தலித் சிறுபான்மை மக்களை கும்பலாகத் திரண்டு அடித்தே சாகடிக்கிறார்கள். (டுலn உhiபே) இதை ஒரு பயங்கரவாதமாகக் கருதுவதற்கு மோடி ஆட்சி தயாராக இல்லை. வெறுப்பின் வெளிப்பாடான இத்தகைய பயங்கரவாதம் ஒரு காலத்தில் கருப்பின மக்களுக்கு எதிராக அமெரிக்காவில் வெள்ளை நிற வெறியர்களால் நடத்தப்பட்டது. நிறவெறிக் கும்பல்களால் அடித்தே கொல்லப் படும் இந்த பயங்கரவாதத்தைக் குற்றமாக அங்கீகரிக்க அமெரிக்காவுக்கு 100 ஆண்டுகள் தேவைப்பட்டன. 1918ஆம் ஆண்டிலிருந்து இதைக் கிரிமினலாக்கும் மசோதாக்கள் வந்த போதெல் லாம் அமெரிக்க காங்கிரஸ் நீர்த்துப் போகச் செய்து அமுலாக்காமல்  தடுத்து விட்டது. இறுதி யாக 2018ஆம் ஆண்டு தான் அனைத்து அமெரிக்க மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடிய சட்டமானது. நிறவெறி வெளிப்பாட்டின் உச்சகட்ட...

காஷ்மீர்: வரலாறும் துரோகமும் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த வரலாற்றுப் பின்னணியையும்

370 சிறப்புப் பிரிவு வழங்கிய உரிமைகளை படிப்படியாக இந்திய அரசு பறித்ததால் அம்மக்களிடையே உருவான எதிர்ப்பையும் சுருக்கமாக விவரிக்கிறது, கட்டுரை. தங்கள் வாழ்வுரிமை பறிபோகும் என்ற பதற்றமே காஷ்மீர் மக்களை அலைக்கழிக்கிறது என்பதைப் பார்க்க மறுப்பவர்களால் காஷ்மீர் பிரச்சனையை புரிந்து கொள்ள இயலாது. இந்தியா விடுதலை பெற்றபோது 601 சமஸ் தானங்கள் இருந்தன. இதில் 552 சமஸ்தானங்கள் இந்தியாவோடும், 49 சமஸ்தானங்கள் பாகிஸ்  தானோடும் இணைந்தன. மற்ற 3 சமஸ்தானங்கள் எவரோடும் இணைய மறுத்தன. ஜுனாகட் சமஸ்தானம் ஹைதராபாத் சமஸ்தானம் காஷ்மீர் சமஸ்தானம் ஜுனாகட் சமஸ்தானத்தின் நவாப், தனது சமஸ்தானத்தை பாகிஸ்தானோடு சேர்ப்பதாக அறி வித்தார். இந்துக்கள் அதிகம் இருந்த இங்கு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. 1948 பிப்ரவரி 7ல் இந்திய அரசாங்கம் படைகளை அனுப்பி, மக்களிடம் நேர்முக வாக்கெடுப்பு நடத்தி, இதனை இந்தியாவுடன் இணைத்தது. ஹைதராபாத் சமஸ்தானம் (இன்றைய தெலுங்கானா பகுதி) மிகப்பெரியது. இங்கு மன்னராக இருந்த நிஜாம் இந்தியாவுடன்...

ஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி!

இந்தியா என்பது ஒரு தேசமாகவே உருவாகவில்லை. பல்வேறு பண்பாடு, மொழி, பேசும் மாநில மக்கள் வாழும் ஒரு துணைக் கண்டம். அரசியல் சட்டமே அப்படித்தான் கூறுகிறது. ஆனால் பெரும்பான்மை பலத்துடன் அதிகாரத்துக்கு வந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி, இந்தியாவை ஒற்றை ஆட்சி நோக்கி வேகவேகமாக இழுத்துச் செல்வதற்கான சட்டங்களை அதிரடியாக அமுல்படுத்தி வருகிறது. இந்தியாவின் ஒருமைப்பாடு என்பதன் அடித்தளம் மாநிலங்களின் தன்னாட்சியிலும் கூட்டாட்சி தத்துவத்திலும் தான் அடங்கியிருக்கிறது. அவைகள் தகர்க்கப்படும்போது இந்தியாவின் ஒருமைப்பாடும் வேகமாக தகரும் நிலைதான் உருவாகும் என்பதை பார்ப்பனியம் உணர மறுக்கிறது. இனங்களின் அடையாளம், உரிமைகள் பறிக்கப்படும்போதும் அடையாளங்கள் அழிக்கப்படும் போதும் விடுதலைக்கான போராட்டங்களும் போர்களும் தொடங்கி விடும் என்பதுதான் வரலாறு கூறும் படிப்பினை. இந்தியாவிலே தனி மாநிலம் கோரி போராடிய நாகாக்கள், போடோக்கள் இரஷ்யாவிலிருந்து பிரிந்து போக போராடி வரும் செச்சென்ஸ் (ஊhநஉhநளே) மக்கள், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து போக போராடும் பலுசிஸ்தான், இந்தோனேசியாவிலிருந்து பிரிந்து போக...

எச். ராஜா கிராமத்துக்குள் நுழைய விடாமல் துரத்தப்பட்டார்

எச். ராஜா கிராமத்துக்குள் நுழைய விடாமல் துரத்தப்பட்டார்

கடலூர் மாவட்டம் அரியநாச்சி எனும் கிராமத்தில் கோயிலை புதுப்பிப்பது தொடர்பாக ஒரே சமூகத்தைச் சார்ந்த இரு பிரிவினருக்கிடையே பிரச்சினை இருந்து வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கும் இருக்கிறது. இந்த நிலையில் பா.ஜ.க.வின் செயலாளர்களில் ஒருவரான பார்ப்பனர் எச். ராஜா ஒரு பிரிவினருக்கு ஆதரவாக அக்கிராமத்துக்குள் நுழைய முயன்றார். அப்போது அரியநாச்சி கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எச். ராஜாவை கிராமத்துக்குள்ளேயே நுழைய விடாது கருப்புக் கொடி காட்டி தடுத்தனர். ஆன்மீகத்தின் பெயரால் மக்களைப் பிளவு படுத்தும் எச். ராஜா ஒழிக என்று முழக்கமிட்டனர். கண்டன சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. வேறு வழியின்றி எச். ராஜா அவமானப்பட்டு திரும்பிப் போனார். தி.மு.க., அ.தி.மு.க.வினர் இணைந்து கண்டன சுவரொட்டிகளை ராஜாவுக்கு எதிராக ஒட்டியது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம் 0509209 இதழ்

தோழர் சக்திவேல் இல்ல மணவிழா : கழக ஏட்டுக்கு நன்கொடை

தோழர் சக்திவேல் இல்ல மணவிழா : கழக ஏட்டுக்கு நன்கொடை

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ச. விஜய்-அம்மு, ஜாதி மறுப்பு சுயமரி யாதை இணை யேற்பு விழா 25.8.2019 அன்று மாலை 7 மணியளவில் சென்னை பெரும் பாக்கத்திலுள்ள சமூக நலக் கூடத் தில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மணவிழாவை நடத்தி வைத்தார். கழக ஏட்டுக்கு மணவிழா மகிழ்வாக ரூ.5000 நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 0509209 இதழ்

மயிலாடுதுறை மா.க. கிருட்டிணமூர்த்தி படத்திறப்பு; நினைவு நூல் வெளியீடு

மயிலாடுதுறை மா.க. கிருட்டிணமூர்த்தி படத்திறப்பு; நினைவு நூல் வெளியீடு

திராவிடர் விடுதலை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் ஆகியோரின் மூத்த சகோதரர் மா.க. கிருட்டிண மூர்த்தி (85) ஆகஸ்டு 19ஆம் தேதி முடிவெய்தினார். கூட்டுறவுத் துறையில் இணைப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற மா.க. கிருட்டிணமூர்த்தி, தீவிரமான பெரியாரிஸ்ட். தனது சகோதரர்களை பெரியார் இயக்கத்தை நோக்கிக் கொண்டு வந்தவர். அவரது விருப்பப்படி உடல் புதுச்சேரி ‘மகாத்மா காந்தி’ அரசு மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது. படத்திறப்பு நிகழ்வு ஆகஸ்டு 29 அன்று மயிலாடுதுறை வாசுகி மகாலில் மாலை 6 மணியளவில் நடந்தது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி படத்தைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். திராவிடர் விடுதலைக்கழகத் தோழர்களும் திராவிடர் கழகத் தோழர்களும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் நண்பர்களும் உறவினர்களும் திரளாகப் பங்கேற்றனர். நிகழ்வில்  மா.க. கிருட்டிணமூர்த்தி மகன் கி. தளபதிராஜ் எழுதிய ‘விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா பெரியார்?’ என்ற நூல் வெளியிடப்பட்டது....

‘மகாராஷ்டிரா’ ஆட்சி அறிவிப்பு: மண்ணின் மைந்தருக்கு வேலை தந்தால் ‘ஜி.எஸ்.டி.’ கிடையாது

‘மகாராஷ்டிரா’ ஆட்சி அறிவிப்பு: மண்ணின் மைந்தருக்கு வேலை தந்தால் ‘ஜி.எஸ்.டி.’ கிடையாது

ஆந்திராவைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில  அரசு மண்ணின் மைந்தர்களுக்கே 80 சதவீத வேலை வாய்ப்புகளை வழங்கும் கொள்கையை உருவாக்கி இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பு மண்ணின் மைந்தர் வேலை வாய்ப்புக் கொள்கையை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு சட்டத்துடன் இணைக்கப்பட்டிருப்பதாகும். 80 சதவீத வேலை வாய்ப்புகளை மண்ணின் மைந்தர்களுக்கு வழங்க மறுக்கும் தனியார் தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்களுக்கு அரசு அறிவித்துள்ள ஜி.எஸ்.டி. வரிச் சலுகைகள் முழுமையாக இரத்து செய்யப்படும் என்று மகாராஷ்டிரா தொழில் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் கடந்த ஆக. 26ஆம் தேதி அறிவித்தார்.  இவர் சிவசேனாக் கட்சியைச் சார்ந்தவர். மகாராஷ்டிரா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள், தொழிற் சாலைகள், எண்ணிக்கை 3.8 இலட்சம். இதில் 2.4 மில்லியன் பேர் வேலை செய்கிறார்கள். பெரியார் முழக்கம் 0509209 இதழ்

கழகப் பரப்புரைப் பயண விளக்கக் கூட்டங்கள்

கழகப் பரப்புரைப் பயண விளக்கக் கூட்டங்கள்

வேட்டைக்காரன் புதூரில் : மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரைப் பயண விளக்கப் பொதுக்கூட்டம் 26.08.2019 அன்று மாலை 6 மணிக்கு  பொள்ளாச்சி வேட் டைக்காரன் புதூரில் நடைபெற்றது. நிகழ்விற்கு ஒன்றியச் செயலாளர் அரிதாசு தலைமை வகித்தார்.  ஒன்றிய தலைவர் அப்பாதுரை முன்னிலை வகித்தார். நிகழ்வில் கழக பொருளாளர் துரைசாமி, செயற்குழு உறுப்பினர் மடத்துகுளம் மோகன், கோவை மாவட்ட செயலாளர் வெள்ளியங்கிரி உரையாற்றினர். முனைவர் சுந்தர வள்ளி,  திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை யாற்றினர். தோழர்கள் வினோதினி – மணி இணையர்களின் குழந்தைக்கு நிறைமதி என கழகத் தலைவர் பெயர் சூட்டினார். சபரிகிரி நன்றி கூறினார். இந்நிகழ்வில், திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, ஆனமலை பகுதி தோழர்கள் கலந்து கொண்டனர். காஞ்சிபுரத்தில் : மண்ணின் மைந்தர்களின் உரிமை மீட்பு பயணத் தின்  பிரச்சார பயண விளக்க  பொதுக் கூட்டம் 26.08.2019 அன்று மாலை 5 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட...

அய்.நா. பொதுச் செயலாளருக்கு மனு சிறிலங்காவை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் முன்நிறுத்துக!

அய்.நா. பொதுச் செயலாளருக்கு மனு சிறிலங்காவை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் முன்நிறுத்துக!

“சிறிலங்காவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதி மன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும். ஆகஸ்ட் – 30 அனைத்துலக காணாமல் ஆக்கப் பட்டோர் நாளில் ஈழத் தமிழர் ஆதரவு அமைப்புகள் ஐ.நா. வுக்கு கோரிக்கை ஆகஸ்ட் 30 காணாமல் போனோர் நாளை முன்னிட்டு சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள யுனிசெப் அலுவலகத்தில் காலை 11 மணி அளவில்  ஈழத்தில் வலிந்து காணாமலடிக்கப்பட்ட ஈழத் தமிழருக்கு நீதிக்கோரி ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக ஐநா. பொதுச் செயலருக்கும் ஐநா மனித உரிமை ஆணையருக்கும் விண்ணப்ப மடல் கொடுக்கப்பட்டது. இந்த விண்ணப்ப மடலை வழங்கிய குழுவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு, தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்ணன், இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில், தடயவியல் நிபுணரும் மருத்துவருமான  சேவியர், பேராசிரியர் பேச்சிமுத்து   ஆகியோர் பங்குபெற்றனர். யுனிசெப் அலுவலக அதிகாரியிடம் சிறிலங்கா அரசப் படையால் காணாமலடிக்கப்பட்ட...

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி அனைவருக்கும் கல்வி வழங்கும் உரிமையை அரசு கைவிட்டது ஏன்?

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி அனைவருக்கும் கல்வி வழங்கும் உரிமையை அரசு கைவிட்டது ஏன்?

ஜூலை 12, 2019 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் கோவை திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் புதிய கல்வித் திட்ட நகல் குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நிகழ்த்திய உரை: (சென்ற இதழ் தொடர்ச்சி) ஒரு பள்ளி வளாகத்திற்குள் சென்றீர்க ளென்றால், நீங்கள்  ஒரு பள்ளியில் எவையெல்லாம் இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களோ அவையனைத்தும் அனைத்துப் பள்ளியிலும் இருக்க வேண்டும். என் வீட்டிற்கு அருகில் ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது, நீங்கள் எவையெல்லாம் ஒரு பள்ளியில் இருக்க வேண்டுமென்று கூறினீர்களோ அவை யனைத்தும் என் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளியில் இருந்தால், நான் அதை தவிர்த்து விட்டு ஏன் வேறு பள்ளியில் சேர்க்கப் போகிறேன். உலகம் முழுக்க இருக்கக் கூடிய நடைமுறை, ஒரே சீரான பள்ளி அமைப்பு என்பதாகும் ஆனால் இந்தியாவில் 70 ஆண்டுகாலம் அதைப் பற்றி பேசுவதற்குக்கூட தயாராக இல்லையென்பது எப்படி? சரி கோத்தாரி குழுவின் கல்விக் கொள்கை...

ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன அதிகார வர்க்கத்தை அரசு நிர்வாகத்தில் திணிக்கும் மோடி ஆட்சி

ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன அதிகார வர்க்கத்தை அரசு நிர்வாகத்தில் திணிக்கும் மோடி ஆட்சி

தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய 9 பேரை, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில், அய்ஏஎஸ் அதிகாரிகளுக்கு இணையான அதிகாரத்தில், இணைச் செயலாளர்களாக நியமித்து மோடி அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு பங்களா, வாகன வசதியுடன், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் மாதத்துக்கு ஒரு லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் வரைசம்பளமும் வழங்கப்பட உள்ளது. குடிமைப் பணித் தேர்வுகளில் (அய்ஏஎஸ், அய்பிஎஸ், அய்எப்எஸ், அய்ஆர்எஸ்) தேர்ச்சி பெற்றவர்களே, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தகுதி அடிப்படையில், மத்திய அரசின் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள் மற்றும் கூடுதல் செயலாளர்கள் பதவிகளில் நியமிக் கப்படுவது வழக்கம். அனுபவத்தின் அடிப்படையில், லேடரல் எண்ட்ரி  முறையிலும் இந்த நியமனங்கள் நடக்கும் என்றாலும், தனியார் துறைகளைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். வருமான வரித் துறை, கஸ்டம்ஸ், ரயில்வே, தொலைத் தொடர்பு, அஞ்சலகம் மற்றும் வணிகம் உட்பட 37 அரசுத் துறைகளில் பணியாற்றிய அனுபவம்...

கடவுள் – மத மறுப்பாளர் நேரு முன்மொழிந்த ‘அறிவியல் மனித நேயம்’

கடவுள் – மத மறுப்பாளர் நேரு முன்மொழிந்த ‘அறிவியல் மனித நேயம்’

ஆக. 31, 2019 ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்டில் நேருவின் பகுத்தறிவு கொள்கை பற்றி அசோக் வோஹ்ரா எழுதிய கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம். நேரு வாழ்நாள் முழுதும்தீவிர பகுத்தறிவாளராகவே இருந்தார். கடவுள் பற்றிய கருத்தே அறிவுடைமைக்கு எதிரானது என்று கூறிய அவர், இதுதான் கடவுள் என்பதற்கான வரையறையே இல்லை என்றார். தன்னுடைய ‘டிஸ்கவரி ஆப் இந்தியா’ நூலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “ஒரு கடவுள் உருவமாகவோ அல்லது ஏதோ ஒரு புலப்படாத ஒரு அற்புத சக்தியாகவோ இருப்பதாக என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடிவதில்லை. மனித சமூக வளர்ச்சி பற்றிய மானுடவியலில் அத்தகைய கடவுளுக்கோ, அற்புத சக்திக்கோ இடமில்லை. ஆனாலும் பலரும் இந்த சக்திகளை நம்புவது எனக்கு வியப்பூட்டுகிறது. தங்களுக்கான தனிப்பட்ட கடவுள் நம்பிக்கைக் குறித்த எந்த கருத்தையும் என்னால் ஏற்கவே முடியாது” என்று எழுதியிருக்கிறார். “இல்லாத ஒரு கடவுள்தான் மனிதனை வழி நடத்தி உள்ளத்தை அமைதிப்படுத்துகிறார் என்பதை எப்படி ஏற்க...

இதுதான் மத ஊர்வலமா? இந்து முன்னணியே பதில் சொல்!

இதுதான் மத ஊர்வலமா? இந்து முன்னணியே பதில் சொல்!

‘மதம் அன்பைப் போதிக்கிறது; இந்து மதம் போல் சகிப்புத்தன்மையுள்ள வேறு மதம் இல்லை’ என்று பார்ப்பனர்களும் பார்ப்பனியர்களும் ‘வாய்கிழிய’ப் பேசுகிறார்கள். ஆனால் மதத்தின் பெயரால் நடக்கும் விநாயகன் சிலை ஊர்வலங்கள் எப்படி நடக்கின்றன? ஒரே நாளில் ஏடுகளில் வெளி வந்த சில செய்திகளைத் தொகுத்து தருகிறோம். “அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தமிழகம் முழுதும் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு ஒரு இலட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 10,000 போலீசார் இந்தப் பணி யில் உள்ளனர். அதிலும் சிலைக்கு ஒரு போலீசார் என்று 24 மணி நேரமும் ‘ஷிப்டு’ முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.”            – ‘தினத்தந்தி’, செப். 3 “ஆவடியை அடுத்த திருமுல்லைவாயிலில் அனுமதியின்றி 5 அடி உயர விநாயகன் சிலை நிறுவப்பட்டிருந்தது. போலீசார் அந்த விநாயகர் சிலையை அகற்றினர். உடனே இந்து முன்னணி மாநில செயலாளர் பரமேசுவரன் தலைமையில் இந்து முன்னணியினர்...

பரப்புரைப் பயணம் மீண்டும் செப். 17இல் தொடங்குகிறது

பரப்புரைப் பயணம் மீண்டும் செப். 17இல் தொடங்குகிறது

ஆகஸ்ட் 25ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகம் தொடங்கிய ‘மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரைப் பயண’த்துக்கு தமிழகம் முழுதும் காவல் துறை வழங்கிய அனுமதியை திடீரென மறுத்தது. வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு, தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் ஊடுறுவல் ஆகிய பிரச்சினைகளை காவல்துறை காரணமாகக் கூறியது. அதைத் தொடர்ந்து கழகத்தின் பரப்புரைப் பயணம் தள்ளி வைக்கப்பட்டது. எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்த நாளில் மீண்டும் பரப்புரைப் பயணம் ஏற்கனவே திட்டமிட்டபடி தொடங்குகிறது. செப். 20இல் நாமக்கல் பள்ளிப் பாளையத்தில் நிறைவு விழா மாநாடு நடைபெறும். காவல்துறைக்கு அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. தோழர்களே, தயாராவீர்! பெரியார் முழக்கம் 0509209 இதழ்

கடும் பொருளாதார சரிவு  நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி

கடும் பொருளாதார சரிவு நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி

15 மாதங்களில் இல்லாத வகையில், சரிவை சந்தித்துள்ளது. விற்பனை, உற்பத்தி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் மந்த நிலையால், நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, சரிவை சந்தித்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த, ‘ஐ.எச்.எஸ்., மார்கிட்’ எனும் நிறுவனம், உலோகம், இரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த நிறுவனங்களின், ஆகஸ்ட் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கையை வெளியிட் டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஆகஸ்ட் மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி குறித்த, பி.எம்.ஐ., குறியீடு, 51.4 புள்ளிகளாக சரிந்துள்ளது. இது, 2018, மே மாதத்துக்குப் பிறகு ஏற்பட்ட குறைந்த அளவாகும். 2018, மே மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, 52.5 புள்ளிகளாக இருந்தது. கடந்த ஜூலை மாதம் முதலாகவே, பெரும்பாலான அளவீட்டுக்கான குறிகாட்டிகள் வீழ்ச்சியடைந்ததால், உற்பத்தி வளர்ச்சி, தன் வேகத்தை இழந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்தி, வேலைவாய்ப்பு, புதிய ஆர்டர்கள் ஆகிய முக்கியமான, பி.எம்.ஐ.,...

அரசியல் விநாயகனுக்கு மாற்றாக புத்தர் சிலை ஊர்வலம்

அரசியல் விநாயகனுக்கு மாற்றாக புத்தர் சிலை ஊர்வலம்

இந்து முன்னணி அமைப்பாளர் கே. பக்தவத்சலம், சென்னை இந்து முன்னணி தலைமை அலுவலகத்திலிருந்து அளித்த பேட்டியில், ‘இந்த ஆண்டு விநாயகன் சிலை ஊர்வலம், அரசியல் முழக்கத்தை முன் வைத்து நடத்தப்படுகிறது’ என்று கூறியிருக்கிறார். “பக்தி இலக்கியத்தை பரப்புவோம்; போலி தமிழ் தேசியத்தை வீழ்த்துவோம்” – இதுதான் தமிழ்நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள விநாயகன் சிலைகளின் ஊர்வலங்களுக்கான முழக்கமாம். (The theme for this year is ‘Promote divine Tamil and Crack down on fake Tamil identity. – The Hindu Aug.29, 2019) இவர்கள் வீழ்த்தப்போவது தமிழ் தேசியத்தையா அல்லது போலி தமிழ் தேசியத்தையா என்பது இங்கே பிரச்சினையல்ல. இந்த ஊர்வலம் மதத்துக்கான ஊர்வலம் அல்ல; அரசியல் ஊர்வலம். அதுவும் பா.ஜ.க.வின் அரசியலுக்காக ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்காக நடத்தப்படும் ஊர்வலம். ஏதோ ‘விநாயக சதுர்த்தி’க்கான மத ஊர்வலம் போலவும், மத ஊர்வலங்கள் நடத்துவதற்கான உரிமைகளை சட்டப்படி மறுக்க முடியாது என்பது...

சென்னை அணியின் பரப்புரை பயண தொகுப்பு

சென்னை அணியின் பரப்புரை பயண தொகுப்பு

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் மண்ணிண் மைந்தருக்கு வேலை கொடு, தமிழ்நாட்டை வடநாடு ஆக்காதே என்கிற பரப்புரைப் பயணத்திற்கான சென்னை மாவட்ட குழுவின் துவக்க விழா நிகழ்வு 25.08.19 ஞாயிற்றுக்கிழமை அன்று இலாயிட்ஸ் சாலை பெரியார் சிலை அருகில் காலை 9 மணிக்கு துவங்கியது. தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் ஆனூர் ஜெகதீசன் அவர்கள் பயணத்தை துவக்கி வைத்தார். பரப்புரைப் பயணத்தின் நோக்கத்தினை விளக்கி கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் உரையாற்றினார். மே 17 இயக்கத்தினர் பறையிசையோடு துவங்கிய சென்னை மாவட்ட திராவிடர் விடுதலை கழகத்தின் பரப்புரை பயணம் துவங்கியது. முதல் நாளின் இரண்டாம் இடமான பல்லாவரத்தில் தற்போது பரப்புரைப் பயணத்தின் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. கழகத் தோழர் பெரியார் யுவராஜ் பயணத்தின் நோக்கத்தினை குறித்து உரையாற்றினார். தோழர் நாத்திகன் பாடல் மூலம் பிரச்சாரம் செய்தார். முதல் நாளின் மூன்றாவது இடமான அனகாப்புத்தூரில் பரப்புரை பயணத்தின் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. கழக தோழர் எட்வின்_பிரபாகரன்அவர்கள் பிரச்சாரத்தின் நோக்கத்தினை விளக்கி உரையாற்றினார். அந்த பகுதியில் இருந்த சிறுவர், சிறுமியர்கள் ஆர்வமாக துண்டறிக்கையை படித்து கேள்வி எழுப்பியது கூடுதல்...

உலக காணாமலாக்கப்படோர் நாள் ஆகஸ்ட் 30 – மனு

உலக காணாமலாக்கப்படோர் நாள் ஆகஸ்ட் 30 – மனு

உலக காணாமலாக்கப்படோர் நாளான இன்று (ஆகஸ்டு 30) ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில், இலங்கை அரசால் ஈழத்தில் வலிந்து காணாமலடிக்கப்பட்ட 20,000 க்கும் மேலான தமிழர்கள் எங்கே? போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை, அய்.நா பொதுச்செயலாளருக்கும், அய்.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையருக்கும் வழங்கப்பட்டது. இதில் தியாகு, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம். தபசி குமரன், திவிக தலைமைநிலையச் செயலாளர். உமாபதி தென் சென்னை மாவட்ட செயலாளர் திவிக செந்தில், இளந்தமிழகம் ஆகியோர் சென்று மனுவை அளித்தனர்.

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரை பயண பொதுக்கூட்டம் / வேட்டைக்காரன்புதூர் 26082019

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரை பயண பொதுக்கூட்டம் / வேட்டைக்காரன்புதூர் 26082019

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரை பயணத்தின் திருப்பூர் கோவை அணியின் ஒரே நிகழ்வாக வேட்டை காரன்புதூரில் பொதுக் கூட்டம் 26-8-2019 மாலை 6 மணிக்கு நடைபெற்றது. நிகழ்விற்கு ஒன்றிய செயலாளர் அரிதாசு தலைமையும் ஒன்றிய தலைவர் அப்பாதுரையும் முன்னிலை வகித்தனர். விழாவில் கழக பொருளாளர் துரைசாமி அவர்களும் செயற்குழு உறுப்பினர் மடத்துகுளம் மோகன் அவர்களும் கோவை மாவட்ட செயலாளர் வெள்ளியங்கிரி அவர்களும் சிறப்புரையாற்றினர் . விழாவில் முனைவர் சுந்தரவள்ளி அவர்களும் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்களும் பேருரையாற்றினர்.விழாவில் தோழர்கள் வினோதினி – மணி இணையர்களின் குழந்தைக்கு நிறைமதி என கழக தலைவர் பெயர் சூட்டினார்.விழாவிற்கு தோழர் சபாகிரி நன்றியுரையாற்றினார். விழாவில் செயற்குழ உறுப்பினர் பன்னீர் செல்வம் அவர்களும் கோவை மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன் அவர்களும் கோவை மாநகரத் தலைவர் நேருதாசு அவர்களும் கோவை மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன் அவர்களும் ஆனைமலை...

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை பயணத்திற்கான திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதிய வெளியீடுகள்

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை பயணத்திற்கான திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதிய வெளியீடுகள்

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை பயணத்திற்கான திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதிய வெளியீடுகள் 1) பள்ளிகளிலிருந்து குழந்தைகளை விரட்டும் புதிய கல்விக் கொள்கை 2) தமிழர்கள் வேலை வாய்ப்பைப் பறிக்கும் – வடநாட்டுக்காரர்கள் 3) பெரியார் சந்தித்த அடக்குமுறைகள் – போராட்ட வரலாறுகளின் ஒரு தொகுப்பு 4) 10 சதவீத இடஒதுக்கீடு: சமூக நீதிக்கு சவக் குழி 5) ஆர்.எஸ்.எஸ். கேள்விகளுக்கு அதிரடி பதில். முன்பதிவுக்கு : தபசி குமரன் +919444025408 உமாபதி +917299230363

காவல்துறை திடீர் தடை:  பரப்புரைப்பயணம் தள்ளிவைப்பு !

காவல்துறை திடீர் தடை: பரப்புரைப்பயணம் தள்ளிவைப்பு !

காவல்துறை திடீர் தடை:  பரப்புரைப்பயணம் தள்ளிவைப்பு ! மண்ணிண் மைந்தருக்கு வேலை கொடு ! தமிழ்நாட்டை வடநாடு ஆக்காதே ! என்கிற முழக்கத்தோடு திராவிடர்_விடுதலை_கழகம் ஆக. 26-31 வரை தமிழ்நாட்டின் 5 முனைகளில் இருந்து தொடங்கிய பரப்புரைப் பயணம் முறையாக காவல்துறையின் அனுமதி பெற்று துவங்கப்பட்டது ஆனால் தற்போது ஆக. 25இல் தொடங்கிய கழகத்தின் பரப்புரைக் குழுக்களுக்கும்,ஆக. 26இல் தொடங்கிய பரப்புரைக் குழுக்களுக்கும் காவல்துறை திடீரென அனுமதி மறுத்துள்ளது. எனவே பரப்புரைப் பயணத்திட்டமும் பள்ளிப்பாளையம் நிறைவு விழா மாநாடும் தள்ளி வைக்கப்படுகிறது. புதிய பயணத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும். – கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். பெரியார் முழக்கம் 29082019 இதழ்

மூத்த பெரியார் தொண்டர் தா மு அர்த்தநாரி அவர்கள் முடிவெய்தினார்

மூத்த பெரியார் தொண்டர் தா மு அர்த்தநாரி அவர்கள் முடிவெய்தினார்

மூத்த பெரியார் தொண்டர் தா மு அர்த்தநாரி அவர்கள் முடிவெய்தினார் சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த இலக்கம்பட்டியைச் சார்ந்த மூத்த பெரியார் தொண்டர் தா.மு.அர்த்தநாரி அவர்கள் இன்று 28.08.2019 காலை மாரடைப்பால் காலமானார்.அவருக்கு வயது 74. தந்தை பெரியாரை முதன் முதலில் சந்தித்த 1971 முதல் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றியவர்.அவரது துணைவியார் தோழர் சந்திராவும் அப்போதே பெண்ணடிமைச் சின்னமாம் தாலியை அகற்றியவர். தன் குடும்பத்தையே பெரியாரின் கொள்கை வழியில் வழிகாட்டி நடத்தியவர். தன் குடும்பத்தில் ஜாதி மறுப்பு திருமணத்தை, இயக்கக் குடும்பத்தோடு நடத்தி முன்னுதாரணமாய் வாழ்ந்தவர். 1998-இல் இதயநோய்க்காக அறுவை சிகிச்சை செய்யும்வரை, பெரியார் இயக்க மாநாடுகள் எங்கு நடந்தாலும், டெல்லியில் நடந்த மண்டல் கமிஷன் மாநாடு உட்பட துணைவியார் மற்றும் குடும்பத்துடன் பங்கேற்பதை வழக்கமாக வைத்திருந்தவர். அவரது மகன் இலக்கம்பட்டி குமார் அவர்களும் திராவிடர் கழகத்தில் மாநில மாணவர் அணி செயலாளர் ஆக பணியாற்றியவர்.தற்போது திராவிடர் விடுதலைக் கழகத்தில்...

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து…. திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஆகஸ்டு 2019 மாத இதழ்

*”நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து….* திராவிடர் விடுதலைக் கழகத்தின் *”ஆகஸ்டு 2019″* மாத இதழ் வெளிவந்துவிட்டது…. 📚 *தலையங்கம் – ஒற்றை ஆட்சி முறையில் வேத காலத்தை நிறுவ முயற்சி* 📖 *காஷ்மீர்: வரலாறும், துரோகமும்- சிறப்புக் கட்டுரை* 💥 *புரோகிதர் மேலாதிக்கம் உருவான வரலாறு* 📝 *கடும் நெருக்கடியில் இந்திய பொருளாதாரம்-ஓர் அலசல்* ❗ *தேசிய விருது: தமிழ்ப் படங்கள் புறக்கணிப்பு* இன்னும் அரசியல் பதிவுகளோடு….. தோழர்கள் இதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 💰அஞ்சல் வழியாக பெற – ₹ 300/- 💰தனி இதழ் விலை – ₹ 20/- *தொடர்புக்கு : 7299230363*, *7373684049*

திருப்பூர்- கோவையில் விநாயகர் சதுர்த்தி நடைமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி மனு

திருப்பூர்- கோவையில் விநாயகர் சதுர்த்தி நடைமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி மனு

விநாயகர் சதுர்த்தியின் போது கடை பிடிக்க வேண்டிய சட்ட நடை முறை கள் அடங்கிய விண்ணப்பம் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் திராவிடர் விடுதலைக் கழகத் (திருப்பூர் மாவட்டம்) தோழர்களால் 19.08.2019 அன்று காலை 10 மணிக்கு அளிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியின் போது கடைபிடிக்க வேண்டிய சட்ட நடைமுறைகள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை தொடர் புடைய அதிகாரிகளிடம் வழங்கி நடைமுறைபடுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.  கழக பொருளாளர் துரைசாமி, மாவட்ட தலைவர் முகில் இராசு, முத்து, அய்யப்பன் ஆகியோர் சென்றிருந்தனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – சிலை அமைப்பது தொடர்பாக – சென்னை உயர்நீதிமன்றத்தின் (றுஞ சூடி 25586/2004. னுவ.17.09.2004) வழிகாட்டுதல்-தமிழக அரசின் பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு)துறையின் அரசாணை எண் 598, நாள் 09.08.2018 நிபந்தனைகளை விதி முறைகளை  செயல் படுத்தக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 21.08.2019  அன்று கோவை  மாநகர காவல் ஆணையாளர், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரிடம்...

‘பெரியாரின் வேர்களைத் தேடி’ தஞ்சையில் மூன்று நாள் கருத்தரங்கு

‘பெரியாரின் வேர்களைத் தேடி’ தஞ்சையில் மூன்று நாள் கருத்தரங்கு

தஞ்சையிலுள்ள அன்னை வேளாங்கன்னி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சி தொடர்பியல் துறையும் ‘ரிவோல்ட்’ அமைப்பும் இணைந்து மூன்று நாள் பன்னாட்டு மாநாட்டை ஆகஸ்டு 23, 24, 25 தேதிகளில் நடத்தியது. ‘ஊடகங்களில் பகுத்தறிவு மற்றும் சமூக நீதியின் வேர்களைத் தேடி’ எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கில் ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், சூழலியாளர்கள் பங்கேற்றுப் பேசினர். முதல் நாள் : ஆகஸ்டு 23 முதல் நாள் காலை அமர்வுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பசு. கவுதமன் வரவேற்புரையாற்ற பேராசிரியர் ந. முத்துமோகன் முதன்மை உரையாற்றினார். பேராசிரியர் மு. நாகநாதன், புலவர் செந்தலை கவுதமன், இரா. எட்வின், சுப. குணராசன், முனைவர் தமிழ் காமராசன், சூழலியல் ஆய்வாளர் நக்கீரன் உரையாற்றினர். மனித நேயர் எஸ்.எஸ். ராஜ்குமார், ஆய்வு விமர்சனத்துன் நெறிப்படுத்தினார். இரண்டாம் நாள் அமர்வில் மருத்துவர் ஷாலினி, ‘பெரியாரின் பெண்ணியம்’ என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் இந்திரா, அமந்தா, ஓவியா,...

அசல் நகலில் இடம் பெற்ற சமஸ்கிருத திணிப்பு கொள்கை சுருக்கப்பட்ட நகலில் மறைக்கப்பட்டது ஏன்?

அசல் நகலில் இடம் பெற்ற சமஸ்கிருத திணிப்பு கொள்கை சுருக்கப்பட்ட நகலில் மறைக்கப்பட்டது ஏன்?

ஜூலை 12, 2019 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் கோவை திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் புதிய கல்வித் திட்ட நகல் குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நிகழ்த்திய உரை: தேசிய கல்வி வரைவு என்பதை கிட்டத்தட்ட 5 ஆண்டு காலமாக நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். 2015லிருந்தே மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பள்ளிக் கல்வியிலேயே ஒரு 20 தலைப்புகள், உயர் கல்விக்கு ஒரு 13 தலைப்புகள் என்று தலைப்புகள் கொடுத்து, இந்த தலைப்புகளின் மீது  கருத்துக்களைச் சொல்லுங்கள் என்று மனித வளத் துறை வலைதளத்தில் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். இந்தியா முழுவதும் உள்ள மாவட்டங்களில் இது சம்மந்தமாக கூட்டங்கள் நடத்தப்போகிறோம், அனைத்து உயர்கல்வி இடங்களிலும் கூட்டம் நடத்தப்போகிறோம், கிராமங்கள் அளவிற்கு எத்தனை கூட்டங்கள் நடத்தப் போகிறார்கள் என்று ஒரு கணக்கை போட்டு வைத்திருந்தார்கள். அவர்கள் குறிப்பிட்ட பாதி அளவான இலக்கை கூட அதாவது 50 சதவீதத்தை கூட அவர்களால் அடைய...

1944இல் சேலம் திராவிடர் கழகப் பெயர் மாற்ற மாநாடு சந்தித்த எதிர்ப்புகள்

1944இல் சேலம் திராவிடர் கழகப் பெயர் மாற்ற மாநாடு சந்தித்த எதிர்ப்புகள்

1944ஆம் ஆண்டு ஆகஸ்டு 27ஆம் தேதி சேலத்தில் கூடிய தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாட்டில் தான் அமைப்பின் பெயர் திராவிடர் கழகமாக மாற்றப்பட்டது. பெரியார் எழுதி அண்hணவால் படிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க அத்தீர்மானம், ‘அண்ணாத் துரை தீர்மானம்’ என்று வரலாற்றில் அமைக்கப்படுகிறது. பெயர்மாற்றம் மட்டுமல்லாது இயக்கம் பண்பு மாற்றமும் பெற்றது. அதுவரை தேர்தலில் போட்டியிட்டு வந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கம் அதற்குப் பிறகு தேர்தலில் போட்டியிடாத சமுதாயப் புரட்சி இயக்கமாக மாறியது. 75 ஆண்டுகாலம் நிறைவு பெற்றுள்ளது. பெரியாரின் திராவிடர் கழகம் 1944ஆம் ஆண்டில் பெயர் மாற்றம் கொண்டு வரப்பட்ட மாநாட்டில் என்ன நடந்தது என்ற வரலாற்றுத்தகவலை ‘விடுதலை’ நாளேடு 2.9.1944இல் பதிவு செய்துள்ளது.   16ஆவது தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாடு சேலத்தில் நடத்த 1940ஆம் வருஷத்திலேயே திருவாருரில் அழைக்கப்பட்டது. அதன்பிறகு 43ஆம் வருஷம் சேலத்தில் நிர்வாக சபை கூட்டம் போட்ட காலத்தில் சேலம்...

சென்னை-விழுப்புரம்-கோபியிலிருந்து பரப்புரைப் பயணம் தொடங்கியது பொது மக்கள் பேராதரவு

சென்னை-விழுப்புரம்-கோபியிலிருந்து பரப்புரைப் பயணம் தொடங்கியது பொது மக்கள் பேராதரவு

‘தமிழ்நாட்டை வஞ்சிக்காதே; சமூக நீதியை பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரில் குலக் கல்வியைத் திணிக்காதே; தமிழ்நாட்டை வடநாடாக்காதே!’ என்ற முழக்கங்களுடன் திராவிடர் விடுதலைக் கழகத்தின் 6 முனை பரப்புரைப் பயணங்கள் தொடங்கின. சென்னையிலிருந்து சென்னை பரப்புரைக் குழு ஆகஸ்டு 25 காலை 10 மணிக்கு இராயப்பேட்டை பெரியார் சிலையிலிருந்து பயணத்தைத் தொடங்கியது. மே 17, இயக்கத் தோழர்களின் பறை இசையுடன் நிகழ்வுகள் தொடங்கின. பயணத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், பயணக் குழுவினரை வாழ்த்தி உரையாற்றி கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். பொதுச் செயலாளர்விடுதலை இராசேந்திரன் பயணத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினார். சென்னை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் துரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் ரூதர் கார்த்திக் பயணக் குழுவினரை வாழ்த்தி உரையாற்றினர். தொடர்ந்து பல்லாவரம், அனகாபுத்தூர், தாம்பரத்தில் பரப்புரை நடந்தது. மக்கள் திரளாகக் கூடி நின்று கருத்துகளைக் கேட்டனர். துண்டறிக்கைகளை விருப்பத் துடன்...

சென்னையில் சுவரெழுத்து

சென்னையில் சுவரெழுத்து

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை பயணம் வரும் ஆகஸ்டு 26 முதல் 30 வரை தமிழகம் முழுவதும் 5 நாட்கள் நடைபெறுகிறது. அதற்கான சுவர் விளம்பரங்கள் சென்னையில்,  “மண்ணின் மைந்தர்களுக்கு வேலை கொடு” என்று  இராயப்பேட்டை, மைலாப்பூர், எழும்பூர், அடையாறு, அண்ணா சாலை போன்ற பகுதிகளில் எழுதப்பட்டது. பெரியார் முழக்கம் 22082019 இதழ்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ ஆண்டுத் தொகுப்புகள்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ ஆண்டுத் தொகுப்புகள்

பள்ளிப் பாளையம் நிறைவு விழா மாநாட்டில் கிடைக்கும்! நிமிர்வோம் 2018ஆம் ஆண்டு இதழ்களின் தொகுப்பு (அழுத்தமான அட்டையுடன்) விலை: ரூ. 500/- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ 2018ஆம் ஆண்டு தொகுப்பு (அழுத்தமான அட்டையுடன்) விலை : ரூ. 500/- – நிர்வாகி பெரியார் முழக்கம் 22082019 இதழ்

புதிய கல்விக் கொள்கை ஆபத்து: மாணவர்களிடம் இரண்டாம் கட்டமாக துண்டறிக்கை

புதிய கல்விக் கொள்கை ஆபத்து: மாணவர்களிடம் இரண்டாம் கட்டமாக துண்டறிக்கை

புதிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் மீண்டும் குலக்கல்வியா? என்ற தலைப்புடன் மத்திய பா.ஜ.க.வின் கல்விக் கொள்கையின் ஆபத்தை மாணவர்களுக்கு புரியும் வகையில், இரண்டாம் கட்டமாக சென்னையில் ஆகஸ்டு 13, 15, 16 ஆகிய மூன்று நாட்களில் ஜெயின், குருநானக், நியூ கல்லூரி, ஸ்டெல்லா மேரிஸ், பச்சையப்பன், எம்.ஜி.ஆர் ஜானகி ஆகிய 6 கல்லூரிகளில் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் 3000 துண்டறிக்கைகள் அச்சடிக்கப்பட்டு மாணவர் கழக தோழர்களால் வழங்கப்பட்டன.  எட்வின் பிரபாகரன், கார்த்திக் இராசேந்திரன், பிரகாசு, கனி செல்வன், பரத்குமார், தமிழ், பிரவீன், யுவராஜ் ஆகியோர் துண்டறிக்கைகளை வழங்கினர்.  நிகழ்வை யுவராஜ் ஒருங்கிணைத்தார். பெரியார் முழக்கம் 22082019 இதழ்

கழகப் பொறுப்பாளர் ப.அ. வைத்திலிங்கம் 105ஆவது வயதில் முடிவெய்தினார்

கழகப் பொறுப்பாளர் ப.அ. வைத்திலிங்கம் 105ஆவது வயதில் முடிவெய்தினார்

பெரியார் பெருந்தொண்டர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொறுப்பாளர் ப.அ. வைத்திலிங்கம் 17.8.2019 அன்று 105ஆம் அகவையில் முடிவெய்தினார். பிரபல திரைப்பட பாடலாசிரியர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நெருங்கிய நண்பர் பெரியார் பெருந்தொண்டர் வைத்திலிங்கம், பேராவூரணி அருகே அழகியநாயகிபுரம் கிராமத்தில் வசித்து வந்தார். சிங்கப்பூரில் பணியாற்றி தனது கடும் உழைப்பால் பெற்ற பெரும் செல்வத்தைக் கொண்டு அழகியநாயகிபுரம் அரசு மருத்துவமனைக்கு நிலம் வாங்கிக் கொடுத்தார் வைத்திலிங்கம். நிறைந்த உழைப்பும், கடன் வாங்காமல் வாழும் பண்பும், பசித்தபின் அளவோடு உண்ணும் பழக்கமும் அய்யாவின் நிறை வாழ்வுக்கு காரணமாக அமைந்தன என்று அவரே அடிக்கடி பல்வேறு கூட்டங்களில் குறிப்பிட்டிருக்கிறார். சிறந்த கவிபுனையும் ஆற்றல் கொண்டவர். கவிதைகளை கையெழுத்துப் பிரதிகளாகவே வைத்திருக்கிறார். பேராவூரணி திருக்குறள் பேரவை வைத்திலிங்கம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பித்துள்ளது. கழக சார்பில் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம் மற்றும் ஆயர் ஜேம்ஸ், மெய்ச்சுடர் வெங்கடேசன், அ. கோவேந்தன்,...

தேசிய மருத்துவ ஆணையம் சமூக நீதிக்கு எதிரானது

தேசிய மருத்துவ ஆணையம் சமூக நீதிக்கு எதிரானது

தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் நோக்கத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவை யில் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியிருக்கிறது. இதன்மூலம் இத்தனை ஆண்டுகாலமாகச் செயல்பட்டுவந்த இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டு, `தேசிய மருத்துவ ஆணையம்’ என்கிற புதிய அமைப்பு செயல்படவிருக்கிறது. தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். மருத்துவர்கள் பற்றாக்குறை, தகுதியில்லாத மருத்துவர்கள், மருத்துவக் கல்வியில் குளறுபடிகள், ஊழல் நிறைந்த இந்திய மருத்துவ கவுன்சில்… இவையெல்லாம் தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதற்கு மத்திய அரசு கூறும் காரணங்கள். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை புதிய ஆணையம் சரிசெய்யுமா என்றால், ‘இல்லை’ என்றே கூற வேண்டும். எப்படி… வரிசையாகப் பார்க்கலாம். ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஆனால், இந்தியாவில் 1,600 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைதான் இருக்கிறது. தமிழகத்தில் 1,500 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். இந்தப்...

உபநிஷத்துகள் கூறுகின்றன : சிலை வழிபாடு மூடர்களுக்கு மட்டுமே உரியது!

உபநிஷத்துகள் கூறுகின்றன : சிலை வழிபாடு மூடர்களுக்கு மட்டுமே உரியது!

அத்திவரதர் சிலை தரிசனத்துக்கு மக்கள் திரண்டார்கள். ஆனால்  வேதங்களுக்கு விளக்கவுரை வழங்கிய உபநிஷத்துகள் சிலை வணக்கம் மூடர்களுக்கே உரியது என்று கூறுகிறது. “அக்நி ரதே லோத் துவிஜாதீ நரம் முனி நாம் ஹிருதி தைவதம்: பர்மாஸ்வ பாபுத்தாரம் சர்வத்ர சமதர்கின” – உத்தரகீதை – சுலோகம். இதன் பொருள் : துவிஜர்களுக்குத் தெய்வம் நெருப்பில்; முனிவர்களுக்குத் தெய்வம் இருதயத்தில்; புத்தி இல்லாத மூடர்களுக்குத்  தெய்வம் விக்கிரகத்தில்; சமதிர்ஷ்ட்டி உடையவர்களுக்கு தெய்வம் எங்கும். “தீர்த்தே தாதையோ எக்ஞே – கார்ஷ்ட்டே பாஷாண கேபதா சிவம்பசிய தீ மூடாத்மா சிலோதெஹெபர் திஷ்டி தர.” – ஸகந்தம் – ஞானயோக காண்டம் இதன் பொருள் : தீர்த்ததிலும், தானத்திலும், தபசிலும், யக்ஞத்திலும், கட்டையிலும், கல்வியிலும் சிவன் இருப்பதாக மூடர்கள் நினைக்கிறார்கள். சிவன் தனக்குள்ளாகவே இருக்கிறது. “சிவம் ஆத்ம நிபஸ்யந்தி ப்ரதி மாஸு நயோகிநோ, அக்ஞானம் பாவ நார்த்தாய மரதிம பரிகல்பிதா.” இதன் பொருள் : யோகிகள்...

இலஞ்சம்-வணிகம்-அரசியல் செல்வாக்கு-ஊழல் ஆன்மீகத்தின் முகத்திரையைக் கிழித்த அத்திவரதர் தரிசனம்

இலஞ்சம்-வணிகம்-அரசியல் செல்வாக்கு-ஊழல் ஆன்மீகத்தின் முகத்திரையைக் கிழித்த அத்திவரதர் தரிசனம்

அத்திவரதருக்கு திரண்ட பக்தர்கள் கூட்டம், தமிழ்நாட்டில் ஆன்மீக வளர்ச்சியைக் காட்டுவதாக பார்ப்பனர்கள், பா.ஜ.க.வினர் கூறுகிறார்கள். கூட்டம் கூடியது உண்மைதான். ஆனால், ஆன்மீகம் தன்னுடன் ஊழல்- வணிகம்- மோசடிகளையும் இணைத்துக் கொண்டு விட்டது என்பதும், கடவுள் மீது உண்மை யான பக்தியோ அதன் சக்தி தன்னைத் தண்டித்து விடும் என்ற அச்சமோ இல்லை என்பதையும் நாட்டுக்கு உணர்த்தியிருக்கிறது. அத்திவரதர் தரிசனம் வழியாக நடந்த மோசடி – ஊழல் – அரசியல் செல்வாக்கு – வணிகம் ஆகியவற்றை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது ‘ஜூவி’ கட்டுரை. கட்டுரையை படித்தாலே ஆன்மீகத்தின் முகத்திரை கிழிந்து விடும். “பெருமாளே… உனக்கு முன்னாடியே இவ்வளவு அநியாயமா?” அத்திவரதரை தரிசித்து விட்டு வந்த பெரும்பாலான பக்தர்களின் மனக் குமுறல், இதுவாகத்தான் இருந்தது. குறைந்தது ஐந்து மணி நேரமாவது நின்று, அடிபட்டு, மிதிபட்டு அத்திவரதரை நெருங்கும் பக்தர்கள், பெருமாளை தரிசிப்பதற்குள் நொந்து நூலாகி விட்டனர். அப்பாவி பக்தர்களின் பக்தியைப் பயன்படுத்தி, பல்வேறு தரப்புகளிலும்...

தமிழகத்தில் புதிய பள்ளிக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு

தமிழகத்தில் புதிய பள்ளிக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை, தமிழகத்தில் பள்ளிக்  கல்வித் துறைக்கான நிதியை ஒதுக் கீடு செய்து அனுமதி அளித்துள்ளது. அதில் புதிதாக பள்ளிகளை திறப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும், அனுமதி அளிக்காமலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.  மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் 2019-20ஆம் ஆண்டிற் கான திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்கான வாரிய கூட்டம் கடந்த மே மாதம் 16ஆம் தேதி  நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில்  தமிழகத்தின் சார்பில் பள்ளிக்  கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் கலந்துகொண்டுள்ளார். அப்போது, தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, ஆலோசனை வழங்குவதற்கு 14417 என்ற கட்டணமில்லா எண்  செயல்படுத்தப் படுவது, கல்வித்  தகவல் மேலாண்மை மூலம் மாண வர்கள், பள்ளிகள் குறித்த புள்ளி விவரங்கள் பெறப்பட்டு, 2019-20ஆம் கல்வியாண்டில் ‘ஸ்மார்ட் கார்டு’ மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளதை யும் எடுத்துரைத்துள்ளார். இலவச கட்டாயக் கல்வி உரிமைச்  சட்டத்தின் படி 33 சதவீத நடுநிலைப்  பள்ளிகளில் பாடத்திற்கான ஆசிரி யர்கள்...

விநாயகன் சிலை ஊர்வலங்களை காவல்துறையே நடத்துமாம்

விநாயகன் சிலை ஊர்வலங்களை காவல்துறையே நடத்துமாம்

தமிழ்நாட்டில் நடக்கும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, பா.ஜ.க.வின் பினாமி ஆட்சியாகவே செயல்பட்டு வருகிறது என்பதை அதன் ஒவ்வொரு செயல்பாடுகளும் உறுதிப்படுத்துகின்றன. விநாயகன் சிலை ஊர்வலங்கள் என்ற பெயரில் மத அரசியல் ஊர்வலங்களை நடத்தி வரும் இந்து அரசியல் அமைப்புகள் சட்டங்களை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு சிறுபான்மை மக்களுக்கு எதிரான மிரட்டல் ஊர்வலங்களாக விநாயகனைப் பயன்படுத்தி வந்தன. சட்டங்களைக் கையில் எடுத்துக் கொண்டு பொது மக்களுக்கும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறைக்கும் பெரும் சவாலாகவே இந்த அரசியல் ஊர்வலங்கள் மாறிய நிலையில் காவல்துறை சில கட்டுப்பாடுகளை விதித்தது. விநாயகன் சிலை ஊர்வலங்களின் சட்ட விரோத செயல்பாடுகளை முறைப்படுத்த சிலைகளை வைக்கும் ஒவ்வொருவரும் காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை, மாநகராட்சி, நகராட்சி அமைப்புகள் மின்சாரத் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிடமிருந்து தனித்தனியாக அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்று...

காஷ்மீரில் அமைதி திரும்பி விட்டதா?

காஷ்மீரில் அமைதி திரும்பி விட்டதா?

370ஆவது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீரில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறி வந்தது மோடி ஆட்சி. பார்ப்பன தேசிய ஊடகங்களும் மக்களின் எதிர்ப்பை மூடி மறைத்து வந்தன. பி.பி.சி. உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள், காஷ்மீரில் மக்களின் போராட்டத்தை ஒளி பரப்பின. அலைபேசி, இணைய தொடர்புகள் முடக்கப்பட்டன. பிறகு இயல்பு நிலை திரும்பி விட்டதாகக் கூறி தொடர்புகள் தரப்பட்ட நிலையில், மீண்டும் ஒரே நாளில் மீண்டும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விட்டன. இப்போது காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இராணுவம், துணை இராணுவப் பிரிவுகளைச் சார்ந்த 9.5 இலட்சம் படையினர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் குவிக்கப்பட்டுள்ளதாக ‘டெக்கான் கிரானிக்கல்’ ஏட்டின் ஸ்ரீநகர் செய்தியாளர் எழுதுகிறார். அங்குலம் அங்குலமாக இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என்றும் மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள் என்றும் கடைகள் மூடப்பட்டு விட்டன என்றும் அந்த செய்தியாளர் கூறுகிறார். ஏராளமான மருந்து மாத்திரைகளோடு 100 மருத்துவர்கள் இராணுவத்துக்கு மருத்துவ உதவி வழங்க விமானம் வழியாகக்...

பள்ளிகளில் தீண்டாமை ஜாதி வெறியைத் தூண்டும்  ஜாதிக் கயிறுகளுக்கு தடை போடுக!

பள்ளிகளில் தீண்டாமை ஜாதி வெறியைத் தூண்டும் ஜாதிக் கயிறுகளுக்கு தடை போடுக!

பள்ளி மாணவர்கள் அவரவர் ஜாதி அடையாளங்களைக் குறிக்கும் வண்ணத்துடன் கைகளில் கயிறு கட்டிக் கொள்ளும் பழக்கம் தமிழ்நாட்டில் பல பள்ளிகளில் இருந்து வருகிறது. குறிப்பாக பிற்படுத்தப்பட்ட ஜாதி மற்றும் பட்டியல் இனப் பிரிவு மாணவர்கள் இத்தகைய அடை யாளங்கள் வழியாகப் பள்ளிகளில் பாகுபாடுகளுடன் ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றனர். நெற்றியில் வைக்கப்படும் ‘விபூதி – குங்கும’த்திலும் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு அடையாளம் வரையறுக்கப் பட்டுள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் தலித், பிற்படுத்தப்பட்ட ஜாதி மாணவர்களுக்கிடையே மோதல்கள் நடந்துள்ளன. கொலைகளும் நடந்துள்ளன. கடந்த 31ஆம் தேதி தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இந்த ஜாதிக் கயிறு, ஜாதிப் பொட்டு, ஜாதி  மோதிரங்களை அணியும் வழக்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார். பள்ளிக் கல்வித் துறை  அமைச்சர் செங்கோட்டையன், இந்தச் சுற்றறிக்கை பற்றி தனக்கு ஏதும் தெரியாது என்று கூறினார். இப்படி ஒரு சுற்றறிக்கை ஆதிதிராவிடர்...

புதுச்சேரி திவிக தலைவர் தோழர் லோகு அய்யப்பன் உள்ளிட்ட 91 பேர் மீதான வழக்கு ரத்து. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

புதுச்சேரி திவிக தலைவர் தோழர் லோகு அய்யப்பன் உள்ளிட்ட 91 பேர் மீதான வழக்கு ரத்து. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

லோகுஅய்யப்பன் உள்ளிட்ட 91 பேர் மீதான வழக்கு ரத்து. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் பாண்டிசேரி திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு அய்யப்பன் உ ள்ளிட்ட 91 பேர் மீது தொடரப்பட்ட கொலை முயற்சி வழக்கு, போலீசாரை தாக்கியதான வழக்கினை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த வழக்கு இன்று 22.08.2019 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் வாதாட மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி மற்றும் வழக்கறிஞர்கள் வை. இளங்கோவன், ராஜவேலாயுதம் ஆகியோர் ஆஜராயினர். வழக்கறிஞர் துரைசாமியின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவர்கள் லோகு அய்யப்பன் உள்ளிட்ட 92 பேர் மீதான வழக்கினை ரத்து செய்து உத்திரவிட்டார். அப்போது நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

பெரியார் பெருந்தொண்டர் ஐயா வைத்திலிங்கம் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி

பெரியார் பெருந்தொண்டர் ஐயா வைத்திலிங்கம் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி

திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொறுப்பாளர் ஐயா வைத்திலிங்கம் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி ———– பெரியார் பெருந்தொண்டர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொறுப்பாளர் ஐயா ப.அ. வைத்திலிங்கம் அவர்களின் உடலுக்கு திராவிடர் விடுதலை கழகத்தின் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித திருவேங்கடம், ஆயர் த ஜேம்ஸ், மெய்ச்சுடர் நா. வெங்கடேசன், அ.கோவேந்தன், தா.கலைச்செல்வன் உள்ளிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

ஐயா ப அ வைத்தியலிங்கம் அவர்களுக்கு வீரவணக்கம்

ஐயா ப அ வைத்தியலிங்கம் அவர்களுக்கு வீரவணக்கம்

ஐயா ப அ வைத்தியலிங்கம் அவர்களுக்கு வீரவணக்கம் ———– பட்டுக்கோட்டை செங்கப்படுத்தான்காடு  கிராமத்தில் பிறந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நண்பரும் பேராவூரணி அருகே அழகியநாயகிபுரம் கிராமத்தில் வசித்து வரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொறுப்பாளருமான நூற்றி ஐந்து வயது கடந்த பெரியவர் வைத்தியலிங்கம் அவர்கள் அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். சிறுவயது முதலே பெரியார் கொள்கைகளில் ஈர்க்கப்பட்ட இவர் கடைசிவரை பெரியார் கொள்கைகளில் முழு ஈடுபாடும் சமூகத் தொண்டும் செய்து வாழ்ந்து வந்தார். மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் குடும்பத்தோடு மிகுந்த நட்போடு இருந்த ஐயா வைத்திலிங்கம் அவர்களின் குடும்பம் பின்னர் பேராவூரணி அருகே அழகியநாயகிபுரம் கிராமத்தில் குடியேறியது. சிங்கப்பூர் நாட்டில் பணியாற்றி தனது கடும் உழைப்பால் பெற்ற பெரும் செல்வத்தைக் கொண்டு அழகியநாயகிபுரம் அரசு மருத்துவமனைக்கு நிலம் வாங்கிக் கொடுத்தார் ஐயா வைத்திலிங்கம். நிறைந்த உழைப்பும், கடன் வாங்காமல் வாழும் பண்பும், பசித்தபின் அளவோடு உண்ணும் பழக்கமும் அய்யாவின்...

விநாயகர் சதுர்த்தி  – கழகத் தலைவர் அறிக்கை !

விநாயகர் சதுர்த்தி – கழகத் தலைவர் அறிக்கை !

விநாயகர் சதுர்த்தி – கழகத் தலைவர் அறிக்கை !. விநாயகர் சதுர்த்தியின் போது மீறப்படும் உச்சநீதி மன்ற உத்தரவுகள்,அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ஆதாரங்களோடு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்காத காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டி கழகத் தோழர்கள் செய்ய வேண்டியவை குறித்து கழகத் தலைவர் அறிக்கை ! ________________________________ அன்பார்ந்த தோழர்களே! கடந்த சில ஆண்டுகளாக – பல விதிமீறல்களை, அத்துமீறல்களை செய்து சர்ச்சைகளை,கலவரங்களை உருவாக்கவே உருவாக்கப்பட்டுள்ள பிள்ளையார் சதுர்த்தி எதிர்வரும் செப்டம்பர் இரண்டாம் நாள் வருகிறது. ஏறத்தாழ செப்டம்பர் 6ஆம் நாள் முதல் பிள்ளையார் ஊர்வலங்கள் தொடங்கிவிடும். இது தொடர்பாகவே சில செய்திகளை, அதற்கென நாம் எடுக்க வேண்டிய முன் நடவடிக்கைகள் குறித்து நினைவூட்டவே இதை எழுதுகிறோம். 1) பிள்ளையார் சிலைகளை பிளாஸ்டர் ஆப் பாரிஸ், சுட்ட களிமண் ஆகியவற்றால் செய்யக்கூடாது; இரசாயன வண்ணம் பூச கூடாது என்பதும், பச்சைக் களிமண்ணால் மட்டுமே...

மண்ணிண் மைந்தர்களின் வேலை வாய்ப்புகளை பறிக்காதே சென்னையில் சுவர் விளம்பரங்கள்

மண்ணிண் மைந்தர்களின் வேலை வாய்ப்புகளை பறிக்காதே சென்னையில் சுவர் விளம்பரங்கள்

மண்ணிண் மைந்தர்களின் வேலை வாய்ப்புகளை பறிக்காதே என்கிற முழக்கத்தோடு திராவிடர் விடுதலை கழகம் ஆறுமுனைகளில் இருந்து தொடங்கி தமிழகம் முழுவதும் பரப்புரைப் பயணம் மேற்கொண்டு பள்ளிபாளையத்தில் நிறைவு விழா மாநாடு நடத்துகிறது. அதற்கான சுவர் விளம்பரங்கள் சென்னையில் நகரமெங்கும் செய்யப்பட்டன. தொடர்புக்கு : 7299230363 / 9710301452.

புதிய தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து இரண்டாம் கட்ட துண்டறிக்கை

புதிய தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து இரண்டாம் கட்ட துண்டறிக்கை

புதிய தேசிய கல்வி கொள்கையின் ஆபத்துகளை விளக்கி இரண்டாம் கட்டமாக 3,000 துண்டறிக்கைகளை கல்லூரிகளில் வழங்கி சென்னை மாவட்ட தோழர்கள் பிரச்சாரம் செய்தனர். இரண்டாம் கட்ட துண்டறிக்கை பிரச்சாரத்தின் முதல் நாளான 13/08/2019 2 கல்லூரிகளில் 1000 துண்டறிக்கைகளை மாணவர்களிடையே வழங்கி சென்னை மாவட்ட கழக தோழர்கள் பிரச்சாரம் செய்தனர். புதிய தேசிய கல்வி கொள்கையை விளக்கி இரண்டாம் கட்ட பிரச்சாரத்தின் இரண்டாம் நாளான 14/08/2019  நியூ கல்லூரி மற்றும் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிகளில் 1000 துண்டறிக்கைகளை வழங்கி கழக தோழர்கள் பிரச்சாரம் செய்தனர். புதிய தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து இரண்டாம் கட்ட துண்டறிக்கை பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று 16/08/2019 கழக தோழர்கள் 1000 துண்டறிக்கையை பச்சையப்பன் கல்லூரி மற்றும் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரிகளில் வழங்கி கழக தோழர்கள் பிரச்சாரம் செய்தனர். தொடர்புக்கு : 7299297825 / 9962190066.

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை

மண்ணின் மைந்தர்களின்  வேலை வாய்ப்பு உரிமையைப் பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரில் குலக்கல்வியை திணிக்காதே! தமிழ் நாட்டை வட நாடாக்காதே! நாம் மண்ணின் மைந்தர்கள் தலைமுறை தலைமுறையாக இந்த மண்ணில் பிறந்தோம், வாழ்கிறோம், ஆனாலும், பிற வட மாநிலங்களைவிட – நாம் வேறுபட்டுள்ளோம். எவ்வளவு ஒடுக்கப்பட்ட ஜாதியானாலும் சரி; ஏழ்மையும், வறுமையும் நம்மை வாட்டினாலும் சரி; எப்பாடுபட்டாவது – நமது மகளை,  மகனை  படிக்க  வைக்க வேண்டும்; உயர் கல்வியைத் தர வேண்டும் என்ற கொள்கையே நமது பண்பாடு! பெரியார் இட ஒதுக்கீட்டுக்காக 1919 முதலே போராடினார். உரிமையைப் பெற்று தந்தார். காமராசர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்- அந்த  உரிமைகளை படிப்படியாக வளர்த்தார்கள். அம்பேத்கர் சட்டத்தின் வழியாக நமக்கான இட ஒதுக்கீட்டு உரிமைகளை உறுதிப்படுத்தினார். வி.பி.சிங் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தந்தார். போராடிப் பெற்ற சமூக நீதி உரிமைகளை தற்போது பறிகொடுத்து வருகிறோம் . இப்போது...

பார்ப்பனப் பேராசிரியரை கைது செய்: மதுரையில் காவல்துறையினரிடம் கழகம் மனு

பார்ப்பனப் பேராசிரியரை கைது செய்: மதுரையில் காவல்துறையினரிடம் கழகம் மனு

மனிதர்களை நாயோடு ஒப்பிட்டு – மனிதர்களில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் உண்டு என்று அரசியலமைப்பு 14-க்கு எதிராக பேசிய  தஞ்சை சாஸ்திரா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் வேங்கட கிருஷ்ணனை கைது செய்யக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 3.8.2019 அன்று மாநகர  ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. உடன் தமிழ் புலிகள், மே 17, வனவேங்கைகள் பேரவை, அகில இந்திய மஜ்ஜித் கட்சித் தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 15082019 இதழ்

மதுரையில் கல்வி உரிமை மீட்பு தெருமுனைக் கூட்டம்

மதுரையில் கல்வி உரிமை மீட்பு தெருமுனைக் கூட்டம்

மதுரை திவிக சார்பில் காமராசர் பிறந்த நாளையொட்டி புதூர் பேருந்து நிலையத்தில் 9.8.19 அன்று மாலை “கல்வி உரிமை மீட்பு தெருமுனைக் கூட்டம்” மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி தலைமையில் நடைபெற்றது. பேராசிரியர் முரளி (பி.யு.சி.எல்.), பேரறிவாளன் (பொதுச் செயலாளர், தமிழ் புலிகள் கட்சி), கபீர்நகர் கார்த்தீ, (துணைப் பொதுச் செயலாளர், ஆதித்தமிழர் பேரவை), மெய்யப்பன் (மே 17), குமரன், (புரட்சிகர இளைஞர் முன்னணி), பரிதி (தமிழ் தமிழர் இயக்கம்), ஆரோக்கிய மேரி, வழக்கறிஞர் கிருஷ்ணன் உள்ளிட்ட தோழமை அமைப்பு தோழர்கள் சிறப்புரையாற்றினர்.  பேருந்து நிலையத்தில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் பங்கேற்று தானாக முன் வந்து நிதியளித்தனர். பெரியார் முழக்கம் 15082019 இதழ்

பரப்புரைப் பயணத்திற்கான புதிய வெளியீடுகள்

பரப்புரைப் பயணத்திற்கான புதிய வெளியீடுகள்

1)            பள்ளிகளிலிருந்து குழந்தைகளை விரட்டும் புதிய கல்விக் கொள்கை 2)            தமிழர்கள் வேலை வாய்ப்பைப் பறிக்கும் – வடநாட்டுக்காரர்கள் 3)            பெரியார் சந்தித்த அடக்குமுறைகள் – போராட்ட வரலாறுகளின் ஒரு தொகுப்பு 4)            10 சதவீத இடஒதுக்கீடு: சமூக நீதிக்கு சவக் குழி 5)            ஆர்.எஸ்.எஸ். கேள்விகளுக்கு அதிரடி பதில். 6)            கருஞ்சட்டைக் கலைஞர் 7)            ‘வீர’ சாவர்க்கர் யார்?   பெரியார் முழக்கம் 15082019 இதழ்

நிர்மல்குமார் பிணையில் விடுதலை

நிர்மல்குமார் பிணையில் விடுதலை

மாட்டிறைச்சி குறித்து முகநூல் பதிவிட்டதற்காக இந்து முன்னணியினர் தந்த புகார் அடிப்படையில் கோவை மாநகர கழகச் செயலாளர் நிர்மல் குமார், ஜூலை 27இல் செய்து செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். கைதிகளுக்கான உயர் பாதுகாப்புப் பிரிவு என்ற கொட்டடியில் 24 மணி நேரமும் அடைத்து வைக்கப்பட்டதோடு உணவு பெறும் நேரத்துக்கு மட்டும் வெளியே திறந்து விடப்பட்டார். பெரியார், அம்பேத்கர் நூல்களை உள்ளே படிப்பதற்குக் கொடுத்தபோது, ‘இது ஜாதித் தலைவர்கள் நூல்’ என்று சிறை நிர்வாகம் அனுமதிக்க மறுத்துவிட்டது. 10 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு ஆகஸ்டு 7ஆம் தேதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நிர்மல் கைதானவுடன் வழக்கறிஞர்கள் மலரவன், வெண்மணி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலரும் ஆர்வத்துடன் முன் வந்து சட்ட உதவிகளை செய்தனர். பி.யு.சி.எஸ். அமைப்பைச் சார்ந்த வழக்கறிஞர் பால முருகன் பிணை கோரி நீதிமன்றத்தில் வாதிட்டார். பெரியார் முழக்கம் 15082019 இதழ்