எழுச்சி நடைபோட்டது பள்ளிபாளையம் கழக மாநாடு
‘சமூக நீதியைப் பறிக்காதே; புதிய கல்வித் திட்டத்தைத் திணிக்காதே’ என்ற முழக்கங்களை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மண்ணின் மைந்தர்களுக்கான பரப்புரைப் பயணக் குழுக்கள் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஒன்று சேர்ந்தன. சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, திருப்பூர், கோபி, மேட்டூரிலிருந்து கழக செயல்பாட் டாளர்கள், பெண்களும் ஆண்களும் மக்களைச் சந்தித்து தமிழகத்தைச் சூழ்ந்து நிற்கும் வேலை, கல்வி உரிமைகள் பறி போகும் ஆபத்துகளை எடுத்து விளக்கினர். கலை நிகழ்வுகள், மேடைப் பேச்சுகள், துண்டறிக்கைகள், நூல்கள் வழியாக மக்களிடம் கருத்துகள் கொண்டு போய் சேர்க்கப் பட்டன. கட்சிகளைக் கடந்து கிராமங் களிலும் நகரங்களிலும் மக்கள் பேராதரவுடன் இந்தப் பரப்புரைப் பயணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. செப். 20ஆம் தேதிபிற்பகல் பயணக் குழுவினர் பள்ளிப்பாளையம் நோக்கி வரத் தொடங்கினர். நேரு திடலில் நிறைவு விழா மாநாடு மாலை 6 மணியளவில் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. மேட்டூர் டி.கே.ஆர்....
