வாசகர்களிடமிருந்து…

பிரேம் நாத் பசாஸ் எழுதிய இந்திய வரலாற்றில் பகவத் கீதை நூலிலிருந்து ‘நிமிர்வோம்’ வெளியிட்ட செய்திகள் மிகவும் சிறப்பானவை. தோழர்கள் இந்த வரலாற்றுக் குறிப்புகளைப் படித்து மேடைகளில் பேச வேண்டும். தொடர்ச்சியான வரலாற்றோடு இத்தகைய பார்ப்பனக் கொடுமைகளை விளக்கும்போதுதான் அது மக்களை சென்றடையும்.

– இளம் பரிதி, திருச்செங்கோடு

‘நிமிர்வோம்’ தலையங்கம் சிறப்பாக இருந்தது.

“இந்தியாவை ஒற்றை ஆட்சி அதிகாரக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பது அவர்களின் முன்னுரிமைத் திட்டம். அந்த நோக்கத்தோடு மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அதிகாரமற்றவைகளாக்கப்படுகின்றன. அதற்கான சட்டங்கள் வேகவேகமாக அதிரடியாக வந்து கொண்டிருக்கின்றன.

இந்த ஆபத்துகளை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? மாநிலங்களின் முழுமையான உரிமைக்கான  சுயஆட்சி உரிமைகளை வலியுறுத்தி, அதை மக்கள் இயக்கமாக்க வேண்டும். தமிழ் நாட்டை வடவர் மயமாக்கி சமஸ்கிருதம், இந்தி, பார்ப்பனிய வேத கலாச்சார மரபுகளை திணிக்கிறார்கள். இவற்றிற்கு எதிரான இயக்கத்தை மாநில சுயாட்சி முழக்கங்களோடு இணைக்க வேண்டும். தமிழ்நாடு மட்டுமே இதற்காக வழிகாட்டும் மாநிலமாக இப்போது இருக்கிறது!”

– என்று மிகச் சரியாக தலையங்கம் சுட்டிக் காட்டியிருக்கிறது.

– இலக்கியா, சென்னை-82

நிமிர்வோம் செப்டம்பர் 2019 மாத இதழ்

You may also like...