மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டம் 31012017
31012017 காலை 11 மணிக்கு மதுரை ரயில் நிலையம் எதிரில் தங்கை நந்தினிக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்.. அனைவரும் வருக திராவிடர் விடுதலைக் கழகம் மதுரை.9600408641
31012017 காலை 11 மணிக்கு மதுரை ரயில் நிலையம் எதிரில் தங்கை நந்தினிக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்.. அனைவரும் வருக திராவிடர் விடுதலைக் கழகம் மதுரை.9600408641
மாற்று பாலினத்தோர் உரிமை பாதுகாப்பு மசோதா 2016 யை எதிர்த்து திருநங்கையர்கள் சமிதி சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர்மணி, விடுதலை சிறுத்தைக கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட தோழமை அமைப்புகளும் திருநங்கை தோழர்களும் பெருவாரியாக கலந்து கொண்டனர்.
மதுரையில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் ! கழக தலைவர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்! தமிழகத்தில் சமூக செயல்பாட்டாளர் மீது திட்டமிட்டு பதிவுசெய்யப்படும் பொய் வழக்குகள், தாக்குதல்கள் ஆகியவற்றை தடுத்து நிறுத்தக்கோரியும், மனித உரிமை செயற்பாட்டாளர் தோழர் ஹென்றி டிபேன் அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாள் : 01.09.2016 வியாழக்கிழமை. இடம் : ஒபுளா படித்துறை,மதுரை. நேரம் : காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தோழமை அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். உண்மையை பேசுவது போலீசுக்கு பிடிக்காது…! குமுறும் ஹென்றி டிபேன் விகடன் செய்தி படிக்க இங்கே சொடுக்கவும்
பொதுஇட ஆக்கிரமிப்பு கோயில்களை அகற்ற வலியுறுத்தும் ஆர்ப்பாட்டத்தின் துண்டறிக்கை ஆர்ப்பாட்டம் 27042016 இடம் அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் முன்பு
” ஜாதிய வறட்டு வன்மமே ஆணவ படுகொலைகளுக்கு அடிப்படை காரணம் ” பேராவூரணியில் நடைபெற்ற திராவிடர் விடுதலைக்கழக ஆர்பாட்டத்தில் தோழர் எவிடென்ஸ் கதிர் பேச்சு பேராவூரணி ஜாதி மறுப்பு திருமணம்செய்த சங்கர் உடுமலைப்பேட்டையில் ஜாதிய வெறியர்களால் ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் பேராவூரணி அண்ணா சிலை அருகில் திராவிடர் விடுதலைக் கழக தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமையில் மார்ச் 25ம் தேதி மாலை 5 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர் தோழர் எவிடென்ஸ் கதிர் பங்கேற்று கன்டன உரையாற்றினார், அவர் தனது உரையில், ”ஜாதி மறுப்பு திருமணம் செய்த தோழர் சங்கர் தனக்கும் தன் மனைவியாகிய கௌசல்யாவிற்கும் கௌசல்யா உறவினர்களால் பலமுறை கொலை மிரட்டல் விடப்பட்டபோது இதுகுறித்து மடத்துக்குளம், குமரலிங்கபுரம் ஆகிய காவல் நிலையங்களில் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு, புகார் மனு அளித்திருந்தார். ஆனால் புகாரை பெற்றுககொண்ட மேற்கண்ட...
30.11.2013 சனிக் கிழமை மாலை 3 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட கழகத் தோழர்கள் மீது போடப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைக் கண்டித்தும், கழகத் தலைவரை எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யக் கோரியும் சங்கராபுரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர் ச. பெரியார் வெங்கட் தலைமை தாங்கினார். செ. நாவாப்பிள்ளை, கா. இராமர், ந. அய்யனார் ஆகியோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீது போடப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை கண்டித்தும் எந்தவித நிபந்தனையு மின்றி கழகத் தலைவரை விடுதலைச் செய்ய வேண்டும் என்றும், சங்கராபுரம் நகரத்தில் ஜாதிப் பெயர்களை தூக்கிப் பிடிக்கும் வணிகம் மற்றும் தொழிற் சாலைகள் உடனடியாக தங்கள் கடைகளிலுள்ள ஜாதிப் பெயரை அகற்றி, சமூக மாற்றத்திற்கு வழி வகுக்க வேண்டும் என்றும், ஜாதி...
20.03.2016 காலை 10 மணியளவில் வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், உடுமலை சங்கர் அவர்களின் ஆணவப் படுகொலையை கண்டித்து நெமிலியில் கழக பிரச்சார செயலாளர் தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர்.இரா.பா.சிவா (திவிக) தோழர்.திலீபன் (திவிக) தோழர்.விழுப்புரம் அய்யனார் (திவிக) தோழர்.சங்கர் (திராவிடர் கழகம்) மற்றும் தோழமை அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் ! வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ! 29.02.2016 அன்று மாலை மாலை 4 மணியளவில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் JNU மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற கோரிஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கழக பரப்புரை செயலாளர் தோழர் பால் பிரபாகரன் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இந்நிகழ்வில் கழக இரா.ப.சிவா. மா.பெ.பொ.கட்சியின் தோழர் சீனி.பழனி, மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் தோழர் சுந்தர், அம்பேத்கர் தொழிலாளர் இயக்கத்தின் தோழர் மேயர் சுந்தர், கழக தோழர்கள் பார்த்தீபன் நவீன் ஆகியோர் கலந்து கொண்டனர். கழக தோழர் கோடீஸ்வரன் நன்றியுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழமை அமைப்பு தோழர்கள் உள்பட 40 தோழர்கள் கலந்துகொண்டனர் பெரியார் முழக்கம் 10032016 இதழ்
அய்தராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் பயின்ற முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ரோகித் வெமுலா மரணத்திற்கு நீதி விசாரணைகேட்டும், நாகை மாவட்டம் வழுவூர் திருநாள் கொண்டச்சேரி தலித் முதியவரின் உடலை பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டும், நீதிமன்றத்தை அவமதித்த நாகை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும். விழுப்புரம் தனியார் கல்லூரியில் மரணமடைந்த மூன்று மாணவிகளுக்கு நீதி கேட்டும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் பேராவூரணி அண்ணா சிலை அருகில் பிப்ரவரி 2ம் தேதி மாலை 5 மணியளவில் திராவிடர் விடுதலைக்கழக தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் தின் நோக்கங்களை விளக்கி திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, தஞ்சை மாவட்ட முன்னாள் அமைப்பாளர் பாரி, திராவிடர் விடுதலைக் கழக பாடகர் பள்ளத்தூர் நாவலரசன், தமிழக மக்கள் புரட்சிக்கழக மாவட்ட செயலாளர் வி.சி.முருகையன், மெய்சுடர் இதழ் ஆசிரியர் வெங்கடேசன், தமிழக மக்கள் புரட்சிக்...
தோழர் திலீபன் மகேந்திரனை தாக்கிய புளியந்தோப்பு காவல்துறையை கண்டித்து அனைத்து ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் 13022016 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
பிற்படுத்தப்பட்டோருக்கான (OBC) 27% இடஒதுக்கீடு 23 ஆண்டுகள் கடந்த பின்பும் 12% மட்டுமே நிரப்ப்ப்பட்டுள்ளது. இதை முழுமையாகவும் முறையாகவும் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நிரப்பக்கோரி 13.2.2016 அன்று காலை சென்னை வள்ளுவர் கோட்ட்த்தில் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட(OBC) ஊழியர்கள் நலச்சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மத்திய அரசை கண்டித்து தொடர் முழக்க கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த பேரமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். பேராசிரியர் டாக்டர் முரளிதரன் விரிவாக இடஒதுக்கீட்டிலும், அய்.அய்.டி போன்ற உயர் கல்வி நிறுவன்ங்களில்லும் நடைபெறும் மோசடிகளை தனது உரையில் தோலுரித்து காட்டினார். அடுத்து சங்கர் IAS அகாடமியின் தலைவர் திரு.சங்கர் அவர்கள் சிவில் சர்வீல் தேர்வுகளில் எப்படி முறைகேடுகளை இவ்வரசுகள் மேற்கொள்கின்றன இதனால் உயர் சாதியினர் எப்படி பலன் அடைகிறார்கள் என்பதை சுருக்கமாக விளக்கினார். நிறைவாக கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தமது கண்டன உரையில் இடஒதுக்கீட்டை...
அய்தராபாத் பல்கலை தலித் ஆராய்ச்சி மாணவர் மரணத்துக்கு நீதி கேட்டு கழகம் பல்வேறு ஊர்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது. தூத்துக்குடியில் – பார்ப்பன சூழ்ச்சியால் மரணமடைந்த ‘ரோஹித் வெமுலா’வின் மரணத்திற்கு நீதி கேட்டும், மத்திய அரசின் கல்வி வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் விளிம்பு நிலை மக்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும், தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பில் 01.02.2016 அன்று மாலை 5 மணியளவில் சிதம்பர நகர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் வே.பால்ராசு, மாவட்ட துணைச் செயலாளர் ச.கா. பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அம்புரோசு தலைமை உரையைத் தொடர்ந்து, ம.தி.மு.க.வின் மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன் கண்டன உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து ளுனுஞஐயின் தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் மைதீன் கனி, ஆதித் தமிழர் கட்சியின் சு.க.சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி...
தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் ! பார்ப்பன சூழ்ச்சியால் மரணமடைந்த ‘ரோஹித் வெமுலா’வின் மரணத்திற்கு நீதி கேட்டும்,மத்திய அரசின் கல்வி வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் விளிம்புநிலை மக்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும், தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பில் 01.02.2016 அன்று மாலை 5 மணியளவில் சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பொறிஞர்.சி. அம்புரோசு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் வே.பால்ராசு, மாவட்ட துணைச் செயலாளர் ச.கா.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அம்புரோசு அவர்களின் தலைமை உரையைத் தொடர்ந்து, மதிமுகவின் மாநில மீணவரனி செயலாளர் தோழர்.நக்கீரன் கண்டன உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து SDPIயின் தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் மைதீன்கனி, ஆதித் தமிழர் கட்சியின் சு.க.சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் கா.மை.அகமது இக்பால், மனித நேய மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஆசாத் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இவர்களைத்...
பழனியில் ஆர்ப்பாட்டம் ! பழனி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அய்தராபாத் மத்திய பல்கலைக் கழக மாணவர் “ரோகித் வெமுலா” மரணத்துக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் (01-02-2016) பழனி தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் திருமூர்த்தி தலைமை தாங்கினார். தோழர்கள் ஆனந்த்,கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர்கள் திருச்செல்வம்,காளிமுத்து,சிவமணி கண்டன உரையாற்றினர். இறுதியில் தோழர் குட்டி நன்றியுரை ஆற்றினார். பார்ப்பன “துரோணாச்சாரி”களின் வாரிசுகளா, உயர்கல்வி நிறுவனங்கள் ?”ஏகலைவன்”களாக இனியும் இருக்கமாட்டோம் ! என முழக்கங்கள் எழுப்பட்டன.
வேலூரில் ஆர்ப்பாட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஹைதராபாத் பல்கலைக் கழக மாணவன் ரோகித் வெமுலா மரணத்திற்கு நீதி கேட்டு,அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் 01.02.2016 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் வேலூரில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தி வி க மாவட்ட அமைப்பாளர் இரா.ப.சிவா, திலிபன்.வி சி க, துரை.ஜெய்சங்கர்,தா ஒ வி இ, செவ்வேள். தி வி க நரேன். சந்தோஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
திருப்பூரில் ஆர்ப்பாட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஹைதராபாத் பல்கலைக் கழக மாணவன் ரோகித் வெமுலா மரணத்திற்கு நீதி கேட்டு,அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் 01.02.2016 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் திருப்பூர் பெரியார் சிலை அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழக மாநில பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு முன்னிலை வகித்தார். மாநகர செயலாளர் தோழர் நீதிராசன்,மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் ஆசிரியர் சிவகாமி அவர்கள்,தோழர் அகிலன்,கவிஞர் கனல்மதி,தனபால்,பரிமளராசன் உள்ளிட்ட கழக தோழர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் தோழர் பிரசாந்த அவர்கள் நன்றியுரையாற்றினார். பார்ப்பன ‘துரோணாச்சாரி’களின் வாரிசுகளா, உயர்கல்வி நிறுவனங்கள்? ‘ஏகலைவன்’களாக இனியும் இருக்கமாட்டோம்! ‘ரோகித் வெமுலா’ மரணத்திற்கு நீதி கேட்போம்! என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் ! மன்னார்குடியில் 01.02.2016 அன்று மாலை கண்டன ஆர்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மன்னார்குடி பெரியார் சிலை எதிரில் நடைபெற்றது. ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பயின்ற முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ரோகித் வெமுலா மரணத்திற்கு நீதி கேட்டும், தற்கொலைக்கு காரணமான ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் அப்பாராவ், மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிதி இராணி, மத்திய இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய அமைச்சர் இருவரையும், பதவி நீக்கம் செய்யகோரியும், திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் மன்னார்குடி பெரியார் சிலை எதிரில் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சீனிஜெகபர் சாதிக், எஸ்டிபிஐ கட்சி தொகுதி தலைவர் முகமது அலி,...
கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் ! கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ஹைதராபாத் பல்கலை கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலைக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் 01.02.2016, அன்று மாலை,5.00மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் இராஜேஷ் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் நீலகிரி குமார், மாவட்ட துணை செயலாளர் வாஞ்சிநாதன், மாவட்ட துணை தலைவர் நீலகிரி கிருஷ்ணன், முன்னால் மாவட்ட அமைப்பாளர் பழனி, நிர்வாகிகள் கிரி,எல்லப்பன் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பிரேம்குமார் நன்றி கூறினார்
நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் ! “ரோஹித் வெமுலா” மரணத்திற்கு நீதிகேட்டு 01.02.2016, அன்று மாலை,5.00மணிக்கு நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பில் பள்ளிபாளையத்தில் நடைபெற்றது. தலைமை: தோழர்.முத்துப்பாண்டி மாவட்ட பொருளாளர்.திவிக. முன்னிலை: தோழர்.மா.வைரவேல். மாவட்ட அமைப்பாளர்.திவிக. தோழர்.மு.சரவணன். மாவட்ட செயலாளர். திவிக. கண்டன உரை: தோழர்.மு.சாமிநாதன். மாவட்ட தலைவர். திவிக. தோழர்.இரா.செல்வகுமார். மாநில கொ.ப.செயலாளர். ஆதித்தமிழர் பேரவை. தோழர்.ஆ.ஆதவன். மாநில துணைசெயலாளர். தமிழர் படை.(தவாக) தோழர்.வே.காமராஜ். மேற்கு மாவட்ட செயலாளர். விடுதலை சிறுத்தைகள் கட்சி. தோழர்.செந்தமிழன். மாவட்ட செயலாளர். தமிழ்புலிகள். தோழர்.செம்மணி. தொகுதி செயலாளர். விடுதலை சிறுத்தைகள் கட்சி. தோழர்.பெரியண்ணன். மல்லை ஒன்றிய தலைவர்.திவிக. தோழர்.சுடர்வளவன். விடுதலை சிறுத்தைகள் கட்சி. தோழர்.இரா.பிரகாசு. இளைஞரணி செயலாளர்.திவிக. தோழர்.மாணிக்கம். நகர செயலாளர். புரட்சிகர இளைஞர் முண்ணனி. தோழர்.சி.சிவகுமார். திராவிடர் விடுதலைக் கழகம். நன்றியுரை: தோழர். மு.சரவணன். நகர செயலாளர். மாவட்டம் முழுவதுமாக இருந்து 50க்கும் மேற்பட்ட கழகத்தோழர்கள் கலந்துக்கொண்டனர். செய்தி : மா.வைரவேல். மாவட்ட...
சென்னையில் ஆர்ப்பாட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகம் நேற்று 01.02.2016 திங்கள் மாலை 3.00 மணியளவில் ரோகித் வெமுலாவின் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் . ஒத்த கருத்துள்ள அமைப்புகளோடு இணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் திவிக வழக்கறிஞர்கள் அருண்,திருமூர்த்தி, ஊடகவியலாளர் தோழர் கவின் மலர், வாலாசா வல்லவன் மா.பெ.பொ.க, குமார் த.பெ.தி.க., தமிழ்நாடு தலித் பெண்கள் இயக்கம் அரக்கோணம், வே.மதிமாறன் எழுத்தாளர், SDPI தலைவர் தேஹலான் பாகவி, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தோழர் ம.வேழவேந்தன் நன்றி கூற மாலை ஆறரை மணியளவில் ஆர்ப்பாட்டம் முடிவடைந்தது.
ரோகித் வெமுலாவின் மரணத்திற்கு நீதி கேட்டு திங்களன்று 01022016 மாலை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சேலம் கிழக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகம் இணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக கிழக்கு மாவட்டத் தலைவர் தோழர் க. சக்திவேல் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தோழர் இரா, டேவிட். மாவட்ட பொருளாளர் தோழர் ஏற்காடு பெருமாள் மற்றும் தமிழ்நாடு மாணவர் கழக பா. முருகன் ஆகியோர் முன்னிலை வகிக்க, இக்கண்டன ஆர்பாட்டத்தில் ஒத்த கருத்துடைய தோழமை அமைப்புகளான மதிமுக வின் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் அ. ஆனந்தராஜ, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் தலைவர் பூமொழி, தபெதிக வின் மாவட்டச் செயலாளர் கு.தங்கராசு, ஆதி தமிழர் பேரவையின் மாவட்டச் செயலாளர் க. இராதாகிருட்டிணன். CPI ன் மாவாட்டச் செயலாளர், A. மோகன். விடுதலை சிறுத்தைகளின் மாநில தொண்டரணி துணைச் செயலாளர்...
பார்ப்பன ‘துரோணாச்சாரி’களின் வாரிசுகளா, உயர்கல்வி நிறுவனங்கள்? ‘ஏகலைவன்’களாக இனியும் இருக்க மாட்டோம்! ‘ரோகித் வெமுலா’ மரணத்துக்கு நீதி கேட்போம்! கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் 24.01.2016 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 7 சதவீதத்தையும் தாண்டாத இடஒதுக்கீடு மத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட் டோருக்கான 27 சதவிகித இடஒதுக்கீடு ஆணை அமுலுக்கு வந்து 23 ஆண்டுகள் –கடந்த பிறகும் குரூப் ஏ, குரூப் பி போன்ற முதல்நிலைப் பதவிகளில் 7 சதவிகிதத்தைக் கூட எட்டவில்லை என்று அண்மை யில் வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியூட்டு கின்றன. அரசு உயர் அதிகாரப் பதவிகளை கைப்பற்றிக் கொண்டிருக்கும் – பார்ப்பன – உயர் ஜாதி அதிகார வர்க்கம் – அவற்றோடு இணைந்து நிற்கும் நடுவண் ஆட்சிகள் – பார்ப்பன உயர்ஜாதி கட்டுப் பாட்டில் உள்ள உச்சநீதிமன்றம் ஆகியவை சமூக நீதிக்கான...
பார்ப்பன ‘துரோணாச்சாரி’களின் வாரிசுகளா, உயர்கல்வி நிறுவனங்கள்? ‘ஏகலைவன்’களாக இனியும் இருக்க மாட்டோம்! ‘ரோகித் வெமுலா’ மரணத்துக்கு நீதி கேட்போம்! ‘ஏகலைவன்’ என்ற ஆதிவாசிக்கு ‘துரோணாச்சாரி’ என்ற பார்ப்பன குரு வில்வித்தை கற்றுத் தர மறுத்தான். ஏகலைவனோ, துரோணாச்சாரி உருவத்தை செய்து, அதையே குருவாகக் கருதி வித்தையைக் கற்றுத் தேறினான். உண்மை அறிந்த துரோணாச்சாரி, “கீழ் ஜாதிப் பயலே; வில்வித்தை கற்கும் உரிமை உன் குலத்துக்குக் கிடையாதுடா! குருதட்சணையாக உன் கட்டை விரலை வெட்டித் தா” என்று கேட்டான். ஏன் தெரியுமா? கட்டை விரலை வெட்டி விட்டால் வில்லிலிருந்து அம்புகளை விடவே முடியாது அல்லவா? இது வரலாறு அல்ல; ஆனால் புராணக் கதைகளின் வழியாக பார்ப்பனர்கள் சமூகத்துக்கு உணர்த்தும் பாடம்! ‘ஏகலைவன்’கள் கதை முடிந்துவிட்டதா? இல்லை. இல்லவே இல்லை. பார்ப்பன துரோணாச்சாரிகளின் வாரிசுகள் அய்.அய்.டி., அய்.அய்.எம்., அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகம், மத்திய பல்கலைக் கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களை இன்றும்...
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோபியில் நடத்திய ”பாபர் மசூதியை மீட்க கருச்சட்டை அணிந்து ஆர்பாட்டத்தில்” 06.12.2015 அன்று கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
வேலூரில் ஆர்ப்பாட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 06.11.2015 வெள்ளிகிழமை காலை வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த கோரியும்,மாட்டிறைச்சிக்கு எதிரான இந்துத்துவ மதவாத சக்திகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை க.ராசேந்திரன்,கழக பரப்புரை செயலாளர் தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மாவட்ட அமைப்பாளர் ப.திலீபன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் சிவா,கெளதமன், மன்னார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினர் தோழர் விழுப்புரம் அய்யனார், விடுதலைசிறுத்தைகள் மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் சந்திரகுமார், SDPI மாவட்ட தலைவர் தோழர் முகமது ஆசாத், ஆதித் தமிழர்பேரவை மாவட்ட செயலாளர் தோழர் செந்தில், தமிழ்நாடு அம்பேத்கர் மன்றம் தோழர் மேயர் சுந்தர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை தோழர் சிங்கராயர்,...
விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 31.5.2014 சனிக் கிழமை மாலை 4 மணியளவில் இருளர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்டத் தலைவர் ந.வெற்றிவேல் முன்னிலை வகிக்க, அறிவியல் மன்ற செயலாளர் சி.ஆசைத் தம்பி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் செ.நாவாப்பிள்ளை, ந. வெற்றிவேல், மதி, காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் செங்குட்டுவன், வி.வி.மு. பொருப் பாளர் இராமலிங்கம், கழக வழக்கறிஞர் துரை அருண், க. இராமர், பழங்குடியினர் பாதுகாப்பு முன்னணி தலைவர் சுடர்வொளி சுந்தரம் ஆகியோர் உரையாற்றினர். 1952இல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பழங்குடியினர் ஆறரை லட்சம் பேர், 2014-லும் அதே ஆறரை லட்சம் மக்கள் தொகை இருப்பதாக கூறுவது எப்படி சரியாகும்? இரண்டு லட்சம் குடும்பங்களுக்கு மேல் உள்ள வீடுகளுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. அதனால் இவர்களுக்கு இருப்பிட சான்றிதழ்...
மன்னார்குடியில்: 19.10.2015 திங்கட்கிழமை காலை மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் அரசு அலுவலகங்களில் மதசார்புடைய வழிபாடுகள் மற்றும் ஆயுத பூஜை கொண்டாட்டங்களை தடுக்கக்கோரியும், அவற்றிக்கு எதிரான அரசு உத்தரவுகளை நடைமுறைப்படுத்தக் கோரியும், திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு அலுவலகங்களில் எவ்வித மதவழிபாடுகளும் ஆயுத பூஜை கொண்டாட்டங்களும் நடத்தக்கூடாது என்று தமிழக அரசு காவல்துறை உள்பட அனைத்து அலுவலகங்களுக்கும் ஆணைகள் மூலம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அரசு ஆணைகளை முறையாக நடைமுறை படுத்தப்படாமல் அவற்றிக்கு எதிரான செயல்பாடுகள் அலுவலகங்களில் மிகுந்துள்ளன. ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும், கடவுள் படங்கள் சாமியார்களின் படங்கள் சிலைகள் வழிபாட்டுப் பொருள்கள் வைக்கப்பட்டு கோவில்களில் நடப்பதுபோல் சூடம்கொளுத்துதல், சாம்பிராணி புகைபோடுதல் தீபாராதனை போன்றவைகள் நடந்துவருகின்றன. இதன் ஒருபகுதியாக ஆயுதபூஜை நேரங்களில் மிகவும் ஆடம்பரமாக ஒலிபெருக்கிகளை வைத்து வாழைமரம் கட்டி, புரோகிதர்களை அழைத்துவந்து மந்திர உச்சாடனங்கள் செய்து அரசு...
ஆர்ப்பாட்டம் ! திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதைக் கழகம் சார்பில் 19.10.2015 அன்று காலை திருப்பூர் பெரியார் சிலை அருகில் ‘அரசு அலுவகங்களில் மத வழிபாடுகளை நடத்தாதே ! மதசார்பற்ற நாட்டில் அரசில் ஆயுத பூஜையை கொண்டாடாதே ! தமிழக அரசாணைக்கெதிராக செயல்படாதே, அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடும் அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு’ என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் தோழர் நீதி ராசன் தலைமை தாங்கினார்.கழக மாநில பொருளாளர் தோழர் துரைசாமி,மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு,தோழர் சூலூர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட கழக தோழர்கள் ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் தோழர் சோழன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்.! அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடாதே ! மதச்சர்ப்பின்மை கொள்கையை கேள்விக்கு உட்படுத்துகிற அரசையும் அரச அதிகாரத்தையும் கண்டித்தும் 1. தமிழக அரசு குறிப்பாணை எண்:7553/66 29.4.1968 2 .தமிழக அரசு செயலாளரின் கடித எண். 8472/LOB/94-1 18.8.1994 3. தலைமை காவல் இயக்குனரின் கடித எண். 96243/Bldgs(1)/2005 4. தமிழக அரசு செயலாளரின் கடித எண்.15844/4/2010 22.4.2010 ஆகிய வற்றை உதாசீனப்படுத்தி மத சர்ப்பின்மைக் கொள்கைக்கு முரணாக பல்வேறு அரசுத்துறை,பொதுத்துறை அலுவலகங்களில் மத விழாக்களும்,வழிபாடுகளும்,பூஜைகளும் அண்மைக் காலங்களில் மிக அதிகமாக நடைபெற்று வருகின்றது மதச்சார்பற்ற அரசு அலுலலகங்களில் மத வழிபாடுகளை நடத்துவது மேற்கண்ட உயர்அதிகாரிகளின் அரசாணைகளை அவமதிக்கும் தன்மையாகும் அரசின் கொள்கைகளுக்கும் விரோதமாகவும் அமையும் ஆகவே மேற்க்கண்ட அரசாணையை நடைமுறை படுத்தாததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் கழகப் பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி, புறநகர் மாவட்ட தலைவர்...
அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடாதே ! என வலியுறுத்தி 19.10.2015 திங்கட்கிழமை காலை மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் அரசு அலுவலகங்களில் மதசார்புடைய வழிபாடுகள் மற்றும் ஆயுத பூஜை கொண்டாட்டங்களை தடுக்கக்கோரியும், அவற்றிக்கு எதிரான அரசு உத்தரவுகளைநடைமுறைப்படுத்தக்கோரியும், திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமையில் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில், தமிழக அரசு அலுவலகங்களில் எவ்வித மதவழிபாடுகளும் ஆயுத பூஜை கொண்டாட்டங்க-ளும் நடத்தக்கூடாது என்று தமிழக அரசு காவல்துறை உட்பட அனைத்து அலுவலகங்களுகும் ஆணைகள் மூலம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அரசு ஆணைகளை முறையாக நடைமுறை படுத்தப்படாமல் அவற்றிக்கு எதிரான செயல்பாடுகள் அலுவலகங்களில் மிகுந்துள்ளன. ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும், கடவுள் படங்கள் சாமியார்களின் படங்கள் சிலைகள் வழிபாட்டுபொருட்கள் வைக்கப்பட்டு கோவில்களில் நடப்பதுபோல் சூடம்கொளுத்துதல், சாம்பிராணி புகைபோடுதல் தீபாராதனை போன்றவைகள் நடந்துவருகின்றன. இதன் ஒருபகுதியாக ஆயுதபூஜை நேரங்களில் மிகவும் ஆடம்பரமாக ஒலிபெருக்கிகளை வைத்து வாழைமரம் கட்டி புரோகிதர்களை அழைத்துவந்து...
ஆர்ப்பாட்டம் ! அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடாதே ! என வலியுறுத்தி ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 19.10.2015 அன்று மாலை 5 மணியளவில் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக மாநில அமைப்புச்செயலாளர் தோழர் ஈரோடு ரத்தின சாமி தலைமை தாங்கினார்,கழக மாநில வெளியீட்டு செயலாளர் தோழர் கோபி ராம.இளங்கோவன் முன்னிலை வகித்தார். அரசு அலுவகங்களில் மத வழிபாடுகளை நடத்தாதே ! மதசார்பற்ற நாட்டில் அரசில் ஆயுத பூஜையை கொண்டாடாதே ! தமிழக அரசாணைக்கெதிராக செயல்படாதே, அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடும் அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் விநாயக மூர்த்தி,தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட பொறுப்பாளர் தோழர் குமரகுரு,தோழர் கோபி குணசேகரன்,மற்றும் ஆதரவு இயக்க தோழர்கள்...