இருளர் பழங்குடியினருக்கு மறுக்கப்படும் உரிமைகளைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 31.5.2014 சனிக் கிழமை மாலை 4 மணியளவில் இருளர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்டத் தலைவர் ந.வெற்றிவேல் முன்னிலை வகிக்க, அறிவியல் மன்ற செயலாளர் சி.ஆசைத் தம்பி தலைமை வகித்தார்.
மாவட்ட அமைப்பாளர் செ.நாவாப்பிள்ளை, ந. வெற்றிவேல், மதி, காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் செங்குட்டுவன், வி.வி.மு. பொருப் பாளர் இராமலிங்கம், கழக வழக்கறிஞர் துரை அருண், க. இராமர், பழங்குடியினர் பாதுகாப்பு முன்னணி தலைவர் சுடர்வொளி சுந்தரம் ஆகியோர் உரையாற்றினர்.
1952இல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பழங்குடியினர் ஆறரை லட்சம் பேர், 2014-லும் அதே ஆறரை லட்சம் மக்கள் தொகை இருப்பதாக கூறுவது எப்படி சரியாகும்?
இரண்டு லட்சம் குடும்பங்களுக்கு மேல் உள்ள வீடுகளுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. அதனால் இவர்களுக்கு இருப்பிட சான்றிதழ் மறுக்கப்படுகிறது.
பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழ் இயங்கும் பல பள்ளிகளுக்கு ஆசிரியர்களே இல்லை.
தமிழகத்தை பொருத்தவரை சில ஆண்டு களாகத்தான் பள்ளிப் படிப்பை முடித்து பழங் குடியினர் மற்றும் இருளர் மாணவர்கள் கல்லூரி படிப்புக்கு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு ஜாதி சான்றிதழ் மறுக்கப்படுவதால் கல்லூரிப் படிப்பை அவர்களால் தொடர முடியவில்லை.
ஜாதி சான்றிதழ் இல்லாமல் கல்லூரி படிப்பு தடைப்பட்டதால் தமிழகத்தில் இதுவரை நான்கு பழங்குடியின மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
எனவே, இந்த மாணவர்கள் கல்லூரிப் படிப்பு தொடர உடனே ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும். அதுவரை இந்த மாணவர்கள் கல்லூரி யில் சேர மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
பழங்குடியினர் ஆணையம் இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் சென்னை மாவட்ட கழகத் தலைவர் பா.ஜான், காஞ்சிபுரம் மாவட்ட செய லாளர் தினேஷ் மற்றும் செ. பிரபு, ச.கு.பெரியார் வெங்கட், கி. சாமிதுரை, ந. அய்யனார் உள்பட பல பகுதிகளிலிருந்தும் தோழர்கள் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் 05062014 இதழ்