ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – தூத்துக்குடி புகைப்படங்கள்
தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் !
பார்ப்பன சூழ்ச்சியால் மரணமடைந்த ‘ரோஹித் வெமுலா’வின் மரணத்திற்கு நீதி கேட்டும்,மத்திய அரசின் கல்வி வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் விளிம்புநிலை மக்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும், தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பில் 01.02.2016 அன்று மாலை 5 மணியளவில் சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பொறிஞர்.சி. அம்புரோசு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் வே.பால்ராசு, மாவட்ட துணைச் செயலாளர் ச.கா.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் அம்புரோசு அவர்களின் தலைமை உரையைத் தொடர்ந்து, மதிமுகவின் மாநில மீணவரனி செயலாளர் தோழர்.நக்கீரன் கண்டன உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து SDPIயின் தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் மைதீன்கனி, ஆதித் தமிழர் கட்சியின் சு.க.சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் கா.மை.அகமது இக்பால், மனித நேய மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஆசாத் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இவர்களைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி விளக்கவுரையை திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில கொள்கை பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் உரையாற்றினார். அவரது உரையில், “IIT போன்ற உயர் படிப்புகளில், மத்திய அரசின் உயர்பதவிகளில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் இடங்களில் மிகக் குறைவான அளவே இடம்பிடித்துள்ளனர் என்பதை புள்ளி விவரங்களுடன் விவரித்தார். இங்கு நாங்கள் உயர்ந்த சாதி என்று மீசை முறுக்கும் சாதித் தலைவர்கள் தன் சாதியினருக்கும், தன் சமூக மக்களின் உரிமைக்கும் எந்த வித்த்திலும் போராடவில்லை என்றும், கல்வி நிறுவனங்கள் காவி மயமாகுவதையும் தன்னுடைய உரையில் தெளிவுபடுத்திக் கூறினார். இந்த உரையை அங்கு சுற்றியிருந்த பொது மக்கள் கூட்டம் கலையாமல் கவனித்து வந்தனர். இது நமக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது.
இறுதியாக மாவட்ட செயலாளர் ச.ரவி சங்கர் நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொறிஞர்.சி.அம்புரோசு, மாவட்ட செயலாளர். ச.ரவி சங்கர், மாவட்ட அமைப்பாளர் பால்.அறிவழகன், மாவட்ட பொருளாளர் வீரப் பெருமாள், மாவட்ட துணைத் தலைவர் வே.பால்ராசு, மாவட்ட துணைச் செயலாளர் ச.கா.பால சுப்பிரமணியன், தமிழ்நாடு மாணவர் கழக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் கண்ணதாசன், சூரங்குடி பிரபாகரன், விளாத்திகுளம் ஒன்றிய தலைவர் மாரிச் செல்வம் மற்றும் திவிகவின் நெல்லை மாவட்ட தலைவர் பால் வண்ணன், கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் மாசிலாமணி, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சுப்பையா, எட்டையாபுரம் காசிராஜன் மற்றும் தூத்துக்குடி தோழர்கள் கோ.அ.குமார், சந்திரசேகர், ஜெயாஸ்டின் மற்றும் திரளான தோழர்களும், தோழமை அமைப்பின் தோழர்களும் கலந்து கொண்டனர்..