ரோகித் மரணத்திற்கு நீதிக் கேட்டு கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம்

அய்தராபாத் பல்கலை தலித் ஆராய்ச்சி மாணவர் மரணத்துக்கு நீதி கேட்டு கழகம் பல்வேறு ஊர்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது.
தூத்துக்குடியில் – பார்ப்பன சூழ்ச்சியால் மரணமடைந்த ‘ரோஹித் வெமுலா’வின் மரணத்திற்கு நீதி கேட்டும், மத்திய அரசின் கல்வி வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் விளிம்பு நிலை மக்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும், தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பில் 01.02.2016 அன்று மாலை 5 மணியளவில் சிதம்பர நகர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் வே.பால்ராசு, மாவட்ட துணைச் செயலாளர் ச.கா. பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் அம்புரோசு தலைமை உரையைத் தொடர்ந்து, ம.தி.மு.க.வின் மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன் கண்டன உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து ளுனுஞஐயின் தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் மைதீன் கனி, ஆதித் தமிழர் கட்சியின் சு.க.சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் கா.மை. அகமது இக்பால், மனித நேய மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எ°. ஆசாத் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி திராவிடர் விடுதலைக் கழகத்தின் கொள்கை பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் உரையாற்றினார். அவரது உரையில், “ஐ.ஐ.டி. போன்ற உயர் படிப்புகளில், மத்திய அரசின் உயர்பதவிகளில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் இடங்களில் மிகக் குறைவான அளவே இடம்பிடித்துள்ளனர் என்பதை புள்ளி விவரங்களுடன் விவரித்தார். இங்கு நாங்கள் உயர்ந்த சாதி என்று மீசை முறுக்கும் சாதித் தலைவர்கள் தன் சாதியினருக்கும், தன் சமூக மக்களின் உரிமைக்கும் எந்த விதத்திலும் போராடவில்லை என்றும், கல்வி நிறுவனங்கள் காவி மயமாகுவதையும் தன்னுடைய உரையில் தெளிவுபடுத்திக் கூறினார். உரையை பொது மக்கள் கலையாமல் கவனித்து வந்தனர். இது மிகுந்த உற்சாகத்தைத் தந்தது. இறுதியாக மாவட்ட செயலாளர் ச. ரவி சங்கர் நன்றி கூறினார்.
தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் பால். அறிவழகன், மாவட்ட பொருளாளர் வீரப் பெருமாள், தமிழ்நாடு மாணவர் கழக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் கண்ணதாசன், சூரங்குடி பிரபாகரன், விளாத்திகுளம் ஒன்றிய தலைவர் மாரிச் செல்வம் மற்றும் தி.வி.க.வின் நெல்லை மாவட்ட தலைவர் பால் வண்ணன், கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் மாசிலாமணி, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சுப்பையா, எட்டையபுரம் காசிராஜன் மற்றும் தூத்துக்குடி கோ.அ. குமார், சந்திரசேகர், ஜெபாஸ்டின் மற்றும் திரளான தோழர்களும், தோழமை அமைப்பின் தோழர்களும் கலந்து கொண்டனர்
பழனியில் – திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
(01-02-2016) பழனி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மருதமூர்த்தி தலைமை தாங்கினார். ஆனந்த், கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செல்வம், காளிமுத்து, சிவமணி கண்டன உரையாற்றினர். இறுதியில் குட்டி நன்றியுரை ஆற்றினார். பார்ப்பன “துரோணாச்சாரிகளின் வாரிசுகளா, உயர்கல்வி நிறுவனங்கள்?”, “ஏகலைவன்களாக இனியும் இருக்க மாட்டோம் !” என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
வேலூரில் – திராவிடர் விடுதலைக் கழக சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் 01.02.2016 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, கழக மாவட்ட அமைப்பாளர் இரா.ப.சிவா, திலிபன் (தி.வி.க.), துரை.ஜெய்சங்கர் (வி.சி.க), செவ்வேள் (தா.ஒ.வி.), கழகத் தோழர்கள் நரேன், சந்தோஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
சேலம் (கிழக்கு) – ரோகித் வெமுலாவின் மரணத்திற்கு நீதி கேட்டு திங்களன்று 01.02.2016 மாலை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சேலம் கிழக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகம் இணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக கிழக்கு மாவட்டத் தலைவர் க. சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இரா. டேவிட். மாவட்ட பொருளாளர் ஏற்காடு பெருமாள் மற்றும் தமிழ்நாடு மாணவர் கழக பா. முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கண்டன ஆர்பாட்டத்தில் ஒத்த கருத்துடைய தோழமை அமைப்புகளான ம.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் அ. ஆனந்தராஜ், தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் தலைவர் பூமொழி, த.பெ.தி.க. வின் மாவட்டச் செயலாளர் கு.தங்கராசு, ஆதி தமிழர் பேரவையின் மாவட்டச் செயலாளர் க. இராதா கிருட்டிணன். ஊஞஐ மாவட்டச் செயலாளர், அ. மோகன், விடுதலை சிறுத்தைகளின் மாநில தொண்டரணி துணைச் செயலாளர் ஜெ.மு. இமயவரம்பன், அருந்ததியர் மக்கள் இயக்கத்தின் ஜெ. பிரதாபன், வழக்கறிஞர், மண்ணின் மைந்தர்களின் மாநகரச் செயலாளர் அண்ணாதுரை, அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநகரச் செயலாளர் தனவேல், தமிழ்நாடு மாணவர் இளைஞர் பேரவை பூ. ஜெகதீ°வரன், தமிழ்நாடு மாணவர் கழகத்தின் விஜய் கார்த்திக், த.மு.மு.க.வின் கி.மா.பொ.பி. சுல்தான், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவர் வழுக்குரைஞர் பார்த்தீபன், அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் ஜங்சன் ஆ. அண்ணாதுரை. ளுகுஐ மாவட்டச் செயலாளர் இராம சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாலை 4.30 மணிக்கு தொடங்கிய ஆர்ப்பாட்டமானது இரவு 7.30 மணிக்கு கழக மாநகரச் செயலாளர் ஜோ. பிரபு நன்றியுரையாற்ற ஆர்ப்பாட்டம் சிறப்புற நடந்தேறியது.
ஈரோட்டில் – ரோகித் வெமுலா மரணத்துக்கு நீதி கேட்டு திராவிடர் விடுதலைக் கழகம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்திய செய்தியை கடந்த இதழில் வெளியிட்டது. ரோகித் வெமுலா மரணத்திற்கு நீதி கேட்டு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் கழக அமைப்பு செயலாளர் கு.சண்முகபிரியன் (கழக மாவட்ட செயலாளர் ஈரோடு தெற்கு) முன்னிலையில் காலை 10 மணிக்கு நடைபெற்றது. வரவேற்புரை சிவானந்தம் (மாநகரச் செயலாளர்).
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றிய தோழர்கள் : கண.குறிஞ்சி (மாநிலதுணைத் தலைவர் மக்கள் சிவில் உரிமைக் கழகம்), தமிழ் இன்பன் (நிறுவனர் விடுதலை வேங்கைகள் கட்சி), பெருமாவளவன் (மாநில நிதிச் செயலாளர் ஆதித் தமிழர் பேரவை), ஆட்டோ சாகுல் அமீது (மாவட்ட செயலாளர் தமிழ்நாடு மு°லீம் முன்னேற்றக் கழகம்), நிலவன் (கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்கம்), விநாயகமூர்த்தி (மாநகர் மாவட்ட செயலாளர்), கோபி. வேலுச்சாமி (தலைமைக் கழகப் பேச்சாளர்), கிருட்டிணமூர்த்தி (ஈரோடு தெற்கு மாவட்டப் பொருளாளர்), தமிழ் செல்வன் (தமிழ்நாட்டு மக்கள் இயக்கம்), செல்லப்பன் (ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் தி.வி.க.), நாத்திக சோதி (ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் தி.வி.க.), வேணுகோபால் (ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் தி.வி.க.), சென்னிமலை செல்வராசு (ஈரோடு தெற்கு மாவட்ட அமைப்பாளர் தி.வி.க.), திருமுருகன் (ஈரோடு மாநகரத் தலைவர் தி.வி.க.), நிவாசு (ஈரோடு வடக்கு மாவட்ட அமைப்பாளர் தி.வி.க.), சத்தியமூர்த்தி (ஈரோடு மாநகரத் துணைத் தலைவர் தி.வி.க.), தமிழ் இராசேந்திரன் வழக்கறிஞர் ஆகியோரின் கண்டன உரையைத் தொடர்ந்து மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இறுதியில் தோழர்.ப. குமார் (ஈரோடு தெற்கு மாவட்ட அமைப்பாளர்) நன்றியுரை கூறினார்.
பேராவூரணியில் – திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் பேராவூரணி அண்ணா சிலை அருகில் பிப்ரவரி 2ம் தேதி மாலை 5 மணியளவில் திராவிடர் விடுதலைக்கழக தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, தஞ்சை மாவட்ட முன்னாள் அமைப்பாளர் பாரி, திராவிடர் விடுதலைக்கழக பாடகர் பள்ளத்தூர் நாவலரசன், தமிழக மக்கள் புரட்சிக்கழக மாவட்ட செயலாளர் வி.சி.முருகையன், மெய்சுடர் இதழ் ஆசிரியர் வெங்கடேசன், தமிழக மக்கள் புரட்சிக் கழக ஒன்றிய செயலாளர் வீரக்குடி ராஜா, பொதுச் செயலாளர் ஆர்.நீலகண்டன், மனிதநேய மக்கள் கட்சி அப்துல்சலாம், நகரச் செயலாளர் அப்துல்லா, ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக திராவிடர் விடுதலைக் கழக பரப்புரை செயலாளர் தூத்துக்குடி பால்பிரபாகரன் கண்டன உரையாற்றினார். (உரை அடுத்த இதழில்)

பெரியார் முழக்கம் 11022016 இதழ்

 

You may also like...