ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – மன்னார்குடி புகைப்படங்கள்
மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் !
மன்னார்குடியில் 01.02.2016 அன்று மாலை கண்டன ஆர்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மன்னார்குடி பெரியார் சிலை எதிரில் நடைபெற்றது.
ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பயின்ற முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ரோகித் வெமுலா மரணத்திற்கு நீதி கேட்டும், தற்கொலைக்கு காரணமான ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் அப்பாராவ், மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிதி இராணி, மத்திய இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய அமைச்சர் இருவரையும், பதவி நீக்கம் செய்யகோரியும், திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் மன்னார்குடி பெரியார் சிலை எதிரில் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சீனிஜெகபர் சாதிக், எஸ்டிபிஐ கட்சி தொகுதி தலைவர் முகமது அலி, மதிமுக மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், நகர செயலாளர் சன் சரவணன், மாவட்ட பிரதிநிதி மீனாட்சி சுந்தரம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினர் துரை.அருள்ராஜன், மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் முருகேசன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செய்தி தொடர்பாளர் நெடுவை சுரேஷ், மாற்றத்திற்கான மக்கள் களம் அமைப்பாளர் திருவாரூர் நகர் மன்ற உறுப்பினர் வரதராஜன், அமைப்பாளர் சிமா மகேந்திரன், மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி பொறுப்பாளர்கள் ஆரோக்கிய பிரகாஷ், வினோத், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் தங்கவேலு, மமக மாவட்ட பொருளாளர் சாகுல்ஹமீது, திராவிடர் விடுதலைக்கழக மாவட்ட அமைப்பாளர் பாரி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இறுதியாக மதிமுக தலைமை கழக பேச்சாளர் விடுதலை வேந்தன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்குள் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகமானவர்கள் மிகவும் பெரும்பாடுபட்டு கல்வி பயிலசேரும்போது அவர்கள் ஜாதி பாகுபாடு காரணமாக அவமதிக்கப்பட்டு மரணத்தை நோக்கி துரத்தப்படுகிறார்கள். இதுவரை உயர்கல்வி நிறுவனங்களில் 30திற்கும் மேற்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். அம்பேத்கர் மாணவர்கழகத்தின் முன்னணி பெறுப்பாளராக இருந்து சமூக விடுதலைக்காக போராடிய மாணவர் ரோகித் வெமுலா இன்றைக்கு ஜாதியை காரணம் காட்டி அவர்மீது அதிகாரவர்கத்தினரின் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்திருக்கிறார். அவரது தற்கொலைக்கு காரணமான ஐதாரபாத் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பாராவ், மத்திய அமைச்சர்கள் ஸ்மிதிஇராணி, பண்டாருதத்தாத்ரேயா ஆகியோர் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய அமைச்சர்கள் இருவரையும் பதவி நீக்கம் செய்யவேண்டும் என பேசினார்.
ஆர்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக்கழக மன்னை ஒன்றிய செயலாளர் சேரன் ரமேஷ், நீடா ஒன்றிய செயலாளர் நல்லிக்கோட்டை முருகன், வலங்கைமான் ஒன்றிய செயலாளர் செந்தமிழன், கோட்டூர் ஒன்றிய செயலாளர் தென்பரை பன்னீர்செல்வம், மன்னை நகர செயலாளர் சசிக்குமார், நகர அமைப்பாளர் மணிகண்டன், நகர தலைவர் ராஜா, திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் கரிகாலன், பேராவூரணி ஒன்றிய செயலாளர் கோவிந்தன், மன்னை ஒன்றிய அமைப்பாளர் நெடுவை வாசுதேவன், பட்டுக்கோட்டை ஒன்றிய அமைப்பாளர் ஏனாதி சங்கர், பாடகர் தஞ்சை பெரியார் சித்தன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
படம் :
ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பயின்ற முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ரோகித் வெமுலா மரணத்திற்கு நீதி கேட்டு திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் மன்னார்குடியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மதிமுக தலைமைக்கழக பேச்சாளர் தஞ்சை விடுதலைவேந்தன் பேசினார். அருகில் திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளனர்