தொடர் முழக்க கண்டன ஆர்பாட்டம் ! – OBC இடஒதுக்கீடு

பிற்படுத்தப்பட்டோருக்கான (OBC) 27% இடஒதுக்கீடு 23 ஆண்டுகள் கடந்த பின்பும் 12% மட்டுமே நிரப்ப்ப்பட்டுள்ளது. இதை முழுமையாகவும் முறையாகவும் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நிரப்பக்கோரி 13.2.2016 அன்று காலை சென்னை வள்ளுவர் கோட்ட்த்தில் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட(OBC) ஊழியர்கள் நலச்சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மத்திய அரசை கண்டித்து தொடர் முழக்க கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த பேரமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். பேராசிரியர் டாக்டர் முரளிதரன் விரிவாக இடஒதுக்கீட்டிலும், அய்.அய்.டி போன்ற உயர் கல்வி நிறுவன்ங்களில்லும் நடைபெறும் மோசடிகளை தனது உரையில் தோலுரித்து காட்டினார். அடுத்து சங்கர் IAS அகாடமியின் தலைவர் திரு.சங்கர் அவர்கள் சிவில் சர்வீல் தேர்வுகளில் எப்படி முறைகேடுகளை இவ்வரசுகள் மேற்கொள்கின்றன இதனால் உயர் சாதியினர் எப்படி பலன் அடைகிறார்கள் என்பதை சுருக்கமாக விளக்கினார்.

நிறைவாக கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தமது கண்டன உரையில் இடஒதுக்கீட்டை கண்காணிக்க தனி அமைப்பு இல்லாத்தையும், சமூக நல அமைச்சகத்தின் அக்கறையின்மையையும், உயர் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் அட்டூழியங்களையும் விளக்கிப் பேசினார்.

நிகழ்வில் கழக பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன், மக்கள் நெஞ்சம் கலச ராமலிங்கம், ரெப்கோ வங்கி அதிகாரி திருவேங்கடம் ஆகியோர் பங்கேற்றனர்.

பணியில் உள்ள எந்த ஒரு பிற்படுத்தப்பட்ட ஊழியர்களின் கோரிக்கைகளை உள்ளடக்காமல் பொதுவில் உள்ள இடஒதுக்கீடு சென்றடைய வேண்டிய மக்களின் இடஒதுக்கீட்டு உரிமைகளுக்காக, உயர் சாதியினரின் மேலான்மைக்கு எதிராக நடைபெற்ற இந்த ஆர்பாட்ட்த்தில் 250க்கும் மேற்ப்பட்ட மத்திய அரசு மற்றும் பொதுத்துறையை சார்ந்த ஊழியர்கள் பங்கேற்றனர்.

12705300_1701428886807671_5168861412802873297_n 12743711_1701428880141005_188881467434598082_n 12742576_1701428873474339_6228087255159213748_n 12744562_1701428876807672_236125579329362621_n 12718366_1700312643585962_6727526554803415187_n

You may also like...