அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடாதே ! – கோவை

கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்.!

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடாதே !

மதச்சர்ப்பின்மை கொள்கையை கேள்விக்கு உட்படுத்துகிற அரசையும் அரச அதிகாரத்தையும் கண்டித்தும்
1. தமிழக அரசு குறிப்பாணை எண்:7553/66 29.4.1968
2 .தமிழக அரசு செயலாளரின் கடித எண். 8472/LOB/94-1 18.8.1994
3. தலைமை காவல் இயக்குனரின் கடித எண். 96243/Bldgs(1)/2005
4. தமிழக அரசு செயலாளரின் கடித எண்.15844/4/2010 22.4.2010 ஆகிய வற்றை உதாசீனப்படுத்தி

மத சர்ப்பின்மைக் கொள்கைக்கு முரணாக பல்வேறு அரசுத்துறை,பொதுத்துறை அலுவலகங்களில் மத விழாக்களும்,வழிபாடுகளும்,பூஜைகளும் அண்மைக் காலங்களில் மிக அதிகமாக நடைபெற்று வருகின்றது

மதச்சார்பற்ற அரசு அலுலலகங்களில் மத வழிபாடுகளை நடத்துவது மேற்கண்ட உயர்அதிகாரிகளின் அரசாணைகளை அவமதிக்கும் தன்மையாகும் அரசின் கொள்கைகளுக்கும் விரோதமாகவும் அமையும் ஆகவே மேற்க்கண்ட அரசாணையை நடைமுறை படுத்தாததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதில் கழகப் பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி, புறநகர் மாவட்ட தலைவர் மேட்டுபாளையம் இராமச்சந்திரன், மாநகர செயலாளர் தோழர் நேருதாஸ்,சூலூர் பன்னீர்செல்வம், திருப்பூர் தோழர்கள் பரிமளராஜன்,அகிலன்,மூர்த்தி, தோழர்கள் விஜயபாரதி,பாரூக்,நிர்மல்,லோகு,கிருஷ்ணன்,ஸ்டாலின்,கம்ப்யூட்டர் கார்த்திக், வீரபாண்டி ராஜேஷ்,அன்னூர் முருகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

10154493_1660902434193650_3436889036222822176_n

11002630_1660902407526986_7569889018965566268_n

11222303_1660902417526985_1472042745736909679_n

You may also like...