ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – திருப்பூர் புகைப்படங்கள்

திருப்பூரில் ஆர்ப்பாட்டம் !

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஹைதராபாத் பல்கலைக் கழக மாணவன் ரோகித் வெமுலா மரணத்திற்கு நீதி கேட்டு,அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் 01.02.2016 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் திருப்பூர் பெரியார் சிலை அருகில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழக மாநில பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு முன்னிலை வகித்தார்.

மாநகர செயலாளர் தோழர் நீதிராசன்,மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் ஆசிரியர் சிவகாமி அவர்கள்,தோழர் அகிலன்,கவிஞர் கனல்மதி,தனபால்,பரிமளராசன் உள்ளிட்ட கழக தோழர்கள் கலந்துகொண்டனர்.

இறுதியில் தோழர் பிரசாந்த அவர்கள் நன்றியுரையாற்றினார்.

பார்ப்பன ‘துரோணாச்சாரி’களின் வாரிசுகளா,
உயர்கல்வி நிறுவனங்கள்?
‘ஏகலைவன்’களாக இனியும் இருக்கமாட்டோம்!
‘ரோகித் வெமுலா’ மரணத்திற்கு நீதி கேட்போம்!
என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

12654147_1696167250667168_8778166811586944826_n 12661794_1696167324000494_1022747382328597030_n 12662502_1696167320667161_3171373202772717561_n

You may also like...