Category: திவிக

கருத்துச் செறிவுடன் நடந்த ஃபாரூக் நினைவு சிந்தனை அரங்கம்

கருத்துச் செறிவுடன் நடந்த ஃபாரூக் நினைவு சிந்தனை அரங்கம்

இஸ்லாமிய மத அடிப்படை வாதத்திற்குப் பலியான மனிதநேயன் ஃபாருக் 5ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின், சிந்தனை அரங்கம் 19.03.2022 சனிக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் திவிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்வை தலைமையேற்று வழிநடத்தினார். ‘இஸ்லாத்தில் நாத்திகர்கள்’ என்ற தலைப்பில் இந்திய முற்போக்காளர்கள் கூட்டமைப்பு – ஜின்னா மாச்சு, ‘அறிவியலுக்கு முரணான கிருஸ்துவம்’ என்ற தலைப்பில் ஆய்வுக்கூடம் – நாத்திக வசந்தன், ‘இந்து மதமும் – பெண்களும்’ என்ற தலைப்பில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை கொள்கை பரப்பு செயலாளர் இரா. உமா, ‘இஸ்லாமும் பெண்களும்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் பீர் முகமது, முன்னாள் முஸ்லீம் அமைப்பைச் சார்ந்த உமர் – ஹிஜாப், இஸ்லாத்தில் பெண்களின் அவலங்களைப் பற்றியும் உரையாற்றினர். இறுதியாக ‘மானுடத்துக்கு மதம் தேவையா?’ என்ற தலைப்பில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். நிகழ்விற்கு ஃபாருக் நண்பர் மணிவண்ணன் நன்றி கூறினார்....

பெரியார் பெருந்தொண்டர் இனியன் பத்மநாதன் 95ஆவது அகவை நாள் விழா

பெரியார் பெருந்தொண்டர் இனியன் பத்மநாதன் 95ஆவது அகவை நாள் விழா

திவிக ஈரோடு தெற்கு மாவட்ட ஆலோசகரும், பெரியாரின் பெருந் தொண்டரும், பெரியார் விருதாளருமான இனியன் பத்மநாதன் 95 ஆவது அகவை நாள் விழா, திவிக ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக 06.03.2022 ஞாயிறன்று மகிழ்வும், நெகிழ்வும் சூழ கொண்டாடப்பட்டது. விழாவின் வரவேற்புரை யை மாவட்ட அமைப்பாளர் பெ.கிருஷ்ணமூர்த்தி வழங்க கழகத்தின் மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி, மாநில அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் இதுபோன்ற நிகழ்வின் அவசியத்தையும், மூத்த கழகச் செயல்பாட்டாளர்களை அடையாளங்கண்டு அவர்களை போற்ற வேண்டியது பற்றியும் உரையின் வழியே பகிர்ந்து கொண்டார்கள். மாவட்டச் செயலாளர் யாழ் எழிலன், ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகள் நாத்திகஜோதி, வேணுகோபால், வேல்முருகன், ராசிபுரம் பிடல் சேகுவேரா, சுமதி, விருதுநகர் செந்தில், கடலூர் போதி சத்வா, திருப்பூர் தனபால், திமுக தொழிற் சங்கத்தைச் சார்ந்த இராவணன் உள்ளிட்ட பிற மாவட்டக் கழகத் தோழர்களும் வருகை தந்து இனியன்...

ஆயக்குடியில் பெரியாரியல் கொள்கை விளக்கக் கூட்டம்

ஆயக்குடியில் பெரியாரியல் கொள்கை விளக்கக் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியாரியல் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் 11-3 – 2022 அன்று புது ஆயக்குடி அரிசி ஆலை பகுதியில் உள்ள வ.பழனிச்சாமி நினைவுத் திடலில் மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு புது ஆயக்குடி பகுதி தோழர் வே.சங்கர் தலைமை வகித்தார். ஒட்டன்சந்திரம் தங்கவேல் முன்னிலை வகித்தார். நிகழ்வின்தொடக்கமாக ஆயக்குடி பகுதி பொறுப்பாளர் சு.அழகர்சாமி மந்திரமா? -தந்திரமா?அறிவியல் விளக்க நிகழ்ச்சியை நடத்தி, சாமியார்கள் செய்வது மந்திரமல்ல மக்களை ஏமாற்றும் தந்திரமே என்று செய்து காட்டினார். அதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட தோழர் சண்முகம், தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் தொழில் முனைவோர் மோடியின் ஆட்சியில் சந்திக்கும் இடர்களை குறித்து விளக்கினார். தொடர்ந்து உரையாற்றிய கழக பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளால் விவசாயிகள் படும் வேதனைகளையும், விளக்கினார். அடுத்து உரையாற்றிய அமைப்புச்...

சூர்யா திரைப்படம் பா.ம.க. மிரட்டலுக்கு பதிலடி

சூர்யா திரைப்படம் பா.ம.க. மிரட்டலுக்கு பதிலடி

செஞ்சி பாலசரவணா திரையரங்கில் 9.3.2022 அன்று நடிகர் சூரியா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று பா.ம.கவினர் கடிதம் முலம் மிரட்டல் விடுத்தனர். கடிதத்தை திரையரங்க உரிமையாளர் காவல்துறைக்கு அனுப்பி உள்ளார் . மறுநாள் 10.03.2022 பா.ம.கவினர் திரைப் படம் திரையிடக்கூடாது என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திரையரங்கிற்கு ஒருநாள் பாதுகாப்பாக காவல்துறையினர் இருந்தனர். படம் பார்க்க வந்த ரசிகர்கள் மற்றும் மக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். பா.ம.கவினர் தொடர் மிரட்டலால் திரைப்படம் வெளியிடவில்லை. 11.03.2022 அன்று அம்பேத்கர் மக்கள் கட்சி மழைமேனிபாண்டியன், படம் பார்க்கச் சென்று கேட்டபோது நடந்த நிகழ்வுகளை சொல்லி படம் வெளியிட முடியாது என்றனர். அ.ம.கட்சியினர் வெளியிட சொல்லி கோசங்களை எழுப்பினர். நியூஸ் செவன் தொலைக்காட்சிக்கு அ.ம.கட்சி மழை மேனி பாண்டியன் பேட்டியளித்தார். இந்த தகவலறிந்த திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் பெரியார் சாக்ரடீஸ் அரசியல் கட்சிகள் இயக்கங்களை ஒருங்கிணைத்து ஆலோசனை...

சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் தில்லை தீட்சதர்களை கைது செய்க!

சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் தில்லை தீட்சதர்களை கைது செய்க!

தில்லை சிற்றம்பல மேடையில் தலித் ‘பெண்’ வழிபாட்டு உரிமையைத் தடுத்து நிறுத்திய தீட்சதர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டும் அவர்கள் கைது செய்யப்படவில்லை. தீட்சதர்களை சட்டப்படி கைது செய்யக் கோரியும், நடராசன் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வற்புறுத்தியும்  சென்னையில் மார்ச் 11, 2022 பகல் 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய பலரும் எங்களுக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை; ஆனால் நம்பிக்கை யாளர்கள் உரிமைகளைத் தடைப்படுத்துவதை மனித உரிமைக் கண்ணோட்டத்தில் கண்டிக்கிறோம் என்று குறிப்பிட்டனர். மனித உரிமைகளுக்கு எதிராக நம்பிக்கைகள் திணிக்கப்படும்போது அதை கண்டிக்கிறோம். தில்லையில் தலித் பெண் சிற்றம்பல மேடையில் வழிபடுவது அவரது மனித உரிமை; அதைத் தடுப்பது தீண்டாமைக் குற்றம்; மனித உரிமைக்கு எதிரானது; தமிழில் பாடுவது மனித உரிமை; அதைத் தடுப்பது மனித உரிமைக்கு எதிரானது; ஹிஜாப் அணிவதும் அணிய விரும்பாததும் அவர்கள் மனித உரிமை; அதைத்...

மின்னூல் தொகுப்பு

மின்னூல் தொகுப்பு

பல்வேறு காலகட்டங்களில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாநாடுகள், பரப்புரைகள் மற்றும் பொதுக் கூட்டங்களில் தலைவர்களால் பேசப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த உரைகள் அடங்கிய மின்னூல் தொகுப்பு. புத்தகத்தை பெரியார் முழக்கம் பிப் 10, 2022 இதழில் மொத்தமாக 52 புத்தக பட்டியல் வெளிவந்து கழகத் தோழர்களால் பெருவாரியாக பதிவிறக்கி படிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக  இணைய தளப் பிரிவின் முயற்சியால் மேலும் 45 புதிய தலைப்புகளில் மின்னூலாக்கி பதிவேற்றி உள்ளோம். கீழுள்ள இணைப்பின் வாயிலாகவோ கழகத்தின் இணையதளத்திற்கு சென்று தேவையான புத்தகங்களை தரவிறக்கி படித்துக் கொள்ளலாம்.   http://dvkperiyar.com/?page_id=17518 கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நூல் பட்டியல்: 1. இந்துக்களின் விரோதி யார்? நண்பன் யார்? சிற்றுரைகள் தொகுப்பு 1; 2. கசக்கும் ஒன்றிய(ம்) அரசு – விடுதலை இராசேந்திரன்; 3. கீதையின் வஞ்சகப் பின்னணி – விடுதலை இராசேந்திரன்; 4. சினிமா கண்டு வந்தவன் – விடுதலை இராசேந்திரன்; 5. மக்களைக் குழப்பும்...

ஹிஜாப் – பா.ஜ.க. மிரட்டலுக்கு பதிலடி: மதுரையில் கருத்தரங்கம்

ஹிஜாப் – பா.ஜ.க. மிரட்டலுக்கு பதிலடி: மதுரையில் கருத்தரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் – தமிழ் தேச மக்கள் முன்னணி இணைந்து நடத்திய “மத வெறியர்களால் தூண்டப்படும் ஹிஜாப் அரசியல்” கருத்தரங்கம் மேலூரில் உள்ள ரஹ்மா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.. இந்த நிகழ்வில் மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி வரவேற்புரையாற்றினார். தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்டத் தலைவர் ஆரோக்கிய மேரி முன்னிலை வகித்தார். மதுரை மாவட்ட செயலாளர் மா.பா மணி அமுதன் தலைமை தாங்கினார். அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் பசும்பொன். பாண்டியன், தமிழ் தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன், தமிழ்நாடு அரசின் முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி, மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வாஞ்சி நாதன், தமுமுக (ஹைதர் அலி) மாவட்ட துணைச் செயலாளர் ஜாகீர் உசேன் ஆகியோர் கருத்துரை யாற்றினார்கள்.. தமுமுக (ஹைதர் அலி ) மாவட்ட பொறுப்பாளர் பக்ருதீன் நிகழ்விற்கான பல உதவிகளை செய்து கொடுத்தார்...

நாமக்கல் மாவட்டம் வழி காட்டுகிறது; கழக ஏட்டுக்கு 86 சந்தாக்கள்

நாமக்கல் மாவட்டம் வழி காட்டுகிறது; கழக ஏட்டுக்கு 86 சந்தாக்கள்

நாமக்கல் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 4.3.2022 அன்று காலை 11 மணி யளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், மாநில அமைப்புச் செயலாளர் ப. ரத்தினசாமி, மாநிலப் பொருளாளர் சு.துரைசாமி, தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், காவை ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் முதல் கட்டமாக ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கான 86 சந்தா தொகை 21500 கழகத் தலைவரிடம் வழங்கப்பட்டது. கலந்துரையாடலில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மடத்துக்குளம் மோகன், தலித் சுப்பையா ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இயக்க வளர்ச்சிக்கு மாதம் ஒருமுறை தெருமுனை கூட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. புதிய பொறுப்பாளர்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். குமாரபாளையம் நகர செயலாளராக செ.வடிவேல் செயல்படுவார் மற்றும் திருச்செங்கோடு ஒன்றிய அமைப்பாளராக விஜயகுமார் மட்டுமே செயல்படுவார் என தீர்மானிக்கப்பட்டது. கலந்துரையாடல் கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன்,...

‘நீட்’ எதிர்ப்பு மசோதாவைக் கிடப்பில் போடாதே; ஆளுநரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

‘நீட்’ எதிர்ப்பு மசோதாவைக் கிடப்பில் போடாதே; ஆளுநரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய ‘நீட் விலக்கு’ மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை கண்டித்தும், பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரியும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை திரும்ப பெறக்கோரியும், சென்னை ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம், 28.02.2022 அன்று காலை 11:30 மணியளவில் பனகல் மாளிகை அருகில் நடைபெற்றது. முற்றுகைப் போராட்டம் திராவிடர் தமிழர்கட்சி சார்பில் நடைபெற்றது. திராவிடர் தமிழர்கட்சித் தலைவர் வெண்மனி முற்றுகைப் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். நிகழ்வில், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தார். விடுதலை இராசேந்திரன் “ஆளுநர் எவ்வளவு நாள் இந்த மசோதாவை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறாரோ அவ்வளவு நாள் வரை இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும். இதற்கு முன் ஆளுநராக இருந்தவர், அதிமுக அனுப்பிய நீட்விலக்கு மசோதாவை நீண்ட நாட்கள் கிடப்பில் வைத்திருந்தார். பின், நீதிமன்றம் தலையிட்டது. அதற்குப் பிறகு, இந்த மசோதாவிற்கு...

தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்க வைக்கிறார் முதல்வர்!

தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்க வைக்கிறார் முதல்வர்!

வரலாறு, தலைவர்களை உருவாக்கி வருகிறது; தமிழ்நாட்டு அரசியல் களம் பல தலைவர்களைச் சந்தித்திருக்கிறது. காலத்தின் அறைகூவலுக்கு முகம் கொடுத்து, மக்களின் மனதை வென்ற தலைவர்களை தமிழ்நாட்டில் பட்டியலிட வேண்டும் என்றால் காமராசரிடமிருந்து தொடங்க வேண்டும். அடுத்து அண்ணா; அடுத்து கலைஞர்; அடுத்து எம்.ஜி.ஆர்., அடுத்து ஜெயலலிதா. தமிழ்நாட்டின் அரசியல் தலைமை, கலைஞர் எம்.ஜி.ஆர். என்ற நிலையிலிருந்து எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு கலைஞர் – ஜெயலலிதா என்ற ஆளுமைகளிடம் வந்து சேர்ந்தது. இருவரும் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்ட நிலையில் தமிழ்நாட்டின் சமூக அரசியல் வரலாற்றுப் போக்கை மாற்றி அமைத்த ‘பெரியார்-அண்ணா கலைஞரின்’ திராவிட சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வர சனாதன சக்திகள் திட்டமிட்டுக் காய் நகர்த்தின. அப்போது அவர்கள் ஒரு கருத்தைப் பரப்பினார்கள். “தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகி விட்டது; அதை நிரப்பக் கூடிய தலைமை இல்லை” என்ற குரல் தமிழகமெங்கும் ஒலித்தது. அதற்குப் பின்னால் மாபெரும் ‘சனாதனச் சதி’ பதுங்கியிருந்தது...

மாட்டிக்கிட்டாரு; அய்யரு மாட்டிக்கிட்டாரு : வி.பி.சிங் மீண்டும் பாடச் சொன்ன தலித் சுப்பையா பாட்டு

மாட்டிக்கிட்டாரு; அய்யரு மாட்டிக்கிட்டாரு : வி.பி.சிங் மீண்டும் பாடச் சொன்ன தலித் சுப்பையா பாட்டு

‘மாட்டிக்கிட்டாரு, அய்யரு மாட்டிக்கிட்டாரு’ என்ற பாடலை காஞ்சி ஜெயேந்திரன், சங்கர்ராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதையொட்டி தலித் சுப்பையா எழுதினார். இந்தப் பாடல் பிறந்த வரலாற்றை அவரது குழுவில் இடம் பெற்றிருந்த கார்த்திக் சென்னையில் நடந்த படத்திறப்பு நிகழ்வில் விளக்கினார். “2004ஆம் ஆண்டு எங்கள் குழு டெல்லிக்குப் பயணமானது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அப்போது டெல்லியில் இரட்டை வாக்குரிமை, தனியார் துறை இடஒதுக்கீடு சுய நிர்ணய உரிமைகள் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, 3 நாள் மாநாடு நடத்தினார். அம்மாநாட்டுக்கு நாங்கள் நிகழ்ச்சி நடத்தப் போனோம். பயணத்தில் சங்கராச்சாரி கைது பற்றிய செய்தி கிடைத்தது. உடனே இந்த ஜெயேந்திரனுக்கு ஒரு பாடல் எழுத வேண்டுமே என்று சுப்பையா கூறினார். அது குறித்து சிந்தனையில் மூழ்கினார். டெல்லிக்குப் போனவுடன் ஓர் இரவு முழுதும் கண் விழித்து, ‘மாட்டிகிட்டாரு; அய்யர் மாட்டிகிட்டாரு’ என்ற பாடலை எழுதி மெட்டும் போட்டார். அடுத்த நாள்...

நன்கொடை

நன்கொடை

தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி பிறந்தநாள் நிகழ்வில், 17.2.2022 அன்று ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு 50 சந்தாக்களுக்கான தொகை ரூ.12500/-ஐ கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம், திருவல்லிக்கேணி பகுதி தோழர்கள் வழங்கினர். பெரியார் முழக்கம் 24022022 இதழ்

விடை பெற்றார்; லெனின் சுப்பையா – உருக்கமும் உணர்வுமாய் நடந்த நினைவேந்தல்

விடை பெற்றார்; லெனின் சுப்பையா – உருக்கமும் உணர்வுமாய் நடந்த நினைவேந்தல்

மக்களிடம் ஜாதி, மதம் பார்ப்பனியத்துக்கு எதிரான பாடல்களை எழுதியும் இசையமைத்தும் தனது ‘விடுதலைக் குரல்’ கலைக்குழு வழியாக போரிசைப் பாடல்களை பாடி வந்த தலித் சுப்பையா, பிப். 16, 2022 அன்று புதுச்சேரியில் முடிவெய்தினார். இறுதி காலத்தில் தலித் சுப்பையா எனும் பெயரை லெனின் சுப்பையா என்று மாற்றிக் கொண்டார். ஜாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளான தலித் ஏழைக் குடும்பத்தில் மதுரை மாவட்டத்தில் பிறந்த அவர், தடைகளைத் தகர்த்து, கல்வி பயின்று, 1980களில் புதுச்சேரிக்கு குடியேறினார். தொடக்கக் காலத்தில் மார்க்சிய சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். அம்பேத்கர் நூற்றாண்டில் அம்பேத்கரிய பெரியாரிய சிந்தனைகளோடு புரட்சிப் பாடகரானார். பல நூறு பாடல்களை எழுதி, அவரே இசை அமைத்தார். தலித் சுப்பையா என்று தன்னை அடையாளப்படுத்தினார். பாடல் வரிகளில் அலங்காரங்கள் அழகுச் சொற்களைத் தவிர்த்து, வரலாறு களையும் சிந்தனைகளையும் பொதித்து வைத்தார். தனது இசை நிகழ்ச்சி மேடைகளை சிந்தனை மேடைகளாக்கினார்.  பெரியார் திராவிடர் கழகம், பிறகு திராவிடர்...

கழகத் தலைவரை இழிவுபடுத்திய தமிழச்சி, சாரதா, தாமரை டிவி மீது அவதூறு வழக்கு !

கழகத் தலைவரை இழிவுபடுத்திய தமிழச்சி, சாரதா, தாமரை டிவி மீது அவதூறு வழக்கு !

.கழகத் தலைவரை இழிவுபடுத்திய தமிழச்சி, சாரதா, தாமரை டிவி மீது அவதூறு வழக்கு ! திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் மீது அவதூறுகளை பரப்பி முகநூல், யூ டியூப் போன்றவைகளில் நேரலையாக பதிவிட்ட தமிழச்சி, சாரதா, தாமரை தொலைக்காட்சி மற்றும் யூ டியூப் மீது இந்திய தண்டனைச் சட்டம் 190 (i) (a) மற்றும் 200 ஆகிய பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கை, திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி பதிவு செய்துள்ளார். வழக்கை வழக்கறிஞர் திருமூர்த்தி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பெருநகர நீதிபதி முன்பு பதிவு செய்துள்ளார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம்,சில தனி நபர்கள் மீதான பாலியல் முறைகேடு குறித்து தான் புகார் அளித்ததாகவும், அந்தப் புகாரை கொளத்தூர் மணி விசாரிக்கவில்லை என்று கூறி அவர் குற்றவாளியை தப்பிக்க வைக்க முயற்சிப்பதாக தமிழச்சி என்பவர் எழும்பூர் நீதிமன்ற வாயிலில்...

காதலர் நாளில் குடும்ப விழா – மகிழ்வு கொண்டாட்டம் – ஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருதுகள்

காதலர் நாளில் குடும்ப விழா – மகிழ்வு கொண்டாட்டம் – ஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருதுகள்

காதலர் நாளை ஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருதுகள் வழங்கி குடும்ப விழாவாகக் கொண்டாடியது திராவிடர் விடுதலைக் கழகம். பிப். 14, காதலர் நாளையொட்டி ஜாதி மறுப்பு திருமணம் புரிந்த 14 இணையர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவை சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் மகிழ்ச்சி குதூகலமாக நடத்தியது. மாலை 5.30 மணியளவில் இராயப்பேட்டை இலாயிட்ஸ் சாலையில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் காதலைப் போற்றும் திரையிசைப் பாடல்களுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து புத்தக வாசிப்பு கவிதை அரங்கேற்ற நிகழ்வுகள் நடந்தன. ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கழகத் தோழர் ஜெயப் பிரகாஷ் ‘ஜாதியை மறுத்துப் பார்’ என்ற  அவரது கவிதையை வாசித்தார். தோழர் இரண்யா, “எது கலாச்சாரம்?” என்ற தலைப்பில் தமிழ்ச்செல்வன் எழுதிய நூலிலிருந்து சில பகுதிகளையும் தேன்மொழி, பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்’ நூலிலிருந்து பெரியார் தனது உறவுப் பெண்ணுக்கு மறுமணம் செய்து வைத்ததை விவரித்து பெண்களின் மறுமண...

தி.வி.க.வின் புதிய 52 மின்னூல்கள்

தி.வி.க.வின் புதிய 52 மின்னூல்கள்

பல்வேறு காலகட்டங்களில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாநாடுகள், பரப்புரைகள் மற்றும் பொதுக் கூட்டங்களில் தலைவர்களால் பேசப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த உரைகள் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் அவ்வப்போது எழுத்து வடிவில் வெளியிடுவது உண்டு. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் முழக்கம் இதழ்களில் வெளிவந்த பேச்சுக்கள் மற்றும் செய்திகளின் தொகுப்பு பல்வேறு தலைப்புகளில் திரட்டப்பட்டு இளைய தலைமுறை மீண்டும் பெரியாரியலை உள்வாங்கி கொள்ள கழகத் தலைமையின் வழிகாட்டுதலில் இணைய தளப் பிரிவு தோழர்களால் மின்னூலாக்கி பதிவேற்றி உள்ளோம். கீழுள்ள இணைப்பின் வாயிலாகவோ கழகத்தின் இணையதளத்திற்கு சென்று தேவையான புத்தகங்களை தரவிறக்கி படித்துக் கொள்ளலாம். மின்னூல்கள் தொகுப்பு திவிக வெளியீடுகள் பட்டியல் : அணுஉலையின் ஆபத்து –- திவிக வெளியீடு; இந்து ராஷ்டிரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை என்ன?  – அப்துல் சமது; இராஜராஜசோழனின் கதை என்ன – திவிக வெளியீடு; இளைய தலைமுறை பெரியாரை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? –...

நங்கவள்ளி ஆர்ப்பாட்டத்தில் கொளத்தூர் மணி கோரிக்கை மத நல்லிணக்க சீர்குலைவுத் தடுப்புச் சட்டம் தமிழ்நாட்டில் வரவேண்டும்

நங்கவள்ளி ஆர்ப்பாட்டத்தில் கொளத்தூர் மணி கோரிக்கை மத நல்லிணக்க சீர்குலைவுத் தடுப்புச் சட்டம் தமிழ்நாட்டில் வரவேண்டும்

நங்கவள்ளி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, 01.02.2022 செவ்வாய் மாலை 4 மணியளவில் தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியை சேர்ந்த பள்ளி மாணவி  தற்கொலையை காரணம் காட்டி தமிழகத்தில் பொது அமைதியைக் குலைக்கப் பொய்யான தகவல்களைப் பரப்பி வரும் மதவாத பா.ஜ.கவினரைக் கண்டித்தும், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையைக் கைது செய்யக் கோரியும் கண்டன ஆர்ப் பாட்டம் நங்கவள்ளி நகரத் தலைவர் த.கண்ணன் தலைமையில் நடை பெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். உரையில், “தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டி என்ற ஊரில் படித்த ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதையே ஒரு காரணமாக வைத்துக் கொண்டு, பொய்யான செய்திகளை திட்டமிட்டு பரப்புவதும், அதை சமூக நல்லிணக் கத்திற்கு எதிராகப் பரப்புவதும், சமூகப் பதற்றத்தை உருவாக்குகிற நோக்கத் தோடும், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சிக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி விளக்கம் (3) பெரியார் காண விரும்பியது மதமற்ற சமுதாயத்தைத் தான்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி விளக்கம் (3) பெரியார் காண விரும்பியது மதமற்ற சமுதாயத்தைத் தான்

ஜாதி இழிவு ஒழிய மதமாற்றம் குறித்துப் பேசினாலும் பெரியார் விரும்பியது மதம் அற்ற ஒரு சமுதாயத்தைத்தான் என்று கழகத் தலைவர் குடியாத்தம் நவம். 07, 2021இல் நடந்த நூல் ஆய்வுக் கூட்டத்தில் குறிப்பிட்டார். அவரது உரையின் தொடர்ச்சி. காந்தியுடன் பெரியார் உரையாடலை நடத்தினார். “இந்து மதத்தை திருத்தலாம் என்று கூறுகிறீர்கள். ஆனால், அதை பின் வருபவர்களும் செய்வார்களே, நீங்கள் அவர்களுக்கு (பார்ப்பனர்கள்) ஆதரவாக இருக்கும் வரை விட்டு வைத்திருக் கிறார்கள். கொஞ்சம் எதிராக திரும்பினாலும்கூட விட்டு வைக்க மாட்டார்கள்” என்று பெரியார் 1927இல் கூறினார். பின் அதுதான் நடந்தது. அப்படிப்பட்ட இந்து மதத்தின் மீது வருகிற கோபம், அதன் பின் வரும் காலங்களில் இந்து மதத்தின் தீமைகளை, சூழ்ச்சிகளை பதிவு செய்து வருகிறார். அரசியல் சட்டத்திலும் புகுந்து கொண்டதே என்றெல்லாம் கோபித்துக் கொண்டார். அதை யொட்டித்தான் சட்ட எரிப்புப் போராட்டத்தையே நடத்துகிறார். இதை காரணமாக வைத்து சிலர் அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் இடைவெளி...

முற்றுகை; இரயில் மறியல்; ஆர்ப்பாட்டங்கள் ஆளுநருக்கு எதிராகக் கழகம் போர்க்கோலம்

முற்றுகை; இரயில் மறியல்; ஆர்ப்பாட்டங்கள் ஆளுநருக்கு எதிராகக் கழகம் போர்க்கோலம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட’ நீட் விலக்கு’ மசோதாவை, திருப்பி அனுப்பிய,  ஆளுநரைக் கண்டித்தும், ஆளுநரை பதவி விலகக் கோரியும், கழக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. சென்னை : 04.02.2022 அன்று மாலை 4 மணியளவில் சென்னை சின்னமலை இராஜீவ் காந்தி சிலை அருகில், ஆளுநர் மாளிகை செல்லும் வழியில், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை இராசேந்திரன் : ஆர்ப்பாட்டத்தில், கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் செய்தியாளர் களிடத்தில், “நீதிபதி ஏ.கே இராஜன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஒரு குழுவை நியமித்து அந்தக் குழு நீட் தேர்வு குறித்து, பல மருத்துவர்களை, சமூகவியலாளர்களைக் கொண்டு ஆய்வு நடத்தி இந்த தேர்வு கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு எதிரானது என்று பரிந்துரை வழங்கியுள்ளது. ஆனால் ஆளுநர் கூறுகிறார், ‘இந்த நீட் தேர்வை இரத்து செய்தால், ஏழை எளிய மாணவர்களும், கிராமப்புற...

ஆளுனர் மாளிகை முற்றுகைப் போராட்டம்

ஆளுனர் மாளிகை முற்றுகைப் போராட்டம்

தமிழ் நாடு ஆளுனர் மாளிகை முற்றுகைப் போராட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இன்று 04.02.2022 வெள்ளி மாலை 4.00 மணிக்கு சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் தோழர் உமாபதி அவர்கள் தலைமையில் நடை பெற்றது. கழகப் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்டு தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல், தமிழ்நாட்டு சட்டமன்றத்தின் ‘நீட்’ விலக்கு மசோதாவை ஏற்காத ஆளுனரின் ஜனநாயக விரோத செயல்பாடுகளை கண்டித்து உரையாற்றினார். இளந்தமிழகம் அமைப்பின் தோழர் செந்தில்,கழக தலைமைக் குழு உறுப்பினர் தோழர் அன்பு தனசேகர், தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசி குமரன், சென்னை மாவட்டக் கழகத் தலைவர் தோழர் வேழவேந்தன் மற்றும் கழக நிர்வாகிகள்,தோழர்கள் ஏராளமாக பங்கேற்றனர்.

திருப்பூரில் இல்லத் திறப்பு நிகழ்வு

திருப்பூரில் இல்லத் திறப்பு நிகழ்வு

திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில்  கழகத் தோழர் மதன் இல்லத் திறப்பு விழா  20.01.2022 வியாழன் காலை 11.00 மணி அளவில் நடைபெற்றது. கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு முன்னிலையில்  நடைபெற்ற இத்திறப்பு விழா எந்தவிதமான பார்ப்பனப் பண்பாட்டுச் சடங்குகள், மூட நம்பிக்கைகள் சார்ந்த நிகழ்வுகளும் இன்றி மிக எளிமையாக நடைபெற்றது. குடும்பத்தின் குழந்தைகள் பெரியார் பிஞ்சுகள் மேகன் பிரபு, அஸ்வின் ஆகியோர் இல்லத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இல்லத் திறப்பின் மகிழ்வாக  மதன் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு வளர்ச்சி நிதியாக ரூ1000/= (ரூபாய் ஆயிரம் மட்டும்) மாவட்டத் தலைவர் முகில்ராசுவிடம் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகர அமைப்பாளர் முத்து , பரந்தாமன், விசய் – வீரலட்சுமி, மாரிமுத்து, அய்யப்பன், சந்தோஷ், சிரீசா, பிரபு-சுபாஷினி, கிஷோர், ஜெகன்-காயத்ரி, ராஜா, துரை, கௌரிசங்கர், திருமூர்த்தி, வினோத், யாழினி, யாழிசை ஆகியோர் கலந்து கொண்டனர்.  ...

கழக ஏட்டுக்கு 400 சந்தாக்கள் : மேட்டூர் வழி காட்டுகிறது

கழக ஏட்டுக்கு 400 சந்தாக்கள் : மேட்டூர் வழி காட்டுகிறது

சேலம் (மேற்கு) மாவட்ட மேட்டூர் கழகம் சார்பாக கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு முதல் தவணையாக 400 சந்தாக்களையும் அதற்குரிய கட்டணம் ரூபாய் ஒரு இலட்சத்தையும் மேற்கு மாவட்ட செயலாளர் கழகச் செயல் வீரர் ஜி. கோவிந்தராஜ் அனுப்பியுள்ளார்.  நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். மேட்டூரைப் பின்பற்றி, தோழர்களே, முழக்கம் சந்தா சேர்ப்பு இயக்கத்தைத் தீவிரப்படுத்துங்கள்! பெரியார் முழக்கம் 03022022 இதழ்

பெண் மருத்துவரின் நன்றி உணர்வு: பெரியார் தொண்டரின் உருக்கமான கடிதம்

பெண் மருத்துவரின் நன்றி உணர்வு: பெரியார் தொண்டரின் உருக்கமான கடிதம்

மேட்டுப்பாளையம் மூத்த பெரியார் தொண்டர் தி.வி.க. தோழர் பா. ராமச்சந்திரன் எழுதியுள்ள கடிதம். அன்புடையீர் வணக்கம், மேட்டுப்பாளையத்தில் பல் மருத்துவராக இருக்கும் டாக்டர் மனோன்மணி அவர்கள், என் வயது முதிர்வு காரணமாக கொள்கை உணர்வோடு உதவி வருகிறார். சிகிச்சைக்காக பல முறை கருப்புச் சட்டையுடன் செல்வேன். பெண் ஏன் அடிமையானாள்? பெண்களின் முன்னேற்றம் குறித்த சிறு சிறு பெரியார் எழுதிய நூல்களை வாசிக்கக் கொடுப்பேன் . அவர் ஆர்வமாக வாங்கிக் கொள்வார். கடந்த ஆண்டு நமது இயக்க காலண்டரைக் கொடுத்தேன் . பலரும் பார்க்கின்ற இடத்தில் வைத்தார். நான் பலமுறை பல் சிகிச்சைக்காக போகும்போது என்னிடம் பணம் வாங்குவதைத் தவிர்த்து விடுவார். கடைசியாக எனது கீழ் வரிசை பல்லை எடுத்து விட்டு புதியதாக பல் செட்டு வைக்க வேண்டிய நிலைமை வந்தது. அந்த சிகிச்சையும் சரி செய்து விட்டார். அதற்குரிய கட்டணத்தை வாங்க மறுத்து, உங்களைப் போன்ற மூத்த பெரியாரின் தொண்டருக்கு...

‘நீட்’ எதிர்ப்புப் போராட்டம்: கழகத் தோழர்கள் 12 பேர் மீதான வழக்கை இரத்து செய்தது உயர்நீதிமன்றம்

‘நீட்’ எதிர்ப்புப் போராட்டம்: கழகத் தோழர்கள் 12 பேர் மீதான வழக்கை இரத்து செய்தது உயர்நீதிமன்றம்

‘நீட்’ தேர்வில் வெற்றி பெறாத நிலையில் அனிதா உயிர்ப் பலி தந்ததைத் தொடர்ந்து ‘நீட்’ இரத்து கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னையில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் 2017இல் நடந்தது. தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் உமாபதி உள்ளிட்ட 12 பேர் மீது காவல்துறை பொது அமைதியைக் குலைத்ததாக வழக்கைப் பதிவு செய்தது. போராட்டம் – சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமைப்படித்தான் நடந்தது; சட்டம் ஒழுங்கு சீர்குலைவோ, பொது மக்களுக்கு இடையூறோ ஏதும் நிகழவில்லை என்று கழக சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி வாதிட்டார். நீதிபதி சதீஸ்குமார், வழக்கறிஞர் வாதத்தை ஏற்று 12 தோழர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை இரத்து செய்தார். பெரியார் முழக்கம் 03022022 இதழ்

கோ.இளவரசன்  நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு !

கோ.இளவரசன் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு !

கடந்த 05.01.2022 அன்று மறைந்த கழகத் தோழர் கோ. இளவரசன்  நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு, 20.01.2022 அன்று சென்னை சேத்துப்பட்டு கோ. இளவரசன் இல்லத்தில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் படத்தை திறந்து வைத்து, நினைவேந்தல் உரையாற்றினார். விடுதலை சிறுத்தைகள், இந்திய குடியரசுக் கட்சி, மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டு கோ. இளவரசனின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். இளவரசன் தனது மரணத்தின்போது எந்த சடங்குகளும் இடம் பெறக் கூடாது என்று தமது துணைவியாரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். 54 வயதில் துணைவரை இழந்த அவரது இணையர், உறவினர் எதிர்ப்புகளைப் புறந்தள்ளி எவ்வித சடங்குகளும் இன்றி இறுதி நிகழ்வுகளை கழகத் தோழர்களின் ஆதரவுடன் நடத்திக் காட்டினார். மறைவுச் செய்தி அறிந்த சென்னை மாவட்டக் கழகத் தோழர் களுடன் விரைந்து சென்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். துணைவர் படத் திறப்பு நிகழ்விலும்...

சூரங்குடியில் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

சூரங்குடியில் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் 01.01.2022 சனிக்கிழமை மாலை 06.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடியில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கழக இதழான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார இதழுக்கு சந்தா சேர்க்கவும் இம்மாதம் முழுவதும் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பிரச்சார இயக்கமாக நடத்திட வேண்டும் என்றும் கொரானா தொற்று தற்போது பெருகி வருவதால் தொற்று குறைந்ததும் சூரங்குடியில் கொள்கை விளக்க பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடத்திடவும், தீர்மானிக்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி, கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் தோழர்களுக்கு இதழ் சந்தா சேர்ப்பு அவசியம் மற்றும் நடைமுறை சிக்கல்களை எப்படி கையாள்வது பற்றியும் பெரியார் இயக்க கொள்கைகளை விளக்கியும் உரையாற்றினர். நிகழ்வை தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் சூரங்குடி...

சுயமரியாதை இணையேற்பு நிகழ்வு

சுயமரியாதை இணையேற்பு நிகழ்வு

கோமதி -ஆனந் பாபு ஆகியோரின் இணையேற்பு விழா 10.01.2022 அன்று  திருப்பூர் மாவட்ட கழகத் தலைவர் முகில் ராசு தலைமையில் நடைபெற்றது. கழக மாநகர தலைவர் தனபால். மாநகர அமைப்பாளர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாரிமுத்து, திலகவதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  திவிக சார்பில் கழகத் தோழர்கள்  நிகழ்வில் கலந்துகொண்டனர். இணையர்கள் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூபாய் 3000/- வழங்கினர். மதியம் மாட்டுக்கறி உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது. பெண் வீட்டார் சார்பாக அம்மா கர்ப்பகவள்ளி, தாத்தா முருகன், மாமா நல்லமுத்து, தம்பி லிங்கேசுவரன் நண்பர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 20012022 இதழ்

திருப்பூரில்  பயிலரங்கம்: பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் சிறப்புரை

திருப்பூரில் பயிலரங்கம்: பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் சிறப்புரை

திருப்பூர் மாநகர திராவிடர் விடுதலைக் கழக அமைப்பாளர் முத்து – வசந்தி இணையரின் மகன் வெற்றிமாறனின் இரண்டாமாண்டு பிறந்த நாள் விழா 07.01.2021 வெள்ளிக்கிழமை திருப்பூர் பொங்கு பாளையம் முத்துவின் இல்லமான  பெரியார் இல்லத்தில் நடைபெற்றது. காலை 11.00 மணியளவில் பிறந்த நாள் வாழ்த்து பாடல் ஒலிக்க வெற்றிமாறன் தனது பெற்றோர் உறவினர்களுடன் கேக் வெட்டினார். வெற்றிமாறனுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கேக் ஊட்டி தனது வாழ்த்தை மகிழ்வை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து வெற்றிமாறனின் பிறந்த நாளில் தோழர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொள்கையை கொண்டு சேர்க்கும் வகையில்  ‘விடுதலை’யின் குறியீடுகள் ‘பெரியார் – அம்பேத்கர்’ எனும் தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட தலைவர் முகில்ராசு தலைமை வகித்தார். வருகை தந்தோரை முத்து வரவேற்று உரையாற்றினார். திருப்பூர் ராமசாமி மற்றும் தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரைக்கு பின் கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் பயிலரங்கை நடத்தினார். நிறைவாக...

அர்த்தனாரி வாத்தியார் நூற்றாண்டு விழா மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழா

அர்த்தனாரி வாத்தியார் நூற்றாண்டு விழா மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழா

மறைந்த சேலம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் அர்த்தனாரி வாத்தியார் நூற்றாண்டு விழா, மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழா மற்றும் 39ஆம் ஆண்டு நினைவுதின பொதுக்கூட்டம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 05.01.2022 புதன் காலை 10.00 மணியளவில், நங்கவள்ளி ஒன்றியம் பெரியசோரகையில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி அடிக்கல் நாட்டும் நிகழ்சியில் பங்கேற்று நினைவு தின பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். முன்னதாக, புதுகை பூபாலம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா,திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் கே சுப்பாராயன் அவர்கள் மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றார்கள். நிகழ்ச்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்டம் ஒருங்கிணைத்திருந்தது. பெரியார் முழக்கம் 13012022 இதழ்

கழகத் தோழர் புதிய இல்லம்: சிற்பி ராஜன் திறந்து வைத்தார்

கழகத் தோழர் புதிய இல்லம்: சிற்பி ராஜன் திறந்து வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சாலை அனந்தபுரம் இராமநாதன் -சத்யா ஆகியோர் கட்டிய புதிய இல்லம் திறப்பு விழா 02-01-2022 அன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது. நிகழ்வுக்கு தி.வி.க தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் தலைமை வகித்தார். திராவிடன் அப்துல் மாலிக் வரவேற்புரையாற்றினார், விழுப்புரம் மாவட்ட செயலாளர் பெரியார் சாக்ரட்டீஸ், கழக மாவட்ட தலைவர் பூஆ.இளையரசன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் சேரன், விடாது கருப்பு நாத்திகன் ஆகியோர் வாழ்த்துரைக்கு பின் கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார் உரையாற்றினார். தொடர்ந்து, சிற்பி இராசன் இல்லத்தை திறந்து வைத்து சாமியார் களின் மோசடிகளை அம்பலப்படுத்தும் மந்திரமா? தந்திராமா? நடத்தி சிறப்புரை யாற்றினார்கள் இறுதியில் இராமநாதன் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுபெற்றது. இல்லத்திறப்பு நிழகழ்சியையொட்டி பெரியார் முழக்கம் வளர்ச்சி நிதியாக ரூ.1000 வழங்கினார்கள். நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பரப்புரை செயலாளர் விஜி, எழுச்சி திராவிடர்கள் அமைப்பாளர் விஜயகுமார், அனந்தபுரம் திமுக நகர செயலாளர்...

கழக ஏட்டுக்கு சந்தா சேர்க்க தீவிரம்: தென்காசி-நெல்லை மாவட்ட கலந்துரையாடல்

கழக ஏட்டுக்கு சந்தா சேர்க்க தீவிரம்: தென்காசி-நெல்லை மாவட்ட கலந்துரையாடல்

கீழப்பாவூரில் நடைபெற்ற தென்காசி, நெல்லை (ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் ) மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் 02.01.2022 ஞாயிறு காலை 10.30 மணியளவில் தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் நடைபெற்றது. இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கழகப் பொருளாளர் திருப்பூர்  சு.துரைசாமி தலைமை வகித்தார் நெல்லை மாவட்டத் தலைவர் பா.பால்வண்ணன் தென்காசி மாவட்டத் தலைவர் அ.மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் தோழர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டத்தின்நோக்கத்தை விளக்கிப் பேசினார். தோழர்கள் கழக இதழான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார இதழுக்கு சந்தா சேர்ப்பது குறித்தும் மாவட்டம் முழுவதும் இயக்கத்தைக் கொண்டு செல்ல பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இம்மாதம் முழுவதும் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்கு சந்தா சேகரிப்பு பணியாற்றுவது என்றும்  கொரானா தொற்று தற்போது பெருகி வருவதால் தொற்று குறைந்ததும்  கொள்கை விளக்கத் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடத் திடவும், குடும்ப விழா...

கூடங்குளம் அணுஉலைக் கழிவுகளை தமிழ்நாட்டில் புதைக்காதே – எச்சரிக்கை ஆர்ப்பாட்டம் ஜனவரி 31 2022

கூடங்குளம் அணுஉலைக் கழிவுகளை தமிழ்நாட்டில் புதைக்காதே – எச்சரிக்கை ஆர்ப்பாட்டம் ஜனவரி 31 2022

#அணுசக்தி_எதிர்ப்பு_மக்கள்_கூட்டமைப்பு_தமிழ்நாடு_ஆலோசனைக்_கூட்டம்_11_01_2022 இணையவழியில் ஒருங்கிணைப்பாளர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 2012 முதல் தோழர்கள் கொளத்தூர் மணி, கண.குறிஞ்சி, மீ.த.பாண்டியன், அரங்க. குணசேகரன், திருநாவுக்கரசு, பானுமதி, செந்தில்  ஆகியோர் ஒருங்கிணைக்கும் செயற்குழுவாக இயங்கி வந்தோம். தோழர்கள் சுப.உதயகுமார், தியாகு, கு.இராமகிருஷ்ணன், நெல்லை முபாரக், அப்துல்சமது, திருமுருகன், சுந்தர்ராஜன் ஆகிய தோழர்களையும் இணைத்து விரிவாக்கப்படுகிறது என்பது கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு ஏற்கப்பட்டது. பங்கேற்றவர்கள்: மதிமுக – மல்லை சத்தியா பச்சைத்தமிழகம் – சுப.உதயகுமார் தபெதிக – கு.இராமகிருஷ்ணன் சிபிஐ (எம்_எல்) – என்.கே.நடராசன், இரமேஷ். தமஜக – கே.எம்.சரீப் எஸ்.டி.பி.ஐ – அப்துல் ஹமீது பியூசிஎல் – கண.குறிஞ்சி ததேமமு – மீ.த.பாண்டியன் மே 17 – திருமுருகன் இளந்தமிழகம் – செந்தில் தமிழர் பாசறை – எழிலரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். #கூடங்குளம்_அணுஉலைக்_கழிவுகளை_தமிழ்நாட்டில்_புதைக்காதே! என இந்திய ஒன்றிய அரசை எச்சரித்து 31-01-2022 அன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத்...

நங்கவள்ளியில் கலை நிகழ்வுகளுடன் பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்

நங்கவள்ளியில் கலை நிகழ்வுகளுடன் பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்

நங்கவள்ளி நகரம் சார்பாக, 26.12.2021 ஞாயிறு மாலை 6 மணிக்கு தந்தை பெரியார் 48ஆவது நினைவு நாள் பொதுக்கூட்டம் நங்கவள்ளி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. கூட்டம் நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் தொடங்கியது. கூட்டத்தின் முதல் நிகழ்வாக மேட்டூர் டி.கே.ஆர் பகுத்தறிவு இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து ஆனந்த் குழுவினருடன் வீதி நாடகமும் நடைபெற்றது. நங்கவள்ளி திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் பிரபாகரன் வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில், சேலம் மாவட்ட அமைப்பாளர் நங்கவல்லி அன்பு, ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன், ஊஞஐ நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் முகம்மது ரயீஸ், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவர் பார்த்திபன் உரையாற்றினார்கள். இறுதியாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை நிகழ்த்தினார். இறுதியாக கண்ணன் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்திற்கு மேட்டூர், மேட்டூர் சுளு, கொளத்தூர், காவலாண்டியூர்,...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு வரலாற்றுப் பதிவுகளை நினைவூட்டும் கழக ஏட்டின் தலையங்கங்கள்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு வரலாற்றுப் பதிவுகளை நினைவூட்டும் கழக ஏட்டின் தலையங்கங்கள்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டின் தலையங்கங்கள் வரலாற்று ரீதியான பதிவுகளையும் கழக நிலைப்பாடுகளையும் நினைவூட்டுகின்றன என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார். டிசம். 24, 2021 அன்று சென்னையில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வுக்கு தலைமையேற்று, கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். அவர் உரையில் குறிப்பிட்டதாவது: திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறியவர்கள், வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் இணைந்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம் கட்டியமைக்கப் பட்டது. அப்போது, ‘பெரியார் காலத்து தமிழ் நாட்டை உருவாக்குவோம்’ என்பதைத் தான் இலட்சியமாக வைத்து தொடங்கினோம். பகுத்தறிவை முதன்மையாகக் கொள்ளாமல், ஜாதி ஒழிப்பை முதன்மையாகக் கொண்டு, கலந்து பேசி இந்த இயக்கத்தைத் தொடங்கினோம். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார், பெரியாரின் சுயமரியாதை இயக்க காலத்து சிக்கல்கள் வேறு, தற்போது சமுதாயத்தில் நிலவும் சிக்கல்கள் வேறு’ என்று அதுபோல  பெரியார் காலத்தில் மரண தண்டனை சிக்கல்கள் இல்லை. சுற்றுச் சூழல்...

பெரியார் சாக்ரடீஸ் தந்தை நினைவு நாளில் கழக ஏட்டுக்கு நன்கொடை

பெரியார் சாக்ரடீஸ் தந்தை நினைவு நாளில் கழக ஏட்டுக்கு நன்கொடை

விழுப்புரம் மாவட்ட செயலாளர் பெரியார் சாக்ரடீஸ் தந்தை  கோவிந்தசாமி முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 30.12.2021 அன்று, செஞ்சி அத்தியந்தல் சாக்ரடீஸ் இல்லத்தில் மாலை 5 மணியளவில் நடைபெற்றது. பெரியார் சாக்ரடீஸ் தனது தந்தையின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு நிகழ்விற்கு வரவேற்புரை யாற்றினார். நிகழ்விற்கு கழகத்தின் தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார் தலைமை வகித்தார். அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் சு. மழைமேணி பாண்டியன் படத்தை திறந்து வைத்தார். நிகழ்வில், திமுக ஒன்றிய செயலாளர் கலா நாராயணமூர்த்தி, பகுத்தறிவு பாடகர் காத்தவராயன், பெரியார் சிந்தனையாளர் நா. இராசநாயகம், திராவிடர் விடுதலைக் கழக விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.அ இளையரசன், மருத்துவர் தன்மானம் ஆகியோரின் நினைவேந்தல் உரையைத் தொடர்ந்து, கழகத்தின் தலைமைக் குழு உறுப்பினர் விழுப்புரம் ந.அய்யனார் நிறைவுரையாற்றினார். கழகத் தோழர் பரிமளா நன்றி கூறினார். நினைவேந்தலில், பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக, பெரியார் சாக்ரடீஸ் ரூ. 1000/-, அம்பேத்கர்...

பெரியார் பெரும் தொண்டர் வே.ஆனைமுத்து படத்திறப்பு -நினைவலைகள் வெளியீடு

பெரியார் பெரும் தொண்டர் வே.ஆனைமுத்து படத்திறப்பு -நினைவலைகள் வெளியீடு

பெரியாரிய பெரும் தொண்டர், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி நிறுவனர் வே.ஆனைமுத்து நினைவலைகள் வெளியீடு, படத்திறப்பு, கருத்தரங்கம், 02.01.2021 அன்று சென்னை நிருபர் சங்கத்தில் மாலை 3:30 மணியளவில் நடைபெற்றது. நிகழ்விற்கு, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வாலாசா வல்லவன் தலைமை வகித்தார். முதல் நிகழ்வாக, வே. ஆனைமுத்து உருவப் படத்தை, முன்னாள் திட்டக்குழு துணைத் தலைவர் மு.நாகநாதன் திறந்து வைத்து வே. ஆனைமுத்து அவர்களுடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். பின், நாடாளுமன்ற உறுப்பினர், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா நினைவு மலர் வெளியிட, திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பெற்றுக்கொண்டார். மலரை வெளியிட்டு உரையாற்றிய ஆ.இராசா, ‘காவியை வீழ்த்த அனைத்து கருப்புச் சட்டைகளும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்’ என்று உரையாற்றினார். இரண்டாவது அமர்வில், வே.ஆனைமுத்துவின் நினைவேந்தல் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்விற்கு, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் துரை...

300 தோழர்கள் பங்கேற்ற கிருட்டிணகிரி மாவட்டக் கலந்துரையாடல் எழுச்சி

300 தோழர்கள் பங்கேற்ற கிருட்டிணகிரி மாவட்டக் கலந்துரையாடல் எழுச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரத்தில் 15.12.2021 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் மாலை 5 மணியளவில் நடைபெற்றது. கலந்துரையாடலில் 20 உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டமும் நடைபெற்றது. நிகழ்விற்கு முன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர்களும், தளி, கெலமங்கலம், சூளகிரி ஒன்றிய பொறுப்பாளர்களும் வரவேற்றனர். ராயக் கோட்டை வட்டம் காடு செட்டிபட்டி சோதனை சாவடிக்கு வந்தடைந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களை சுமார் 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் அணிவகுத்து நின்ற மாவட்ட பொறுப்பாளர்கள் வாஞ்சிநாதன், குமார், கிருஷ்ணன், மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் அவரை வரவேற்று ராயக்கோட்டை, கெலமங்கலம், மத்திகிரி கூட்டு ரோடு வழியாக பேரணியாக ஓசூர் இரயில் நிலையம் வந்தடைந்தனர். ஓசூர் ரயில் நிலையத்தில் நகர பொறுப்பாளர்கள் ராஜ்குமார், சரவண குமார், ஜேக்கப் ஜேரிமையா, பிரவீன் ஏற்பாட்டில் சிறப்பான இசை முழக்கமிட்டு கழகத் தலைவரை வரவேற்றனர். பின்பு அருகில் உள்ள...

‘உண்ணாவிரதத்தை’ எதிர்த்து ‘உண்ணும் விருந்து’ பா.ஜ.க. உண்ணாவிரத மிரட்டலுக்கு ஈரோடு (கிழக்கு) மாவட்டக் கழகம் பதிலடி

‘உண்ணாவிரதத்தை’ எதிர்த்து ‘உண்ணும் விருந்து’ பா.ஜ.க. உண்ணாவிரத மிரட்டலுக்கு ஈரோடு (கிழக்கு) மாவட்டக் கழகம் பதிலடி

வாரணாசியில் காசி விசுவநாதன் கோயில் வாசலில் பங்கேற்றுப் பேசிய மோடியின் பேச்சை ஈரோடு கொடுமுடி கோவிலுக்குள் திரையிட்டுக் காட்ட வற்புறுத்திய பா.ஜ.க. உள்ளிட்ட மதவாத பிரிவுகளின் கோரிக்கைக்கு இடம் கொடுக்காத அறநிலையத்துறை அதிகாரிகளை தொடர்ச்சியாக பணி செய்ய விடாமல் பா.ஜ.க.வினர் தடுத்து வந்தனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேசுவரர் கோயிலில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதாக செயல் அலுவலர் உள்பட சிலர் மீது பாஜகவினர் புகார் அளித்தனர். இந்நிலையில் செயல்அலுவலர் ரமேஷ், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பாஜகவைச் சேர்ந்த சரஸ்வதி உள்பட சிலர் மீது புகார் தெரிவித்து கொடுமுடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இதற்கு எதிர்வினையாக பாஜக மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், ஆகம விதிகளுக்கு எதிராகச் செயல்பட்ட செயல்அலுவலர் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி வரும் 26 ஆம் தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் எனவும், அதற்குபிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநில தலைவர்...

கழகம் முன்னெடுத்த பெரியார் நினைவு நாள் நிகழ்வுகள்

கழகம் முன்னெடுத்த பெரியார் நினைவு நாள் நிகழ்வுகள்

சென்னை : பெரியாரின் 48ஆவது நினைவு நாள் நிகழ்வு 24.12.2021 அன்று காலை 8:30 மணியளவில் சென்னை இராயப்பேட்டை வி.எம். தெரு பெரியார் படிப்பகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. முதலாவதாக தோழர்கள் கிருத்திகா, லீலா ஆகியோர் பெரியாரின் சிலைக்கு, தோழர்களின் கொள்கை முழக்கங்களுடன் மாலை அணிவித்தனர். அருகில் அமைத்திருந்த பெரியார் நினைவு மேடையில், களப்பணியில் உயர்நீத்த, கண்ணா – குமார் உருவப் படத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்தார். பின் பெரியார் நினைவு நாள் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து, சிம்சன், தியாகராயர் நகர், எம்.ஜி.ஆர். நகர், கிண்டி, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்வில், தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர்கள் அய்யனார், அன்பு தனசேகர் ஆகியோர் உட்பட சென்னை கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்....

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கத் தொகுப்புகள் அய்ந்து தொகுதிகளாக வெளியிடப்பட்டது

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கத் தொகுப்புகள் அய்ந்து தொகுதிகளாக வெளியிடப்பட்டது

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார ஏட்டின் ஆசிரியர் விடுதலை இராசேந்திரன் எழுதிய தலையங்களின் நான்கு தொகுப்புகளும் கோடங்குடி மாரிமுத்து என்ற புனைப் பெயரில் அவர் எழுதிய நய்யாண்டி எழுத்துகள் ஒரு தொகுதியாகவும் 5 தொகுதிகளாக வெளி வந்துள்ளது. பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24ஆம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை நிருபர்கள் சங்க அரங்கில் நடந்த நிகழ்வுக்கு தென்சென்னை மாவட்டக் கழக செயலாளர் இரா. உமாபதி வரவேற் புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில கொள்கை வளர்ச்சிக் குழுத் துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் நூல்களை வெளியிட தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி பெற்றுக் கொண்டார். தொகுப்புகள் பற்றி மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சித் தோழர் வாலாஜா வல்லவன் அறிமுக உரையாற்றினார். விடுதலை இராசேந்திரன் ஏற்புரை நிகழ்த்தினார். தோழர்கள் மேடைக்கு வந்து தொகுப்புகளை திராவிடர் விடுதலைக் கழகத்...

ஈரோடு கொடுமுடி கோவில் பகுதியில் கழக நடவடிக்கை

ஈரோடு கொடுமுடி கோவில் பகுதியில் கழக நடவடிக்கை

ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் ஊழியர்கள் மீதும், அலுவலகர்களின் மீதும் தொடர்ச்சியாகப் போலியான புகார்களைத் தந்தும்.. பொய்யான குற்றாச்சாட்டுகளை அவர்கள்மேல் சுமத்தியும்.. ஓர் இழிவான அரசியலைத் தொடர்ச்சியாக செய்து வருகிறது பாஜக /இந்து மக்கள் கட்சி /இந்து முன்னனி மற்றும் அதன் துணை அமைப்புகள். இவர்களின் இந்த இழிவான அரசியலின் தொடர் நிகழ்வாக, நாளை கொடுமுடி மகுடேஷ்வரர் கோவில் நிர்வாகத்தைக் கண்டித்து உண்ணா விரதம் இருக்கப் போவதாக பாஜக கூடாரம் அறிவித்திருக்கிறது. போலியான குற்றச்சாட்டுகளின் மூலம் கோவில் பணியாளர்களுக்கும், அறநிலையத்துறைக்கும், அப்பகுதியில் வசிக்கிற மக்களுக்கும், வழிபாட்டுக்கு வந்து செல்கிறப் பயணிகளுக்கும் அநாவசியமான தொந்தரவுகளையும், இன்னல்களையும் ஏற்படுத்தும் முகமாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பாஜக கூடாரச் சங்கிகள் அறிவித்திருக்கின்றனர். இவர்களின் இந்த தொடர்ச்சியானப் பொய் பிரச்சாரங்களை முறியடிப்பதும், கோவில் பணியாளர்களும் அப்பகுதியைச் சார்ந்த மக்களும் ஓர் சுமூகமானச் சூழலுக்குள் வாழ்வதை தொடரச் செய்வதும் பெரியார் தொண்டர்களின் கடமையாகும். எனவே, பாஜக கூடாரத்தின்...

கரூர் மாவட்டத் தோழர்களின் சந்திப்பு

கரூர் மாவட்டத் தோழர்களின் சந்திப்பு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் கழக பொறுப்பாளர்கள் மாவட்ட வாரியான தோழர்கள் சந்திப்பின் நான்காம் கட்டமாக கரூர் மாவட்ட தோழர்கள் உடனான சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் 12.12.2021 மாலை 7.00 மணி அளவில் தெ.வெங்கிட்டாபுரம் முத்தமிழ் அரங்கில் நடைபெற்றது. தலைமைக் கழக பொறுப்பாளர்களின் பயணத்தின் நோக்கம் குறித்து அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி தொடக்கவுரையாற்றினார். தோழர்களை அறிமுகபடுத்தியும் கரூர் மாவட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக செயல்பாட்டையும் தொடர்ந்து நடைபெற உள்ள செயல்பாடுகள் குறித்தும் சின்னதாராபுரம் தோழர் சண்முகம் உரையாற்றினார். தொடர்ந்து தோழர்கள் உற்சாகமாக தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி பெரியார் முழக்கம் இதழின் அவசியம் குறித்தும் அதற்கு சந்தா சேகரிப்பது குறித்து விளக்கமளித்துப் பேசினார். நிறைவாக கழக பரப்புரைச்செயலாளர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பணிகள் குறித்தும் இந்த இயக்கத்தில் தோழர்கள் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் குறித்தும் தோழர்கள் ஒவ்வொருவரும்...

புத்தெழுச்சித் தந்த ஈரோடு தெற்கு மாவட்டத் தோழர்கள் சந்திப்பு

புத்தெழுச்சித் தந்த ஈரோடு தெற்கு மாவட்டத் தோழர்கள் சந்திப்பு

12.12.2021 ஞாயிறு அன்று காலை 11.00 மணியளவில் ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக தோழர்களுடனான தலைமைக் கழக பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் சித்தோடு பகுதியில் உள்ள மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு மாவட்டச் செயலாளர் எழிலன் சுந்தரம் தலைமை வகித்தார். ஆசிரியர் ப.சிவக்குமார் கடவுள் மறுப்பு கூற நிகழ்வு தொடங்கியது. நிகழ்வின் தொடக்க வுரையாக கழக அமைப்புச் செயலாளர் ப.இரத்தினசாமி உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அனைத்து தோழர்களும் தங்கள் கருந்துகளை தெரிவித்தனர். ‘புரட்சி பெரியார் முழக்கம்’ சந்தா சேர்ப்பு, கழக செயல்பாட்டினை வீரியப்படுத்துவது, புதிய தோழர்களை / இளைஞர்களை உருவாக்கி, பெரியாரியல் சித்தாந்தத்தைப் பயிற்றுவித்து களத்தில் செயல்பட வைப்பது போன்றவைக் குறித்து கருந்து தெரிவித்து விவாதித்தனர். அதனைத் தொடர்ந்து கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி கிராமபிரச்சாரம் கொண்டு செல்வது குறித்தும் சிக்கல்கள் வராமல் பிரச்சாரம் செய்திட ஆலோசனை வழங்கினார். நிறைவாக கழக...

சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

சென்னை மாவட்டத்தின் கலந்துரையாடல் கூட்டம், 11.12.2021 அன்று மாலை 6 மணியளவில், திவிக தலைமையகத்தில், மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடலில் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு கூடுதல் சந்தா சேர்ப்பது, கழகத்தின் அடுத்தக் கட்ட பணிகள், வரும் டிசம். 24இல் தந்தை பெரியார் நினைவு நாளில் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தின் தலையங்கத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வை நடத்துவது போன்றவை குறித்து விரிவாகப் பேசப்பட்டது. கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். நிகழ்வில், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், அன்பு தனசேகர் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். இறுதியாக கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தோழர்களின் சில கேள்விகளுக்கு பதில் கூறியும், கழகத்தின் செயல்பாடுகள், திராவிடர் இயக்கத்தின் தேவை குறித்தும் விரிவாக உரையாற்றினார். பெரியார் முழக்கம் 16122021 இதழ்

கழக ஏட்டுக்கு சந்தா: கழகக் கிளைகள் தீவிரப் பணி

கழக ஏட்டுக்கு சந்தா: கழகக் கிளைகள் தீவிரப் பணி

கொளத்தூர் : 04.12.2021 சனி மாலை 5.30 மணியளவில், கொளத்தூர் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் தலைமையிலும், மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்களாகக் கீழ்க்கண்ட தோழர்கள் நியமிக்கப்பட்டனர். கொளத்தூர் நகரம்: நகரத் தலைவர் -இராமமூர்த்தி, நகரச் செயலாளர் – பா.அறிவுச்செல்வன், பொருளாளர் – சூ. இனியன், காவலாண்டியூர் கிளைக் கழகத் தலைவர் – இராசேந்திரன், துணைத் தலைவர் – சேகர், செயலாளர் – தங்கராசு, இணைச் செயலாளர் – சந்தோஷ், பொருளாளர் – சின்ராசு, உக்கம்பருத்திக்காடு செயலாளர் – செல்வம், ஒருங்கிணைப்பாளர்கள் – கோமதி, சித்ரா, ஒன்றிய குழு ஒருங்கிணைப்பாளர்கள் – சித்துசாமி, விஜயகுமார், ஒருங்கிணைப்பு குழு தோழர்கள் – சுதா, இளவரசன், சுரேஷ், சக்தி குமார், இளைஞர் குழு ஒருங்கிணைப்பாளர் – செல்வேந்திரன், இளைஞர் குழு தோழர்கள் – சூ. இனியன், பா.அறிவுச்செல்வன், சந்தோஷ், இராமன்,...

மதுரையில் சிறப்புடன் நடந்த சட்ட எரிப்பு நாள் கருத்தரங்கம்

மதுரையில் சிறப்புடன் நடந்த சட்ட எரிப்பு நாள் கருத்தரங்கம்

மதுரை மாவட்ட திவிக சார்பில் ஜாதியை பாதுகாக்கும் சட்ட எரிப்பு நாள் கருத்தரங்கம்  29.11.2021 அன்று மாலை 5 மணியளவில் காஸ்மோபாலிட்டன் உணவகத்தில் மடத்துக்குளம் மோகன் நினைவு அரங்கில் நடைபெற்றது. வில்லாபுரம் பகுதி செயலாளர் செந்தில்நாதன் வரவேற்புரை யாற்றினார். மாவட்ட கழகக் காப்பாளர் தளபதி,  மாவட்ட தலைவர் காமாட்சி பாண்டி, மாநகர் தலைவர் திலீபன் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மா.பா. மணி அமுதன் தலைமை தாங்கினார். ‘பிற்படுத்தப்பட்டோர் உரிமையும் திராவிடர் இயக்கமும்’ என்ற தலைப்பில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் பசும்பொன். பாண்டியன் உரையாற்றினார். ‘தமிழ் தேசிய இலக்கும் தடுமாற்றங்களும்’ என்ற தலைப்பில் தமிழ்மண் தன்னுரிமை இயக்கத்தின் நெறியாளர் பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவு எரிப்பு போராட்டங்களையும் பெரியார் தொண்டர்களின் தியாகத்தையும் விளக்கி கழக தலைவர் கொளத்தூர் மணி விரிவாக கருத்துரையாற்றினார். புலிப்பட்டி பொறுப்பாளர்...

கழகப் பொறுப்பாளர்கள் மூன்றாம் கட்ட பயணம்: கழக ஏட்டுக்கு  சந்தா சேர்ப்பதில் தோழர்கள் ஆர்வம்

கழகப் பொறுப்பாளர்கள் மூன்றாம் கட்ட பயணம்: கழக ஏட்டுக்கு சந்தா சேர்ப்பதில் தோழர்கள் ஆர்வம்

மூன்றாம் கட்ட பயணமாக 1, 2, 3.12.2021 ஆகிய தேதிகளில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி பரப்புரைச் செயலாளர் பிரபாகரன் தலைமைக் குழு உறுப்பினர் விழுப்புரம் அய்யனார் ஆகியோர் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களிடத்தில் கலந்துரையாடினர். தர்மபுரியில் 1.12.2021 அன்று காலை 11 மணி அளவில் பி அக்கரகாரம் நஞ்சப்பன் இல்லத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் வேணுகோபால், சந்தோஷ்,பரமசிவம் உள்பட பல பகுதிகளில் இருந்து தோழர்கள் பங்கேற்றனர் கழக செயல்பாடுகள் மற்றும் அரசு செயல்பாடுகள் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள புரட்சிப்பெரியார் முழக்கம் பெரும் உதவியாக இருந்தது என்றும், இந்த ஆண்டு கூடுதல் சந்தா சேர்ப்போம் என்றும் தோழர்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் சிகர்ந்தப்பள்ளி மாவட்டச் செயலாளர் குமார் இல்லத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர்கள் ப.வாஞ்சிநாதன், குமார், கிருஷ்ணன் உள்பட 35 தோழர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர் மாவட்ட கழக...

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழக சார்பில் மாலை அணிவிப்பு

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழக சார்பில் மாலை அணிவிப்பு

அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில், 06.12.2021 அன்று காலை 9 மணியளவில் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், அம்பேத்கர் மணிமண்டபத்தில் மாலை அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மயிலாப்பூர் சுண்ணாம்பு கால்வாயில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அடுத்து, இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர் படத்திற்கு தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார் மாலை அணிவித்தார். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்ட செயலாளர் உமாபதி, வட சென்னை யேசுகுமார், மயிலை சுகுமார், இராவணன், மனோகர் ஆகியோர் உட்பட சென்னை கழக தோழர்கள் கலந்து கொண்டனர். திருப்பூரில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 65ஆவது நினைவு நாள் நிகழ்வு திருப்பூர் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் கடைபிடிக்கப்பட்டது. 06.12.2021 அன்று காலை 10.00 மணியளவில் திருப்பூரில் அமைந்துள்ள புரட்சியாளரின் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கழகத் தோழர்கள்...

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஆண்டுக் கட்டணம் ரூ.250 ஆக உயர்வு

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஆண்டுக் கட்டணம் ரூ.250 ஆக உயர்வு

காகித விலை, அச்சுக்கான செலவுகள் அதிகரித்து விட்டதால், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஆண்டுக் கட்டணம் ரூ.250/- ஆக  தவிர்க்க இயலாத நிலையில் உயர்த்தப்படுகிறது. வாசகர்கள் தொடர்ந்து ஆதரவை வழங்குமாறு கேட்டுக்  கொள்கிறோம். – நிர்வாகி, ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’   பெரியார் முழக்கம் 09122021 இதழ்

அ.பி. அறிவுமதி ரூ.10,000/- நன்கொடை, நாத்திக ஜோதி மகேசுவரி ரூ.5,000/- நன்கொடை

அ.பி. அறிவுமதி ரூ.10,000/- நன்கொடை, நாத்திக ஜோதி மகேசுவரி ரூ.5,000/- நன்கொடை

அ.பி. அறிவுமதி ரூ.10,000/- நன்கொடை ஈரோடு கொங்கம்பாளையம் பிரகாஷ் -அமுதா இணையரின் மகன் அ.பி. அறிவுமதி, தனது முதல் மாத சம்பளமான ரூ.10,000/-ஐ கழக வளர்ச்சி நிதியாக 26.11.2021 அன்று மாலை சித்தோட்டில் அரசியல் சட்ட எரிப்பு போராட்ட நாள் கருத்தரங்கில் கழகத் தலைவரிடம் வழங்கினார். நாத்திக ஜோதி மகேசுவரி ரூ.5,000/- நன்கொடை ஈரோடு வடக்கு மாவட்ட தி.வி.க. தலைவர் ஜோதி முருகன் என்கிற க. நாத்திகஜோதி மகேசுவரி, 39ஆவது திருமண நாள் மகிழ்வாக கழக வளர்ச்சிக்கு ரூ.5000/- நன்கொடை வழங்கினார். (நன்றியுடன் பெற்றுக் கொண்டோம்) பெரியார் முழக்கம் 02122021 இதழ்