Category: பெரியார் முழக்கம் 2022

கொளத்தூர் மணி 75ஆவது பிறந்த நாள் குடும்ப விழாவாக நடந்தது

கொளத்தூர் மணி 75ஆவது பிறந்த நாள் குடும்ப விழாவாக நடந்தது

கிராமப் பிரச்சாரங்கள், கழகத்  தோழர் சந்திப்புக் கூட்டங்களை அதிகரிக்க கழகத் தலைவர் வேண்டுகோள் சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் மற்றும் குடும்ப விருந்து நிகழ்ச்சி மேட்டூர் தூய மரியன்னை சமுதாயக் கூடத்தில்  கொளத்தூர் மணி தலைமையில் தொடங்கியது. கலந்துரையாடல் கூட்டத்தில் சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக நகர, கிளைக் கழக, ஒன்றியப் பொறுப்பாளர்களும் தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பொறுப்பாளர்களும், தோழர்களும் கழகத் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும், இயக்க வளர்ச்சி குறித்து தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர். கலந்துரையாடல் கூட்ட இடைவேளையில் கழகத் தலைவருக்கு 75ஆவது பிறந்த நாள் விழா கேக் வெட்டப்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதன் பின்பு தலைவருக்கு சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ரூ.75,000/- வழங்கப்பட்டது. பிறகு குடும்ப விருந்து நிகழ்வு மதியம் 2.00 மணிக்கு நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்ட...

அன்று குலக் கல்வி; இன்று தேசியக் கல்வி குலக் கல்விப் போராட்ட வரலாறு என்ன? மு. செந்திலதிபன்

அன்று குலக் கல்வி; இன்று தேசியக் கல்வி குலக் கல்விப் போராட்ட வரலாறு என்ன? மு. செந்திலதிபன்

ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை காங்கிரசுக்குள் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், செங்கல்வராயன், பத்திரிகையாளர் டி.எஸ். சொக்கலிங்கம் மற்றும் ஜி.டி. நாயுடு, ஜெ.சி. குமரப்பா எதிர்த்தனர். ‘கல்கி’ ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியும் ம.பொ.சி.யும் ஆதரித்தனர். கோவை காரமடையில் தேசியக் கல்வியை யும் குலக் கல்வியையும் ஒப்பிட்டும் குலக் கல்வி எதிர்ப்பு வரலாற்றை விளக்கியும் பொறியாளர் மு. செந்திலதிபன் ஆற்றிய உரை. இராஜகோபாலாச்சாரி – தன்னிச்சையாகக் கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் எழுந்த போராட்ட வரலாறு மற்றும் அரசியல் சூழலை விளக்கு கிறார். 5ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் தொழில் படிப்புக்குச் செல்ல வேண்டுமாம். 10 வயதில் தந்தை தொழிலை தானே கற்றுக் கொள்ள தள்ளப்படுவார்கள். அதற்கு அரசே குழந்தைகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் தொழிற்பயிற்சி அளிக்கப்படும். எப்போது? 10 வயதில் அப்பன் தொழிலை பிள்ளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆச்சாரியார் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தையே புதிய கல்விக் கொள்கையில்...

இயந்திரமுறைத் தொழில் தேவையே !

இயந்திரமுறைத் தொழில் தேவையே !

கால்கள் இருக்க, கட்டை வண்டிகள் இருக்க இயந்திரத்தின் மூலமாய்த்தான் – அதாவது இரயில் மூலம் பிரயாணம் செய்தோம்; மோட்டாரில் பிரயாணம் செய்தோம்; ஆகாயக் கப்பலிலும் பிரயாணம் செய்தோம்; அவைகளையே எல்லா மக்களும் போக வரப் போக்குவரத்துச் சாதனமாக்கவும் ஆசைப்படுகிறோம்; மற்றவர்களும் ஆசைப்படுகிறார்கள். ஆகவே, இதை மனிதத் தன்மையுடன் கூடிய குற்றமற்ற இயற்கை உணர்ச்சி என்று தான் சொல்ல வேண்டுமே தவிர, இது எவ்விதக் குற்றமுள்ளதும், அநியாயமானதும் என்று சொல்லி, இதற்காக யாரையும் கண்டிக்கவும் முடியாது. ஜீவ சுபாவமே ஆசையின் உருவமாகும். ஆகவே, இயந்திரம் வேண்டாம் என்பது இயற்கையோடும் முற்போக்கோடும் போராடும் ஒரு அறிவீனமான பிற்போக்கான வேலையாகுமே தவிர, மற்றபடி பயனுள்ள வேலையாகாது. குடி அரசு – 14.12.1930 பெரியார் முழக்கம் 23062022 இதழ்

வினா – விடை

வினா – விடை

அ.தி.மு.க. பொதுக் குழுவுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு வழக்கு. – செய்தி அதெல்லாம் கலவரம் செய்கிறவர்களை ஜெயக்குமாரே பாத்துக்குவார்; சட்டையைக் கழற்றி பின்னால் கைகளைக் கட்டி மண்டபத்தை விட்டே வெளியே தளளிடுவாரு. சாமி சிலைகளை மியூசியங்களில் வைக்கக் கூடாது. – முன்னாள் அய்.ஜி. மாணிக்கவேல் ‘சாமி’களே வெளிநாட்டு மியூசியங்களுக்கு பயணமாகும்போது, நாம் என்ன சார், செய்ய முடியும்? சொல்லுங்க… கிராமங்களில்தான் நமது பண்பாடே உயிருடன் இருக்கிறது. – ஆளுநர் ரவி அதற்கு ஆளுநர் மாளிகையில் நமது அரசியல் பண்பாடு குழி தோண்டி புதைக்கப்படுவதையும் சேர்த்துச் சொல்லுங்க. ‘பிராமணர்’களை இழிவுபடுத்துவது தொடர்ந்தால், போராடத் தயங்க மாட்டோம். – பிராமணர் சங்கத் தலைவர் ஆடிட்டர் கணேசன் ஆமாம்; நீங்கள் தானே போராட வேண்டும். கடவுளா, உங்களுக்காகப் போராடுவார்? அவர் ‘கல்லாக’த்தான் இருப்பார். 4 ஆண்டுகளுக்குப் பின் ‘அக்னி வீரர்கள்’ முடிவெட்டலாம்; வாட்ச்மேன் ஆகலாம். – ஒன்றிய அமைச்சர் கிஷன்ரெட்டி இதுக்கெல்லாம் கூட இராணுவப் பயிற்சி...

‘இந்து’ சமூகத்தைப் பற்றிக் கவலைப்படாத பா.ஜ.க.வினர், சர்வசக்தி ‘இந்து’ கடவுளுக்காகக் கூப்பாடு போடுவது ஏன்?

‘இந்து’ சமூகத்தைப் பற்றிக் கவலைப்படாத பா.ஜ.க.வினர், சர்வசக்தி ‘இந்து’ கடவுளுக்காகக் கூப்பாடு போடுவது ஏன்?

இந்த செய்தியை படித்தவுடனேயே நெஞ்சம் பதறிப்போனது. கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தில் இது நடந்திருக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த சரண்யா நர்சிங் படித்தவர். சென்னை தனியார் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் உடன் பணியாற்றுகிற வேறு ஜாதியைச் சேர்ந்த மோகன் என்பவரைக் காதலித்திருக்கிறார். திருமணத்தை சரண்யா சகோதரர் ஏற்றுக் கொள்ளவில்லை. இருவரும், அய்ந்து நாட்களுக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். சரண்யாவின் உடன் பிறந்த அண்ணன் இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டது போல் நடித்து, தனது வீட்டிற்கு விருந்திற்கு வருமாறு அழைத்திருக்கிறார். அண்ணனுடைய பாசத்திற்கு மயங்கி தங்கையும் வந்திருக்கிறார். விருந்து3 முடிந்து ஊருக்கு கிளம்பும் போது, வீட்டின் வாசலிலேயே வைத்து தங்கையையும், தங்கையின் கணவர் மோகனையும், திருமணமான அய்ந்தே நாட்களில் வெட்டி சாய்த்திருக்கிறான் உடன் பிறந்த சகோதரன். இரண்டு பேருமே இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். ஆனாலும், இந்து மதத்தின் ‘ஜாதி வெறி’யும் ஆண் ஆதிக்கத் திமிரும் இவர்களின் இரத்தத்தை பலியாக கேட்டிருக்கிறது....

தலையங்கம் நாட்டை எரிய வைக்கிறது, ‘அக்னிபாத்’

தலையங்கம் நாட்டை எரிய வைக்கிறது, ‘அக்னிபாத்’

குலக் கல்வித் திட்டத்தை தன்னிச்சையாகத் திணித்த இராஜ கோபாலாச்சாரி, இராமானுஜர் யாரைக் கேட்டு தனது சித்தாந்தத்தை உருவாக்கினார் என்று திமிரோடு கேட்டதுதான் நினைவுக்கு வருகிறது. மோடியின் அக்னி பாத் என்ற இராணுவத்துக்கு ஒப்பந்த  அடிப்படையில் ஆள் சேர்க்கும் திட்டத்தை இராஜாஜி, ஹிட்லர் பாணியில் கொண்டு வந்தார். இப்போது திரும்பிப் பெற முடியாது என்று திமிரோடு பேசுகிறது, ஒன்றிய ஆட்சி; நாடே பற்றி எரிகிறது. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளோடு (அதையும் முடிக்காத நிலையில்) கற்றலுக்கு மூடு விழா நடத்தும் வடநாட்டு இளைஞர்கள் பெரும்பாலும் நம்பி இருக்கும் ஒரே வேலை வாய்ப்பு இராணுவத்தில் அடிமட்ட சிப்பாய்கள் அல்லது சேவை செய்யும் பணியாட்கள் வேலை தான். அவர்களின் ஒற்றை வேலை வாய்ப்பையும் குலைக்கும்போது பதற்றமும் எதிர்ப்பும் பற்றிக் கொண்டு விட்டது. 2016-2019 நிலவரப்படி, இராணுவத்தில் சேருவதில் இந்தியா விலேயே முதலிடம் வகிப்பது உ.பி. (18,906 பேர்), தமிழ்நாடு, அந்தமான், புதுச்சேரி மற்றும் நேபாளத்தைச் சேர்த்து...

இயக்க வளர்ச்சி – தீவிர கொள்கைப் பரப்பலுக்கான திட்டங்களை விவாதித்தது, கழகத் தலைமைக் குழு

இயக்க வளர்ச்சி – தீவிர கொள்கைப் பரப்பலுக்கான திட்டங்களை விவாதித்தது, கழகத் தலைமைக் குழு

17.6.2022 அன்று திருப்பூரில் கழகப் பொருளாளர் துரைசாமி இல்ல வளாகத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் பகல் 11.30 மணியளவில்  தொடங்கியது. 17 உறுப்பினர் களில் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் உட்பட 14 பேர் பங்கேற்றனர். இயக்க செயல்பாடுகள், ‘நமக்கான அடையாளம் திராவிட மாடல்’ என்ற தலைப்பில் நடந்த வீதிக் கூட்டங்கள், மண்டல மாநாடுகள், எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து உறுப்பினர்கள் பலரும் கருத்துகளைத்  தெரிவித்தனர். மாலை 7 மணி வரை கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன. கழகத்தின் தொடக்க நாளான ஆகஸ்டு 12ஆம் தேதி ஆண்டுதோறும் பரப்புரைப் பயண நிறைவு மாநாடாக இதுவரை நடத்தப் பட்டது. கொரானா காரணமாக கடந்த இரண்டாண்டுகளாக பயணங்கள் நடத்த முடியவில்லை. 2022, ஆகஸ்டு 12 – கழகம் தொடங்கி 10ஆம் ஆண்டு நிறைவு பெறுவதால், 10 ஆண்டு நிறைவு விழாவோடு...

‘பீமா கோரே கான் – எல்கர் பரிஷத் வழக்கு: சிறைப்படும் நீதி’ நூல் வெளியீடு

‘பீமா கோரே கான் – எல்கர் பரிஷத் வழக்கு: சிறைப்படும் நீதி’ நூல் வெளியீடு

‘பீமா கோரே கான் – எல்கர் பரிஷத் வழக்கு: சிறைப்படும் நீதி’ நூல் வெளியீட்டு நிகழ்வு, 11.06.2022 மாலை 5.30 மணியளவில் சென்னை தியாகராயர் அரங்கத்தில் நடை பெற்றது. பீமா கோரே கான் அரசியல் சிறைப்பட்டோர் விடுதலைக் குழு ஏற்பாடு செய்த இந்த நிகழ்வுக்கு பேராசிரியர் சரசுவதி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் து. ராசா நிகழ்வில் பங்கேற்று நூலை வெளியிட்டுப் பேசினார். தமிழ்நாடு சிறுபான்மை நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு குடியரசு கட்சித் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செ.கு. தமிழரசன், வன்னி அரசு (வி.சி.க. துணைப் பொதுச் செயலாளர்) மற்றும் தி.வி.க. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர்கள் கருணானந்தம், அ. மார்க்ஸ், சிவக்குமார், நெல்லை முபாராக் (எஸ்.டி.பி.அய்), நாகூர் மீரான் (பி.எஃப்.அய்.), வழக்கறிஞர் ப.பா. மோகன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றுப் பேசினர். முன்னதாக விரட்டுக் கலையைச் சார்ந்த...

தோழர்தமிழரசு நினைவேந்தல்

தோழர்தமிழரசு நினைவேந்தல்

பெரியார் தொண்டர், கழக களப்பணியாளர் கோ.தமிழரசு இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு 11.06.22 அன்று காலை 9.00 மணியளவில் நடைபெற்றது. மயிலாப்பூர் பெரியார் படிப்பகத்தில் அறிவரசுவின் நினைவுகள் பகிரப்பட்டு கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டு அறிவரசு  படத்திற்கு கழகத் தோழர் இரண்யா மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து 9:30 மணியளவில் இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், அறிவரசு படத்திற்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்வுகளில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார், மாவட்டத் தலைவர் வேழ வேந்தன், மாவட்ட செயலாளர் இரா.உமாபதி உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 16062022 இதழ்

மருத்துவர்கள் தமிழரசி-அ.கிருபாகரன் ஜாதி மறுப்பு மணவிழா

மருத்துவர்கள் தமிழரசி-அ.கிருபாகரன் ஜாதி மறுப்பு மணவிழா

கழகத் தோழர் சி.சிகாமணி – ச.மோகனம்பாள் இணையரின் மகள் மருத்துவர் சி.தமிழரசி – மருத்துவர் அ.கிருபாகரன் ஆகியோரது இணையேற்பு நிகழ்வு 08.06.2022 அன்று மாலை 7 மணியளவில், வேப்பேரி ரித்திங்டன் சாலையில் உள்ள லுஆஊஹ கட்டடத்தில் நடைபெற்றது. புத்தர் கலைக்குழுவின் பறை இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கோவன் தலைமையில் மக்கள் கலை இலக்கிய கழக மைய கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்விற்கு, மக்கள் அதிகாரம் ப.வினோத் வரவேற்பு கூறினார். சேத்துப்பட்டு க.இராசேந்திரன் முன்னிலை வகித்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று வாழ்க்கை இணையேற்பை நடத்தி வைத்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்,  முனைவர் தொல்.திருமாவளவன், கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர், சமூகநீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப.வீரபாண்டியன், தமிழ்நாடு தலைமை செயலக ளுஊ/ளுகூ நலச்சங்கம் மீனலோசனி, ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன்,...

முனைவர் ஜெயரஞ்சன் கேள்வி திராவிட மாடலை எதிர்ப்பவர்கள் ஆரிய மாடலை ஆதரிக்கிறோம் என்று கூறத் தயாரா?

முனைவர் ஜெயரஞ்சன் கேள்வி திராவிட மாடலை எதிர்ப்பவர்கள் ஆரிய மாடலை ஆதரிக்கிறோம் என்று கூறத் தயாரா?

இந்தியாவிலே மாநில அரசு குடிநீர் வாரியம் தொடங்கியது கலைஞர் ஆட்சியில் தன். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், வருமான இலக்கு இல்லாமல் அனைவருக்கும் ரேஷன் கார்டு திட்டங்களை அமுலாக்கியதும் தமிழ்நாடு தான் – என்றார் முனைவர் ஜெயரஞ்சன். திராவிட மாடல் பயிற்சிப் பாசறை தொடக்க விழா 5.6.2022 அன்று கலைஞர் அரங்கில் நடந்ததது. திட்டக் குழு துணைத் தலைவர் முனைவர் ஜெயரஞ்சன் பங்கேற்று ஆற்றிய உரையின் தொடர்ச்சி: அடுத்ததாக நீர்ப் பாசனத்தை எடுத்துக் கொண்டால், குடிநீராக இருக்கட்டும்; பாசனத் திற்கான நீராக இருக்கட்டும்; இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் குடிநீர் வடிகால் வாரியத்தைத் தொடங்குகிறார். ஏனென்றால், அன்று குடிநீர் கிடைப்பதே மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. எங்கெல்லாம் குடிநீர் தட்டுப்பாடு இருந்ததோ, ஆழ்குழாய் கிணறுகளின் மூலமாக டாங்குகளில் தண்ணீர் ஏற்றி, எல்லோருக்கும் குடிக்க தண்ணீர் கிடைக்க வழி செய்தார். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், எல்லா ஊர்களிலும் தண்ணீர் ஒரே மாதிரியாக இருக்காது. சில ஊர்களில்...

போராடாமல் இருக்க முடியாது

போராடாமல் இருக்க முடியாது

கடவுள், மத உணர்ச்சியானது மக்களின் சுதந்திரத்திற்கும், சமத்துவ வாழ்விற்கும், இவ்வளவு இடையூறுகளுக்கும், தாரதம்மியங்களுக்கும் இடந்தராதிருக்குமானால் – நான் அவைகளைப் பற்றி இவ்வளவு கவலை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. கடவுள், மதப் பிரச்சாரத்தின் பேரால் வயிற்றுப் பிழைப்பு நடத்துபவர்களின் பரிதாபத்திற்காகவாவது நான் சும்மா விட்டுவிடுவேன் என்பதை நம்புங்கள். ஏனெனில், ஒரு மனிதன் அனாவசியமாய் – அர்த்தமும் குறிப்பும் அற்ற வார்த்தைக்காக, பைத்தியம் பிடித்திருந்தாலொழிய போராடிக் கொண்டிருக்க முடியாது. ஆனால் அதனால் பாமர மக்கள் சமூகத்திற்கு விளையும் கெடுதியைப் பார்க்கும்போது, உண்மையான உணர்ச்சியுள்ளவன் அதை ஒழிக்கப் போராடாமல் இருக்க முடியாது. குடி அரசு – 20.11.1932 பெரியார் முழக்கம் 16062022 இதழ்

நீண்டகாலமாக தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சட்ட மசோதாக்கள்

நீண்டகாலமாக தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சட்ட மசோதாக்கள்

1)         தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகம் (திருத்தம்) மசோதா, 2020 (வேந்தருக்கு பதிலாக ஆய்வு மற்றும் விசாரணை அதிகாரத்தை அரசாங்கத் திற்கு வழங்குதல்) 2)         தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக் கழகம் (திருத்தம்) மசோதா, 2020 (ஆய்வு அதிகாரத்தை அரசாங்கத் திற்கு வழங்குதல்) 3)         தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (இரண்டாவது திருத்தம்) சட்டம், 2022.   (சில விதிகளை திருத்தவும், பதவிக் காலத்தை குறைக்கவும்) 4)         தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2022    (உயர்கல்வித் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாநில பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குதல்) 5)         சென்னை பல்கலைக்கழக (திருத்த) மசோதா, 2022                (பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நியமிப்பதற்கும், நிதிச் செயலாளரை பல்கலைக்கழகத் தின் சிண்டிகேட் உறுப்பினராக சேர்ப்பதற்கும்) 6)         தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக் கழக மசோதா,...

தலையங்கம் எல்லை மீறும் பா.ஜ.க. சங்பரிவாரங்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தலையங்கம் எல்லை மீறும் பா.ஜ.க. சங்பரிவாரங்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

உலகின் இஸ்லாமிய நாடுகளோடு இந்திய உறவுகளை கடுமையாகப் பாதிக்கக் கூடிய வெறுப்புப் பேச்சுகளைப் பேசிய பா.ஜ.க.வின் அதிகாரபூர்வ பேச்சாளர் இருவர் மீதும் ஒன்றிய ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்சியிலிருந்து நீக்கிவிட்டு ஏதோ அவர்கள் கட்சியோடு தொடர்பே இல்லாத சிறு குழு என்பது போல் நாடகமாடுகிறது. இந்தியா முழுதும் கொதித்து எழுந்து போராடும் இஸ்லாமியர்கள் மீது கடும் அடக்குமுறைகள், தடியடிகள், துப்பாக்கி சூடுகளை நடத்துவதோடு, உ.பி. பா.ஜ.க. ஆட்சி ஜனநாயக வழியில்  போராடியவர்களின் வீடுகளை புல்டோசர் வைத்து இடித்துத் தள்ளுகிறது. ஜார்கண்டில் அப்பாவியான 16 வயது முஸ்லீம் இளைஞனைப் பிடித்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பார்க்க முடியாத அளவுக்கு நெஞ்சம் பதை பதைக்கிறது. மதங்களை விமர்சிக்கவே கூடாதா என்று பகுத்தறிவு அறிவியல் வெளிச்சத்தில்  கேள்வி கேட்டால் விமர்சிக்கும் உரிமை உண்டு என்பதே நமது உறுதியான கருத்து. அதே நேரத்தில் இஸ்லாமிய வெறுப்புணர்வோடு ‘இந்துத்துவா’ அரசியல் பார்வையில்...

அரசு தலையீடு கூடாதாம்; நீதிமன்றம் தலையிடலாமாம்!

அரசு தலையீடு கூடாதாம்; நீதிமன்றம் தலையிடலாமாம்!

2022ஆம் ஆண்டிலும் இப்படி ஒரு அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது. தில்லை நடராசன் கோவிலில் முறைகேடுகள் நடப்பதை ஒட்டி அதிகாரிகள், கணக்கு வழக்குகளை சரி பார்க்க சென்ற போது, “அதை கேட்பதற்கு உங்களுக்கு உரிமை இல்லை” என்று தீட்சதர்கள் அவர்களை திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். அறநிலையத்துறைக்கும் தில்லை கோவிலுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. அந்த சட்டத்திலிருந்து, உச்சநீதிமன்றத்தின் வழியாக நாங்கள் விதி விலக்கு பெற்றுவிட்டோம். எனவே உங்களிடம் நாங்கள் கணக்குகளை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. என்று அவர்கள் வாதிடுகிறார்கள். இந்தக் கோவில் தீட்சதர்களால் கட்டப்பட்ட கோவிலா ? நிச்சயமாக இல்லை. கோவிலுடைய தல புராணமே கூறுகிறது, “இந்தக் கோவிலைக் கட்டியவன், சிம்ம வர்மன் என்கிற மன்னன். நடராசன் அந்த மன்னனின் கனவில் தோன்றி, கோவிலைக் கட்டுமாறு கூறியதாகவும், அதனடிப்படையில் அவன் கோவிலைக் கட்டியதாகவும், நடராசனே சிம்ம வர்மன்  என்ற பெயரை இரணிய வர்மன் என்று மாற்றியதாகவும்”அவர்களே தல புராணத்தை எழுதி வைத்துள்ளார்கள். அதற்குப்...

அரசியல் சட்டத்தின் மாண்புகளுக்கு எதிராக சனாதனப் பெருமைப் பேசுகிறார், ஆளுநர் ரவி!

அரசியல் சட்டத்தின் மாண்புகளுக்கு எதிராக சனாதனப் பெருமைப் பேசுகிறார், ஆளுநர் ரவி!

மோடி அமைக்கத் துடிக்கும் இந்து ராஜ்யத்தின் தூதுவராக தமிழக ஆளுநர் ஆர்.எஸ். ரவி, சனாதனப் பெருமையைப் பேசுவதோடு, இந்தியா இந்துக்களின் நாடு என்று அரசியல் சட்டத்தின் மாண்புகளைக் குலைத்து வருகிறார். ஆளுநர் பேச்சு அறிவியலுக்கும் அரசியல் சட்டத்துக்கும் எதிரானது. அவரது பேச்சுக்கு மறுப்பு: ரிஷிகளும் முனிவர்களும் உருவாக்கியதே நமது தேசம் என்கிறார் ஆளுநர். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி வருகைக்கு முன்பு இந்தியா என்ற தேசமே உருவாகவில்லை. மன்னர்கள்தான் பேரரசுகளாக சிற்றரசுகளாக ஆட்சி செய்து வந்தனர். கிழக்கிந்திய கம்பெனியும் அதற்குப் பிறகு வந்த பிரிட்டிஷ் காலனி ஆட்சியும் உருவாக்கியது ‘இந்தியா’. சுதந்திரத்துக்குப் பிறகு சமஸ்தானங்களை விரட்டி இந்தியாவுடன் சேர்த்தார்கள். சுதந்திரத்துக்கு முன்பு பாகிஸ்தான் பிரிந்து சென்றது. சுதந்திர இந்தியா தனக்கான அரசியல் சட்டத்தை உருவாக்கிக் கொண்டது. அந்த சட்டப்படி பதவிக்கு வந்தவரே ஆளுநர். ரிஷிகளும், முனிவர்களும் எந்த தேசத்தை உருவாக்கினார்கள்? அவர்கள் உருவாக்கியதாகப் புராணங்களில் எழுதப்பட்டுள்ள கற்பனைகளை வரலாறுகளாக திரிக்கலாமா? இப்போது ஆளுநர்,...

திருப்பூர் கழகம் பதிலடி மலிவான அரசியல் செய்யும் பா.ஜ.க.வினர்!

திருப்பூர் கழகம் பதிலடி மலிவான அரசியல் செய்யும் பா.ஜ.க.வினர்!

திருப்பூரில் பா.ஜ.க.வினர் அரசு கல்லூரிகளின்  பெயர்களை முறைகேடாக பயன்படுத்தி துண்டறிக்கைகளை அச்சிட்டு “செல்பி வித் அண்ணாமலை” என்று விளம்பரப்படுத்தி கல்லூரி களுக்குள் அத்து மீறி நுழைய திட்டமிட்டு இருந்தார்கள். அண்ணாமலையைக் கூட்டி வந்து சாலைகளில் கூட்டமாக கூட காவல்துறையிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமலும், அனுமதியும் பெறாமலும் சட்டம் ஒழுங்கை மதிக்காமல் நடந்து கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க.வினர் பேசினால் பரப்புரையில் ஈடுபட்டால் என்ன பேசுவார்கள் என்பதை பொதுமக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக மத வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு, வன்முறையை தூண்டும் விதத்தில் பேசுவது, கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் குளிர் காய்வது போன்ற  பொது அமைதியை குலைக்கும் வகையில் தான் இவர்களின் பேச்சுக்கள் இருக்கும். இச்செய்தி பரவிய உடன் திராவிடர் விடுதலை கழகத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் முகில் ராசு, திருப்பூர் மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தை உடனடியாக தொடர்பு கொண்டு இந் நிகழ்விற்கு கழகத்தின் கடும் கண்டனத்தை பதிவு...

தலையங்கம் பாராட்டுகிறோம், தர்மபுரி ‘எம்.பி.’யை!

தலையங்கம் பாராட்டுகிறோம், தர்மபுரி ‘எம்.பி.’யை!

அரசு கட்டிடம் கட்டும் நிகழ்வைத் தொடங்க முஸ்லீம் மத சடங்குகளை மட்டுமோ அல்லது கிறிஸ்துவ மத சடங்குகளை மட்டுமோ செய்திருந்தால் அதை ஏற்பார்களா? கலவரம் நடத்தி சூறையாடப்பட்ட ‘சக்தி’ இன்டர்நேஷனல் பள்ளி, ‘செயின்ட் ஜான்’ பள்ளியாக இருந்திருந்தால், ஒன்றிய அரசின் மகளிர் ஆணையம் அடுத்த சில மணி நேரத்திலே விசாரணைக்கு வந்திருக்கும்! பா.ஜ.க.வும் இந்து முன்னணியும் இப்போது மவுனம் காப்பதுபோல இருந்திருப்பார்களா? ஆனால், அரசு நிகழ்ச்சிகளில் புரோகிதர்களை மட்டும் வைத்து சடங்கு செய்தால் அது இயல்பானதாக கடந்து போய் விடுகிறார்கள். பொதுப் புததி அவ்வாறு வடிவமைக்கப் பட்டுள்ளது. அரசும் – மதமும் விலக்கி வைக்கப்பட வேண்டும். அதுவே மதச் சார்பின்மை என்று சொன்னால் மதத்தை விலக்குவது கூடாது; அனைத்து மதங்களையும் சமமாகக் கருத வேண்டும் என்று பதில் கூறுகிறார்கள். அப்படித்தான் நடக்கிறதா? 1968இல் அண்ணா முதலமைச்சராக வந்தவுடன் தலைமைச் செயலாளராக இருந்த சி.ஏ. இராமகிருட்டிணன், அரசு  அலுவலகங்களில் படிப்படியாகக் கடவுள் படங்களை...

‘தமிழ்நாடு’ பெயர் மாற்றத்தின் வரலாறு

‘தமிழ்நாடு’ பெயர் மாற்றத்தின் வரலாறு

தமிழ்நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்று முதலமைச்சர் அண்ணா பெயர் சூட்டிய நாள் 18.07.1967. அன்று சட்டமன்றத்தில் அண்ணா, தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதை தமிழ்நாடு நாள் என்று தமிழ்நாடு அரசு கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் ஒருமனதுடன் நிறைவேற்ற வேண்டும் என்று அண்ணா மிகுந்த கவலையுடன் செயல்பட்டார். இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பு, தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்குப் பிறகு, அரசியல் சட்டத்திலே மாற்றங்களை செய்ய முடியுமா என்பது குறித்து, இந்திய அரசியல் உயர் மட்டத் தலைவர்களிடம் அவர் கலந்து ஆலோசித்தார். அதில் எந்த தடையும் இருக்காது என்று உறுதியைப் பெற்று அவர் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். குறிப்பாக அவர் ஒரு நிகழ்வையும் சுட்டிக்காட்டினார். “பத்து நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் இந்த மாநிலத்தைப் பற்றி பேச வேண்டிய வாய்ப்பு கிடைத்த நேரத்தில், அங்குள்ள உள்த்துறை அமைச்சர் சவான் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்று கூறியே...

‘கருவறைத் தீட்டை’ நியாயப்படுத்தும்  ஆகம விதிகளுக்குத் தடை போட வேண்டும்

‘கருவறைத் தீட்டை’ நியாயப்படுத்தும் ஆகம விதிகளுக்குத் தடை போட வேண்டும்

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன், அனைத்து ஜாதி இந்துக்களும் அர்ச்சகராகும் பிரச்சனையை கையில் எடுத்து உரிய முறைப்படி அவர்களுக்கு அர்ச்சனை செய்யும் நியமனங்களை வழங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் இதை வெளிப்படையாக எதிர்க்க முடியாத நிலையில், இப்போது வெளி மாநிலத்தி லிருந்து ஆட்களைப் பிடித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கின்றனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜெகத்குரு இராமநாத ஆச்சாரியார் சுவாமி என்பவரும் டெல்லி, உத்திர பிரதேசம், பெங்களூர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 8 பேரும் தமிழ்நாட்டைச் சாராதவர்கள் இந்த வழக்கை தொடர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் தமிழ்நாடு அரசு நியமித்த ஒரு உத்தரவுக்கு எதிராக வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழக்குத் தொடர உரிமையில்லை, எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியதை, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஏற்க தயாராக இல்லை. ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும். அந்த நீதிபதி ஆகம விதிகளை...

காமராசர் திராவிட மாடலின் முன்னோடி

காமராசர் திராவிட மாடலின் முன்னோடி

காமராசரின் 120 ஆவது பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாடு அரசு அவரது பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட உத்தரவிட்டுள்ளது. கல்விக் கண் திறந்த கல்வி வள்ளல் காமராசர். கடவுள் வாழ்த்துகளை கைவிட்டுவிட்டு, ‘காமராசர் வாழ்த்துப் பாடலை பாட வேண்டும்’ என்று சொன்னத் தலைவர் பெரியார். அவருக்கு மிகப் பொருத்தமாக இந்த நாளில் தமிழ்நாடு அரசு ஒரு திட்டத்தை துவக்கியிருக்கிறது. முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் 292 கிராமப்புற வளர்ச்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு துவக்கி இருக்கிறது. இந்தியை எதிர்த்தார் காமராசர். மத்திய அரசு, மாநில அரசு வேலைத் தேர்வுகளில் இந்தி கட்டாயமான ஒரு பாடமாக இருக்கக் கூடாது என்று 1955இல் நேருவை சந்தித்து ஆலோசித்து விட்டு அவர் அறிவித்தார். அதற்கு காரணம், பெரியார் இந்தியை எதிர்த்து தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தை அறிவித்தது தான். 1966இல் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 10...

கோவை அண்ணா சிலை முன்பு கலைஞர் பிறந்த நாள் நிகழ்வு

கோவை அண்ணா சிலை முன்பு கலைஞர் பிறந்த நாள் நிகழ்வு

3.6.2022அன்று காந்திபுரம் அண்ணா சிலை முன்பு திராவிட இயக்கத் தலைவர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை லோகு தலைமையில் கொள்கை முழக்கங்கள் எழுப்பிக் கொண் டாடப்பட்டது. கோவை மாநகரத் தோழர்கள் கலந்து கொண்டனர். கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகம் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. பெரியார் முழக்கம் 09062022 இதழ்

சடங்குகள் இன்றி கோவை கழகத் தோழர் இல்லத் திறப்பு

சடங்குகள் இன்றி கோவை கழகத் தோழர் இல்லத் திறப்பு

கோவையில் கடந்த ஜூன் 5ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ‘டிட்டோ போட்டோஸ்’ புகைப்பட நிறு வனம் நடத்தும் சிவராஜ் கண்ணுமா இல்லத்தை புலவர் செந்தலை கவுதமன் திறந்து வைத்தார். இல்லத் திறப்பு நிகழ்ச்சியில் பார்ப்பனர்களின் வைதீக சடங்கு சம்பிரதாயங்கள் தவிர்க்கப்பட்டது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலராலும் பேசுப் பொருளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கழகப் பொருளாளர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன், திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு, கோவை மாவட்டச் செயலாளர் வெள்ளிங்கிரி, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி மற்றும் திருப்பூர் கோவை மாவட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பெரியார் படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 09062022 இதழ்

மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல்: திராவிட மாடல் விளக்கக் கூட்டம்

மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல்: திராவிட மாடல் விளக்கக் கூட்டம்

கழக செயல்வீரர், தலைமைக் குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன்  முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் நமக்கான அடையாளம் திராவிட மாடல் விளக்கப் பொதுக்கூட்டம், மடத்துக்குளம் ஒன்றியம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 01.06.2022, புதன் கிழமை மாலை 6 மணியளவில் கணியூர் பெரியார் திடலில்  நடைபெற்றது. முன்னதாக காலை 10 மணியளவில் மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் கழகக் கொடி ஏற்றப்பட்டது.  முனைவர் பேராசிரியர் சுந்தரவள்ளி (தமுஎகச) கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மடத்துக்குளம் மோகன் இணையர் ஜோதிமணி மகள் அறிவுமதி மற்றும் கழக நிர்வாகிகள் தோழர்கள் கணக்கன், சிவானந்தம், ஐயப்பன், சரவணன், வெள்ளிங்கிரி, ஆனந்த், நீலாம்பூர் கருப்புசாமி, பாண்டியநாதன், திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். மாலை 6 மணி அளவில் கணியூர் பெரியார் திடலில் நமக்கான அடையாளம் திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. யாழினி –  ஆனைமலை வினோதினி ஆகியோர் கொள்கைப் பாடல்களை...

விரிவான தகவல்களுடன் முனைவர் ஜெயரஞ்சன் உரை கிராமப்புற விவசாயிகளை நிலப்பிரபுக்கள் பிடியிலிருந்து மீட்க – கலைஞர் நிறைவேற்றிய சாதனை சட்டங்கள்

விரிவான தகவல்களுடன் முனைவர் ஜெயரஞ்சன் உரை கிராமப்புற விவசாயிகளை நிலப்பிரபுக்கள் பிடியிலிருந்து மீட்க – கலைஞர் நிறைவேற்றிய சாதனை சட்டங்கள்

திராவிட மாடல் பயிற்சிப் பாசறை தொடக்க விழா 5.6.2022 அன்று கலைஞர் அரங்கில் நடந்ததது. திட்டக் குழு துணைத் தலைவர் முனைவர் ஜெயரஞ்சன் பங்கேற்று ஆற்றிய உரை: 1967இல் ஆட்சிக்கு வந்த பிறகு நமக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தது. சமூகநீதி இயக்கம் எதற்காகப் போராடியதோ, அதை எல்லாம் செயல் வடிவம் கொடுக்கக் கூடிய ஓர் அரிய வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. ஆனால், அண்ணா முதலமைச்சராக இருந்தது ஒன்றரை ஆண்டுகள்தான். அவர் மறைந்த பிறகு, அந்த அரும்பணியும், அந்த அரிய வாய்ப்பும் டாக்டர் கலைஞரிடம் வந்து சேர்ந்தது. 1976 ஆம் ஆண்டுவரை அவர் செய்த காரியம் இருக்கிறதே, தமிழ்ச் சமுதாயத்தையும், தமிழ்ப் பொருளாதாரத்தையும், தமிழக அரசியல் செயல் படுகின்ற விதத்தை எந்த அளவிற்கு மாற்றியமைத் திருக்கின்றார் என்பதைப் பார்த்தால், வியப்பாக இருக்கும். தமிழகத்தில் மட்டும்தான் வளர்ச்சி என்பது ஜனநாயகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்குப் பொருள் என்னவென்று சொன்னால், நிலம் என்பது ஒரு சிலரிடம் மட்டும்தான்...

அ.இ.அ.தி.மு.க.வில் பா.ஜ.க. எதிர்ப்புக் கலகம்

அ.இ.அ.தி.மு.க.வில் பா.ஜ.க. எதிர்ப்புக் கலகம்

ஓபிஎஸ் யும், இபிஎஸ் யும் அஇஅதிமுகவை தமிழ்நாடு பாஜகவிடம் விலை பேசி கொண்டிருக்கும் போது முதுகெலும்புடன் துணிச்சலாக குரல் கொடுத்துள்ளார் அக்கட்சியின், முன்னாள் அவைத் தலைவர் பொன்னையன். அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும். ‘அஇஅதிமுகவை பலியாக்கி தமிழ்நாட்டில்  தன்னை வளர்த்துக்கொள்ள பார்க்கிறது பாஜக’ என்று கூறியவர் அதன் வளர்ச்சி தமிழ்நாட்டிற்கோ, அஇஅதிமுகவிற்கோ, திராவிடக் கொள்கைக்கோ நல்லது அல்ல. என்று கூறியுள்ளார். கட்சியின் தொழில்நுட்ப அணி பாஜகவை அம்பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். காவிரி முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டுக்கு எதிராக பாஜக இரட்டை வேடம் போடுவதையும், தமிழ்நாடு பாஜக கள்ள மவுனம் சாதிப்பதையும் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். ஏதோ மக்கள் பிரச்சனையில் கவலை உள்ளவர் போல தினமும் நாடகம் நடத்தி வருகிறார் அண்ணாமலை. ஆனால், அக்கட்சியின் உண்மையான முகம் என்பதோ வேறு. பார்ப்பனியத்தையும், மதவெறியையும் பாதுகாப்பது தான் பாஜக வின் உண்மையான முகம். காசியிலும், மதுராவிலும் உள்ள...

இஸ்லாமிய வெறுப்பு அரசியல்: உலகின் முன் தலைகுனிந்து நிற்கிறது – ஒன்றிய ஆட்சி

இஸ்லாமிய வெறுப்பு அரசியல்: உலகின் முன் தலைகுனிந்து நிற்கிறது – ஒன்றிய ஆட்சி

ஒன்றிய பாஜக ஆட்சி உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய நாடுகளின் கடும் எதிர்ப்பை இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக இந்திய ஒன்றியத்தில் நடைபெறுகிற இஸ்லாமிய எதிர்ப்பு பேச்சுக்கள், வெறுப்புக் கருத்துகள் தற்போது உலகம் முழுவதும் கடும் கண்டனத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. வர இருக்கின்ற இஸ்லாமியர்களை எதிரி களாக கட்டமைத்து இந்துக்கள் வாக்குகளை திரட்டி விடலாம் என்று பாஜக காய் நகர்த்தி வருகிறது. அதற்கான திட்டங்களும் அரங்கேற்றப்பட்டு  கொண் டிருக்கின்றன. காசி, மதுராவில் உள்ள மசூதிகள், இந்துக்கள் கோவில்களை இடித்து கட்டப்பட்டுள்ளன என்று புதிதாக  உருவெடுத்துள்ளன. ஸ்ரீரங்கப் பட்டினத்திற்குள் நுழையப் போவதாக விஷ்வ இந்து பரிஷத் காரர்கள் அறிவித்து போராட்டமும் நடத்தி முடித்திருக்கின்றனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் இஸ்லாமிய வெறுப்புப் பேச்சுக்கள் தீவிரமாக முடிக்கிவிடப் பட்டிருக்கின்றன. பாபர் மசூதி இடித்துவிட்டு அயோத்தியில் இராமர் கோவிலை கட்டலாம் என்று திட்டமிட்டவர்கள், மசூதி இடித்தவர்களையும் காப்பாற்றிவிட்டு, மசூதி இடித்தது நியாயம், அங்கே கோவில் இருந்தது என்பதற்கான தீர்ப்பையும்...

தலையங்கம் ஆதீனம் – ஆளுநர் – அண்ணாமலை

தலையங்கம் ஆதீனம் – ஆளுநர் – அண்ணாமலை

தமிழ்நாட்டில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மாநில உரிமைகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழுத்தமாகக் குரல் கொடுத்து வருவது, பா.ஜ.க. மற்றும் சங்பரிவாரத்திற்கு கடும் அதிர்ச்சியையும் எரிச்சலையும் உருவாக்கி வருவதை உணர முடிகிறது. அண்மையில் பிரதமர் மோடி பங்கேற்ற ஒரு நிகழ்வில் தமிழக முதல்வர் தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய ஆட்சி முடக்கி வைத்துள்ளதை பட்டியலிட்டுப் பேசியது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது என்றே சொல்லலாம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத்  தேர்தலை சந்திக்கும் நிலையில் தமிழ்நாட்டின் உரிமைக் குரல் பிற மாநிலங்களுக்கும் பரவிடக் கூடும் என்ற அச்சத்தில் தமிழ்நாட்டின் தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி, பா.ஜ.க. – பார்ப்பனிய சனாதன ஆதரவுத் தளமாக மாற்றுவதற்கான காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன. அண்மையில் மதுரையில் ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தைச் சார்ந்த விசுவ இந்து பரிஷத், மதுரை ஆதீனம், ஜீயர்கள், சாமியார்களைக் கூட்டி ஒரு மாநாட்டை நடத்தியுள்ளது. தமிழக அரசை மிரட்டியுள்ளதோடு, திராவிடர்  இயக்கக் கோட்பாடுகளையும் கண்டித்து ‘துறவிகள்’ பேசியிருக்கிறார்கள்....

கியான்வாபி பள்ளிவாசல் பிரச்சனை என்ன ?

கியான்வாபி பள்ளிவாசல் பிரச்சனை என்ன ?

காசி நகரில் இருந்த சிவன் கோயிலை இடித்துவிட்டுத்தான் முகலாய மன்னர் அவுரங்கசீப் கியான்வாபி பள்ளிவாசலை கட்டினார். எனவே அந்த பள்ளிவாசலை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது இந்துத்துவ அமைப்புகளின் வாதம். வாரணாசி என்ற காசியில் கியான்வாபி பள்ளிவாசலும் காசி விஸ்வநாதர் கோவிலும் அருகருகே அமைந்துள்ளன. இரண்டிற்குமான இடைவெளி வெறும் பத்து மீட்டர் மட்டுமே. பெரும்பாலும் ஒரே வாசல் வழியாகவே இரண்டு வழிபாட்டுத் தலங்களுக்கும் மக்கள் சென்று வருகின்றனர். மத ஒற்றுமையின் அடையாளமாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு இடத்தை மத மோதலுக்கான காரணியாக இந்துத்துவ சக்திகள் மாற்றுகின்றனர். 1936இல் அப்பகுதி இந்துக்களுடன் ஏற்பட்ட பிரச்சனையைத் தொடர்ந்து பள்ளிவாசல் இடத்தில் தங்களுக்கான உரிமையைக் கோரி பனாரஸ் நீதிமன்றத்தில் முஸ்லிம்கள் வழக்கு தாக்கல் செய்தனர். முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையை நீதிமன்றம் 1937 இல் உறுதிப்படுத்தியது. 1991 இல் இந்த பள்ளிவாசல் இடத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று சோம்நாத் வியாஸ் என்பவர் வழக்கு தொடுத்தார். 1937...

பெரியாரின் பெண்ணிய விடுதலைக் கருத்துகளே குடும்ப வன்முறைக்குத் தீர்வாகும் முனைவர் எஸ். ஆனந்தி

பெரியாரின் பெண்ணிய விடுதலைக் கருத்துகளே குடும்ப வன்முறைக்குத் தீர்வாகும் முனைவர் எஸ். ஆனந்தி

பெண் கல்வி, பெண்கள் வளர்ச்சி மற்றும் அதிகாரப்படுத்துதலுக்கான திட்டங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருந்தாலும்  குடும்ப வன்முறையில் பெண்கள் மோசமாகப் பாதிக்கப்படுவதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. இதற்கான காரணங்களை ஆராய்ந்து சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் முனைவர் ஆனந்தி, ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (ஜூன் 4) கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். கட்டுரை யின் சுருக்கமான கருத்தை தமிழில் தருகிறோம். குடும்ப வன்முறைக்கு  பட்டியலிட்டுள்ள காரணங்கள்: கட்டாயத் திருமணம் : கட்டாயத் திருமணத்துக்கு பெண்கள் உள்ளாக்கப் படுவது ஒரு காரணம். நவீன குடும்ப வாழ்க்கைக்கான செலவுகளை சரி கட்ட பெண்கள் உழைப்பு ஊதியமில்லாமல் கட்டாயத் திருமண முறையில் சுரண்டப்படு கிறது. 20 முதல் 22 சதவீத பெண்களே திருமணத்துக்குப் பிறகு ஊதியம் பெறும் வேலைக்குப் போகிறார்கள். 60 சதவீத படித்த பெண்கள் குடும்பத்தைக் கவனிக்க வேலைக்குப் போகாமல் ஆணாதிக்கமும் ஜாதிக் கட்டமைப்பும் கொண்ட குடும்ப அமைப்புக்குள் ஆண்களின்...

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் 29-5-22 அன்று நடைபெற்ற செஞ்சட்டைப் பேரணி- வர்க்க வருண ஒழிப்பு மாநாட்டின் தீர்மானங்கள்…

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் 29-5-22 அன்று நடைபெற்ற செஞ்சட்டைப் பேரணி- வர்க்க வருண ஒழிப்பு மாநாட்டின் தீர்மானங்கள்… 1 பொதுவுடைமைக் கருத்துகளைப் பரப்பல் செய்யும் கருத்தாளர்களாகவும், பொதுவுடைமைக் கட்சித் தோழர்களாகவும் இருந்து களம் கண்டு எதிரிகளால் அழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஈகியர்களுக்கு இம் மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.. மொழி உரிமைகளுக்காகவும், இந்தி, சமஸ்கிருத, ஆங்கில மொழித் திணிப்புகளை எதிர்த்து வீரச்சாவு எய்தியவர்களுக்கும் இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.. சாதிய வன்கொடுமைகளை எதிர்த்தும், பார்ப்பனிய மற்றும் மதவெறிகளை எதிர்த்தும் களமாடி உயிர் ஈந்த எண்ணற்ற ஈகியர்களுக்கும் இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.. மேலும், தமிழீழ மண்ணின் உரிமைகளுக்காகப் போராடி உயிர் ஈந்த இலக்கக் கணக்கானவர்களுக்கும் இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.. 2 தமிழ்நாட்டிற்குள் செயல்படுகின்ற காப்பீட்டுக்கழகம்( எல் ஐ சி) உள்ளிட்ட பொதுத் நிறுவனங்களையெல்லாம் அம்பானி, அதானி உதுறைள்(உள்ளிட்டத் தனியார்துறை நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துவரும் இந்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.. தனியாருக்குத் தாரை வார்க்கப்படும் எல்ஐ சி, தொடர்வண்டித் துறை...

சென்னை கழகத்தினர் முயற்சி வெற்றி; தெருக்களில் ஜாதிப் பெயர்கள் நீக்கப்படுகின்றன

சென்னை கழகத்தினர் முயற்சி வெற்றி; தெருக்களில் ஜாதிப் பெயர்கள் நீக்கப்படுகின்றன

சென்னை மயிலாப்பூர் கழகத் தோழர்கள், தெருக்களில் ஜாதிப் பெயர்களை நீக்கக்கோரி கடந்த ஏப்.6ஆம் தேதி மாநகராட்சி அதிகாரிகளிடம்  கோரிக்கை மனுவை வழங்கியதைத்  தொடர்ந்து நகரம் முழுதும் ஜாதிப்பெயைர நீக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களின் பெயர்ப் பலகைகளை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாற்றியமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. இதன்படி ரூ.8.43 கோடி செலவில் தெருக்களின் பெயர் பலகைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் இலச்சினை, தெருவின் பெயர், வார்டு, பகுதி, மண்டலம், அஞ்சல் குறியீட்டு எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இந்தப் பெயர் பலகைகளில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தப் பணியுடன் சேர்த்து தெருக்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக 171-வது வார்டில் உள்ள சாலையின் பெயரை சென்னை...

2024 தேர்தல் களத்தில் இந்தி வெறியைத் திணிக்க பா.ஜ.க. திட்டம்

2024 தேர்தல் களத்தில் இந்தி வெறியைத் திணிக்க பா.ஜ.க. திட்டம்

பிள்ளையை கிள்ளி விட்டு, தொட்டிலை ஆட்டி விடுவது’ என்ற பழமொழி ஒன்றிய பாஜ அரசுக்கு கனகச்சிதமாக பொருந்தக் கூடியது. ஒருபுறம், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் சிறப்புகளை பெருமையாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் பிரதமர் மோடி. ஆனால் மறுபுறம், இந்தியை தேசிய மொழியாக்க அமித்ஷா போன்ற பாஜ தலைவர்கள், வரிந்து கட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித்ஷா, ‘இந்தியாவில் அனைத்து பகுதியிலும் உள்ள மக்களின் தகவல் தொடர்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும். ஆங்கிலமாக இருக்கக் கூடாது. நாங்கள் மாநில மொழிகளுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை கொண்டு வர வேண்டும் என நினைக்கிறோம்,’ என இந்தி திணிப்புக்கு புது விளக்கத்தை தந்தார். இதற்கான காய் நகர்த்தல் டெல்லியில் இருந்து தொடங்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புதுடெல்லி நகராட்சி கவுன்சிலில் தனது அனைத்து துறைகளுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், ‘அலுவல் மொழி...

பார்ப்பனியத்தை தோலுரிக்கும் ஜாதி எதிர்ப்புப் படம் ‘நெஞ்சுக்கு நீதி’ ஆ. ராசா

பார்ப்பனியத்தை தோலுரிக்கும் ஜாதி எதிர்ப்புப் படம் ‘நெஞ்சுக்கு நீதி’ ஆ. ராசா

தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா, ‘நெஞ்சுக்கு நீதி’ படம் குறித்து உதயநிதி ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம்: தாங்கள் நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் பார்த்தேன். திகைத்து மகிழ்ந்தேன். பொதுவாக திகைப்பில் மகிழ்ச்சிக்கு வாய்ப்பு குறைவு. ஆனால், ஒரு புதிய வேதியியல் மாற்றம் என்னை படம் பார்த்தபின் தொற்றிக் கொண்டதால் இருவேறுபட்ட பண்புகளைக் கொண்ட வார்த்தைகளை கோர்க்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானேன். ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தை தயாரிப்பதற்கும் அதில் நடிப்பதற்கும், வெளியிடுவதற்கும், வர்த்தகம் மட்டுமே நிச்சயமாக நோக்கமாக இருந்திட இயலாது என்பதை சாதியத்தால் கட்டமைக்கப்பட்ட இச்சமூக அமைப்பை உணர்ந்த ‘பெரியார்வாதி’ என்ற அடிப்படையில் உணர்கிறேன். இந்த திரைப்படம் வணிக நோக்கில் இலாபமா நட்டமா என்பதைவிட தமிழ் திரையில் இவ்வளவு அப்பட்டமாகவும், பட்டவர்த்தனமாகவும் சாதி பற்றிய புரிதலை – கண்ணோட்டத்தை – எவரும் இதுவரை தந்ததில்லை என்பதுதான் கொண்டாடப்பட வேண்டிய உண்மை. மகாத்மா பூலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர்...

சாமியாடுவது அற்புத சக்தியாம்? எட்வின் பிரபாகரன்

சாமியாடுவது அற்புத சக்தியாம்? எட்வின் பிரபாகரன்

உச்ச நீதிமன்ற நீதிபதி இராம சுப்ரமணியத்தின் போலி அறிவியல் வாதங்களுக்கு  ஆணித்தர மறுப்பு (9) ‘நிமிர்வோம்’ மாத இதழில் 2020 ஆம் ஆண்டில் வெளி வந்துள்ள கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடுகிறோம். புதிர் 15: 1995ஆம் ஆண்டு, செப்டம்பர் 21ஆம் நாள், தெற்கு புது டெல்லியில் உள்ள ஒரு கோயிலில் விநாயகர் சிலை, தும்பிக்கையின் மூலம் பாலை உறிஞ்சி விட்டதாக ஒரு செய்தி காட்டுத்தீ போல பரவியது. நாடெங்கும் பல விநாயகர் கோயில்களிலும் இதே சம்பவம் நடந்ததாக மக்கள் பரவசத்தோடு கொண்டாடினர். அறிவியலாளர்கள் அளித்த விளக்கம் என்னவென்றால், விநாயகர் சிலைகளில் உள்ள மிக நுண்ணிய துளைகளின் மூலமாக, தந்துகி எழுகை முறையால் (Capillary Rise Method), பால் உறிஞ்சப்படுகிறது என்பதேயாகும். அன்று மாலைக்குள், இந்த விளக்கம் பிடிக்காததாலோ என்னவோ, விநாயகர் சிலைகள் பால் குடிப்பதை நிறுத்திவிட்டன. தந்துகி எழுகை முறையில் இது நடக்குமானால், ஏன் இதற்கு முன் அப்படி...

தலையங்கம் பேரணிகள் முடிந்தன; அடுத்து என்ன?

தலையங்கம் பேரணிகள் முடிந்தன; அடுத்து என்ன?

மதுரையில் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு, செஞ்சட்டைப் பேரணியை எழுச்சியுடன் நடத்தி முடித்திருக்கிறது. கருப்புச் சட்டை, நீலச் சட்டைப் பேரணியைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மூன்றாவது பேரணி இது. மார்க்ஸ்-பெரியார்-அம்பேத்கர் கருத்தியல்கள் காலத்தின் தேவையாகியுள்ள சூழலில் நாட்டை பார்ப்பனப் பாசிசத்திலிருந்து மீட்டெடுப்பதற்கான முப்பெரும் தலைவர்களின் பொதுவான கூறுகளை அடையாளம் காண வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. பார்ப்பனப் பாசிசம், மாநில அடையாளங்களை அழித்து ஒற்றை இந்தியாவாக்கி பிறகு அதை பாரத தேசமாக்கி, பாரத தேசத்தை இந்து இராஷ்டிரமாக்கிட வேண்டும் என்பதையே தனது இயக்கமாக நிர்ணயித்திருக்கிறது. வேதகால பார்ப்பனியம் மனுசாஸ்திரத்தையும் வேதங்களையும் சமூகத்தின் அடையாளங்களாக்கி மக்களை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து மிக எளிதாக அதில் வெற்றியும் பெற்றிருந்தது. மாநில எழுச்சிகள் சமூகநீதிக் கொள்கைகள் மொழி பண்பாட்டு அடையாளங்கள் படிப்படியாக மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கியதன் வழியாக பார்ப்பனியம் கேள்விக்குள்ளானது. அரசியல் சட்டம் மக்கள் சமத்துவத்தையும் மதச்சார்பின்மையையும் உறுதி செய்தாலும் அதில் உடைப்புகளை உருவாக்கிட பார்ப்பனியம் தொடர்ந்து...

வர்க்க-வர்ண ஆதிக்க ஒழிப்புக்கு இளைஞர்கள் சூளுரை : செஞ்சட்டைக் கடலில் மதுரை

வர்க்க-வர்ண ஆதிக்க ஒழிப்புக்கு இளைஞர்கள் சூளுரை : செஞ்சட்டைக் கடலில் மதுரை

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் மே 29 அன்று நடந்த செஞ் சட்டைப் பேரணியால் மதுரை குலுங்கியது. கருஞ்சட்டைப் பேரணி, நீலச் சட்டைப் பேரணிகளைத் தொடர்ந்து செஞ் சட்டைப் பேரணிக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவருமான கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுது மிருந்தும் இளைஞர்கள் பெண்களும் ஆண்களு மாய் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து பார்ப்பபனிய பாசிசத்தை வீழ்த்துவோம்; இந்தியாவில் ஒற்றை ஆட்சியைத் திணிக்காதே; இது பெரியார் மண் – சனாதன சக்திகளை அனுமதியோம் என்று உணர்ச்சி முழக்கமிட்டு வந்தனர். திராவிடர் விடுதலைக்கழக சார்பில் சென்னை, மேட்டூர், சேலம், நங்கவள்ளி, கொளத்தூர், மயிலாடுதுறை, நாமக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து தனிப் பேருந்துகளிலும் வேன்களிலும் திரண்டு வந்திருந்தனர். கழகப் பெயருடன் கழகக் கொடி செஞ் சட்டையில் அச்சிடப்பட்டிருந்தது. விடுதலை சிறுத்தைகள், தந்தை...

செஞ்சட்டைப் பேரணி மாநாட்டில் கொளத்தூர் மணி உரை கொள்கை எதிரியை அடையாளம் கண்டு விட்டோம்; கொள்கை அணியை உருவாக்குவோம்!

செஞ்சட்டைப் பேரணி மாநாட்டில் கொளத்தூர் மணி உரை கொள்கை எதிரியை அடையாளம் கண்டு விட்டோம்; கொள்கை அணியை உருவாக்குவோம்!

தி.க. கொடியை உருவக்கிய பெரியார், நடுவில் உள்ள சிவப்பு வட்டம் பெரிதாகி, சிவப்புக் கொடியாக மாறும் என்று கூறியதை நினைவு கூர்ந்தார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி.  மதுரை செஞ்சட்டை பேரணிக்குத் தலைமை யேற்ற கழகத் தலைவர் மாநாட்டில் ஆற்றிய உரை: பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் நோக்கத்தை ஒருங்கிணைப்பாளர் பொழிலன் விளக்கியிருக்கிறார். இந்த மூன்று பேரணிகள் நடந்ததும் இதன் முதன்மை மாந்தர்களாக காட்டப்படுகிற பெரியாரும், அம்பேத்கரும், மார்க்சும் எளிய வஞ்சிக்கப்பட்ட மக்களை இலக்காக கொண்டு தத்துவங்களை உருவாக்கிப் போராடியவர்கள். இந்த மண்ணில், சுரண்டப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்கள் இன்னும் இருக்கிறார்கள். அந்த சூத்திரர்களும், பஞ்சமர்களும் தான் உழைப்புச் சுரண்டல்களுக்கு உள்ளானவர்களாக இருக் கிறார்கள். இந்த மூன்று பேரின் நோக்கமும் ஒன்று தான். ஆனால், தனித்தனியாக இயங்கி வந்திருக் கிறோம். இது இயங்கக் கூடாது என்ற கருத்து 30’களில் தோன்றியிருந்தாலும், இடையில் பிரிவு, உறவு இரண்டும் நடந்திருக்கின்றன. ஆனால், இந்த வேளையில், இந்த நாட்டில்...

குடந்தை – கீழப்பாவூர்-குடியாத்தத்தில் சிறப்புடன் நடந்த மண்டல மாநாடுகள்

குடந்தை – கீழப்பாவூர்-குடியாத்தத்தில் சிறப்புடன் நடந்த மண்டல மாநாடுகள்

குடந்தையில்: ‘நமக்கான அடையாளம் திராவிட மாடல்’ என்ற முழக்கத்தை முன் வைத்து கும்பகோணம் மீன் மார்க்கெட் திடலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மண்டல மாநாடு 16.5.2022 அன்று மாலை சிறப்புடன் நடைபெற்றது. மாவட்டக் கழகத் தலைவர் மு. இளங்கோவன் தலைமையில் சா.வெங்கடேசன் (ஒன்றிய அமைப்பாளர்) முன்னிலையில் நடைபெற்றது. கு. பாரி (தஞ்சை மாவட்ட செயலாளர், தி.வி.க.), தெ. மகேசு (மாவட்டச் செயலாளர்), திருச்சி நாகம்மையார் இல்லத்துப் பெண்ணைத் திருமணம் செய்தவரும், திராவிடர் கழகத் தோழருமான பவுண்டரீகபுரம் முருகேசன், பொறியாளர் திருநாவுக்கரசு (உழவர் இயக்கம்), சி.த. திருவேங்கடம் (மாவட்ட அமைப்பாளர்), சா. விவேகானந்தன் (மண்டல செயலாளர் வி.சி.க.) உள்ளிட்டோர் மாநாட்டில் பேசினர். முன்னதாக, பெரம்பலூர் தாமோதரன், ‘மந்திரமா-தந்திரமா’ நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் கழக மாவட்ட மகளிரணி செயலாளர் திரிபுரசுந்தரி மற்றும் தி.க. தோழர்கள் குணா, சங்கர், கழகத் தலைவர்-பொதுச் செயலாளருக்கு துண்டுகளை அணிவித்து மகிழ்ந்தனர். கரிகாலன் நன்றி கூறினார். தொடர்ந்து 20...

ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருப்பது காங்கிரசுக்கு முன்கூட்டியே தெரியும் வாய் கட்டி போராட்டம் நடத்தும் காங்கிரசார் பதில் கூறுவார்களா?

ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருப்பது காங்கிரசுக்கு முன்கூட்டியே தெரியும் வாய் கட்டி போராட்டம் நடத்தும் காங்கிரசார் பதில் கூறுவார்களா?

பேரறிவாளன் விடுதலையை ஏற்கவே முடியாது என்று காங்கிரசாரும், மனுவாதிகளும் பொங்கு கிறார்கள். இவர்கள் கூறுவதில் நியாயம் இருக்கிறதா? இந்த குற்றத்தில் நேரடியாக தொடர்புடைய 12 பேர் ஏற்கெனவே தேடுதல் வேட்டை என்ற பெயரால் காவல் துறையினால், சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். அதாவது நீதிமன்றம் போகாமலேயே மரண தண்டனையை விதித்து விட்டார்கள். பிறகு 26 பேருக்கு, குற்றவாளிகளுக்கு உதவினார்கள், சதியில் ஈடுபட்டார்கள் என்று கூறி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ‘தடா’ சட்டத்தின் கீழ் வழக்கு நடந்தது. வழக்கு இரகசியமாக நடந்தது. காந்தி கொலையில் கூட வழக்கு பகிரங்கமாகவே நடந்தது. 26 பேருக்கும் தூக்கு தண்டனையை விதித்தது சிறப்பு நீதிமன்றம். இவர்கள் தடா சட்டத்தின் படி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியாது. நேரடியாக உச்சநீதிமன்றம் தான் போக வேண்டும். உச்சநீதி மன்றம் குற்றவாளி என்று கூறப்பட்ட 26 பேரில் 19 பேரை விடுதலை செய்து விட்டது. இதிலிருந்தே வழக்கு எப்படி சி.பி.அய்.யால் புனையப்பட்டது...

பார்ப்பன எதிர்ப்பு ஆன்மீகத்தையும் அரவணைத்ததே திராவிடக் கோட்பாடு

பார்ப்பன எதிர்ப்பு ஆன்மீகத்தையும் அரவணைத்ததே திராவிடக் கோட்பாடு

மே 21இல் குடியாத்தத்தில் நடந்த கழக மண்டல மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து: குடியாத்தம், வேலூர் மாவட்டங்கள் திராவிடத்தின் கொள்கை வேர்களைத் தாங்கி நிற்கிறது, ஆரிய எதிர்ப்பு என்ற சனாதன வர்ணாஸ்ரம பார்ப்பன எதிர்ப்புக்கு களமாடிய முன்னோடிகள் இந்த மாவட்டத்தில் உண்டு. பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி, சமூக சீர்த்திருத்தப் படை ஒன்றை இப்பகுதியில் உருவாக்கி, தேனீர்க் கடை இரட்டைக் குவளைத் தீண்டாமை – பார்ப்பன உயர்ஜாதியினர் வீதிகளில் தீண்டப்படாத மக்கள் நடக்கும் உரிமை மறுக்கப்பட்ட சமூகக் கொடுமைகளை எதிர்த்து நேரடி நடவடிக்கையில் இறங்கினார். சாவு சேதி சொல்லவும், பறை அடிக்கவும் தீண்டப்படாத மக்கள் மீது அவமானங்கள் சுமத்தப்பட்டதை எதிர்த்து பறை எரிப்புப் போராட்டம் நடத்தியபோது திராவிடர் கழகத் தோழர்கள் அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற வேண்டும் என்று பெரியார் ‘விடுதலை’யில் அறிக்கை விடுத்தார். 1954இல் ஈரோட்டில் பெரியார் நடத்திய புத்தர் கொள்கை பரப்பு மாநாடு – குலக் கல்வி திட்ட எதிர்ப்பு மாநாடுகளில்...

மாநில உரிமைகளை உறுதிபடுத்தும் ‘ஜி.எஸ்.டி.’ தீர்ப்பு

மாநில உரிமைகளை உறுதிபடுத்தும் ‘ஜி.எஸ்.டி.’ தீர்ப்பு

மாநில உரிமைகளை உறுதிபடுத்தும் மற்றொரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் செயல்படும் ஜி.எஸ்.டி கவுன்சில் எடுக்கும் முடிவுகள், வெறும் பரிந்துரைகள் மட்டும் தான். அதை மாநில அரசுகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று , உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. இந்த பிரச்சனையில், ஒன்றிய அரசுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே அளவு சம உரிமை மாநில அரசுகளுக்கும் இருக்கிறது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “ஜி.எஸ்.டி கவுன்சில் என்பது அரசியல் சார்ந்த இடமாக தற்போது மாறியுள்ளது என்பதை மறுக்க முடியாது. இந்த நிலை இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தை முழுமையாக பாதிக்கச் செய்யும். எனவே ஜனநாயகமும், கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி பல்வேறு குழப்பங்களை தவிர்ப்பதற்காக மட்டுமே, கூட்டாட்சித் தத்துவத்தில் ஒன்றிய அரசிற்கு கூடுதல் அதிகாரத்தை வழங்குகிறது” என்று உச்சநீதிமன்றம் மேலும் தெளிவுபடுத்தி...

மே 29 – மதுரை செங்கடலாகட்டும்; கழகத் தோழர்களே திரண்டு வாரீர்!

மே 29 – மதுரை செங்கடலாகட்டும்; கழகத் தோழர்களே திரண்டு வாரீர்!

வர்க்க-வர்ண ஆதிக்க ஒழிப்பு மாநாடும் செஞ்சட்டைப் பேரணியும் மதுரையில் மே 29 அன்று நிகழ இருக்கிறது. மதுரை காளவாசல் பகுதியிலிருந்து செஞ்சட்டைப் பேரணி பிற்பகல் 3 மணியளவில் தொடங்குகிறது. பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு ஒருங் கிணைக்கும் இந்தப் பேரணியில் பல்லாயிரக் கணக்கில் இளைஞர்கள், பெண்களும் ஆண் களுமாய் செஞ்சட்டை அணிந்து தமிழ் நாட்டின் தனித்துவத்தை வர்க்க-வர்ண ஆதிக்க சக்திகளுக்கு உணர்த்தப் போகிறார்கள். ஏற்கனவே கருஞ்சட்டைப் பேரணி, நீலச்சட்டைப் பேரணியை நடத்தி முடித்து இப்போது நிறைவாக செஞ்சட்டைப் பேரணி புறப்படுகிறது. பொதுத் துறை நிறுவனங்களை சீர்குலைத்து, பங்குகளைத் தனியாருக்கு வேகம் வேகமாக விற்கிறது ஒன்றிய ஆட்சி. பொன் முட்டையிடும் வாத்து, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகளை அடி மாட்டு விலையில் விற்கிறது. காப்பீடு என்றால் அது பணக்காரர்களுக்கு மட்டுமே என்ற கருத்தை உடைத்து,வெறும் 5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட எல்.அய்.சி., சந்தை மதிப்பில் 32 இலட்சம் கோடி ரூபாயையும் காப்பீட்டு சந்தையில் 70...

சதுர்வேதிமங்கலம் – ஆரிய மாடல் சமத்துவபுரம் – திராவிட மாடல்

சதுர்வேதிமங்கலம் – ஆரிய மாடல் சமத்துவபுரம் – திராவிட மாடல்

தமிழ்நாட்டில் தமிழ் மன்னர்கள் பலரும் ஆரியத்தைக் கொண்டாடியதாகவே வரலாறு கூறுகிறது. ‘பிராமணர்’களுக்கு ஊர்களும் கிராமங்களும் இலவசமாக வழங்கப்பட்டன. வேதப் பார்ப்பனர்ககளின் வேத அறிவே உலகத்தை வாழ்விக்கும் என்று மன்னர்கள் நம்பினார்கள். அதற்குப் பெயர் ‘சதுர்வேதிமங்கலம்’; தமிழ் தாத்தா என்று கொண்டாடப்படும் சங்க இலக்கிய சுவடிகளைத் தொகுத்த உ.வே.சாமிநாதய்யர், தனது பிறந்த ஊரான ‘உத்தமதானபுரம்’ பிராமணர்களுக்கு ‘தானமாக’ வழங்கப்பட்ட ஊர் என்பதை தனது சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார். ஒரு அரசர், தனது வேதபண்டிதர் பரிவாரங்களுடன் தங்கள் கிராமத்தில் ஒரு மரத்தடியில் ஓய்வு எடுத்து, உணவு உண்டு, வெற்றிலைப் பாக்கு போட்டுக் கொண்டாராம். பிறகுதான்  அன்றைய தினம் அமாவாசை என்பது தெரிந்து அதிர்ந்து போனாராம். அமாவாசையில் வெற்றிலைப் பாக்கு போடுவது- தெய்வக் குற்றமாம். இந்தக் ‘குற்றத்துக்கு’ பரிகாரம் தேட, அருகிலிருந்த வேத பண்டிதர்கள் ஆலோசனைப்படி  அந்தப் பகுதியை வேத பண்டிதர்களுக்கு தானமாக்கி வீடுகளைக் கட்டித் தந்தாராம். அதுவே தான் பிறந்த உத்தமதானபுரம் வரலாறு என்று...

சன் தொலைக்காட்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி ‘நீண்டகாலமாக சிறைப்படுத்தப்பட்ட இஸ்லாமியர் உள்ளிட்ட சிறைவாசிகளை விடுவிக்க – அரசு முன்வர வேண்டும்!

சன் தொலைக்காட்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி ‘நீண்டகாலமாக சிறைப்படுத்தப்பட்ட இஸ்லாமியர் உள்ளிட்ட சிறைவாசிகளை விடுவிக்க – அரசு முன்வர வேண்டும்!

சன் தொலைக்காட்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி: பேரறிவாளன் விடுதலை என்பது அனை வருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். ஈழ ஆதரவாளன் என்ற முறையில், ஈழம் தொடர்பானது என்று கருதிக் கொண்டு, ஏதோ பயங்கரவாதம் நடந்து விட்டதாக பேசிக்கொண்டு அரசுகள் அவர் மீது வழக்கு புனைந்ததும், தண்டிக்கப்பட்டதும் வேறு கதை என்றாலும் கூட, இப்போது இவரது விடுதலையை 30 ஆண்டுகள் கடந்தும் காலம் தாழ்த்திக் கொண்டிருந்த அரசுகளுக்கு குறிப்பாக ஆளுநருக்கு தலையில் குட்டு வைத்ததைப் போல இந்த தீர்ப்பினை நான் பார்க்கிறேன். அவர் நேரடியான குற்றச் செயலில் ஈடுபடவில்லை என்று வழக்கே கூறினாலும், அவருக்கு உட்சபட்ச தண்டனை வழங்கப் பட்டது. அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட பின்பும், இவ்வளவு காலம் சிறையில் இருந்தார் என்பதை எந்த மனிதநேயர் களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெரும்பாலானோரால் தேசத் தந்தை என்று சொல்லப்படுகின்ற காந்தியைக் கொன்ற கோபால் கேட்சேவிற்கு 15...

திராவிட மாடல் காலத்தின் தேவைக்கேற்ற நவீனத்துவக் கோட்பாடு – விடுதலை இராசேந்திரன்

திராவிட மாடல் காலத்தின் தேவைக்கேற்ற நவீனத்துவக் கோட்பாடு – விடுதலை இராசேந்திரன்

இது பண்டைக்கால மன்னராட்சியின் பழைமைவாதக் கோட்பாடு அல்ல. சமகால மானுட விழுமியங்களை உள்ளடக்கிய நவீனத்துவ சிந்தனை. தமிழ்நாடு அரசு செய்தி விளம்பரத் துறை வெளியிட்ட ஓராண்டு ஆட்சி சாதனை மலரில் எழுதிய கட்டுரை. நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், ஒரு கதையை கூறினார். அது சமூக நீதித் தொடர்பானது. “ஒரு புல்லாங்குழல் தரையில் கிடக்கிறது, அதற்கு மூன்று சிறுவர்கள் உரிமை கோருகிறார்கள். ஒரு குழந்தை, இந்தப் புல்லாங்குழலை எனக்கு மட்டுமே வாசிக்கத் தெரியும், எனக்குத் தருவது தான் சரி என்று கேட்கிறது. மற்றொரு குழந்தை, என்னிடம் விளையாடுவதற்கு எந்தப் பொருளும் கிடையாது. வாங்கித் தரும் நிலையில் எனது பெற்றோர்களும் இல்லை. எனக்குத் தாருங்கள் என்று கேட்கிறது. மூன்றாவது குழந்தை, இந்தப் புல்லாங்குழலை நானே எனது உழைப்பில் உருவாக்கி தவற விட்டுவிட்டேன், எனக்குத் தான் தர வேண்டும் என்று கேட்கிறது. இந்த மூன்று குழந்தைகளும் தங்களுக்கான நீதியை பேசுகின்றன. மூன்றிலும் நியாயம்...

ஆவிகளை நம்புகிறார் உச்சநீதிமன்ற நீதிபதி – எட்வின் பிரபாகரன்

ஆவிகளை நம்புகிறார் உச்சநீதிமன்ற நீதிபதி – எட்வின் பிரபாகரன்

உச்ச நீதிமன்ற நீதிபதி இராம சுப்ரமணியத்தின் போலி அறிவியல் வாதங்களுக்கு  ஆணித்தர மறுப்பு (8)   ‘நிமிர்வோம்’ மாத இதழில் 2020 ஆம் ஆண்டில் வெளி வந்துள்ள கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடுகிறோம். புதிர் 13: 1972ஆம் ஆண்டு ஜார்ஜ் ஓவென் என்ற கணித மரபியலாளர் ஆவிகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்ள எண்ணினார். அதற்காக ஒரு குழு உருவாக்கப்பட்டது. அக்குழுவில், ஜார்ஜ் ஓவென், அவருடைய துணைவி அய்ரிஸ் மற்றும் பலர் இடம்பெற்றிருந்தனர். குழுவின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் பொறுப்பை உளவியலாளர் ஜோயெல் விட்டொன் ஏற்றார். 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த பிலிப் என்ற நபரின் ஆவியை தொடர்புகொள்ள முயன்றதால், இது “பிலிப் பரிசோதனை” என்று அழைக்கப்பட்டது. இந்த பரிசோதனையின்போது, திடீரென்று அறையின் விளக்குகள் மங்கலாகிப் போகும். குழு உறுப்பினர்கள் பிலிப்பின் ஆவியை கேட்டுக்கொண்டதும், விளக்குகள் பிரகாசமாக எரியும். ஒருநாள் திடீரென்று, குழு உறுப்பினர்கள் அமர்ந்திருந்த மேசையின் மீது ஒரு புகைப்படலம்...

‘ஆன்மீகத்தில்’ பதுங்குகிறது பார்ப்பனியம்

‘ஆன்மீகத்தில்’ பதுங்குகிறது பார்ப்பனியம்

ஆன்மீகம் என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்பதே நமக்குப் புரியவில்லை. அகராதியில் இதற்கு எந்த அர்த்தமும் இருப்பதாகத் தெரிய வில்லை. ஆன்மீகம் என்பது ஒருகாலத்தில் எப்படி பார்க்கப் பட்டது? சனாதன வேதமதவாதிகள் ஒரு மதத்தைக் கட்டமைத்து, அதில் பார்ப்பனிய மேலாண்மையை உயர்த்திப் பிடித்து அதற்கான சடங்குகள், வழிபாட்டு முறைகளை உருவாக்கினார்கள். அப்படி கட்டமைக்கப்பட்ட ஒரு மதத்தை உருவாக்கியபோது, அதிலிருந்து விலகி நின்றவர்கள் ‘ஆன்மீகவாதிகள்’ என்று கருதப்பட்டார்கள். இராமகிருஷ்ணர், விவேகானந்தர், வள்ளலார், அரவிந்தர், ஜே.கிருஷ்ணமூர்த்தி, இப்படி ஏராளமான பட்டியல்கள் உண்டு. இவர்கள், கட்டமைக்கப்பட்ட சனாதன மதத்தின் கருத்துக்களை அப்படியே ஏற்காமல், அதில் பல கருத்துகளிலிருந்து மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்தனர். பிறகு ஆன்மீகம் என்பது சில கார்ப்பரேட் சாமியார்களின் கைகளுக்கு வந்தது. யோகா, தியானம், என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, உலகம் முழுவதும் கிளைகளை அமைத்துக் கொண்டு, அதற்கு காப்புரிமை பெற்றுக் கொண்டு, அதோடு பன்னாட்டு வணிகத்தையும் செய்து கொண்டு கோடிக் கணக்கில் வணிகமாக, தொழிலாக...

28 தெருமுனைக் கூட்டங்கள்; கோவையில் மண்டல மாநாடு : ‘திராவிட மாடலின்’ சமூகநீதி – சுயமரியாதை கொள்கைகளுக்கு மக்கள் பேராதரவு

28 தெருமுனைக் கூட்டங்கள்; கோவையில் மண்டல மாநாடு : ‘திராவிட மாடலின்’ சமூகநீதி – சுயமரியாதை கொள்கைகளுக்கு மக்கள் பேராதரவு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “நமக்கான அடையாளம் – திராவிட மாடல்” எனும் முழக்கத்தோடு கோவை டாடாபாத் ஆறுமுக்கு சாலையில் 11.5.2022 புதன் மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. முன்னதாக 23.04.2022 அன்று கோவை மேட்டுப் பாளையத்தில் துவங்கி கோவை திருப்பூர் உடுமலை பொள்ளாச்சி என பல்வேறு பகுதிகளில் 07.05.2022 வரை 28 தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி மக்களை சந்தித்து நமக்கான அடையாளம் திராவிட மாடல் எனும் பரப்புரையை கோவை திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தியது. நிறைவாக மண்டல மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் துவக்க நிகழ்வாக திராவிட மாடல் குறித்தப் பாடல்களை மேட்டூர் டி.கே. ஆர் இசைக் குழு வினர் பாடினர். இதில் கழகத் தோழர்கள் மேட்டூர் கோவிந்த ராஜ், கோவை கிருஷ்ணன், புரட்சித் தமிழன், பொள்ளாச்சி வினோதினி ஆகியோர் பாடல்களை பாடினர். பின்பு திராவிட மாடல் மண்டல மாநாடு துவங்கியது. மாநாட்டிற்கு கோவை மாநகர கழகச்...

பள்ளிப்பாளையத்தில் மண்டல மாநாடு எழுச்சி ஆரியத்துக்கு எதிராக உருவானதே திராவிடம்

பள்ளிப்பாளையத்தில் மண்டல மாநாடு எழுச்சி ஆரியத்துக்கு எதிராக உருவானதே திராவிடம்

ஈரோடு மண்டல மாநாடு – பள்ளிப்பாளை யத்தில் எழுச்சியுடன் நடந்தது. நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ என்ற கோட்பாட்டை விளக்கி 33 தெருமுனைக் கூட்டங்களைத் தொடர்ந்து மண்டல மாநாடு நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக, ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஈரோடு மண்டல மாநாட்டின் நோக்கங்களை விளக்கி, ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக 8 இடங்களில் தெருமுனைக் கூட்டங்களும், ஈரோடு தெற்கு மாவட்டம் சார்பாக 25 இடங்களில் தெருமுனைக் கூட்டங்களும், நாமக்கல் மாவட்டம் சார்பாக 10 இடங்களில் தெருமுனைக் கூட்டங்களும் நடைபெற்று முடிந்திருந்தன. தெருமுனைக் கூட்டங்களில், மாவட்ட இயக்க முன்னோடிகளும் ,திரளான தோழர்களும், தோழமை அமைப்புகளின் பொறுப்பாளர்களும் பங்கேற்றனர். பள்ளிபாளையத்தில் மண்டல மாநாடு : ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஈரோடு மண்டல மாநாடு 09.05.22 திங்கள் மாலை 5 மணிக்கு, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நேரு திடலில் தொடங்கியது. மாநாட்டையொட்டி பள்ளிபாளையம் நகர் முழுவதும் சுவரொட்டிகளும்...