போராடாமல் இருக்க முடியாது
கடவுள், மத உணர்ச்சியானது மக்களின் சுதந்திரத்திற்கும், சமத்துவ வாழ்விற்கும், இவ்வளவு இடையூறுகளுக்கும், தாரதம்மியங்களுக்கும் இடந்தராதிருக்குமானால் – நான் அவைகளைப் பற்றி இவ்வளவு கவலை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. கடவுள், மதப் பிரச்சாரத்தின் பேரால் வயிற்றுப் பிழைப்பு நடத்துபவர்களின் பரிதாபத்திற்காகவாவது நான் சும்மா விட்டுவிடுவேன் என்பதை நம்புங்கள். ஏனெனில், ஒரு மனிதன் அனாவசியமாய் – அர்த்தமும் குறிப்பும் அற்ற வார்த்தைக்காக, பைத்தியம் பிடித்திருந்தாலொழிய போராடிக் கொண்டிருக்க முடியாது. ஆனால் அதனால் பாமர மக்கள் சமூகத்திற்கு விளையும் கெடுதியைப் பார்க்கும்போது, உண்மையான உணர்ச்சியுள்ளவன் அதை ஒழிக்கப் போராடாமல் இருக்க முடியாது.
குடி அரசு – 20.11.1932
பெரியார் முழக்கம் 16062022 இதழ்