திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு, ஜூலை 13, 2019 பிற்பகல் 2.30 மணியளவில் மேட்டூரில் தாய்த் தமிழ்ப் பள்ளியில் கூடியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நிகழ்ந்த குழுவின் கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், தலைமைக் கழக செயலாளர் தபசி குமரன், வெளியீட்டுச் செயலாளர் கோபி. இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, முகநூல் பதிவு பொறுப்பாளர் பரிமள ராசன், இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், சென்னை இரா. உமாபதி, விழுப்புரம் அய்யனார், மடத்துக்குளம் மோகன், மேட்டூர் சக்திவேல், காவலாண்டியூர் ஈசுவரன், சூலூர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கழகக் கட்டமைப்பு நிதி வரவு குறித்து நன்கொடையாளர்கள் அளித்த நிதி விவரங்களை தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன் விரிவாக எடுத்துரைத்தார். தலைமைக் கழகக் கட்டிடத்தை மறு சீரமைப்பு...