பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் அடுத்த செயல்திட்டம்
ஏப்ரல் 7-ம் தேதி புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு.
முற்பட்ட வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடு என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், இடஒதுக்கீட்டினை முற்றிலுமாக அழிக்க நினைக்கும் பாஜக அரசினைக் கண்டித்து, இந்த மாதம் 27ம் தேதி தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்.
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவிப்பு.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன், தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், மார்க்சியப் பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் பொறுப்பாளர் பச்சைமலை, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன், நீரோடை அமைப்பின் தோழர் நிலவன், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தெய்வமணி, தமிழர் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் ஜோசப் கென்னடி, தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி, இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில், தமிழ்நாடு மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, தமிழ்நாடு குடியரசு கட்சியின் தோழர் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.