வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (8) வடக்கு எல்லை மீட்பு போராட்டம்: ம.பொ.சி.யின் நிலை என்ன?
பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. (7.1.2016 இதழ் தொடர்ச்சி) வடக்கு எல்லைப் பிரச்சினையை இழுத்தடிக்க இராஜாஜி சூழ்ச்சி செய்தார். இதைக் கஜபதி நாயகர் கண்டித்தார். 25.2.1954 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய ஆ.கசபதி நாயகர் “தமிழ்நாட்டுடன் சேர்ந்திருக்க வேண்டிய பகுதிகளாகிய சித்தூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி போன்ற பிராந்தியங்களை ஆந்திர இராஜ்யத்தோடு இந்திய சர்க்கார் சேர்ப்பதற்கு அனுமதித்தது தவறு ஆகும். அதனால் நாட்டில் எழுந்த கேடுகளை, கிளர்ச்சிகளை குழப்பங்களை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். அந்த பிராந்தியங்களில் வசிக்கின்ற பெரும் பான்மையான தமிழ் மக்களின் கலாச்சாரத்தைப் பாதிக்கின்ற ஒரு பெரிய விஷயத்தைப் பற்றி அந்தச் சபையில் (ஹளளநஅடெல) என் நண்பர் விநாயகம் அவர்கள் பேசும்போது, சித்தூர் விஷயம் ஆந்திர சர்க்காரின் பொறுப்பும் அல்ல,...