திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் திருப்பூர்-ஈரோடு-கரூர் மாவட்டங்களில் எழுச்சி

29.8.2012 புதன் மாலை 6 மணிக்கு திருப்பூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம், துரை சாமி இல்லத்தில் நடைபெற்றது. முகில்ராசு வரவேற் புரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை க. இராசேந்திரன், மாநில அமைப்புச் செயலாளர் தாமரைக் கண்ணன், திருப்பூர் மாவட்டக் கழகத் தலைவர் துரைசாமி, மண்டல அமைப்புச் செயலாளர் பல்லடம் விசயன் ஆகியோர் உரையாற்றினர். பெரியார் முழக்கம் ஏட்டிற்கான 180 சந்தாக்களை பொதுச் செயலாளரிடம் வழங்கினர். விரைவில் ஒரு ஆயிரம் சந்தாக்கள் வசூலித்து தருவதாக அறிவித்துள்ளனர். இறுதியாக கீழ்க்கண்ட தோழர்கள் பொறுப் பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டத் தலைவர் : சு. துரைசாமி, செயலாளர் – சு. அகிலன், பொருளாளர் – இரவிச் சந்திரன், அமைப்பாளர் – கிளாக்குளம் கு. செந்தில், தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் – செந்தில் குமார், தமிழ்நாடு அறிவியல் மன்றம் அமைப்பாளர் – மடத்துக்குளம் மோகன்.

சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் : தலைவர் – பாரதிவாசன், செய லாளர் – அனுப்பட்டி மா. பிரகாசு, அமைப்பாளர் – ஜீவா நகர் பரமேசுவரி.

திருப்பூர் மாநகரம்:  தலைவர் – சண்முகம், செயலாளர் – ஜீவா நகர் ர. குமார், அமைப்பாளர் – அ. நீதிராசன்.

திருப்பூர் ஒன்றியம்:  தலைவர் – முருங்கம் பாளையம் இரா. மூர்த்தி, செயலாளர் – இரா. தண்டபாணி, அமைப்பாளர் – முத்து.

சேவூர் கிளை : தலைவர் – ஆனந்த குமார், செயலாளர் – இரமேசு, அமைப்பாளர் – தனசேகர்.

பல்லடம் ஒன்றியம் : தலைவர் – ந. ஆறுமுகம், செயலாளர் – ர.மணிகண்டன், அமைப்பாளர் – ந.முத்துக்குமார்.

பல்லடம் ஒன்றியம் : தலைவர் – சுந்தரராசன், செயலாளர் – சு. வடிவேல், அமைப்பாளர் – தேவராஜ்.

பொங்கலூர் ஒன்றிய அமைப்பாளர் – கார்த்திக்.

அவினாசி ஒன்றிய அமைப்பாளர் – கனகராசு.

உடுமலை ஒன்றிய அமைப்பாளர் – ப. குண சேகரன்.

உடுமலை நகர அமைப்பாளர் – க.மா. மலரினியன்.

30.8.2012 வியாழக் கிழமை மாலை 6 மணிக்கு ஈரோடு மற்றும் கரூர் மாவட்டக் கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம், ஈரோடு ரீஜென்சி அரங்கில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை க. இராசேந்திரன், மாநில அமைப்புச் செயலாளர் தாமரைக் கண்ணன், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் ப. சிவகாமி, மண்டல அமைப்புச் செயலாளர் கோபி இராம. இளங்கோவன் ஆகியோர் உரையாற்றினர். ஈரோடு மாவட்டம் வடக்கு தெற்கு என இரண்டாக பிரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. கழகத் தோழர்கள் கழக வளர்ச்சி நிதியினை வழங்கினர். பலர் வழங்க இருக்கும் தொகையினை அறிவித்தனர். கீழ்க்கண்ட தோழர்கள் பொறுப்பாளர்களாக அறிவிக்கப் பட்டனர்.

கரூர் மாவட்டத் தலைவர் :  பாபு (எ) முகமது அலி, செயலாளர் – இரா. காமராசு, பொருளாளர் – தி.க. சண்முகம், அமைப்பாளர் – ரெ. மோகந்தாசு. துணைத் தலைவர் – சத்தியசீலன்,

பெரியார் தொழிலாளர் கழக அமைப்பாளர் – கட்டளை லெனின்.

தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் – ம. முத்து.

தமிழ்நாடு மாணவர் கழக துணை அமைப் பாளர்கள் – வினோத், யோக சேகர்.

தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் – ஆ. மலைக்கொழுந்தன்.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்: தலைவர் – சிறிகாந்த், செயலாளர் – இரஞ்சித்.

கரூர் ஒன்றிய அமைப்பாளர் – சு. இராசா.

தோகைமலை ஒன்றிய அமைப்பாளர் – மு. திருப்பதி.

க. பரமத்தி ஒன்றிய அமைப்பாளர் – சி. சுப்பிரமணி

கடவூர் ஒன்றிய அமைப்பாளர் – க. விஜயமோகன்

தாந்தோனி ஒன்றிய அமைப்பாளர் – சதீசுகுமார்

கிருஷ்ணராயபுரம் நகர அமைப்பாளர் – இரா. மாணிக்கம்.

ஈரோடு வடக்கு மாவட்டம் : தலைவர் கா. நாத்திக சோதி, துணைத் தலைவர் கா.சு. வேலுச்சாமி, செயலாளர் – ம. நிவாசு, இணைச் செயலாளர் – எலத்தூர் செல்வக்குமார், பொருளாளர் – வி.சு. விசு, அமைப்பாளர்கள் – க. அர்ச்சுணன், சதுமுகை பெ.பழனிச்சாமி.

மாவட்ட இளைஞரணி : தலைவர் – நா. அருளானந்தம், செயலாளர் – புதுரோடு இராசேந்திரன். அமைப்பாளர் – இறையிலன் மூர்த்தி.

தமிழ்நாடு அறிவியல் மன்றம் : தலைவர் – கீழவானி சுந்தரம், செயலாளர் – அந்தியூர் வீரன், அமைப்பாளர் – காசிப்பாளையம் பழனிச்சாமி.

தமிழ்நாடு மாணவர் கழகம்: தலைவர் – சத்தி சுதாகர், செயலாளர் – புதுரோடு ஜீவானந்தம்.

பவானி ஒன்றிய அமைப்பாளர் : சி.ந. வேணுகோபால்.

அம்மாபேட்டை ஒன்றிய அமைப்பாளர் : கு. வேல்முருகன்.

கோபி ஒன்றிய அமைப்பாளர் : விஜயசங்கர்.

கோபி நகர அமைப்பாளர் : இரகுநாதன்.

சததி நகர அமைப்பாளர் : அசோக்.

டி.என்.பாளையம் ஒன்றிய அமைப்பாளர் : சுப்ரமணியன்.

நம்பியூர் ஒன்றிய அமைப்பாளர் : இரமேசு

பவானிசாகர் ஒன்றிய அமைப்பாளர் : கலைச்செல்வன்.

பெருந்துரை ஒன்றிய அமைப்பாளர் : பா. துரையன்.

ஈரோடு தெற்கு மாவட்டம் : தலைவர் கி. செல்லப்பன், செயலாளர் – செ. சசிக்குமார், பொருளாளர் – சுகுணா, அமைப்பாளர்கள் – சென்னிமலை செல்வராசு, கு. சண்முகப் பிரியன்.

தமிழ்நாடு அறிவியல் மன்றம் : தலைவர் – சண்முகசுந்தரம், செயலாளர் – பெ.சே. மோகன்ராஜ்.

மாவட்ட இளைஞரணி : தலைவர் – சுப்பிரமணி, செயலாளர் – மூர்த்தி, அமைப்பாளர் – முத்தூர் மதிவாணன்.

ஈரோடு நகரம்: தலைவர் – ஆ. திருமுருகன், செயலாளர் – சு. சிவா, அமைப்பாளர் – கு. சண்முகப்பிரியன்.

சித்தோடு கிளைக் கழகம் : தலைவர் – சி. சத்தியராசு, செயலாளர் – ராஜேஷ், அமைப்பாளர்கள் – குமார், இளங்கோ.

பெருமாள் மலை கிளைக் கழகம் : தலைவர் – தங்கமணி, செயலாளர் – ராசண்ணா.

சென்னிமலை ஒன்றியம் : தலைவர் – ரமேசு, செயலாளர் – அழகன்.

வெள்ளோடு கிளைக் கழகம் : தலைவர் – கோபி, செயலாளர் – பழனிச்சாமி, மரவபாளையம் கிளைக் கழக அமைப்பாளர் – ரவி.

ஈரோடு மாவட்டம் சார்பாக கீழ்க்கண்ட தோழர்கள் கழக வளர்ச்சி நிதியை வழங்கினர்:

ப. இரத்தின சாமி    –              1,00,000

ப. சசிக்குமார்             –              50,000

ந. கலைச்செல்வன் (கூடக்கரை)             –              50,000

கா. நாத்திகஜோதி (முதல் தவணை)   –              50,000

வீ. நேதாஜி (முதல் தவணை)     –              50,000

இராம. இளங்கோவன்       –              1,00,000

கு. சண்முகப்பிரியன்          –              5,000

கழக வளர்ச்சி நிதி வழங்குவதாக அறிவித்த ஈரோடு மாவட்ட தோழர்களின் விவரம்:

ப. சிவக்குமார் (ஆசிரியர்)               –              50,000

சண்முக சுந்தரம் (ஆசிரியர்)        –              50,000

செ. மோகன்ராஜ்     –              1,00,000

வி.சு. விசு      –              1,00,000

விஜயசங்கர்               –              10,000

பெரியார் முழக்கம் 06092012 இதழ்

You may also like...