மின் நெருக்கடி: திருச்சியில் சமூக தணிக்கை மாநாடு

25.8.2012 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திருச்சி புத்தூர் நாலு ரோடு அருகில் உள்ள சண்முகா திருமண அரங்கில், “தமிழக மின் நெருக்கடி சமூக தணிக்கை மாநாடு” நடைபெற்றது. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பாக நடை பெற்ற இந்த மாநாட்டை வழக்கறிஞர் ஜோ. கென்னடி ஒருங்கிணைத்தார்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங் கிணைப்பாளரும், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவருமான கொளத்தூர்மணி தலைமையேற்று இந்த மாநாட்டை துவக்கி வைத்தார். வழக்கறிஞர் த. பானுமதி வரவேற் புரையாற்றினார். கண குறிஞ்சி, மீ.த. பாண்டியன், அரங்க. குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மொத்தம் நான்கு தலைப்புகளின் கீழ் நான்கு அமர்வுகளாக நடைபெற்றது.

முதல் அமர்விற்கு வழக்கறிஞர் மார்ட்டின் தலைமையேற்க, “இந்திய மின்சார துறையின் கொள்கைகளின் பரிணாமம்” என்ற தலைப்பில் உழவர் தாளாண்மை இயக்கத் தலைவர் பொறிஞர் கோ. திருநாவுக்கரசு சிறப்புரையாற்றினார்.

இரண்டாம் அமர்விற்கு கோ. திருநாவுக்கரசு தலைமையேற்க, “மின்வாரிய மேலாண்மையும் தமிழக மின்சார நெருக்கடியும்” என்ற தலைப்பில் தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு தலைவர் சா. காந்தி சிறப்புரையாற்றினார்.

மூன்றாம் அமர்விற்கு பொன். சந்திரன் தலைமையேற்றார். “நீடித்த வளர்ச்சிக்கு மாற்று மின் உற்பத்தி முறைகள் மற்றும் மின் மேலாண்மை” என்ற தலைப்பில் பொறிஞர் பிரகாஷ் சிறப்புரையாற்றினார்.

நான்காம் அமர்விற்கு சேவ் தமிழ்ஸ் இயக்கம் செந்தில் தலைமையேற்றார். “அணு உலை அரசியலும், மின்சாரமும்” என்ற தலைப்பில் பேராசிரியர் சிவக்குமார் சிறப்புரையாற்றினார்.

வழக்கறிஞர் அ. கமருதீன் நிகழ்ச்சியை நெறிப் படுத்தி வழங்கினார். சுரேஷ் நன்றியுரையாற்றினார்.

 

You may also like...