விழுப்புரம் மாவட்டத்தில் 30 தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் வனத் தாம்பாளையம் கிராமத்தில் இளையரசன் இல்லத்தில் நடைபெற்றது. ஜனவரி 8 மாலை 3 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் சிவராந்தகம், பள்ளி மேளயனூர், மருதூர் வனத்தாம் பாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து முப்பது தோழர்கள், இளையரசன் தலைமையில் கழகத்தில் இணைந்தனர். பின் புதிய தோழர்களிடம் கழகச் செயல்பாடுகள் குறித்து விழுப்புரம் அய்யனார் உரை யாற்றினார்.

இந்நிகழ்வில் புதுச்சேரி தீனா, மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் க. இராமன்,  கி. சாமிதுரை, மா. குமார், சென்னை ஜான் மண்டேலா ஆகியோர் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 02022017 இதழ்

You may also like...