ஏற்காடு தனியார் பள்ளியில் சிங்கள மாணவர்களுக்கு பயிற்சித் தருவதை எதிர்த்து கழகம் ஆர்ப்பாட்டம்

29.8.2012 அன்று ஏற்காடு மான்போர்ட் தனியார் பள்ளியில் சிங்கள மாணவர்கள் 22பேருக்கு மட்டைப் பந்து பயிற்சிக் கொடுக்கப்பட்ட செயதியறிந்து, திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் அ. பெருமாள் தலைமையில், ஏற்காடு தோழர்கள் 15 பேரும், சேலம் நகரத் தோழர்கள் இரா. டேவிட் மற்றும் 10-க்கும் மேற்பட்டோர் இணைந்து பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையறிந்து சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஏற்காடு விடுதலை சிறுத்தைக் கட்சித் தோழர்களும் ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டனர்.

பள்ளி தாளாளர் வாக்கிஷ் என்பவரிடம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சிங்கள மாணவர்களை உடனே வெளியேற்றக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.

காவல் துறையின் சமாதானத்தை ஏற்க மறுத்து பள்ளி தாளாளர் நேரில் வந்து மன்னிப்புக் கேட்டு வருத்தம் தெரிவித்தார். இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என தோழர்களிடம் உறுதியளித்தப் பின்பு தோழர்கள் கலைந்து சென்றனர்.

பெரியார் முழக்கம் 06092012 இதழ்

You may also like...