கழகப் புகார் எதிரொலி: ஜாதிவெறி ஆசாமி கைது

4.1.2017 அன்று மாலை 3 மணிக்கு ஜாதி கலவரங்களை தூண்டும் விதமாகவும், கொலையை ஆதரித்தும், ஒடுக்கப்பட்ட மக்களின் உடைமைகளை கொளுத்த வேண்டும் என்று பேசியதோடு, தேவர் சமூக இளைஞர்களை மூளை சலவை செய்து  வன்முறையாளர்களாக மாற்ற முயற்சித்த தமிழ்நாடு தேவர் பேரவை தலைவர் முத்தையா என்பவரை கைது செய்யகோரியும், இது போன்ற ஜாதி சங்கங்களை தடை செய்யக் கோரியும், மதுரை  மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர்.மா.பா. மணிகண்டன் தலைமையில்,  மாவட்ட காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. உடன்  புரட்சிகர இளைஞர் கழக மாவட்ட பொறுப்பாளர் கணேஷ் குமார்  புரட்சிப் புலிகள் அமைப்பு தோழர்கள் பீமாராவ், பகலவன், ஆதித் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சிதம்பரம், திவிக மாநகர் பொறுப்பாளர் காமாட்சி பாண்டி உள்ளிட்டோர் சென்றனர். இதைத் தொடர்ந்து தலித் மக்கள் உடைமைகளை அழிக்க வேண்டும்; கொலை செய்ய வேண்டும் என்று வெறியூட்டும் பேச்சுகளை பேசிய முத்தையா கைது செய்யப்பட்டார். இவரது வெறிப் பேச்சு ‘வாட்ஸ் அப்’களில் வலம் வந்தது.

பெரியார் முழக்கம் 12012017 இதழ்

You may also like...