சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பெரியார் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள்

தலைநகர் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் 134வது தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் 17.9.2012 திங்கள் மாலை 6 மணிக்கு இராயப்பேட்டை வி.எம். தெரு, இலாயிட்ஸ் சாலை சந்திப்பில் நடைபெறுகிறது. ச. சரவணன் தலைமையிலும், ப.கணேசன், கோ. தமிழரசன் முன்னிலையிலும், கி. இளைய சிம்மன் வரவேற்புரையிலும் நிகழ்ச்சி நடைபெறும்.

திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்,  இயக்குனர் மணிவண்ணன், வி.சி.க. கருத்தியல் பரப்புரைச் செயலாளர் எஸ்.எஸ். பாலாஜி ஆகியோர் உரையாற்றுகின்றனர். கி. முருகன் நன்றியுரை யாற்றுகிறார்.

தேனிசை செல்லப்பா இசை நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. நிறைவில் மு. கலைவாணன் குழுவினர் வழங்கும் பேரறிஞர் அண்ணாவின் எழுத்தோவியமான ‘சந்திர மோகன்’ பொம்மலாட்ட நாடகம் நிகழ்கிறது.

காலை 7.30 தொடங்கி 9 மணி வரை தோழர்கள் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவிப்பர்.

10 கிளைக் கழகங்களில் கழகத்தின் பெயர்ப் பலகைகள் திறக்கப்படுகின்றன.

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்

பெரியார் முழக்கம் 06092012 இதழ்

You may also like...