தி.மு.க. நடத்திய நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழா: கழகத் தலைவர் பங்கேற்பு

தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் 03.01.2017 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை நீலாங்கரை, சுகன்யா திருமண மண்டபத்தில் மேனாள் மேயரும் மாவட்ட செயலாளருமான மா. சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “சமஸ்கிருத திணிப்பு” எனும் தலைப்பில் கருத்துரையாற்றினார். இக்கருத்தரங்கில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேரா. சுபவீரபாண்டியன் ‘நீட் தேர்வு’ எனும் தலைப்பிலும், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன் ‘பண்பாட்டு படையெடுப்பு’ எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

பெரியார் முழக்கம் 19012017 இதழ்

You may also like...