‘இந்து’ விரோதி யார்? : சங்பரிவாரங்கள் பதில் சொல்லட்டும்
பெரியாரும் பெரியார் இயக்கமும் இந்துக் கடவுள்களை ‘புண்படுத்துகிறார்கள்’ என்று பார்ப்பனர்கள், சங் பரிவாரங்கள் ஓயாது கூக்குரலிடுவது வழக்கமாகி விட்டது. அவர்களிடம் நாம் சில கேள்விகளை முன் வைக்கிறோம். “பாரத தேசம் இந்துக்கள் தேசம்; இந்துக்கள் மட்டுமே இந்த மண்ணின் குழந்தைகள்; நாம் துவக்கமே இல்லாதவர்கள்; நமது மூலாதாரம் எது என்பது சரித்திர மேதைகளுக்கே தெரியவில்லை” – இதுதான் சங்பரிவாரங் களின் ‘இலட்சியம்’; ‘கொள்கை’. இது உண்மை என்றால் நமது இந்துக் கடவுள்கள் ஏன் மண்ணின் குழந்தைகளான சக இந்துக்களைக் கொல்ல வேண்டும்? ‘இந்து’க்களை அவதாரம் எடுத்து வந்து ஏன் அழிக்க வேண்டும்? இராமன் – இராவணனை அழிக்கவே அவதாரம் எடுத்தான் என்கிறார்கள்! இராவணன் – சங்பரிவார் கொள்கைப்படி – இந்த மண்ணின் குழந்தையான இந்து தானே? இராமன் தன்னுடைய அரசாட்சியில் ‘சம்பூகன்’ என்ற ‘இந்து’ சூத்திரன், ‘பிராமணர்’களைப் புறக்கணித்து நேரடியாகவே கடவுளை வணங்கினான் என்பதற்காக ‘சம்பூகனை’ வெட்டி மரணதண்டனை வழங்கியதாக வால்மீகி...
