வடநாட்டு ஊடகத்தை வறுத்தெடுத்தார், தமிழக நிதி அமைச்சர்
வடநாட்டு ஊடகத்தை வறுத்து எடுத்திருக்கிறார், தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். தமிழ்நாட்டில் “இலவசங்கள்” என்ற பெயரில் மக்கள் நலத் திட்டங்கள் வழங்கப்படுவதை இப்போது விவாதப் பொருளாக்கியுள்ளனர். பிரதமர் மோடி இலவசங்கள் வழங்கப்படக் கூடாது என்ற கருத்தை அறிவித்திருக்கிறார். இது குறித்து நிதி அமைச்சரிடம் கேட்ட போது, “எங்களுக்கு அறிவுரை கூறுவதற்கு இவர்கள் என்ன பொருளாதார நிபுணர்களா ? பொருளாதாரத்தில் ஆய்வுப் பட்டம் பெற்றவர்களா ? பி.எச்.டி பெற்றவர்களா ? எங்கள் பொருளாதாரத்தை நிர்ணயித்துக் கொள்ள எங்களுக்குத் தெரியும், எங்களுக்கு அறிவுரை கூற உலகத்தரம் வாய்ந்த பொருளாதார நிபுணர்கள் இருக்கிறார்கள். எங்களுடைய ஆட்சி ஒன்றிய அரசிற்கு ஒரு ரூபாய் தருகிறது என்றால், ஒன்றிய ஆட்சி எங்களுக்கு 35 பைசா மட்டுமே திருப்பி தருகிறது. அதை வைத்துக் கொண்டுதான் நாங்கள் எங்களது நிதி நிலமை கட்டமைப்புகளை நாங்கள் சரி செய்து, மக்களுக்குத் தேவையான இலவசங்களை வழங்கி, பண வீக்கத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கிறோம். நான்...