மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை!
இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் மின்னணு பொருட்களில் 30 விழுக்காடு தமிழ்நாட்டில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒன்றிய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின்படி, தமிழ்நாட்டின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 7.4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. ஆனால் இது 2021ஆம் ஆண்டில் 1.7 பில்லியன் டாலராகவே இருந்தது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் காஞ்சிபுரம் மட்டுமே 40% பங்கைக் கொண்டிருக்கிறது. தி.மு.க அரசு கடந்த 3 ஆண்டுகளில் முதலீடுகளை அதிகரிக்க மேற்கொண்ட முயற்சிகளே இதை சாத்தியமாக்கி உள்ளது.
பெரியார் முழக்கம் 18.04.2024 இதழ்