Author: admin

கோபியில் சமஸ்கிருத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

கோபியில் சமஸ்கிருத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்  சார்பாக மத்திய அரசின் சமஸ்கிருத திணிப்பைக் கண்டித்து 8.7.2016 அன்று  மாலை 5 மணியளவில் கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் மாநில வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி, சிவானந்தம் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் நாத்திக ஜோதி, வேணு கோபால், சண்முகப் பிரியன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். இறுதியாக கிருஷ்ண மூர்த்தி (மாவட்ட பொருளாளர்) நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 04082016 இதழ்

விடுதலை இராசேந்திரன் மீதுகாவல்துறை வழக்கு

திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மீது 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி மயிலாடு துறையில் கழகப் பொதுக் கூட்டத்தில் பேசிய பேச்சுக்காக சுமார் ஓராண்டுக்குப் பிறகு காவல்துறை இப்போது வழக்குப்பதிவு செய்துள்ளது. “தந்தை பெரியாரை யார், எதற்காக எதிர்க்கிறார்கள்?” என்ற தலைப்பில் அப்பொதுக் கூட்டம் நடந்தது. இரு பிரிவினரிடையே வன்முறையை  தூண்டும் விதமாக பேசியதாக மயிலாடுதுறை காவல்துறை  இந்திய தண்டனைச் சட்டம் 153(ஏ), 153 (பி), 504 பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளது. இவை பிணையில் வெளி வர முடியாத பிரிவுகளாகும். இதைத் தொடர்ந்து கழக வழக்கறிஞர் துரை. அருண், உயர்நீதிமன்றத்தில் விடுதலை இராசேந்திரன் சார்பாக முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன்பு கடந்த 28ஆம் தேதி மனு  விசாரணைக்கு வந்தது. “ஒரு வருடம் கழித்து, இப்போது  வழக்குப் பதிவு செய்வது ஏன்? இந்த பேச்சுக் குறித்து எவரிடமிருந்தும் புகாரும் வரவில்லை. இரு தரப்புக்கிடையே மோதல் உருவாகும் சூழலில்...

தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்திய பேச்சுப் போட்டி

சென்னை மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக பேச்சுப் போட்டி, இராயப்பேட்டை வி.எம். தெருவிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடந்தது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் 24.7.2016 காலை 10 மணிக்கு போட்டிகளை தொடங்கி வைத்து உரையாற்றினார். 􀁏 பெரியாரும் அம்பேத்கரும் ஏன் இன்று தேவை? 􀁏 சமத்துவ மானுடம் அடைவதற்கு அடிப்படை தடையாக இருப்பது ஜாதியா? (அ) மதமா? 􀁏 இன்றைய கல்வி முறையில் உண்மையான நோக்கம் மானுட மேன்மையா? (அ) பொருளியல் மதிப்புகளா? 􀁏 பாலின ஒடுக்குமுறைக்கு காரணமாக அமைவது தனி மனித ஒழுக்கச் சிதைவா? (அ) கலாச்சார கட்டமைப்பா? – என்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. நடுவர்களாக பேராசிரியர் அ. பெரியார், முனைவர் விநாயகம், வழக்கறிஞர் திருமூர்த்தி ஆகியோர் இருந்தனர். சென்னை மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் க. ஜெயபிரகாசு, செந்தில் (குனுடு), உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்), விழுப்புரம் அய்யனார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். 30 கல்லூரி மாணவியர் போட்டியில்...

சேனல் எடமருகுவிடம் தோற்றோடிய பார்ப்பன பண்டிதர்

2012 மார்ச் 5ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. மும்பை புற நகர் பகுதியான ‘இர்லா’வில் வேளாங்கண்ணி  மாதா தேவாலயம் ஒன்று இருக்கிறது. அதன் வாயிலில் ஏசு சிலுவையில் அறையப்படும் சிலை ஒன்று உண்டு. அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒரு பெண், அந்த சிலுவை சிலையில் கால் பகுதியிலிருந்து தண்ணீர் சொட்டு வதை பார்த்தார். உடனே கூட்டத்தைக்  கூட்டி சிலையின் காலடியில் தண்ணீர் வடிகிறது என் கூறினார். அந்தப் பெண் கிறிஸ்துவப் பெண் அல்ல. ஒவ்வொரு நாளும் கூட்டம் திரளத் தொடங்கி விட்டது. ‘ஏசு சிலையின்  அற்புதம்’ என்று பிரச்சாரம் கட்டவிழ்க்கப்பட்டது! (இதே போல் நாடு முழுதும் ஒருநாள் பிள்ளையார் சிலை பால் குடிப்பதாக ஒரு புரளி கிளப்பப்பட்டது. பின்னர் அறிவியல் வழியில் ‘அது அதிசயம் அல்ல’ என்று நிரூபிக்கப்பட்டது. (பால் குடித்த விநாயகர், அதை எப்போது சிறுநீராக வெளியேற்றினார் என்ற பகுத்தறிவாளர் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.) ‘ஏசு சிலையின் காலடியில் தண்ணீர்  சொட்டுகிறது’...

இருவர் தூக்கிலிடுவதை தடுத்து நிறுத்திய மகேஸ்வேதா தேவி : 90ஆம் வயதில் முடிவெய்தினார்

பழங்குடி மக்களுக்காக போராடியவரும், அவர்கள் வாழ்க்கை பார்ப்பன உயர் ஜாதியினர் திணித்த மூடநம்பிக்கைகளால் எப்படி சுரண்டப்படுகிறது என்பதை இலக்கியங்களாக எழுதி குவித்தவருமான மகேஸ் வேதாதேவி 90 ஆம் வயதில் கொல்கத்தாவில் முடிவெய்தினார். 120 நூல்களை அவர் எழுதியுள்ளார். ஞானபீடம் ‘பத்மவிபூஷன்’ உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றவர். ஆந்திர மாநிலத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களின் தூக்குத் தண்டனையை நிறுத்திய பெருமை இவருக்கு உண்டு. குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவிடம், அவர் ‘ஞான பீட விருது’ பெறும் நிகழ்ச்சிக்கு அடுத்த நாள் விடியற்காலை ஆந்திர மாநிலம் இராஜமுந்திரி சிறையில் இரு இளைஞர்கள் தூக்கிலிட நேரம் குறிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே அவர்களின் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இந்த நிலையில் ‘ஞான பீட விருது’ பெறும் மேடையில் விருதைப் பெறுவதற்கு முன் குடியரசுத் தலைவரிடம் ஒரு கோரிக்கை மனுவை திடீரென வழங்கினார், மகேஸ்வேதா தேவி. அடுத்த நாள் விடியற்காலைதூக்கிலிடப்படவிருக்கும் இரு இளைஞர்களின் தூக்குத் தண்டனையை...

சவால் விட்ட பூரி சங்கராச்சாரியை ஓட வைத்த அக்னிவேஷ்

கணவன் இறந்தவுடன் மனைவியை நெருப்பில் போட்டு எரிக்கும் ‘சதி’ எனும் உடன் கட்டை ஏறும் கொடுமை, சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. 1988ஆம் ஆண்டு இராஜஸ்தான் மாநிலத்தில் ரூத்கன்வர் என்ற பெண் உடன்கட்டை ஏறினார். உடனே பார்ப்பனர்கள் அந்தப்பெண்ணுக்கு கோயில் கட்டி ‘சதி மாதா’ என்று வழிபட ஆரம்பித்தார்கள். சங்பரிவார்களும் இதை ஆதரித்தன. பா.ஜ.க.வின் உ.பி. முதல்வராக இருந்த கல்யாண்சிங், சதி மாதா கோயிலுக்குச் சென்று வழிபட்டார். பூரி சங்கராச்சாரியான பார்ப்பனர் நிரஞ்சோ தீர்த் என்பவர், அப்போது உடன்கட்டை ஏறுவதை நியாயப்படுத்தி பேசி வந்தார். இராஜஸ்தான் மாநில அரசு நிறைவேற்றிய உடன்கட்டை ஏறுதல் தடுப்புச்சட்டத்தைக் கடுமையாகக் கண்டித்து வந்தார். இந்த சட்டத்தின்படி உடன் கட்டையை ஆதரித்துப் பேசுவதும் குற்றம். சங்கராச்சாரி அது பற்றிக் கவலைப்படவில்லை. இந்த நிலையில் சங்கராச்சாரி மீரத் நகரில் உடன்கட்டை ஏறுவதை ஆதரித்துப் பேசவும் யாகம் நடத்தவும் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். இதை எதிர்த்து வடநாட்டில் சமூக நீதியை தீவிரமாக ஆதரிப்பவரும் பார்ப்பன எதிர்ப்பாளராகவும் வலம்...

‘சாய்கிருஷ்ணன்’ முகமூடியைக் கிழித்த அறிவியல் குழு

பெங்களூரிலிருந்து 80 மைல் தொலைவிலுள்ள பாண்டவபுரம் எனும் ஊரில் சாய் கிருஷ்ணன் எனும் ஏழு வயது சிறுவன் அற்புத சக்தியோடு கையசைப்பில் விபூதியை தருவதாக  பெரும் கூட்டம் கூடத் தொடங்கியது. புட்டபர்த்தி சாய்பாபாவின் மறு அவதாரம் என்று இந்த சிறுவனைக் கூறினார்கள். இந்த சிறுவனைப் பார்த்து புட்டபர்த்தி சாய்பாபா சீடர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஒரு ஆஸ்திரேலிய  நாட்டுக்காரர், இந்த சிறுவனின் ‘அதிசய சக்தியை’  விளக்கி வெளிநாடுகளில் பரப்ப ஒரு  திரைப்படத்தையே தயாரித்தார். “இந்த சிறுவன் 11 மாதம் வயிற்றிலிருந்து பிறந்தான் என்றும், பிறக்கும்போது தனக்கு பிரசவ வலியே இல்லை என்றும், பிறந்ததிலிருந்தே அவனது உடலிலிருந்து விபூதி கொட்டத் தொடங்கி விட்டது என்றும் அவரது தாயார் கூறி வந்தார். பெங்களூர் பல்கலைக்கழகத்தின் துணை  வேந்தராக இருந்தவர் டாக்டர் எச். நரசிம்மையா – எளிமையான காந்தியவாதி; சீரிய பகுத்தறிவாளர்; மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இயக்கங்களை நடத்திய பெருமைக்குரியவர். பல்கலைக் கழகப் பேராசிரியர்களைக் கொண்டு மூடநம்பிக்கை ஒழிப்புக் குழு ஒன்றை...

மிரண்டு ஓடிய ‘பேய்’ ஓட்டும் பாதிரியார்கள்

சாமியார்கள் சங்கராச்சாரிகள்  அற்புதசக்தி இருப்பதாக மோசடி செய்தவர்களை நேருக்கு நேர் சந்தித்து  அவர்களின் முகத்திரையைக் கிழித்து  எறிந்த சம்பவங்கள் ஏராளம் உண்டு. அது குறித்து சில நிகழ்வுகளின்  தொகுப்பு: மேட்டூர் கொளத்தூரிலிருந்து மூன்று  மைல் தொலைவிலுள்ள கிராமம் தார்க்காடு சுந்தராபுரம். 1975 ஆம் ஆண்டு  செப்டம்பர் 25ஆம் தேதி இந்த ஊரில் கிறிஸ்தவர் பிரச்சார முகாம் நடந்தது. மதப்பிரச்சாரம் மட்டுமின்றி, ‘பேயோட்டுதல்’ போன்ற மூடநம்பிக்கைகளையும் மக்களிடையே பரப்பி வந்தார்கள். செய்தியறிந்து அவ்வூர் பொது மக்கள் கொளத்தூர் திராவிடர் கழகத் தோழர்களுக்கு  தகவல் தெரிவித்தனர். கொளத்தூர் திராவிடர் கழகத் தலைவர் தா.செ. மணி  (கழகத் தலைவர் கொளத்தூர் மணி), பகுத்தறிவாளர் கழகத் தலைவர் டி.ஆர்.கிருஷ்ணன் மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் சுபாஷ் சந்திர போஸ், ஆசிரியர்  எம். இராமலிங்கம், டி.கே. நாச்சிமுத்து, வி.கே. முத்துசாமி ஆகியோரடங்கிய குழு தார்க்காடு விரைந்தது. 8 மணிக்கு மதப் பிரச்சாரகர் நிகழ்ச்சியைத் தொடங்கியுடன்,கிறிஸ்தவ மதம் குறித்து தங்களின் சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டும் என்று...

குஜராத், தலித் மக்களின் புரட்சி

செத்த மாட்டைப் புதைக்க மாட்டோம்; சாக்கடைக் குழியில் இறங்க மாட்டோம்! குஜராத், தலித் மக்களின் புரட்சி “செத்த மாடுகளைப் புதைப்பது உள்ளிட்ட இழிவான வேலைகளை செய்ய மாட்டோம்” என்று, தலித்  மக்கள் போர்க்கொடி உயர்த்திய மகிழ்ச்சியான செய்திகள்  வந்து கொண்டிருக்கின்றன. குஜராத் மாநிலத்தில் செத்த பசுமாட்டுத் தோலை  உரித்தார்கள் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியுள்ள ‘பசு பாதுகாப்பு’ அமைப்பைச் சார்ந்த வன்முறையாளர்கள், தலித் இளைஞர்களை ஆடைகளைக் களைந்து  மூர்க்கத்தனமாக தாக்கினர். இந்த செய்தி குஜராத் தலித்  மக்களை கொதித்தெழச் செய்துவிட்டது. மாட்டுத் தோலை விற்பதையே தங்கள் தொழிலாகக் கொண்டவர்கள் தலித் மக்கள். செத்த மாடுகளின் தோலை உரிக்கக் கூடாது என்று  ஆர்.எஸ்.எஸ். கும்பல் வன்முறையில் ஈடுபடுவது அவர்களின் வாழ்வாதாரத்தையே பாதிக்கிறது. இனி  செத்த மாடுகளை புதைக்க மாட்டோம் என்று குஜராத்தில்  தலித் மக்கள் அறிவித்து விட்டதால், 200 செத்த மாடுகள் புதைக்கப்படாமல் துர்நாற்றம் அடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் குஜராத் மாநிலம் சபர்மதியில் தலித்  மக்கள் கடந்த ஞாயிற்றுக்...

காந்தியின் ஆயுளை பொய்யாக்கியது சோதிடம்!

மக்களின் அறியாமையையும்  மூடநம்பிக்கையையும் பயன்படுத்தி வெளி வந்த இதழ்களுள், ‘பாரத தேவி’ என்ற சோதிட  இதழும் ஒன்றாகும். இந்நூலின் 16.8.1947-ந் தேதி இதழில்  காந்தியைப் பற்றி, ‘புகழ் பெற்ற’ சோதிடரான வி.கே. கிருஷ்ண மாச்சாரி என்பவரால் ஒரு  சோதிடக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   “காந்தியடிகள் பிறந்தது சிம்ம லக்கனம், மக நட்சத்திரம். விடியற்காலம் மக நட்சத்திரத்தில் ஜனித்தவர்களுக்கு தீர்க்காயுள் யோகம் உண்டு. இதேபோல் சிம்ம லக்கனமும் நீண்ட ஆயுள் தரக் கூடியது.”  “மேலும் ஜன்ம லக்கனம்,  சிம்மமாகவும், அதில் சந்திரன் ஆயுள் ஸ்தானாதிபதியான குரு தசம கேந்திரத்தில் நின்று லக்னாதிபதியான சூரியனையும், ஆயுள்காரனாகிய சனியையும்  பார்ப்பதனாலும் பரமாயுள் என்ற  கணக்கான 120 வருஷங்கள் மகாத்மாவுக்கு ஆயுள் உண்டு.  “தவிர, முன் காலத்தில் தப சிரேஷ்டர்களான ரிஷீஸ்வர்கள்  தமது தபோ மகிமையால் ஆயிரக்கணக்கான வருஷங்கள்  ஜீவித்ததுபோல் காந்தியடிகள்  தமது தெய்வ பிரார்த்தனையால் ஆயுள் விருத்து செய்து கொண்ட ஜாதக ரீதியாக ஏற்படும் பரமாயுள் 120 வருஷங்களுக்கு அதிகமாகவே ஜீவித்திருப்பாரென்பது எனது...

மத்தியரசின் புதிய கல்விகொள்கையை எதிர்த்து கருத்தரங்கம் ப.வேலூர் 14082016

கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மத்திய பேரரசுவின் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து கருத்தரங்கம். நடுவண் அரசே, மாநில உரிமையை பறிக்காதே என்ற முழக்கத்தோடு கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி 14082016 அன்று மாலை 5 மணிக்கு நகர வர்த்தகர் சங்கம், ப.வேலூரில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் திரு நாகநாதன், மேலான் திட்டக்குழு துணைத்தலைவர் மற்றும் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் தோழர் முகிலன் கலந்து கொண்டனர்.  

காவிரி ஆறு எங்கள் ஆறு!! மணல் கொள்ளையனே வெளியேறு!! – மாபெரும் கையெழுத்து இயக்கம்

கரூர் மாவட்டம் புகழூரில் 14082016 அன்று காவிரிப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் சார்பாக மணல் குவாரி அமைத்து மணல் கொள்ளை அடிப்பதை தடுத்து நிறுத்தக் கோரி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது,இந்த நிகழ்வில் கலந்துகொண்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மணல் கொள்ளைக்கெதிராக கண்டன உரையாற்றி முதல் கையெழுத்திட்டு ,கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்..  

பாமர மக்களை பற்றிப்படரும் பெரியாரியம்….

நாமக்கல் மாவட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய அறிவியல் பரப்புரைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு. புகைப்படம் தோழர் வைரம், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர்

நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்பு பரப்புரை பயணம் தூத்துக்குடி 27082016

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வருகின்ற ஆகஸ்ட் 27ம் தேதி, “கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இனத்தினர் மீது இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக “நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்பு பரப்புரை பயணம்” பார்ப்பன- இந்துத்துவ போக்கை கண்டித்து நம் உரிமையை வென்றெடுப்போம், வாருங்கள்..

சத்தியமங்கலம் அணியின் நான்காம் நாள் எழுச்சி பரப்புரை பயணம்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணத்தில் சத்தி அணியின் நான்காவது நாள் பயணம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் துவங்கியது. முதல் நிகழ்வாக தோழர் ஆனந்து தலைமையில் ஆன வீதி நாடக குழுவின் பறை இசை மற்றும் மூடநம்பிக்கை  ஒழிப்புசார்ந்த வீதி நாடகம் நடைபெற்றது. தொடர்ந்து தோழர் சுவாமி நாதன்,முத்துபாண்டி,அய்யனார் ஆகியோர் கருத்துரை வழங்க தோழர் வைரவேல் நன்றி கூற பயணம் ஆவத்திபாளையம் சென்றடைந்த்து. ஆவத்திபாளையம் பேருந்து நிறுத்தத்தில் பயணக்குழு தனது பரப்புரையை தொடர்ந்த்து.அப்பகுதியில் கழகத்தின் பொது செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் உரை நிகழ்த்த தோழர் சரவணன் நன்றி கூற பயணக்குழு திருச்செங்கோடு சென்று அடைந்த்து.மதிய உணவுக்கு பின்  பயணக்குழு தேவனாங்குறிச்சி சென்றடைந்த்து. அங்கு கலைக் குழுவின் வீதி நாடகம் மற்றும் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழு வின் பகுத்தறிவு பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து விடுதலை இராசேந்திரன் அவர்கள் கருத்துரை வழங்க, தோழர் சதிஷ் நன்றி...

மன்னார்குடி பரப்புரை பயண காட்சிகள் !

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறும் ”நம்புங்க அறிவியலை …நம்பாதீங்க சாமியார்கள …” எனும் தலைப்பில் ”அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை” பயணம் தமிழகத்தின் நான்கு முனைகளில் ஆரம்பித்து கிராமங்கள்,ஊர்கள், நகரங்கள் வழியாக பயணித்து மக்களை சந்தித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது

எழுச்சியுடன் நடைபெறும் பரப்புரை பயணம் ஆத்தூரில் சுவரெழுத்து

நம்புங்கள் அறிவியலை நம்பாதிங்க சாமியார்களை என்ற முழக்கக்தோடு திவிக முன்னெடுக்கும் நான்கு திசைகளிலிருந்தும் அறிவியல் பரப்புரை பயணத்தின் நோக்கத்தை வலியுறுத்தி 12082016 அன்று நடைபெற உள்ள நிறைவுரை பொதுக்கூட்டத்தின் சுவரெழுத்து  இராணிப்பேட்டை ஆத்தூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் சிறப்புரையோடு.    

திருப்பூரில் நிமிர்வு கலைக்குழுவினருக்கு பாராட்டு !

திருப்பூரில் நிமிர்வு கலைக்குழுவினருக்கு பாராட்டு !

திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறும் ”நம்புங்க அறிவியலை …நம்பாதீங்க சாமியார்கள …” எனும் தலைப்பில் ”அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை” பயணம் நிமிர்வு கலைக்குழுவினரின் பறையிசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.இந்நிகழ்ச்சி கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கலை நிகழ்சியாக மட்டுமல்லாமல்இசையிலும் நடைபெற்றுவரும் தீண்டாமை குறித்தும் விளக்கங்களுடன் நிகழ்சியை நடத்தினர்.சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் பங்கேற்ற கலைஞர்களுக்கு திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன. பொருளாளர் துரைசாமி அவர்களும்,அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி அவர்களும் தோழர்களை பாராட்டி பரிசளித்தனர்.

பல்லடத்தில் பரப்புரை பயணக்குழு !

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்று வரும் ”நம்புங்க அறிவியலை …நம்பாதீங்க சாமியார்கள …” எனும் தலைப்பில் ”அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை” பயணத்தில் நேற்று பல்லடத்தில் பரப்புரை நடைபெற்றது. பல்லடம் பரப்புரை பயணம் மதியம் 11.30 க்கு துவங்கியது. பல்லடம் நகர தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.மாநில பெருளாளர் திருப்பூர் துரை சாமி, ஆனைமலை மணிமொழி, திருப்பூர் மாவட்ட செயலாளர் தோழர் முகில் ராசு,ஒன்றியச் செயலாளர் சண்முகம், பயண ஒருங்கிணைப்பாளர் சூலூர் பன்னிர் செல்வம், மந்திரமா தந்திரமா காவை இளவரசன் தி.வி க நன்றியுரை சங்கீதா அவர்கள். ,

மூன்றாம் நாள் அச்சம் போக்கும் அறிவியல் பயண பரப்புரை தொகுப்பு சத்தியமங்கலம் அணி

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணத்தின் சத்தி அணியின் மூன்றாம் நாள் முதல் நிகழ்வு பூதப்பாடியில் காலை 10 மணிக்கு  மேட்டூர் கோவிந்தராஜ்  குழுவினரின் பறை இசை நிகழ்ச்சி மற்றும் பகுத்தறிவு பாடல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து நாத்திக சோதி,ரமேசு,பால் பிரபாகரன்,ஆகியோர் கருத்துரை வழங்க தோழர் வேணுகோபால் நன்றியுரை கூற பயணம் அப்பகுதியில் முடிவுற்றது.தோழர்களுக்கு திராவிடர் கழகத்தின் தோழர்கள் தேனீர் வாங்கி கொடுத்தனர்.பயணக்குழு சித்தார் பகுதிக்கு வந்தடைந்த்து.அங்கு தோழர் கோவிந்தராசு குழுவின் பறை இசை மற்றும்  பகுத்தறிவு பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நாத்திக சோதி,வேணு கோபால் ,பால்பிரபாகரன், ஆகியோர் உரையாற்ற தோழர் ஆனந்தன் நன்றியுரை ஆற்றினார். தோழர்கள் அனைவருக்கும்  தோழர் ஆனந்தன் மதிய உணவு ஏற்பாடு செய்தார். மதிய உணவு மற்றும் சிறிது நேரம் ஓய்வு க்கு பிறகு பயண குழு பவானி பேருந்து நிலையம் வந்து அடைந்த்து. நம் பயணக்குழு பவானி வந்த...

சத்தி அணியின் இரண்டாம் நாள் பயண பொதுக்கூட்ட நிகழ்வு

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணத்தின் சத்தி அணியின் இரண்டாம் நாள் நிறைவு பொதுக்கூட்டம் குருவரெட்டியூரில் 8.8.2016 மாலை 7 மணிக்கு துவங்கியது. முதல் நிகழ்வாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் பறை இசை முழக்கத்தோடு தொடங்கியது.தொடர்ந்து பகுத்தறிவு பாடல்கள் பாடியபின் பொது கூட்ட நிகழ்வுகள் தொடங்கியது.தோழர் நாத்திகசோதி தலைமை ஏற்க தோழர் வேல்முருகன் வரவேற்பு உரை ஆற்ற தோழர்  இராம.இளங்கோவன், தோழர் இரத்தினசாமி,தோழர் பால்பிரபாகரன் ஆகியோர் கருத்துரை வழங்க தோழர் திலிபன் நன்றியுரை ஆற்றினார்.

அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணம் சத்தியமங்கலம் பயணக் குழு

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் நம்புங்கள் அறிவியலை!நம்பாதீர்கள் சாமியார்களை எனும் தலைப்பில், அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணத்தை தமிழகத்தில் 4 பகுதிகளில் இருந்து தொடங்கி மாநிலம் முழுவதும் பலவேறு பகுதிகளில் நடக்கிறது. அதன் ஒருபகுதியாக சத்தியமங்கலத்தில் இருந்து ஆகத்து 7 ம் தேதி கழக பரப்புரைச் செயலாளர்  பால் பிரபாகரன் தலைமையில் பரப்புரை பயணம் துவங்கியது. பயணத்தின் முதல் நிகழ்வாக சத்தியமங்கலம் கழக தோழரும், மேட்டூர் தோழர் சம்பத் அவர்களின் தம்பியுமான தோழர் கோகுல்ராசு அவர்களின் படத்தினை தோழர்  பால்பிரபாகரன் திறந்து வைத்தார். தொடர்ந்து மேட்டூர் டி கே ஆர் இசைக்குழுவின் பகுத்தறிவு இசைநிகழ்ச்சி நடைபெற்றது. பாடல்களுக்கு  இடையே தோழர் கோவிந்தராசு மற்றும் தோழர் கிருட்டிணன் அவர்களும் நகைச்சுவையாக மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தருக்கவகையில் கருத்துக்களை முன்வைத்தனர். தொடர்ந்து மாநில வெளியீட்டு செயலாளர் இராம இளங்கோவன் கோபி வேலுச்சாமி ஆகையோர் உரையாற்றினார்கள். தோழர் மூர்த்தி நன்றியுரை ஆற்ற அங்கு.நிகழ்ச்சி நிறைவுற்றது. ஆதிதமிழர் முன்னணி  அமைப்பை சார்ந்த தோழர்கள் நமது தோழர்களுக்கு தேநீர் ஏற்பாடு செய்து கொடுத்தனர். பயணக்குழு நம்பியூர் ஒன்றிய...

மயிலாடுதுறை பரப்புரை வாகனம் !

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறும் ”நம்புங்க அறிவியலை …நம்பாதீங்க சாமியார்கள …” எனும் தலைப்பில் ”அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை” பயணம் தமிழகத்தின் நான்கு முனைகளில் ஆரம்பித்து கிராமங்கள்,ஊர்கள், நகரங்கள் வழியாக பயணித்து மக்களை சந்தித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது

அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயண தொடக்க விழா மயிலாடுதுறை 07082016

மயிலாடுதுறையில் தொடக்க விழா 07082016 அன்று! கழக தலைவர் தலைமையில். திராவிடர் விடுதலைக்கழகத்தின் ‘அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணம்’ ‘நம்புங்க-அறிவியல; நம்பாதீங்க-சாமியார்கள’ எனும் முழக்கத்தோடு தமிழகத்தின் 4 முனைகளிலிருந்து ஆகஸ்டு 7இல் புறப்படுகிறது. நிறைவு விழா ஆகஸ்ட்12 . மக்களிடம் அறிவியல் சிந்தனைகளையும் பகுத்தறிவு கருத்துகளையும் விளக்கும் பிரச்சார பயணம்  

அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயண தொடக்க விழா திருப்பூர் 07082016

திருப்பூர் அணி வேலம்பாளையத்தில் துவக்க விழா பொதுக் கூட்டம் பறை இசை நிகழ்ச்சியுடன் துவங்கியது. தலைமை தனபால் வரவேற்புரை தோழர் முத்து பறை முழக்கம் நிமிர்வு கலைக்குழு விளக்க உரை: தோழர் சு. துரைசாமி மாநில பொருளாளர் தோழர் வீ.சிவகாமி அமைப்பாளர் தமிழ்நாடு அறிவியல் மன்றம் நிர்மல்குமார் கோவை மாவட்ட செயலாளர் தோழர் முகில் ராசு மாவட்டக் செயலாளர் தோழர் நீதிராசன் மாநகர தலைவர் திருப் பூர்

சென்னை அணி காஞ்சிபுரத்தில் பரப்புரை

காஞ்சியில் சங்கரமடம் எதிரில் கழகம் தன் முழுவீச்சில் அறிவியல் பரப்புரையை தோழர்கள் வீதி நாடகம் பகுத்தறிவு பாடல்கள் மூலம் ‘ மதம் மனிதனை மிருகமாக்கும்’ ஜாதி மனிதனை சாக்கடையாக்கும்’ என்றும் அச்சம் போக்கி நம்பாதீர்கள் போலி சாமியார்களை அம்பலப்படுத்தி மாலை பரப்புரை அதிக கூட்டத்தின் இடையே படுத்திய நேரம் ஒரு இஸ்லாமிய சவ ஊர்வலத்திற்கு மதிப்பளித்து பரப்புரையை நிறுத்தி மீண்டும் கழகப் பொதுச் செயலாளர் உரையை தொடர்ந்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தினார். காஞ்சி மக்கள் மன்ற தோழர்கள் திரளாக வந்து ஆதரவு தெரிவித்தனர். செய்தி குகநந்தன்

கிருஷ்ண பகவான் குசேலன் நட்பு – நண்பர்கள் தின செய்தி

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்து, குடும்பம் பெருத்துவிட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணத்தில் சொல்லுகிறது. குசேலர் பெண்ஜாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும் கைக் குழந்தைக்கு ஒரு வருஷமாயிருக்குமானால் மூத்த பிள்ளைக்கு 27 வருஷமாவது ஆகியிருக்க வேண்டும். ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்களா? இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசு கூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப்பார்கள்? 20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருந்திருக்காதா? அல்லது இந்தப் பிள்ளைகளுக்காவது மான அவமானமிருந்திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக்காவது, என்ன? பெரிய பெரிய வயது வந்த பிள்ளைகளைத் தடிப்பயல்களாட்டமாய் வைத்துக் கொண்டு பிச்சைக்கு வந்தாயே வெட்கமில்லையா? என்று கேட்கக் கூடிய புத்தி இருந்திருக்காதா? – பகுத்தறிவு, ஜூலை – 1935

பரிசளிப்பு விழா – கல்லூரி மாணவர்களுக்கு பெரியார் பிறந்தநாள் போட்டி

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்தநாள் கட்டுரை போட்டி, பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா 06082016 அன்று அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணத்தின் துவக்க விழாவின் போது கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்த்தி வணங்கினார் நம்புங்கள் அறிவியலை, நம்பாதிங்க சாமியார்களை என்ற முழக்கத்தோடு நடைபெற உள்ள பரப்புரை பயணத்தின் துவக்க விழா சென்னை திவிக சார்பில் 08082016 மாலை 6 மணிக்கு லாயிட்ஸ் சாலையில் நடைபெற்றது அவ்விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்

“நம்புங்கள் அறிவியலை – நம்பாதிங்க சாமியார்களை …துவக்கவிழா பொதுக்கூட்டம் சென்னை 06082016

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் “நம்புங்கள் அறிவியலை – நம்பாதிங்க சாமியார்களை… அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை துவக்க பொதுக் கூட்டம் 06.08.16 சனிக் கிழமை மாலை 6.00 மணியளவில் இலாயிட்ஸ் சாலை, சென்னையில் மாவட்டத் தலைவர் உமாபதி முன்னுரையுடன் இனிதே துவங்கியது. சம்பூகன் இசை குழுவின் பகுத்தறிவு பாடல்களை தொடர்ந்து தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்திய  கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் கருத்துரையுடன் கழக வழக்கறிஞர் திருமூர்த்தி, அருண் ஆகியோரும் அறிவியல பரப்பரையின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினார்கள் தோழர் தர்மா நன்றியுரையுடன் நிகழ்ச்சி முடிவுற்றது செய்தி தோழர் குகநந்தன்

திருப்பூரில் அறிவியல் பரப்புரை பயண சுவர் விளம்பரங்கள்

திருப்பூரில் சுவர் விளம்பரங்கள் ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறும் ”நம்புங்க அறிவியலை …நம்பாதீங்க சாமியார்கள …” அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை “பயணத்திற்கு திருப்பூர் மாஸ்கோ நகர் பகுதியில் செய்யப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள். ஓவியர் தோழர் பழனி பத்மநாபன் அவர்கள்.

அறிவியல் பிரச்சார பயணம் – கழக தோழர்களுக்கு ஒரு அறிவிப்பு !

பரப்புரைப் பயணத்தின் செய்திகளை அனுப்புவது தொடர்பாக……… கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை ”நம்புங்க அறிவியல …நம்பாதீங்க சாமியார்கள …” எனும் முழக்கத்தோடு நடைபெறும் ”அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை” பயணம் தமிழகத்தின் நான்கு முனைகளில் புறப்பட்டு சிற்றூர்கள்,நகரங்கள் வழியாக பயணித்து மக்களைச் சந்தித்து விழிப்புணர்வுப் பரப்புரை செய்ய உள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது 3 இடங்கள் என்கிற அளவில் தெருமுனைக் கூட்டங்களும், பொதுக்கூட்டங்களுக்குமான ஏற்பாடுகளை கழகத் தோழர்கள் செய்துவருகிறார்கள் 4 அணிகள் 5 நாட்கள் என 80 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ள இந்த பரப்புரைப் பயணத்தின் ஒவ்வொரு நிகழ்வின் செய்திகளையும் தோழர்கள் தவறாது பதிவு செய்து, அதனை கழகத் தலைமைக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்செய்திகளை அனுப்புவதற்கென ஒவ்வொரு அணிக்கும் ஒரு தோழர் பொறுப்பெடுத்துக்கொள்வது நல்லது. ஒவ்வொரு நிகழ்ச்சிகள் பற்றி குறைந்த அளவு 3 புகைப்படங்கள்,கலந்து கொண்டோர் மற்றும் செய்திகள் ஆகியவற்றைக்...

அறிவியல் பரப்புரை பயணத்திற்கு புது பொலிவுடன் பிரச்சார வாகனம்

நம்புங்கள் அறிவியலை … நம்பாதீங்க சாமியர்களை … அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை … மூடநம்பிக்கைக்கு எதிரான பிரச்சார வாசகங்கள் மற்றும் அதன் மடமையை வலியை விளக்கும் புகைப்படங்கள் அடங்கிய பதாகையை பேருந்து முழுவதும் ஓட்டும் பணி சென்னை திவிக சார்பில் இராயப்பேட்டை பத்ரி படிப்பகத்தில் இரவு முழுவதும் நடந்தது … அனைத்து விதமான பிரச்சார சுவரொட்டிகளோடு பாமர மக்களுக்கு மிக எளிதாக புரியும்வண்ணம் பலவண்ணத்தில் பேருந்தின் நாற்புரமும் ஒட்டி முடிக்கப்பட்டது

மருத்துவ கல்வியில் பறிபோகும் தமிழக மாணவர்களின் எதிர்காலம் – அலசல்

சில வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்த ஒரு சிறுமியை பற்றி கேள்வி பட்டிருக்கிறோம்.. அதற்கு பிறக்கும் அது போன்ற செய்திகள் வந்திப்பதாகவே நினைவு.. அவர்கள் ஏன் சிகிச்சைக்காக தமிழகத்திற்கு வர வேண்டும்?.. இந்தியாவின் ஹைடெக் நகரங்களான மும்பை டெல்லி பெங்களூர் போன்றவற்றை எல்லாம் விட்டு விட்டு.. என்பதில்தான் மருத்துவத்தில் தமிழகம் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது என்பது புரியும்.. மருத்துவத்திலும், மருத்துவக் கல்வியிலும் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக உள்ளது தமிழகம்தான். பிற மாநிலங்களில் இருந்தும் , வெளிநாடுகளிலிருந்தும் தமிழகத்துக்கு சிகிச்சைக்காக பலர் வருகின்றனர். ஆசியாவிலேயே சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் தமிழகமும் இருக்கிறது. திராவிடத்தால் வாழ்ந்தவர்களுக்கு கொஞ்சம் களுக்குன்னு இருக்கும் பேரவால்ல, விஷயம் அதுவல்ல மேல சொன்ன பெருமைகள் நம்மை விட்டு போக போகின்றன.. நீட் மருத்துவ நுழைவு தேர்வு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறார்கள்.. இந்தியா முழுவதிற்கும் மருத்துவத்திற்கு ஒரே நுழைவு தேர்வு கொண்டு வர போகிறார்கள்.. நியாயந்தானேன்னு நம்மாளு வக்கணையா பேசுவான். உள்ளே இருக்கும் சாதிகளை புரிஞ்சுக்காம.. தமிழகத்தில் தான் அரசு மருத்துவ...

நம்புங்கள் அறிவியலை… நம்பாதீங்க சாமியார்களை….பொதுக்கூட்டம் மன்னார்குடி 08082016

திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் .கொளத்தூர்மணி அவர்கள் தலைமையில்… திருவாரூர் மாவட்டதில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் நம்புங்கள் அறிவியலை… நம்பாதீங்க சாமியார்களை…. அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணம்!… 08.08.2016 மாலை 5மணிக்கு நீடாமங்கலம் பெரியார் சிலைஅருகில்.. இரவு 7மணிக்கு மன்னார்குடி பந்தலடி கீழ்புறத்தில்… மாபெரும் பொதுக்கூட்டம்…!!  அனைவரும் வாரீர்!

வேளாண் கடனையும்,கல்விக்கடனையும் விலக்கிக்கொள்ள வலியுறுத்தி தெருமுனைக் கூட்டம்.

பேராவூரணி ஜூலை 26. பேராவூரணி அருகில் ரெட்டவயல் கடைத்தெருவில் வேளாண் கடனையும்,கல்விக்கடனையும் விலக்கிக்கொள்ள வலியுறுத்தி தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. வீரக்குடி ராசா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக மற்றும் இந்திய அரசுகள் மாணவர்களின் கல்விக் கடனை உடனே விலக்கிக்கொள்ள வேண்டும், வங்கிகள் அளித்த கடனை வசூலிக்கும் உரிமையை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும், வியாபார நோக்கில் செயல்படும் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும், தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவயமாகக் கல்வியை வழங்க வேண்டும், கல்விக் கடன் என்ற பெயரில் தனியார் கல்வி நிறுவனங்களை வளர்க்கும் போக்கை அரசு கைவிட வேண்டும், தனியார் பன்னாட்டு நிறுவனங்களின் வேளாண் வாகனங்களை விற்பனை செய்திட வேளாண் கடன்களைக் கொடுத்துவிட்டு உழவர்களைக் கடனாளியாக்கும் போக்கை அரசு கைவிட வேண்டும், வேளாண் உற்பத்திக்குத் தேவையான அனைத்துச் செலவினங்களையும் அரசே மானியமாக வழங்கி வேளாண் உற்பத்தியைப் பெருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...

அஸ்வினி-மதிவதணன் வாழ்க்கை ஒப்பந்த விழா

அஸ்வினி-மதிவதணன் வாழ்க்கை ஒப்பந்த விழா

26-6-2016 ஞாயிறு அன்று பகல் 11-00 மணிக்கு புதுச்சேரி, முத்தியாலுபேட்டை அம்பாள் திருமண மண்டபத்தில், விரட்டு வீதி நாடகக் குழு கலைஞர்களும், கல்லூரிகளில் துணைப் பேராசிரியர்களாகப் பணியாற்றுவோருமான, தோழர்கள் சி.அ.அஸ்வினி – மதிவதணன் ஆகியோரின் வாழ்க்கைத் துணைநல ஏற்புவிழா, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. மருத்துவர் எழிலன், தலித் சுப்பையா, யாழன் ஆதி, சேலம் வி.சி.க.தலைவர் நாவரசன், கோகுல் காந்திநாத் ஆகியோரின் விழா விளக்கவுரைகளைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஒப்பந்த உறுதிமொழிகளை கூறச் செய்து வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை நிறைவேற்றி வைத்தார். தாலி தவிர்க்கப்பட்ட இவ்விழாவில் மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தங்க சங்கிலிகளை அணிவித்தனர். வாழ்க்கை ஒப்பந்த விழாவுக்கு முன்னதாக பறையிசை, கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கிராமப்புற பாடல்கள் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் நிகழ்ந்தது. மணமக்கள் இருவரும் பறைமுழக்கத்தில் பங்கேற்று பறை அடித்தது குறிப்பிடத்தக்கது. விழாவை விரட்டு வீதி நாடகக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் மிக சிறப்பாக ஒழுங்கமைத்தார். விழாவில் புதுவை மாநில கழக அமைப்பாளர் தந்தை பிரியன், வழக்கறிஞர்...

விண்வெளியில் பறக்கும் தட்டுகள் உருவாவது எப்படி?

விண்வெளியில் பறக்கும் தட்டுகள் உருவாவது எப்படி?

பறக்கும் தட்டுகள் (Flying saucers) பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். வானிலிருந்து மனிதர்கள் பூமிக்கு வருவதாக புரட்டுகளை பரப்புகிறார்கள். அது மிகவும் அதிசய மானது என்றும் அதைப் பற்றி நம்ப முடியாத கட்டுக் கதைகளையும் இது வரையிலும் கூறி வந்தனர். இப்பொழுது ஆராய்ச்சியாளர்கள் குறிப்பாகக் கணித ஆராய்ச்சியாளர்கள் பறக்கும் தட்டு உருவாகும் விதத்தைக் கணிதத்தின் புதிய பிரிவான catastrophe Theory  மூலம் விளக்கியுள்ளனர். அதாவது ஒளி அலைக்கற்றையானது ஒரு நீள்வட்ட ஊடகத்தில் பாயும் பொழுது ஒரு வகையான ஒளிக்கூடு ஏற்படுகிறது. இதை காஸ்டிக் (caustic) என்பர். அது லேசான காற்றில் ஒரு வகையான மாற்றத்தால் புதிய காஸ்டிக்காக உருவாகிறது. இது தட்டுப் போன்ற அமைப்புக் கொண்டது. பனி மூட்டத்தின் மீதோ அல்லது தூசு மண்ட லத்தின் மீதோ பாயும் பொழுது இது போன்ற காஸ்டிக்குகள் உருவாகும். பனிப் படலமும் தூசு மண்டலமும் நகரும் பொழுது இந்த காஸ்டிக்குகளும் நகரும். இதையே பறக்கும் தட்டுகள் என்று கூறு கின்றனர். ஆதாரம் : V.I. Arnold, catastrophe Theory  spring, Berlin  1984. பெரியார் முழக்கம் 28072016 இதழ்

மகிழ்வோடு; தார்சூடு!

மகிழ்வோடு; தார்சூடு!

பெண்களின் மறுமணத்தை வலியுறுத்தி புரட்சிக் கவிஞர் எழுதிய பாடல் இது. “என்னருமைத் துணைவி! நானோ கொடிய நோயினால் வருந்துகிறேன். இனி பிழைத் திருப்பேன் என்று சொல்வதற்கில்லை. ஆகவே என் மனத்திலுள்ளதைச் சொல்லுகிறேன் கேள். நான் இறந்தபின், நீ என்னையே எண்ணிக் காலங்கழிக்காதே. என்னை மறந்துவிட்டு மகிழ்வுடன் இரு! உன் மனத்துக்குரியவனை மணந்து வாழு! “வைதீக மிரட்டலுக்கு அஞ்சாதே; மலர் மாலை சூடி மகிழுடனே வாழ்வாய்” என்று கூறி மகிழ்ச்சியுடன் உயிரைவிட்டான் வீரத் தமிழன்.   இதை அழகுற எடுத்துக் கூறுகிறார் புரட்சிக் கவி பாரதிதாசன். “பெண்ணே! கண்ணே!! கண்மணியே!!! கடும்பிணியாளன் நான் இறந்தபின், மாதே! கைம்பெண்ணாய் வருந்தாதே பழிஎன்றன் மீதே. அடஞ்செய்யும் வைதீகம் பொருள்படுத்தாதே! ஆசைக்குரியவனை நாடு – மகிழ்வோடு – தார்சூடு – நலம் தேடு.” – புரட்சிக் கவிஞர் பெரியார் முழக்கம் 28072016 இதழ்

பெண்கள் மீதான தீண்டாமை!

பெண்களை மாதந்தோறும் தீண்டாமைக்கு உள்ளாக்கும் ஒரு நிகழ்வு இன்னும் தொடர்கிறது. பெண்களைக் கீழானவர்கள் என்ற உளவியலைக் கட்டமைக்கும் இந்தத் தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது குறித்து தமிழ் ‘இந்து’ நாளேட்டில் (ஜூலை 24) வெளி வந்த கட்டுரையி லிருந்து சில பகுதிகள்: நீந்த, ஓட, நடனம் ஆட, விளையாட, குத்துச்சண்டை போட, சைக்கிள் ஓட்டத் தயார் நிலையில் நிற்கும் பெண்கள். அவர்களின் உடல் உறுப்புகளிலிருந்து இரத்தம் கசிகிறது. இப்படிப் புறச் சூழலால் உண்டான காயங்களால் இரத்தம் வழிந்தாலும் மாதவிடாய் காரணமாக உடலுக்குள்ளிருந்து இரத்தம் கசிந்தாலும் அத்தனை பெண்களும் மீண்டும் எழுகிறார்கள். தன்னைத் தானே உந்தித் தள்ளித் தடைபட்ட பயணத்தை மீண்டும் தொடர்கிறார்கள். ‘நோ பிளட் ஷுட் ஹோல்ட் அஸ் பேக்’ (‘NO blood should  hold us  back’), ‘டோன்ட் லெட் யுவர் பீரியட் ஸ்டாப் யூ’ (Don’t let your period stop you) என்கிற வாசகங்களுடன் சானிட்டரி பேடுக்கான ஒரு பிரிட்டன் விளம்பரப் படம் கம்பீரமாக பறைசாற்றுகிறது. பெண்ணுரிமைப் பார்வையில் இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. பெண் தன்னுடைய கனவை, வேட்கையை, இலக்கை நோக்கித் துணிந்து வீறுநடை போட ஒருபோதும்...

குரங்குகளிடமிருந்து பெற்ற மனித கைரேகைகள்

தோழர் மா. சிங்காரவேலர் எழுதிய “விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும்” மிகச் சிறப்பான அறிவியல் விளக்கங்களைக் கொண்டுள்ள நூல். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் 1934ல் இதை முதலில்  வெளியிட்டது. அதிலிருந்து ஒரு பகுதி: கையிலுள்ள கோடுகளைப் பார்த்து ஜோஸ்யம் சொல்லுவது உலக முழுமையும் பரவியுள்ள ஓர் வித்தையாகும். அது வெறும் பழக்கமே அல்லாது உண்மை யல்ல. நமது கையிலுள்ள கோடு களைப் போல் நமது ஒரு காலத்து பூர்வபங்காளிகளாகிய  வாலில்லாக் குரங்குகளுக்கும் உண்டு. இன்னும் தூரப் பங்காளிகளாகிய (Distnat cousing) வாலுடைய குரங்குகளுக்கும் கையில் கோடுகள் இருக்கின்றன. ஆனால் காட்சிச் சாலைகளில் வசிக்கும் காட்டு மனிதக் குரங்குகளின் கைகளைப் பார்த்து ஜோதிடம் சொல்வார் யாருமில்லை. நமது கைகளில் இருக்கும் கோடுகள் (Grooves) நமது காலத்தில் நமது குரங்கு மூதாதைகள் மரத்தில் தாவிப் பிடித்து தாண்டும் போது உண்டான தோல் மடிப்புகள். அந்த வம்சத்தலிருந்து வந்தவர்களாகிய நமக்கும் அந்த மடிப்புகள் பரம்பரை வழியாக (Hereditory) தோன்றுகின்றன. நமது கைக்கோடுகள்...

இப்படியும் இருந்தன மூடநம்பிக்கைகள்!

தேவதாசி பிரதா: ஒரு இளம் பெண்ணின்வாழ்க்கையை கடவுளின் கவுரவத்திற்கு தியாகம் செய்வது என்ற பெயரால் சாகடிப்பது; தேவதாசி முறையில் ஒரு இளம் பெண்ணைத் கடவுளுக்கு மணம் முடிப்பது; அதன் மூலம் பாலியல் தொழிலில் இளம் பெண்ணை உள்ளாக்குவது; கங்கை நதியில் மூழ்கி தனது உயிரை மாய்த்துக் கொள்வது; இவை போன்ற இளம் பெண்களுக்கு இழைக்கும் சமூக  பழக்கவழக்கம் எனும் கொடுமைகள் ‘தேவதாசி பிரதா’ எனும் பெயரில் நடந்தது.   காஸிகர்வதா: காசியில் உள்ள விஸ்வேஸ்வ நாத் ஆலயத்தில் ஒரு தீர்த்தக் கிணறு இருந்தது. மோட்சம் அடைய விரும்புபவர்கள் அந்தக் கிணற்றில் வீழ்ந்து மரணம் அடைந்தால் மோட்சமடைந்து விடலாம் என்ற நம்பிக்கை. இது பண்டைய மூடநம்பிக்கை.   சதி பிரதா : கணவன் இறந்துவிட்டால் அவனோடு மனைவியும் உடன்கட்டை ஏறி எரிந்து உயிருடன் சாக வேண்டும். இளம் மனைவி மறுத்தால் உறவினர் சேர்ந்து பலாத்காரமாக அவளை எரியும் நெருப்பில் தள்ளி விடுவார்கள். இது பண்டைய மூட நம்பிக்கை....

‘கங்கா தீர்த்தம்’ உடலுக்குக் கேடு!

‘கங்கா தீர்த்தம்’ உடலுக்குக் கேடு!

கங்கை நீரை பாட்டில்களில் அடைத்து அஞ்சலகங்களில் விற்பதற்கு மோடி ஆட்சி ஏற்பாடு செய்துள்ளது. பிணங்களும் இராசயனக் கழிவுகளும் கலந்து நிற்கும் கங்கை – உலகின் மிக மோசமான நதிகளில் ஒன்று. கங்கையை தூய்மைப்படுத்துவதற்கு மோடி ஆட்சியே ரூ. 25,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அந்த அசுத்தத் தண்ணீரை ‘புண்ணிய நீர்’ என்று என்று பக்தர்கள் குடிப்பதற்கு விற்பனை செய்வது மக்களின் உடல்நலனுக்கு தெரிந்தே இழைக்கப்படும் கேடு. பக்தி என்ற பெயரால் அறிவியலை சமூகம் இழந்து நிற்பதற்கு இதைவிட வேறு சான்று  வேண்டுமா? சென்னை பல்கலைக்கழகத்திலேயே இந்திரா காந்தி என்ற ஆய்வாளர் மயிலாப்பூர் கோயில் குறித்து ஆய்வு நடத்தினார். கோயிலில் கர்ப்பகிரகத்துக்குள் ‘மூல விக்ரகத்துக்கு’ ஒவ்வொரு நாளும் அர்ச்சகர்கள் ‘அபிஷேகம்’ (அதாவது சிலையில் தண்ணீர் ஊற்றுதல்) நடத்துகிறார்கள். இந்த ‘அபிஷேக தீர்த்தத்தை’ கிண்டியிலுள்ள ‘கிங் இன்ஸ்டியூட்’ எனும் ஆய்வு மய்யத்துக்கு சோதனைக்கு அனுப்பினார், அந்த ஆய்வாளர். அதில் நோய் உண்டாக்கும் கிருமிகள் இருப்பதை தனது ஆய்வில் பதிவு செய்தார். இந்த...