மருத்துவ கல்வியில் பறிபோகும் தமிழக மாணவர்களின் எதிர்காலம் – அலசல்
சில வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்த ஒரு சிறுமியை பற்றி கேள்வி பட்டிருக்கிறோம்.. அதற்கு பிறக்கும் அது போன்ற செய்திகள் வந்திப்பதாகவே நினைவு..
அவர்கள் ஏன் சிகிச்சைக்காக தமிழகத்திற்கு வர வேண்டும்?.. இந்தியாவின் ஹைடெக் நகரங்களான மும்பை டெல்லி பெங்களூர் போன்றவற்றை எல்லாம் விட்டு விட்டு.. என்பதில்தான் மருத்துவத்தில் தமிழகம் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது என்பது புரியும்..
மருத்துவத்திலும், மருத்துவக் கல்வியிலும் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக உள்ளது தமிழகம்தான். பிற மாநிலங்களில் இருந்தும் , வெளிநாடுகளிலிருந்தும் தமிழகத்துக்கு சிகிச்சைக்காக பலர் வருகின்றனர். ஆசியாவிலேயே சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் தமிழகமும் இருக்கிறது.
திராவிடத்தால் வாழ்ந்தவர்களுக்கு கொஞ்சம் களுக்குன்னு இருக்கும் பேரவால்ல, விஷயம் அதுவல்ல மேல சொன்ன பெருமைகள் நம்மை விட்டு போக போகின்றன..
நீட் மருத்துவ நுழைவு தேர்வு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறார்கள்..
இந்தியா முழுவதிற்கும் மருத்துவத்திற்கு ஒரே நுழைவு தேர்வு கொண்டு வர போகிறார்கள்.. நியாயந்தானேன்னு நம்மாளு வக்கணையா பேசுவான். உள்ளே இருக்கும் சாதிகளை புரிஞ்சுக்காம..
தமிழகத்தில் தான் அரசு மருத்துவ கல்லூரிகள் அதிகம், இங்கு நாம் உருவாக்கி வைத்திருக்கும் கல்லூரிகளில் MBBS ல் 85%, MD படிப்பில் 50% மும் நுழைவுத் தேர்வுகள் இல்லாமல் மாநில அரசின் +2 மதிப்பெண் அடிப்படையில் நம் தமிழக மாணவர்களுக்கே கிடைத்துக் கொண்டிருந்தது.
இனி அவன் அந்த இடங்களுக்காக மத்திய அரசு நடத்தும் நுழைவு தேர்வு எழுதி இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களோடு போட்டி போட வேண்டும்..
மேலும் அதற்கான நுழைவுத்தேர்வும் தமிழ் நாட்டு பாட திட்டத்தின் அடிப்படையில் இருக்க போவதில்லை, அப்படியென்றால் கிராம புறங்களில் படிக்கும் மாணவர்கள் இனி மருத்துவ படிப்பிற்குள் நுழையவே முடியாமல் போகிறது
தோராயமாக தமிழகத்தில் இருக்கும் 3000 மருத்துவ சீட்டில் 2500 சீட்டுக்கு மேல் நம் குழந்தைகளுக்கே கிடைத்துக் கொண்டிருந்தது, இனி அது கதம் கதம்.
அடுத்து இதயம் மூளை நரம்பு போன்ற உயர் மருத்துவத்திற்காக இங்கு நாம் உருவாக்கி வைத்திருக்கும் இடங்கள் 159, பஞ்சம் ஹரியானா மத்தியபிரதேசம் போன்ற இந்தியாவின் பத்து மாநிலங்களில் ஒரு இடம் கூட இப்படி கிடையாது. சில மாநிலங்களை 5, 6 இடங்கள் மட்டுமே இருக்கின்றன.
ஒரு உயர் சிறப்பு மருத்துவ இடத்தை உருவாக்க நீண்டகாலமாகும் எனும்போது, கோடிகளை கொட்டி நாம் 159 இடங்களை உருவாக்கி இருக்கிறோம். இந்த இடங்களையும் நம்மிடம் இருந்து பறிக்கிறது மத்திய அரசு. இதுவரை இந்த 159 இடங்களில் 50% நம் தமிழக மாணவர்களுக்கு கிடைத்து வந்தது, இனி மொத்த இடங்களையும் இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
கிட்டத்தட்ட 78 இடங்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையின் தமிழக மாணவர்களுக்கு கிடைத்து வந்தது.
SC ST, கோட்டா மட்டுமல்ல தமிழகத்தின் ஆண்ட சாதிகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் உருவாக வேண்டிய 40 உயர் மருத்துவர்களை மத்திய அரசு அழித்துவிட்டது,, எந்த ஆண்ட சாதி சங்கங்களும் தங்கள் சாதியில் உருவாக வேண்டிய மருத்துவ மாணவர்களுக்காக போராடியதாக தெரியவில்லை..
அடுத்து இந்த உயர் மருத்துவ இடங்களில் 50% அரசு மருத்துவர்களுக்கே இதுவரை ஒதுக்கி வந்தோம், ஏன்னெனில் அவர்கள் தான் உயர் மருத்துவ படிப்பிற்கு பிறகும் அரசு மருத்துவ மனைகளிலேயே இருப்பார்கள். அரசு மருத்துவ மனைகளில் இது போன்ற சிறந்த மருத்துவர்கள் இருப்பதால் தான் ஏழை எளிய மக்களுக்கும் சிறந்த மருத்துவம் கிடைத்து வந்தது..
மொத்த இடங்களும் மத்திய அரசிக்கு போகும்போது இனி அதற்கும் ஆப்பு.
ஆனா அவங்க தெளிவானவங்க. இந்த மருத்துவ நுழைவு தேர்வு AIIMS, ஜிப்மேர் போன்ற மத்திய அரசின் மருத்துவ மனைகளுக்கு பொருந்தாதாம், தமிழகத்தில் AIIMS ஓ ஜிப்மர் ஓ கிடையாது. எப்புடி..
அடுத்து வழக்கமாக சொல்வதுதான் இதுபோன்ற பொதுவான நுழைவு தேர்வு வைப்பதால்
தனியார் மருத்துவ கல்லூரிகளில் பீஸ் குறையும் என்பது, ஆனால் மேட்டர் என்னன்னா
மக்கள் நல்வாழ்வு அமைச்சகம் என்ன செய்திருக்கிறார்கள் என்றால் பத்தாண்டுகளுக்கு முன் தனியார் நிறுவனங்களுக்கு மருத்துவ கல்லூரி அனுமதி அளிக்கும் சட்டத்திருத்தம் கொண்டுவந்த போது வணிக நோக்கோடு மருத்துவ கல்லூரி பயன்படுத்தினால் அனுமதி ரத்து செய்ய வேண்டும் என்று சட்டம் இருந்தது இருந்தது. அதனை இப்போது எடுக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளனர்..
எப்புடி..
இது மருத்துவ கல்விக்கு மட்டும் அல்ல பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிக்கும் கொண்டுவருவார்கள். எல்லா கல்வியையும் மத்திய அரசிடம் கொண்டு செல்லத்தான் இதை செய்கிறார்கள்
இந்த அரசின் நோக்கம் இந்தியா முழுக்க ஒரே இந்து நாடு, ஒரே ‘இந்துத்துவ’ கல்வி முறை என்ற நிலையை உருவாக்க முயல்கிறார்கள். தமிழகம் விழித்துக் கொள்ள வேண்டும், இதை பற்றிய விரிவான விவாதத்தை பிரச்சாரத்தை தமிழக மருத்துவ மாணவர்கள் தான் பொதுத்தளத்திற்கு கொண்டுவர வேண்டும்..
நமது உரிமைகள் பறி போய்க் கொண்டிருக்கிறது..
அணு உலைகளை மீதேன் வாயுவை, கைல் குழாய்களை நமக்கு மட்டும் அளித்து விட்டு நம் அறிவை உழைப்பை பெருமையை இந்தியா முழுவதிலும் இருந்து சுரண்டுவதின் இன்னொரு வடிவம்தான் இது..
நன்றி
அன்பே செல்வா முகநூல் பக்கத்தில் இருந்து
https://www.facebook.com/anbe.selva/posts/1102638359803016