அறிவியல் பிரச்சார பயணம் – கழக தோழர்களுக்கு ஒரு அறிவிப்பு !

பரப்புரைப் பயணத்தின் செய்திகளை அனுப்புவது தொடர்பாக………

கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை ”நம்புங்க அறிவியல …நம்பாதீங்க சாமியார்கள …” எனும் முழக்கத்தோடு நடைபெறும் ”அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை” பயணம் தமிழகத்தின் நான்கு முனைகளில் புறப்பட்டு சிற்றூர்கள்,நகரங்கள் வழியாக பயணித்து மக்களைச் சந்தித்து விழிப்புணர்வுப் பரப்புரை செய்ய உள்ளது.

ஒரு நாளைக்கு குறைந்தது 3 இடங்கள் என்கிற அளவில் தெருமுனைக் கூட்டங்களும், பொதுக்கூட்டங்களுக்குமான ஏற்பாடுகளை கழகத் தோழர்கள் செய்துவருகிறார்கள் 4 அணிகள் 5 நாட்கள் என 80 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ள இந்த பரப்புரைப் பயணத்தின் ஒவ்வொரு நிகழ்வின் செய்திகளையும் தோழர்கள் தவறாது பதிவு செய்து, அதனை கழகத் தலைமைக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்செய்திகளை அனுப்புவதற்கென ஒவ்வொரு அணிக்கும் ஒரு தோழர் பொறுப்பெடுத்துக்கொள்வது நல்லது.

ஒவ்வொரு நிகழ்ச்சிகள் பற்றி குறைந்த அளவு 3 புகைப்படங்கள்,கலந்து கொண்டோர் மற்றும் செய்திகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வையுங்கள்.

தோழர்களால் அனுப்படும் இச் செய்திகள், பெரியார் முழக்கம் சிறப்பிதழாகவும், இணையம், முகநூல்,வாட்ஸ்அப் ஊடகங்களின் வாயிலாக பரவலாக்கவும் வாய்ப்பாக இருக்கும்.

செய்திகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள் :

கழக இணையத்திற்கு : dvkperiyar@gmail.com

பெரியார் முழக்கம் இதழுக்கு : periyarmuzhakkam@gmail.com

கழக முகநூலுக்கு : duraipari@gmail.com

 

You may also like...