திருப்பூரில் நிமிர்வு கலைக்குழுவினருக்கு பாராட்டு !

திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறும் ”நம்புங்க அறிவியலை …நம்பாதீங்க சாமியார்கள …” எனும் தலைப்பில் ”அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை” பயணம் நிமிர்வு கலைக்குழுவினரின் பறையிசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.இந்நிகழ்ச்சி கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

கலை நிகழ்சியாக மட்டுமல்லாமல்இசையிலும் நடைபெற்றுவரும் தீண்டாமை குறித்தும் விளக்கங்களுடன் நிகழ்சியை நடத்தினர்.சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் பங்கேற்ற கலைஞர்களுக்கு திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன. பொருளாளர் துரைசாமி அவர்களும்,அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி அவர்களும் தோழர்களை பாராட்டி பரிசளித்தனர்.

13934779_1785295848420974_951108639639492318_n

You may also like...