அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணம் சத்தியமங்கலம் பயணக் குழு

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் நம்புங்கள் அறிவியலை!நம்பாதீர்கள் சாமியார்களை எனும் தலைப்பில், அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணத்தை தமிழகத்தில் 4 பகுதிகளில் இருந்து தொடங்கி மாநிலம் முழுவதும் பலவேறு பகுதிகளில் நடக்கிறது. அதன் ஒருபகுதியாக சத்தியமங்கலத்தில் இருந்து ஆகத்து 7 ம் தேதி கழக பரப்புரைச் செயலாளர்  பால் பிரபாகரன் தலைமையில் பரப்புரை பயணம் துவங்கியது.

பயணத்தின் முதல் நிகழ்வாக சத்தியமங்கலம் கழக தோழரும், மேட்டூர் தோழர் சம்பத் அவர்களின் தம்பியுமான தோழர் கோகுல்ராசு அவர்களின் படத்தினை தோழர்  பால்பிரபாகரன் திறந்து வைத்தார். தொடர்ந்து மேட்டூர் டி கே ஆர் இசைக்குழுவின் பகுத்தறிவு இசைநிகழ்ச்சி நடைபெற்றது. பாடல்களுக்கு  இடையே தோழர் கோவிந்தராசு மற்றும் தோழர் கிருட்டிணன் அவர்களும் நகைச்சுவையாக மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தருக்கவகையில் கருத்துக்களை முன்வைத்தனர். தொடர்ந்து மாநில வெளியீட்டு செயலாளர் இராம இளங்கோவன் கோபி வேலுச்சாமி ஆகையோர் உரையாற்றினார்கள்.

தோழர் மூர்த்தி நன்றியுரை ஆற்ற அங்கு.நிகழ்ச்சி நிறைவுற்றது. ஆதிதமிழர் முன்னணி  அமைப்பை சார்ந்த தோழர்கள் நமது தோழர்களுக்கு தேநீர் ஏற்பாடு செய்து கொடுத்தனர். பயணக்குழு நம்பியூர் ஒன்றிய கழக தோழர்கள் நண்பகல் உணவு ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
உணவு இடைவேளைக்குப் பிறகு நம்பியூர் பேருந்து நிலையத்தில் பரப்புரை பயணம் நடைபெற்றது.
டி கே ஆர் பன்னிர் இசைக்குழுவின் பகுத்தறிவு பாடல்கள் நிகழ்ச்சியினைத் தொடர்ந்து தோழர் இரமேசு, தோழர் இளங்கோவன், கோபி வேலுச்சாமி தோழர் பால்பிரபாகரன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். தோழர் அலத்தூர் அழகிரி நன்றியுரை வழங்க பயணம் அங்கு முடிவுற்றது. கூட்டத்திற்கு வருகை தந்த திராவிடர்  கழகம் நம்பியூர் சென்னியப்பன் உள்ளிட்ட தோழர்கள்
நம் பயணக்குழுவை வாழ்த்தி நமது தோழர்களுக்கு தேநீர் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
பயணக்குழு தொடர்ந்து கலாசிபாளையம் வந்தடைந்தது. அங்கு பரப்புரை பயண விளக்கப் பொதுக்கூட்டமாக நடைப்பெற்றது. பொதுக்கூட்டத்திற்கு கோபி வேலுச்சாமி தலைமை பொறுப்பை ஏற்க தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட தலைவர் காளியண்ணன், பெரியார் தொழிலாளர் கழக மாநில செயலாளர் கருப்பண்ணன், டி.என்.பாளையம் கழக ஒன்றிய செயலாளர் செயக்குமார் முன்னிலை வகித்தனர்.

தோழர் மேட்டூர் கோவிந்தராசு குழுவினர் பகுத்தறிவு பாடல்கள் நிகழ்வும்,மந்திரமே மந்திரமே என்ற நிகழ்வும் நடைபெற்றது. தொடர்ந்து மாவட்டச்செயலாளர் தோழர் வேணுகோபால், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தோழர்  இரமேஷ் கழக வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன்  உரைக்கு பின் கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன்  பரப்புரைக் குறித்து  விளக்கி சிறப்பரை ஆற்றினார் தோழர் கிருட்டிணன் மூர்த்தி நன்றியுரையுடன் கூட்டம் இனிது நிறைவுற்றது.

இரவு உணவு காசிப்பாளையம் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். பயணத்தில் கழக அமைப்புச் செயலாளர்  இரத்தின சாமி   நாத்திக சோதி காவை ஈஸ்வரன்  உட்பட கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் திரளாக  கலந்து கொண்டனர்.

You may also like...