தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்திய பேச்சுப் போட்டி

சென்னை மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக பேச்சுப் போட்டி, இராயப்பேட்டை வி.எம். தெருவிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடந்தது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் 24.7.2016 காலை 10 மணிக்கு போட்டிகளை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

􀁏 பெரியாரும் அம்பேத்கரும் ஏன் இன்று தேவை?

􀁏 சமத்துவ மானுடம் அடைவதற்கு அடிப்படை தடையாக இருப்பது ஜாதியா? (அ) மதமா?

􀁏 இன்றைய கல்வி முறையில் உண்மையான நோக்கம் மானுட மேன்மையா? (அ) பொருளியல் மதிப்புகளா?

􀁏 பாலின ஒடுக்குமுறைக்கு காரணமாக அமைவது தனி மனித ஒழுக்கச் சிதைவா? (அ) கலாச்சார

கட்டமைப்பா? – என்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடைபெற்றது.

நடுவர்களாக பேராசிரியர் அ. பெரியார், முனைவர் விநாயகம், வழக்கறிஞர் திருமூர்த்தி ஆகியோர் இருந்தனர். சென்னை மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் க. ஜெயபிரகாசு, செந்தில் (குனுடு), உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்), விழுப்புரம் அய்யனார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

30 கல்லூரி மாணவியர் போட்டியில் பங்கேற்றனர். பெரும்பான்மையோர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மிகச் சிறப்பாக அனைவரும் உரையாற்றினர். போட்டியில் வெற்றி பெற்ற நான்கு பேர் பெயரையும் இறுதியில் நடுவர்கள் அறிவித்தனர்.

முதல் பரிசு ரூ. 8000, இரண்டாம் பரிசு ரூ. 4000, மூன்றாம் பரிசு ரூ. 2000, நான்காம் பரிசு ரூ.1000. பரிசுத் தொகை ஆகஸ்ட் 6ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் அறிவியல் பரப்புரைப் பயணத் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் வழங்கப்பட இருக்கிறது. பங்கேற்ற அனைத்து மாணவ மாணவியருக்கும் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சான்றிதழ்களை வழங்கினார். மாணவர் கழக அமைப்பாளர் பாரி. சிவா நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 04082016 இதழ்

You may also like...