கோபியில் சமஸ்கிருத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்  சார்பாக மத்திய அரசின் சமஸ்கிருத திணிப்பைக் கண்டித்து 8.7.2016 அன்று  மாலை 5 மணியளவில் கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் மாநில வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி, சிவானந்தம் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் நாத்திக ஜோதி, வேணு கோபால், சண்முகப் பிரியன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். இறுதியாக கிருஷ்ண மூர்த்தி (மாவட்ட பொருளாளர்) நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 04082016 இதழ்

You may also like...