மூன்றாம் நாள் அச்சம் போக்கும் அறிவியல் பயண பரப்புரை தொகுப்பு சத்தியமங்கலம் அணி
திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணத்தின் சத்தி அணியின் மூன்றாம் நாள் முதல் நிகழ்வு பூதப்பாடியில் காலை 10 மணிக்கு மேட்டூர் கோவிந்தராஜ் குழுவினரின் பறை இசை நிகழ்ச்சி மற்றும் பகுத்தறிவு பாடல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து நாத்திக சோதி,ரமேசு,பால் பிரபாகரன்,ஆகியோர் கருத்துரை வழங்க தோழர் வேணுகோபால் நன்றியுரை கூற பயணம் அப்பகுதியில் முடிவுற்றது.தோழர்களுக்கு திராவிடர் கழகத்தின் தோழர்கள் தேனீர் வாங்கி கொடுத்தனர்.பயணக்குழு சித்தார் பகுதிக்கு வந்தடைந்த்து.அங்கு தோழர் கோவிந்தராசு குழுவின் பறை இசை மற்றும் பகுத்தறிவு பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நாத்திக சோதி,வேணு கோபால் ,பால்பிரபாகரன், ஆகியோர் உரையாற்ற தோழர் ஆனந்தன் நன்றியுரை ஆற்றினார். தோழர்கள் அனைவருக்கும் தோழர் ஆனந்தன் மதிய உணவு ஏற்பாடு செய்தார்.
மதிய உணவு மற்றும் சிறிது நேரம் ஓய்வு க்கு பிறகு பயண குழு பவானி பேருந்து நிலையம் வந்து அடைந்த்து. நம் பயணக்குழு பவானி வந்த போது வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்றம் வளாகம் முன் உண்ணாவிரதம் நடைபெற்று கொண்டு இருந்தது. நம் தோழர்கள் பரப்புரை செயலாளர் தலைமையில் உண்ணாவிரத பந்தல் சென்று அவர்களின் போராட்டத்தக்கு நமது ஆதரவை தெரிவித்தோடு மட்டும் இல்லாமல் அவர்களின் போரட்டத்தை வாழ்த்தி உரையாற்றினார். மேலும் எப்போரட்டம் என்றாலும் நமதோடு துணை நிற்கும் வழக்குரைஞர் ப.பா. மோகன் மற்றும் பல வழக்கறிஞர் களின் வேண்டுகோளுக்கு இணங்க நம் பரப்புரை செயலாளர் தோழர் பால் பிரபாகரன் அவர்கள் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரத்த்தை முடித்து வைத்தார். உண்ணாவிரத போராட்டம் முடிந்த பின் நமது பரப்புரை பயண நிகழ்வு மேட்டூர் டிகேஆர் இசைக்குழு வின் பறை இசை மற்றும் பகுத்தறிவு பாடல்களுடன் தொடங்கியது. தொடர்ந்து நாத்திகசோதி, வேணுகோபால்,பால் பிரபாகரன் ஆகியோர் பயண நோக்கத்தை விளக்கி உரையாற்றினார்கள். தோழர் வினோத் நன்றி கூறி னார். பயணம் ஆர் என் புதூர் பொது கூட்டத்திற்கு கிளம்பியது.
பொதுக்கூட்டத்தின் முதல் நிகழ்வாக மேட்டூர் டி. கே.ஆர் இசைக்குழ வின் பகுத்தறிவு பாடல்கள் மற்றும் மந்திரமல்ல தந்திரமே என்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பொது கூட்ட நிகழ்விற்கு தோழர் ப.குமார் தலைமையேற்க தோழர் சிவானந்தம் வரவேற்புரை நிகழ்த்த தோழர் வீராகார்த்திக்,எழுத்தாளர் மதிமாறன்,தோழர் இராம இளங்கோவன்,தோழர் பால் பிராபாகரன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். இறுதியில் தோழர் சண்முகபிரியன் நன்றி கூறினார். பொது மக்கள் திரளாக வந்து நிகழ்ச்சியை கண்டு களித்தனர். இரவு உணவு ஈரோடு தெற்கு மாவட்ட தோழர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்