நீதிமன்றங்கள் கொசுக்களையும் ஒழிக்குமா?
நீதிமன்றத்தில் வந்த கொசு வழக்கு!உச்சநீதிமன்றம் என்றாலே ‘உச்சிக்குடுமி’ மன்றம் தான் என்று தமிழ்நாட்டில் பாமர மக்கள் கூட கூறுவது வழக்கம். அந்த உச்சநீதிமன்றம் தலையிடாத பிரச்சினையே இல்லை என்ற நிலை வந்து விட்டது. நாடாளுமன்றத்தையே கலைத்துவிட்டு நீதிபதிகளை மட்டும் தேர்தலில் போட்டியிட வைத்து அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர்களே நீதிபதி களாகலாம் என்ற முறை வந்து தொலைந்தால்கூட வரவேற்கலாம் போலிருக்கிறது. ‘உச்சிக் குடுமி’ மன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு தலித் நீதிபதிகூட இல்லை. ஒரே ஒரு பெண் நீதிபதி மட்டும் இருக்கிறார். அவரும் தமிழ்நாட்டிலிருந்து சென்ற பானுமதி என்பவர் தான், இப்போது தலைமை நீதிபதியாக இருக்கும் ஒரிசா பார்ப் பனர். அவரது குடும்பத்திலிருந்து வந்துள்ள மூன்றாவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி. ‘அவாளின்’ குடும்ப சொத்தாகி விட்டது. அண்மையில் இந்த உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்கு வந்தது; நீதிபதிகளை கடும் ஆத்திர மடையச் செய்த அந்த வழக்கை எத்தனை பேர்...
