மயிலைப் பகுதி தோழர்கள் சிறப்புடன் நடத்திய பெரியார் விழா

சென்னை மாவட்ட மயிலைப் பகுதி கழகத் தோழர்கள் நடத்திய பெரியார் பிறந்த நாள் விழா, சுயமரியாதைக் கால்பந்து கழகத்தின் 5ஆம் ஆண்டு கால் பந்து போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா, செப்.26 அன்று மாலை செயின் மேரிஸ் பாலம் அருகே சிறப்புடன் நடந்தது. விழாவின் மேடை ‘பெரியார் இல்லம்’ என்று பெயர் சூட்டப்பட்டு, மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. அனிதா, கவுரி லங்கேஷ் படங்கள் மேடையில் வைக்கப்பட்டிருந்தன. விரட்டுக் கலைக் குழுவினரின் பறை இசை, நாடகங்கள், பாடல்களுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. நிகழ்ச்சிக்கு பிரவீன் தலைமை தாங்கினார். தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகரன் உரையைத் தொடர்ந்து முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினர். போட்டி களில் வெற்றிபெற்ற அணிகளுக்கு நீதிபதி அரிபரந்தாமன், விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் திருமூர்த்தி பரிசுகளையும் விருதினையும் வழங்கினர். மாவட்ட செயலாளர் இரா. உமாபதி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.  கடந்த ஒரு மாத காலமாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார் தலைமையில் நிகழ்ச்சிக்காக கடைகடையாக நிதி வசூல் செய்து கடுமையாக உழைத்தவர்கள் – பிரவின், மாணிக்கம், விஜயகாந்த், கி.வா.அருண், சரண், சஞ்சய், சண்முகம், உதயா, பரணி, ஜா. உமாபதி ஆகிய தோழர்கள். அழகிய மேடையை குமரன் வடிவமைத் திருந்தார். கால்பந்து போட்டிகளை பார்த்திபனும், பொதுக் கூட்டத்தை மயிலைப் பகுதி கழகத் தலைவர் இராவணன், செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் சிவக்குமார், மனோகர் ஆகியோர் ஒருங்கிணைத்து செயல் படுத்தினர்.

பெரியார் முழக்கம் 12102017 இதழ்

You may also like...